30 நவம்பர் 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ..ஆபத்தல்ல !அழிவு!!(ஆதரிப்பவர்கள் படிங்க ராசா)


சோடா .....இந்த வார்த்தையே இப்போது தொல்பொருள் ஆராய்ச்சி செய்து தேடும் அளவுக்கு  வந்துவிட்டது....

அதுபோல காலீஸ்வரி என்ற ஒரு குளிர்பானம்...எங்கள் ஊர் பகுதியில் முன்பு (சுமார் 12வருடம்)ரொம்ப பிரபலம்....விலையும்  4 ரூபாய்தான்....சிறு வயதில் ஆசையாக வாங்கி குடித்த அந்த குளிர்பானத்தை பல இடங்களில் நானும் தேடி     பார்க்கிறேன் ..பட் சொந்த மண்ணில் கேவலமாக தோற்கும் இந்திய அணியை போல நொந்து நூலானதுதான் மிச்சம்...

இதுபோல ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமாக இருந்த குளிர்பானங்கள் நாளடைவில் காணாமல் போனது..குளிர்பானங்கள மட்டுமல்ல ...அந்த தொழிலை நடத்தியவர்களும்தான்....

காரணம் வெளிநாட்டு கன்றாவிகலான பெப்சி,கொக்க கோலா போன்றவைகள்...இதில் என்ன கொடுமை என்றால் தரத்திலும் இந்த வெளிநாட்டு குளிர்பானங்கள் தரம் கெட்டு போனதுதான்...பெப்சியில்  பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்திலே புகார் கிளம்பி அது  நிரூபிக்கப்பட்டு பின்பு ஒன்றும் இல்லாமலே போனது....

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா இந்த சில்லறை வர்த்தகத்தில் அன்னிய  முதலீடு என மத்திய அரசு கூப்பாடு போடுகிறதே அதற்காகத்தான்....

ஏன்யா நம்ம நாட்டுல நம்ம வியாபாரிகளின் வியாபாரங்களை நசுக்கிவிட்டு அப்படி என்னய்யா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாழ்வளிக்க போகிறீர்கள்?

இதனால் நிச்சயம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி..நமக்கு நன்கு பழக்கப்பட்ட நமது வீதியில் இருக்கும் மளிகை கடை காரர்களிடம்,அக்கௌன்ட் வைத்து பொருள் வாங்குவதும்,!அது சரி இல்லாவிட்டால் திரும்ப கொடுத்து மாற்றுவதும் நடக்குமாய்யா அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம்!?

முதலில் விலையை குறைத்து கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் போக போக தங்கள் வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள்..அதாவது சிறு வியாபாரிகள் எல்லாம் தங்கள் தொழில் நசுங்கி மூட்டையை கட்ட ஆரம்பித்தவுடன் இவர்கள் ஆட்டையை போடஆரம்பிப்பார்கள்...அந்த நிலைமையில் அவர்கள் வைத்ததுதான் விலை..


எப்படி பெப்சி ,கோலா போன்ற குளிர்பானங்களால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்களோ அதுபோல சில்லறை வர்த்தகத்தில் நுழைக்கபட்ட அன்னிய  முதலீட்டாலும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி...


வெளிநாட்டு நிறுவனங்கள் என்ன வீதிக்கு வீதியிலா இல்லை  எல்லா கிராமங்களிலுமா அவர்களின் கடையை திறக்க போகிறார்கள்?சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட?என்பதுதான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்களின் வாதம்...

இவர்களின் வாதப்படியே வைத்து கொண்டாலும்  எல்லா கிராமங்களிலும் ,எல்லா வீதிகளிலும் எல்லாரும் பாதிக்கப்பட போவதில்லை..ஆனால் சில்லறை வர்த்தக வியாபாரமே சங்கிலி தொடர் வியாபாரம்தான்...ஒருவரை வைத்து ஒருவருக்கு லாபம்...அவரை வைத்து இன்னொருவருக்கு லாபம்...இப்ப சொல்லுங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்களால் நேரடியாக 100 பேர் பாதிக்கப்படாவிட்டாலும் மறைமுகமாக 20 பேராவது பாதிக்கப்படுவது உறுதி!

அப்படி என்ன நம்மூர்க்காரனை ஓரம்கட்டிவிட்டு வெளிநாட்டுகாரனுக்கு வக்கலாத்து ,வியாபாரம்,லொட்டு ,லொஸ்க்கு எல்லாம்...

நமது நாட்டில் இருந்து அயல்நாட்டுகாரனை விரட்டி பெறப்பட்டதுதான் சுதந்திரம்...இப்போது நம்மூர் வியாபாரிகளை விரட்டிவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பது மீண்டும் அடிமை ஆவது போலத்தான்!

எப்படி இருந்தாலும் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவது உறுதி ஆகிவிட்டது...நம்மால் அதை எதிர்க்க முடியாவிட்டாலும் ஆதரிக்கலாமாவது இருப்போமே!


29 நவம்பர் 2012

இவர்தான் ஜெயலலிதா !(சும்மாச்சுக்கும் எழுதியது)......

இவர் யாரென்று தெரிகிறதா?தொடர்ந்து படியுங்கள் ...


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் இன்னும் குறையவில்லை.... யாரேனும் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் இறந்தார் என்ற செய்தி வராத நாளில்லை....ஆனால் அதெல்லாம் கவலை இல்லை இவருக்கு.....

தமிழகம் முழுக்க மின்தடையால் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்....
மின்சாரம் என்றால் அது ஏதோ வேற்று கிரக பொருள் போல நினைக்கும் அளவுக்கு நிலைமை "ஷாக் "அடித்து கொண்டு இருக்கிறது....ஆனால் அதற்கு இவர் என்ன பண்ண முடியும்.பாவம்?!அவருக்கு இதை கவனிப்பதுதான் வேலையா?

 தர்மபுரி ஜாதி கலவரம், தினமும் நடக்கும் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கு" டெங்கு காய்ச்சல் "நோயாளிகளின் நிலைமை போல படு மோசமாகி கொண்டு இருக்கிறது...அதை எல்லாம் இப்போது சீராக்குவதுதான் வேலையா அவருக்கு?


அவருக்கு இதைவிட முக்கிய வேலைகள் இருக்கிறது.....தன்னைப்பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது....யாரும் தன்னை விமர்சித்து எழுதக்கூடாது ...எதிர்க்கட்சி என்று எதுவுமே இருக்க கூடாது....நானே ராஜா நானே மந்திரி என்பதுதான் இவர் பாலிசி...கீழே உள்ளே படத்தை யாரென்று  நான் கேட்டால் என்னை லூசு என்பீர்கள்...இப்படி யார் என்றே தெரியாத ஒருவரை அதிமுக மந்திரிகள் கூறுவதைப்போல உலகமறிந்த ஒருவர்(!) தூக்கி உள்ளே வைத்து இருக்கிறார்....

(நடுகுறிப்பு :நானும் பிரபலமாக ஆசைப்படுகிறேன்...ஆனால் அதற்காக என்னை எல்லாமா உள்ளே தூக்கி வைப்பார்கள்...இது சும்மாச்சுக்கும் எழுதுவது அம்மா!)

 மேட்டர் என்னன்னா  மேட்டூர்  தொகுதி தேமுதிக MLA பார்த்திபன்  ஜெயலலிதாவை  பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்...மேலும் அம்மாவட்ட தேமுதிக செயலாளரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .....

பத்திரிக்கைகள்,விஜயகாந்த்,கருணாநிதி,ஸ்டாலின் சகட்டுமேனிக்கு தன்னை விமர்சிப்பவர்கள் மீது கேஸ் போட்ட ஜெயலலிதா இப்போது பிரபலமில்லாத  MLA ஒருவரை கைது  செய்து தமிழகம் முழுக்க பிரபலமாக்கி இருக்கிறார்...

போகிற போக்கை பார்த்தால்  தேமுதிக  MLA க்கள்  ஒன்னு அதிமுகவில் அடைக்கலமாகி இருப்பார்கள அல்லது ஏதாவது ஒரு வழக்கில் உள்ளே கம்பி எண்ணி கொண்டு இருப்பார்கள் போல போய்க்கொண்டு இருக்கிறது நிலைமை...

யானை போன்ற பலமுள்ள ஒரு மாநில முதல்வரான உங்களுக்கு  இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?!

இதை எல்லாம் மாற்றுங்கள் (மாறுங்கள்)அம்மா....!உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் மக்கள்..... ஆனால் இதுபோன்று அல்ல...!26 நவம்பர் 2012

தருமபுரி கலவரம் என்ன சமபந்தி விருந்தா மருத்துவரய்யா?!!...


நாம் இருப்பது கற்காலமா அல்லது ஆதி மனிதர்களிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது தர்மபுரி கலவரத்தை பற்றி படித்தவுடன்...ஒரு காதல் சம்பவத்துக்காக  3 தலித் கிராமங்களையே சூறையாடி வெறியாட்டம் போட்ட அந்த ஜாதி வெறி பிடித்தவர்களை எப்படி மனித இனத்தில் சேர்ப்பது? தலித்களின்  உடைமைகளை ,வாழ்வாதாரங்களை,பொருளாதாரங்களை நசுக்கும் வகையில்  குறிவைத்து நவீன ஜாதி வெறி தாக்குதலை நடத்திய அவர்களை கற்கால மனிதர்கள் என்று சொன்னால்கூட அது பொருத்தமாகாது!இந்த கலவரங்களுக்கு ஆரம்ப காரணமாக இருந்தவர் காடுவெட்டி குரு ...சில மாதங்களுக்கு முன்பு பா ம க கூட்டத்தில் பேசும்போது  ஜாதி மாறி  கலப்பு திருமணம் செய்பவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என பகிரங்கமாக பேசினார்....இது சம்பந்தமாக அவர் மீது வழக்கு பதிந்ததோடு  அரசு தனது கடமையை நிறுத்தி கொண்டது....அவர் அன்று அப்படி பேசியதுதான் ஜாதி வெறி பிடித்தவர்களின் தைரியமாக இன்று மாறி தமிழகத்தில் வாழும் தலித் மக்களின் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியுள்ளது ...

சரி சம்பவம் நடந்தாச்சு....வன்மத்தை தீர்த்து கொண்டாச்சு....இப்பவாது இரு தரப்பு மக்களிடையே சிறிதளவாவது ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பாமக தலைமை ஈடுபட்டால்,அட ஈடுபடுவது மாறி நடித்தால் கூட போதும் சிறிது அனல் குறையும...

ஆனால் ராமதாஸ் சொல்கிறார் " இந்த தாக்குதலில் வன்னியர்கள் மட்டும் ஈடுபடவில்லை அனைத்து சாதியினரும்,திமுக,அதிமுக என அனைத்து  கட்சி தொடர்களும் ஈடுபட்டு உள்ளனர்" என ....அனைத்து ஜாதியினரும்,அனைத்து  கட்சியினரும் சேர்ந்து  ஈடுபட கலவரம் என்ன சமபந்தி விருந்தா மருத்துவரய்யா?


ஏன்யா உங்கள் வாதப்படியே  வைத்துகொண்டாலும் எல்லா ஜாதியினரும்,எல்லா கட்சியினரும் சேர்ந்து அந்த 3 கிராமங்களையும் சூறை ஆடினால் அது தவறு இல்லையா?அது ஏதோ அந்நிய நாட்டு ராணுவத்தை எல்லாரும் சேர்ந்து அடித்து விரட்டினோம் என பெருமையாக கூறுவதுபோல கூறுகிறீர்களே ?ஒரு கட்சி தலைவராக இது உங்களுக்கு அழகா?

தலித்களால் பாதிக்கப்பட்ட மற்ற சாதியினரால் இந்த கலவரம் நடந்துள்ளது என கூறி பிற சாதியினரையும்  தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டு மேலும் தமிழகமெங்கும் சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசுவது ஒரு கட்சியின்  தலைவராக உங்களுக்கு அழகா?

அப்பட்டமாக தெரிகிறது இது ஒரு ஜாதி வெறி தாக்குதல் என்று ...பாதிக்கப்பட்ட 3 கிராமங்களும் தமிழகத்தில் தானே  இருக்கிறது?சம்பவம் நடந்த அன்று காவல்துறையும்,அரசும் என்ன பண்ணி கொண்டு இருந்தன ?அன்று  மட்டும் தமிழகத்தில் அரசுக்கே அரசு விடுமுறையா ?

மின்தடையால் மட்டுமல்ல இது போன்ற ஜாதி வெறி தாக்குதல்களாலும் தமிழகம் இருண்ட காலத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல!22 நவம்பர் 2012

ரத்த வெறி பிடித்த இஸ்ரேலும்,நாதியற்ற பாலஸ்தீன மக்களும்...


நூற்றுகணக்கான குழந்தைகளையும் ,பெண்களையும்  ஈவு இரக்கமில்லாமல்   கொன்று குவித்த கேடு கேட்ட இஸ்ரேல் இப்போது போர் நிறுத்தம் என்று அறிவித்துள்ளது...இது போன்ற குழந்தைகளை கொள்வதற்கு பெயரா போர்?நாய்களா நீங்கள் செய்தது ஒரு இன அழிப்பு....இப்போது போர்நிறுத்தம் என்பது கண்துடைப்பு...

பாலஸ்தீன மக்கள் இனியாவது  சிறிது நாட்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று ஒரு சிறு நம்பிக்கை  ஏற்பட்டுள்ளது  ...நம்பிக்கை மட்டுமே...உத்திரவாதம் கிடையாது...ஏன் என்றால் ஈனம் கெட்ட  இஸ்ரேலை கேள்வி கேட்க  எந்த நாடும் தயாரில்லை...நாளையே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தலாம்...

போர் என்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே ,அல்லது இரு தரப்புக்கு இடையே நடப்பதுதான்..ஆனால் ஒரு வார காலமாக பாலஸ்தீனத்தின் மீது மட்டுமே தாக்குதல் ,உயிர்ப்பலிகள் எல்லாமே..!பின்பு எப்படி இது போராகும்..?அப்புறம் எங்கே இது போர் நிறுத்தம்?இது ஒரு அப்பட்டமான கொலைவெறி தாக்குதல்!

ஈழத்தில் என்ன நடந்ததோ அதைதான் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்து வருகிறது...ஆனால் நம் ஈழதமிழர்களுக்கு கிடைத்த ஆதரவோ,அனுதாபமோ பாலஸ்தீன மக்களுக்கு ஒரு மனிதாபமான அடிப்படையில் கூட உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கவில்லை...!

உலகத்தின் பெரியண்ணனாக காட்டி கொள்ளும் அமெரிக்கா முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைகிறதே என்று சந்தோசப்பட்டு கொண்டு இருக்கிறது!ஐநா சபை என்று ஒன்று இருக்கிறதாம்..அவர்களுக்கு எல்லாம் என்ன வேலை என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை...

ஒரு வாரமாக அப்பாவி குழந்தைகளையும்,பெண்களையும் கொன்று குவிக்கும் வரை வேடிக்கை பார்ப்பதுதான் அந்த அயோக்கிய  சபையின் வேலையா?

உலக முஸ்லிம் நாடுகள் எல்லாம் என்ன மயிரை  புடுங்கி கொண்டு இருந்தன?

இந்தியா சும்மாச்சுக்கும் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை....இஸ்ரேலை கண்டித்து "அகிம்சையை விரும்பிய காந்தி பிறந்த தேசம்"என்ற பெயருக்காவது ஒரு தீர்மானம் போடவில்லை!

அட ஐநாவுக்கே கடிதம் அனுப்பிய "கடித புகழ்"கருணாநிதி கூட இது சம்பந்தமாக ஒரு  அறிக்கை வெளியிடவில்லை....இப்ப ஜெயலலிதா இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டால் உடனே இவர் 1980 களிலே இதை கண்டித்து இருக்கிறோம் என "நாங்கள் எல்லாம் அப்பவே அப்படி"என புராணம் பாட ஆரம்பித்து விடுவார்...இவர்கள் அறிக்கை அல்லது கண்டனம் தெரிவித்து என்ன ஆக போகிறது என கேட்குறீர்களா?ஒரு மனிதாபிமான ,மனித நேயத்தின் அடிப்படையில் தான் நான் கேட்கிறேன்...

இஸ்ரேலில் ஜனவரி மாதம் தேர்தலாம்..அதில் வெற்றிபெற  பாலஸ்தீன மக்களின் ரத்தம்தான் இஸ்ரேல் நாய்களுக்கு  துருப்புசீட்டு ....எனவே மீண்டும் ஈனம் கெட்ட ரத்த வெறி பிடித்த  இஸ்ரேலின் தாக்குதல் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம்....நாம் மீண்டும் செய்திகளாக படிக்கலாம் அனுதாபபடலாம்.......வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?!


21 நவம்பர் 2012

கசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்?!ஒருவழியாக பயங்கரவாதி  அஜ்மல் கசாப்  தூக்கில் போடப்பட்டுள்ளான் ......அதுவும் ரகசியமாக.....இது சரியா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது...இருங்கள் இருங்கள்..தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று அடுத்த சர்ச்சைகள் எதுவும் கிளம்பி விட போகிறது....தெளிவாக சொல்லி விடுகிறேன்....

இதிலென்ன புடலங்காய் ரகசியம்....அவனுக்கு இதுவே லேட்...ஏன் என்றால் அவன் சாவை எதிர்பார்த்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவன்......கசாப் தாக்குதல் நடத்தியதும் தெளிவாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது..அவனுக்கு போயி 4 வருடங்கள் பாதுகாப்பு கொடுத்து,வழக்கு நடத்தி ,சாப்பாடு போட்டு எவ்வளவு வேலைகள் அரசாங்கத்திற்கு.!..நம் நாட்டில் வாழ  விரும்புவர்களுக்கு வழி  காட்டுகிறதோ இல்லையோ சாக வந்தவனுக்கும் வாழ்வு கொடுத்து இருக்கிறது நமது சட்டமும்,அரசாங்கமும் .....

 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த அவனை நடு ரோட்டில் வைத்து பகிரங்கமாக தூக்கில் போட்டு இருக்க வேண்டும்....அதுதான் சரி என சொல்ல வந்தேன்...அப்பத்தான் ஒரு பயம் இருக்கும்.....இப்ப மரண தண்டனை சரி என படுகிறதா?எனக்கு எப்பவுமே மரண தண்டனைதான் இதுபோன்றவர்களுக்கு சரி என படுகிறது ...

இப்ப கசாப்புக்கு கொடுத்த தண்டனை சரி என உங்களுக்கு பட்டால் மரண தண்டனை சரி என்பதை நீங்கள் ஒப்பு கொண்டீர்கள் என அர்த்தம்....கசாபுக்கு கொடுத்த தண்டனை தவறு என உங்களுக்கு பட்டால் நீங்கள் மரண தண்டனையை எதிர்க்குறீர்கள் என அர்த்தம்..இப்ப நீங்கள் எந்த பக்கம்?

அப்ப மரண தண்டனை விசயத்தில் இனி பாகுபாடு பார்க்க கூடாது....பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட எல்லாருக்கும்  இந்த நீதியே கிடைக்க வேண்டும்...அது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவனுக்கும்,அவனை அல்லது  அவர்களை தூண்டியவர்களுக்கும் சேர்த்தே!ஆனால் குஜராத்தில் படுகொலைகளை அரங்கேற்றி வேடிக்கை பார்த்த  மோடி போன்ற கொடுங்கோலன்  நாடாளும் அவலம்தான்  இங்கு நடந்து கொண்டு இருக்கிறது...!


  மரண  தண்டனையை எதிர்ப்பவர்கள் இந்த விசயத்தில் என்ன சொல்ல போகிறார்கள்?இப்பவும் மரண தண்டனை கூடாது  என்றா?கசாப்பை தூக்கில் போட்டு இருக்க கூடாது என்றா?இப்ப கூட இவனை தூக்கில் போட்டதை  மனித உரிமை ஆர்வலர்கள் ,மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் குறை சொல்வார்கள்..அப்ப அவனை என்னதான் செய்ய சொல்கிறார்கள்?சிறையிலே வைத்து மூன்று வேலையும் பாலூட்டி சீராட்டி வாழ  வைக்க சொல்கிறார்களா?

எந்த சம்பந்தமும்  இல்லாமல் அவன் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள் மரண தண்டனையை குறை கூறுபவர்கள்...?

இந்த கசாப்பை போல  பயங்கர குற்றங்கள் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனைதான் நியாயமான தண்டனையாக இருக்க முடியும்....தண்டனைகள் கடுமையாக இருக்கும்பட்சதில்தான் குற்றங்கள் செய்ய சிறிதளவாவது  பயப்படுவார்கள்..

 தவறுகள் குறைய ,செய்த தவறுக்கு தண்டனையாக மரண தண்டனை வேண்டும் என என்னும் என்னைப்போல மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் வைத்து இருக்கும் காரணங்கள் என்ன?

எதற்காகவும்  ஒரு உயிரை கொல்ல  கூடாது,அதற்கு நமக்கு உரிமை  இல்லை என்பார்கள்...அப்ப இந்த கசாப் போன்ற குற்றவாளிகளுக்கு மட்டும் அந்த உரிமை இருக்கிறதாமா?!..........சொல்லுங்கள் !
20 நவம்பர் 2012

இந்தியாவின் நவீன தந்தையா பால் தாக்கரே??!....."தமிழ்நாடு தமிழருக்கே....

வேறு மாநிலத்தவன் எவனும் தமிழ்நாட்டில் தொழில் செய்ய கூடாது

வேறு மாநிலத்தவர்களை தமிழ்நாட்டிலிருந்து  விரட்டி அடிக்க வேண்டும் ..."

இதெல்லாம் நான் சொல்லலப்பா.....!

இவ்வாறு இன்று யார் சொன்னாலும் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்....கைது செய்யப்பட வேண்டும்...

ஆனால் அதே கோஷத்தை  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மராட்டியம் மராத்தியர்களுக்கே என முழங்கியவர் இன்று தேசப்பிதா அளவுக்கு மீடியாக்களால் காட்டப்படுகிறார்....

வேற்றுமையில் ஒற்றுமை  என்பதை   மறுத்து வேற்றுமை மட்டும்தான் ஒற்றுமை இல்லை என  முழங்கியவருக்கு  இன்று அரசு மரியாதையுடன் உடல் தகனம்!தேசிய  கோடியை அவர் உடல் மீது போர்த்தும் அளவுக்கு இந்தியாவின் நவீன தந்தை போல வர்ணிக்கப்பட்டு இருக்கிறார் பால் தாக்கரே ...!


வேறு மாநிலத்தவர்கள் மும்பையை  விட்டு வெளியேற வேண்டும் என இந்தியாவின் ஒற்றுமைக்கு சவால் விடும் வகையில் பேசியவர் இன்று இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் போல சித்தரிக்கப்படுகிறார்....

இது ஒன்று போதாதா அவரின் வாரிசுகள் என காட்டிக்கொள்ள விரும்பும் அவரின் மகனுக்கும் அவரின் அண்ணன் மகனுக்கும்...பால் தாக்கரேவின் கோஷத்தை  இனி அவர்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்..!அந்த கோஷம்தானே பால் தாக்கரேவுக்கு இறந்தும் இவ்வளவு மரியாதையை பெற்று தந்து இருக்கிறது!

மும்பை மீடியாக்கள்  அவரின் இறுதி ஊர்வலத்தை தேசத்தின் தந்தை அளவுக்கு உயர்த்தி காட்டியது ஒன்றும் யாருக்கும் ஆச்சர்யம் அளித்து இருக்காது...ஒருவேளை நாளை அவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய வேண்டும் என்ற பயத்தில் கூட அவ்வாறு செயல்பட்டு இருக்கலாம்.....

ஆனால் தமிழகத்தில் எல்லா செய்தி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு அவரின் இறுதி ஊர்வலத்தை காட்டியதன் அர்த்தம்தான் புரியவில்லை...

எந்த சானலை திருப்பினாலும் பால் தாக்ரவின் இறுதி ஊர்வலம்தான்...நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா இல்லை மும்பையில் இருக்கிறோமா என நிச்சயம் எல்லாருக்கும் சந்தேகம் வந்து இருக்கும்....

பால் தாக்கரே நல்லவரா கெட்டவரா என நாயகன் பாணி கேள்விக்கே இடமளிக்காமல் அவர் ஒரு நாயகன்தான் என்ற கருத்து  திணிப்பை அன்று முழுவதும் மீடியாக்கள் இடைவிடாமல் நிகழ்த்தி கொண்டே இருந்தன....இதன்மூலம் மறைமுகமாக எல்லா மீடியாக்களும் ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றன என்பது மட்டும் சந்தேகம் இல்லாமல் அனைவருக்கும் புரிந்து இருக்கும்... "இனம்,மொழி,மதம் போன்றவற்றின் மூலம் பிரிவினையை ஏற்படுத்துவது குற்றமே அல்ல...பால் தாக்கரே நல்லது தான் பேசினார் ,நல்லதுதான் செய்தார் "என மறைமுகமாக அவருக்கு ஆதரவு கொடுத்ததுதான் அது!

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை பிடிக்குமாம்.அது ஒன்றும் ஆச்சர்யமில்லை....ஆனால் நம்மூர் மீடியாக்களுக்கு அவரின் மேல் ஏன் இவ்வளவு பிடிப்பு என்பதுதான் ஆச்சர்யம்..!

பால் தாக்கரேவின் இறப்பு ஒரு செய்திதான் என facebook ல்  எழுதியவரை ஏதோ தேச  விரோத செயலை செய்தவரைப்போல கைது செய்து இருக்கிறது மும்பை போலீஸ்....!அட அதற்கு like  போட்ட அவரது தோழியையும் கைது செய்து இதுதான் இந்தியா என உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்...!இறந்தும் மிரட்டுவார் பால்தாக்கரே என ஒரு புதுமொழியை இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்!

நல்லவேளை எனக்கு முன்பே நிறைய நண்பர்கள் பால் தாக்கரே  மறைவு பற்றி நிறைய பதிவு எழுதிவிட்டார்கள்....so  நமக்கும் கம்பெனி இருக்கு!
19 நவம்பர் 2012

சாவு பயத்தை காட்டி பணமாக்கும் சன் (சனியன்)மியூசிக்கிற்கு சங்கு எப்ப?சன் மியுசிக்கில் வரும் "வடை போச்சே"என்ற நிகழ்ச்சியின் தரம்  கெட்ட போக்கை பற்றி  ஏற்கனவே நான் எழுதி உள்ளேன்....அந்த நிகழ்ச்சி இன்னும் பலமடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பலவிதமாக பலரை TEES செய்து மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் ரோசமுள்ள தமிழர்கள் அல்லவா நாம்?!

அதே டிவி யில் "நாக் நாக்" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி... சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த ஒருவரை 5,6 பேர் ஆயுதங்களுடன் மிரட்டி காரில் கடத்தி செல்கின்றனர்....அவரை கத்தியால் குத்துவதுபோல,வெட்டுவதுபோல மிரட்டுகின்றனர்..அவர் அழுகிறார் கெஞ்சுகிறார் ஆனால் அவர்கள் விட்ட பாடில்லை ...ஒரு இடத்தில அவரை காரிலிருந்து மிரட்டியே இறக்குகின்றனர் .சில நிமிடங்கள் கழித்து இரண்டு பேர் அவரை நோக்கி ஹாப்பி பர்த்டே என சொல்லி கொண்டே ஓடி வருகின்றனர்....

என்னடா இதுன்னு பார்த்தால் அந்த நபருக்கு அன்று பிறந்த நாளாம் ..அவரின் நண்பர்கள் ஒரு சர்ப்ரைசுக்காக சன் மியுசிக்கிற்கு எழுதி  போட்டு இவ்வாறு செய்தார்களாம்....சாவு பயத்தை கண்ணால் கண்ட அந்த கடத்தப்பட்ட நபரை அந்த டிவி காரர்கள் உங்க நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்கின்றனர் அவர் சொல்கிறார்:இது போல செய்யாதீர்கள் என்று".....

ஏன்யா அந்த டிவி காரனுக்குத்தான் வேற வேலை இல்லை என்றால் இந்த நண்பர்களுக்குமா.....!அப்படி என்னய்யா உயிர் பயத்தை காட்டி ஒரு சர்ப்ரைஸ் ?ஒருவேளை  உயிர் பயத்தாலே அந்த நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பு?அந்த நண்பர்களா?இல்லை எது எப்படி போனாலும் பரவாயில்லை  நிகழ்ச்சி டி ஆர்  பி ரேட்டிங்கில் மேலே வரணும்,விளம்பரமா காசு கொட்டனும் என்பதற்காக அவ்வாறு செய்த அந்த கேடு கேட்ட டிவி காரனுகளுக்கா?!

நீங்கள் கேட்கலாம் சம்பந்தப்பட்ட அந்த நபரே கூல் ஆகிவிட்டார் ..அவரின்  நண்பர்கள் செய்ய சொன்னதால்தான் அவ்வாறு செய்தார்கள் அதிலென்ன தவறு?இது ஒரு fun  தானே ?இதற்கெல்லாமா கோபப்படுவது என்று?

எனக்கு இது தேவை இல்லாத விசயமாக இருக்கலாம்.....ஆனால் அந்த நிகழ்ச்சி தொடர்பான எனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்...

நான் கேட்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் அவரின்  நண்பர்களுக்கு மட்டுமா உரிமையானவர்.?.அவரின் பெற்றோர்களுக்கு அல்லவா முதன்மையானவர்?அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் இவர்கள் அவரின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வார்கள்?நிகழ்ச்சி என்ற பெயரில் அடுத்தவரை பயமுறுத்தி,மிரட்டி கடைசியில்  அது வெறும் FUN  என்றால் அப்படி ஒரு FUN எதற்கு?

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாக எடுக்க வேண்டியது இல்லை என சிலபேர் சொல்லலாம்....இது போன்ற  நிகழ்ச்சிகளினால்   நமக்க எந்த வித லாபமும் இல்லை...லாபம் எல்லாம்  அதை ஒளிபரப்பும் சன் மியூசிக் போன்ற டிவி காரனுகளுக்கு மட்டும்தான்...திரும்ப திரும்ப நான் சொல்வது இதைத்தான் ... அவனுக பணம் சம்பாரிக்க நாம் என்ன முதலீடு?!அவனுக போதைக்கு நாம் என்ன ஊறுகாய்?!


16 நவம்பர் 2012

முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு ...பணிந்தார் விஜய்....வெற்றி நமதே!அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதைப்போல முஸ்லிம்களின் தொடர் போராட்டங்களால் துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தவறாக காட்டி உள்ளதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு உள்ளனர் விஜய்யும் இயக்குனர் முருகதாசும்....

மேலும் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாகவும் கூறி இருக்கின்றார்கள்....இது சம்பந்தமாக முருகதாஸ்,விஜய்யின் அப்பா, தாணு ஆகியோர் கூறியதாவது "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.
முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்."

  இது நமக்கு கிடைத்த வெற்றி..!முஸ்லிம்களை தவறாக காட்டிய படம் இனி இதுவே கடைசி  படமாக இருக்கட்டும்...குட்ட குட்ட குனியாமல் திருப்பி குட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்....!

இனி முஸ்லிம்களை எந்த படத்திலாவது கிள்ளுகீரையாக பயன்படுத்தினால் இதுதான் முடிவு...முஸ்லிம்களை மட்டுமல்ல ஏனைய அனைத்து  மதத்தினரையும் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று அவமதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு அழகான ஆழமான முற்றுபுள்ளி........

சினிமாகாரர்களே உங்கள் தொழில் சினிமா எடுப்பது மட்டுமே....அதை மட்டும் இனி பாருங்கள்..எந்த மதத்தையும் புண்படுத்தி இது போல வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்...

இதுவே தொடக்கம்...இனி எந்த படத்திலும் முஸ்லிம்களை  தவறாக காட்டினால் இது போன்று போராட்டம் நடத்தி அவர்களுக்கு சவுக்கால் அடிகொடுக்க வேண்டும்.....

இந்த விசயத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட அனைத்து  முஸ்லிம் அமைப்புகளுக்கும் நன்றி .......

மேலும் இது பற்றிய எனது முந்தய பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து  பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....

14 நவம்பர் 2012

விஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....துப்பாக்கி படம் பார்த்தேன்..படம் பார்க்காமல் நேற்று நான் கற்பனையில் எழுதிய கதைதான் படத்தின் உண்மையான கதையும் கூட....

படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனால் எனக்கு விஜய் மீதும் இயக்குனர் மீதும்,தமிழ் சினிமா மீதும் படம் பார்க்கும்போது எழுந்த ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.....இதுவரை விஜயகாந்த்,அர்ஜுன் போன்றோர் தீவிரவாதிகள் என்று  முஸ்லிம்களை தாக்கி நடித்து போதாது என்று இப்போதும் நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா விஜய்?

இன்னும் எத்தனை  படங்களில்  எத்தனை  நாட்களுக்குத்தான் தீவிரவாதிகளை ,குண்டு வைப்பவர்களை முஸ்லிம் பெயர் உள்ளவர்களாகவே காட்டி கொண்டு இருப்பீர்கள்?குண்டு வைப்பவர்கள் எந்த நாயாக இருந்தாலும் அவனை நடு ரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்பதே என் கருத்து ...ஆனால் படங்களில் தீவிரவாதிகள்,குண்டு வைப்பவர்கள் என நீங்கள் காட்டுவது முஸ்லிம் பெயர்கள் உள்ளவர்களை   மட்டுமே என்பதுதான் இங்கு கண்டனத்துக்கு உரிய விஷயம்....

இந்த படத்தில் இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லாத ஸ்லீப்பர் செல்ஸ் என்ற வார்த்தையை சொல்லி இருக்குறீர்கள்....ஆனால் ஸ்லீப்பர் செல்ஸ்  பற்றி விரிவாக சொல்லவில்லை..சமுகத்தின் மீதும்,அரசாங்கத்தின்  மீதும் வெறுப்பில் உள்ளவர்கள்தான் ஸ்லீப்பர் செல்களாக மாறுகிறார்கள் என இந்த படத்தில்  போகிற போக்கில் சொல்லி இருக்கீறீர்கள் .


விரிவாக சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒருவனை மூளை சலவை செய்து தீவிரவாதிகள் தங்கள்  காரியத்துக்கு பயன்படுத்தி கொள்பவர்களையே ஸ்லீப்பர் செல்ஸ்  என்கிறார்கள்....இந்த ஸ்லீப்பிங் செல்கள் மக்களுடன் மக்களாக கலந்து வாழும் சாமன்ய மக்கள்...இவர்களுக்கு தங்கள்  தலைவன் யார் என்று தெரியாது..ஆனால் எங்கிருந்தோ வரும் கட்டளைகளை நிறைவேற்றும் கருவி மட்டும் இவர்கள்..சுருக்கமாக நம்மூரில் ஊர் பேர் தெரியாதவனை காசு வாங்கி கொண்டு கொலை செய்பவர்களை மரியாதையுடன் கூலிப்படை என்று சொல்கிறோமே அதுபோல்தான்....

நீங்கள் இந்த படத்தில் சுட்டு கொள்வதாக காட்டி இருக்கும் ஸ்லீப்பிங் செல்ஸ் 12 பேரும் முஸ்லிம்களாக  மட்டும்தான் இருக்க வேண்டுமா விஜய்?!

இந்த சமுகத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெறுப்படைந்தவர்கள் உங்கள் பார்வையில் வெறும் முஸ்லிம்கள்  மட்டும்தானா?பிறகேன் நீங்கள் 
 ஸ்லீப்பர் செல்களாக முஸ்லிம்களை மட்டும் காட்டி உள்ளீர்கள்?இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளாக காட்டி கொண்டு இருந்த முஸ்லிம்களை இப்போது இந்தியாவில் உங்கள் ஊரில் உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என மறைமுகமாக பொதுமக்களுக்கு பயமுறுத்தும் விதமாக இப்படத்தில் காட்டி இருக்கீறீர்கள்!

குண்டு வைத்தால் அது முஸ்லிம் பெயர் உள்ளவன் மட்டும்தான் வைப்பானா?நம் தமிழகத்தில் தென்காசியில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்து அம்பலமானது நடக்கவில்லையா?

நக்சலைட்டுகள் குண்டு வைத்து  இதுவரை எங்குமே வெடிக்கவில்லையா ?

மாவோயிஸ்டுக்கள் இதுவரை நாட்டில் எங்குமே குண்டுகள்  வைத்தது இல்லையா?

தமிழ்  படங்களில் குண்டு வைப்பவர்களை  பெயரை குறிப்பிடாமல் ஒரு x  என்றோ,கிரிமினல் என்றோ வார்த்தைகள் இதுவரை வராமல் அப்துல்லா ,அலாவுதீன் என முஸ்லிம் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஒரு மதத்தினரை மட்டும் காயப்படுத்தும் நோக்கம் இல்லையா?


எந்த ஒரு விசயத்துக்காகவும் பொதுமக்களையும் சேர்த்து காயப்படுத்தும் எல்லா அமைப்பும் தீவிரவாத அமைப்புகளே..!மாவோயிஸ்டுக்கள்,நக்சலைட்டுகள் போன்றவர்களை அவர்களின் மதத்தின் பெயரோடு சம்பந்தப்படுத்தி குறிப்பிடாததை போல இனி உங்கள் படங்களில் நீங்கள் காட்டும் குண்டு வைக்கும் நாய்களையும் அவர்களின் மதத்தின் பெயரை குறிப்பிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் என ஒட்டுமொத்த  முஸ்லிம் சமுகத்தையும் குறி வைத்து தாக்காதீர்கள்!

தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் நீங்கள் ஏற்றி கொண்டு இருக்கும் SLOW POISON அது!


13 நவம்பர் 2012

துப்பாக்கி....விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!

இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என என் மனதுக்கு படுகிறது...ஏன் என்றால் நாட்டில் உள்ள பிரச்சினைகளை  துப்பாக்கியில் இருந்து சீறி வரும் புல்லட்டை போல பாய்ந்து வந்து தீர்க்கப்போகிறார் என்பதை மனதில் வைத்தே படத்துக்கு துப்பாக்கி என பெயர் வைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்....

துப்பாக்கி ........................மாற்றானுக்கு மேல்

துப்பாக்கி...........................சகுனிக்கு மேல்

துப்பாக்கி.........................தாண்டவத்துக்கு மேல்ராணுவ வீரரான விஜய் நாட்டிற்கு வரும் பேராபத்தை எப்படி புல்லட்டாக  சீறி சிதறடிக்கிறார் என்பதே இந்த துப்பாக்கி ....

விஜய் வழக்கம்போல ஆடுகிறார்,சண்டைகாட்சிகளில் ஒரே அடியில் 25 பேரை கீழே சாய்க்கிறார் ...ஒரு பாட்டும் பாடி இருக்கிறார்....கொஞ்ச நாட்களாக விட்டு இருந்த நல்ல பழக்கமான பஞ்ச் டயலாக்குகளையும் மீண்டும் இந்த படத்தில் வாயில் எடுத்து இருக்கிறார்.....

இப்படி எல்லாம் விமர்சனம் எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன்....ஆனால் அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மலேசியாவில் துப்பாக்கி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படாததால்  நானும் தப்பித்தேன்...நீங்களும் தப்பீத்தீர்கள் ....

ஆனால் விடமாட்டேன்....இன்று பார்த்துவிட்டு நாளையே உண்மையான விமர்சனம் எழுதி ஏதோ விஜய்க்கு நம்மால ஆன உதவியை செய்யாமல் விடமாட்டேன்...

விஜய்க்கு இந்த படம் ஹிட் அடிக்குமா இல்லையா என தெரியவில்லை....ஆனால் இந்த பதிவு ஹிட் அடிக்கும் என தோன்றுகிறது....!ஹி ஹி!

தீபாவளி வாழ்த்துக்கள்  நண்பர்களே...10 நவம்பர் 2012

எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?!சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி இருப்போரின் பட்டியலை இந்திய  அரசியல் வரலாற்றிலயே முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்...

அவர் வெளியிட்ட கருப்பு பண பதுக்கல் மன்னர்கள் பட்டியல்...


முகேஷ் அம்பானி - ரூ100 கோடி
- அனில் அம்பானி - ரூ100 கோடி
- ரிலையன்ஸ் குழுமம் -ரு200 கோடி
- ரிலையன்ஸ் குழுமத்தில் அங்கம் வகித்த சந்தீப் டான்டன் - ரூ125 கோடி
- சந்தீப் டான்டனின் மனைவியும் காங்கிரஸ் எம்.பியுமான அனு - ரூ125 கோடி
- திருபாய் அம்பானியின் அமனைவி கோகிலாவுக்கு அக்கவுண்ட் இருந்தது. ஆனால் தற்போது பேலன்ஸ் ஏதும் இல்லை
- ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ் கோயல் - ரூ80 கோடி
- டாபர் நிறுவனத்தின் 3 பேர் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு- ரூ25 கோடி
- மோடெக் மென்பொருள் நிறுவனம்- ரூ2,100 கோடி

இது சாம்பிள்தான்....வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம் கோடி.....!என்ன மலைப்பாக இருக்கா?!இதில் சுவிஸ் வங்கியில் மட்டும் 700 பேரின் 6 ஆயிரம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. என கேஜ்ரிவால்  கூறி இருக்கிறார்...ஆனால் எனக்கு என்னவோ இவரின் கணக்கு தப்பு என தோன்றுகிறது...நிச்சயம் இதைவிட அதிகமாகத்தான் பதுக்கி இருப்பார்கள்......இது அனைத்தும் அரசுக்கு தெரியும்....
ஆனால் இதுவரை எந்த விவரங்களையும் அரசு வெளியிடாதது மட்டுமல்ல அதை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை ..ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்தானே...!

இந்த பட்டியலில் தொழிலதிபர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளனர்....நம்ம அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டால் இதெல்லாம் அதற்கு முன் தூசிதான்.....மொத்த  கருப்பு பணமான  சுமார் 25 லட்சம் கோடி மட்டும் இருந்தால் உலகின் வல்லரசே இந்தியாதான்....
எவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று!!

09 நவம்பர் 2012

ராமன் மோசமான கணவர்!சர்ச்சையை கிளப்பிய பேச்சும் ,அசாருதீனும் (கூட்டுப்பொறியல்)ராமர் கோவில் கட்டுவோம் என்பதை இன்றளவும் கொள்கையாக வைத்துள்ள கட்சி பாஜக....ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர்களுள்  ஒருவரும்,பிரபல வக்கீலுமான ராம் ஜெத் மலானி  கூறுவதை பாருங்கள்

" ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என கூறி இருக்கிறார்"

பெயரிலே  ராமரை  வைத்திருக்கும்  இவரின்  பேச்சுக்கு  கட்சிக்குள்ளும்,வெளியிலும் எதிர்ப்பு பலமாக கிளம்பு போகிறது...!இந்த வார ஹாட் டாபிக்காவும் இதுதான் இருக்க போகிறது!
................................................... ...................................................... ..................................................................................

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை சட்ட விரோதம் என கூறி இருக்கிறது ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது....
நீண்ட ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக கோலோச்சிய  அசாரின் மீது மேட்ச் பிக்ஸிங்  புகார் எழுந்ததை அடுத்து 2000 ம் ஆண்டு அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது ...
இப்போது அது செல்லாது என நீதிமன்றம் கூறி இருக்கிறது...காலம் கடந்து கிடைத்த நீதியாக இருந்தாலும் ஒரு களங்கம் துடைக்கப்பட்டு இருக்கிறது...இவ்வளவு நாட்கள் அசாரின் மீது கூறப்பட்ட பழிச்சொல் இப்போது நீங்கி இருக்கிறது....காங்கிரஸ்  கட்சியின்  mp ஆக இருக்கும் அசாருதீனுக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் இது ஆறுதல் அளிக்க கூடிய செய்தி..
..................................................... .......................................................... .........................................................................................

டெல்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் ஒப்படைக்கும் 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க முடியாது என மத்திய  அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறி இருக்கிறது...
நிச்சயம் மத்திய  அரசு மனது வைத்தால் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு  வழங்க முடியும்...ஆனால் மத்திய  அரசு மாற்றாம்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது...
இந்த விசயத்தில் தமிழக  மக்களுக்காக மாநில அரசுடன் இணைந்து திமுகவும்  மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்...ஒட்டு போட்ட மக்களுக்காக திமுக எம்பிக்கள்  மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியது  அவர்களின் கடமை.... ஆனால் அதெல்லாம் நடக்குமா?அப்படி ஒன்று நடந்தால் அது உலக அதிசயமாக அல்லவா இருக்கும்?!

08 நவம்பர் 2012

அம்மாதான் பிரதமர்.!....அய்யகோ!ஒருவேளை அடுத்த வழக்கு இதற்காகத்தானோ !?

அம்மா பிரதமர்  ஆகலாம்  என அம்மாவின் விசுவாசிகள் கூறியது பத்தாது என்று இப்போது பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்றும்  அம்மா புராணம் பாடியுள்ளது....
ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, ஆற்றல் காரணமாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு உயரக் கூடிய தகுதியுடன் இருப்பதாக பிரான்ஸ்லிருந்து  வெளிவரும் பத்திரிக்கையான  யூரோப் கிரியேட்டிவ்  கூறி உள்ளது....இது போதாதா  ரத்தத்தின் ரத்தங்களுக்கு !மேடைக்கு மேடை  இதயே முழங்கி தள்ளி விடுவார்கள்....!இதை பார்த்தவுடன்  facebook ல்  பார்த்த ஒரு கமெண்ட்  நினைவுக்கு வருகிறது.."நீங்க வேணும்னா அம்மாவை கூட்டிப்போய்  பிரான்சில்  பிரதமர் ஆக்கி கொள்ளுங்கள் !"என்ற பொன்வாசகம்  தான்  அது.....

ஆனால் நாம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..அம்மாவின் புகழை  எங்கயோ பிரான்சில் இருப்பவனுக்கு நாம்தான் இன்னும் தெளிவாக புரிய வைக்கணும்.....


ஒருவேளை அந்த பத்திரிகையின்  ஓனர்  ஒ.பி.எஸ்  சின் சொந்தக்காரப்புளையாக கூட இருக்கலாம்....அந்த பத்திரிக்கை காரனை தமிழகத்துக்கு கூட்டிவந்து ஒரு மூணு நாள் தங்க  வைக்கணும்....

டெங்கு,மின்தடை பிரச்சினை  போன்ற  தமிழக மக்கள் அனுபவிக்கும் துயரங்களை  தீர்க்க முதல்வர் ஜெயலலிதா  எவ்வளவு திறமையா  செயல்படுகிறார்  என்பதை  தெரிந்து கொள்வதற்காக!

மக்கள் பிரச்சினைகளை  தீர்க்க நடவடிக்கை எடுக்காமல்  இதற்கு காரணம் சென்ற திமுக அரசுதான் என நொண்டி சாக்கு சொல்வதை அறிந்து கொள்வதற்காக!

அடிக்கடி அமைச்சர்களை .IAS ,IPS அதிகாரிகளை பந்தாடி நிர்வாகத்தை எவ்வளவு சீராக நடத்துகிறார் என்பதை புரிந்து கொள்வதற்காக!!

தன்னை விமர்சிக்கும் பத்திரிக்கைகளின் மீது  வழக்கு தொடர்ந்து எப்படி ஜனநாயகத்தை  காப்பாற்றி வருகிறார் ஜெயலலிதா என்பதை கண்டு கொள்வதற்காக !

அப்புறம் எழுத சொல்ல்ணனும் அந்த பதிரிக்கைகாரனை ஜெயலலிதா இந்தியாவுக்கு பிரதமர் ஆகலாமா இல்லை அமெரிக்காவுக்கே அதிபர் ஆகலாமா என்று!?

எனக்கு இப்ப ஒரு டவுட்டு..

ஒருவேளை அம்மா பிரதமர் ஆனால் தமிழகத்தின் முதல்வர் யார்?அதுவும் அம்மாதானா?

அய்யகோ...தெரியாமல் இப்படி எழுதி விட்டேனே !ஒருவேளை அடுத்த வழக்கு நம்மீது தானோ!?

07 நவம்பர் 2012

நாளையே நாம் கைது செய்யப்படலாம்!கரைந்து கொண்டுஇருக்கும் சுதந்திரம்!!......மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஊழலின் தாயகமாக இந்தியாவை மாற்றி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி இனி எந்த உண்மையை எழுதினாலும் அவர் நாளையே கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது....

அண்ணல் காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரத்தோடு  பேச்சுரிமை,எழுத்துரிமை ஆகியவற்றையும் சேர்த்துதானே  வாங்கி கொடுத்தார்?!இதெல்லாம் சேர்ந்ததுதானே சுதந்திரம்?இந்த அடிப்படை உரிமைகள் I-T SECTION 66 A என்ற விதிப்படி இனி அரசியல்வாதிகளுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட போகிறது.....

வாருங்கள் குரல் கொடுப்போம்....நம் உரிமைகளை  பேணி காத்திடுவோம்....இதற்கு முன்பே  பதிவர்களுக்கு என நிச்சயம் ஒரு சங்கம் வேண்டும் என்று சென்னை பதிவர் மாநாடு நடைபெற்ற சமயத்திலே நான் பதிவு எழுதி இருகிறேன்..அதற்கு இப்பொது நேரம் கனிந்து இருக்கிறது..வாருங்கள் ஒன்றுபடுவோம் நண்பர்களே...

 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், ( Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society) கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில்  அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்  இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.  இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

நன்றி : தருமி ஐயா 
06 நவம்பர் 2012

நக்கீரனும் ஜாதி வெறி பிடித்த பத்திரிக்கைதான்...பொங்கிய கருணாநிதியும் ,மங்கிய உறவும்....தமிழ் பத்திரிக்கைகளில்  அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கைகள்தான் அதிகம்....குமுதம் எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதற்கு ஜால்ரா அடிக்கும்....விகடன் அதிமுக தலைமையை விட திமுக  தலைமையைத்தான் அதிகமாக விமர்சிக்கும்....

அந்த வகையில் நக்கீரன்  திமுக வின்  பத்திரிக்கை போலவே செய்திகளை வெளியிட்டு  வந்தது...திமுக ஆட்சியில் இருந்தால் அதன் குறைகளை எழுதுவதற்கு பதிலாக தட்டி கொடுத்தே எழுதும்...நக்கீரன் கோபாலை ஜெயலலிதா உள்ளே வைத்ததில்  இருந்து நக்கீரனின் கருணாநிதி பாசம்  மேலும் மேலும் அதிகரித்து திமுகவின்  பிரச்சார  பீரங்கியாகவே தேர்தல் காலங்களில் செயல்பட்டு வந்தது...

ஆனால் இவற்றிற்கு  எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி...வழக்கமாக ஜெயலலிதாதான் தன்னை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் மீது கோபம் காட்டுவார்,வழக்கு போடுவார்...அதை இந்த தடவை கருணாநிதி செய்து இருக்கிறார்....அதுவும் திமுக ஆதரவு பத்திரிக்கை என அறியப்படும் நக்கீரன் மீதே!

அழகிரிஸ்டாலின் மோதல்,பழனிமாணிக்கம் பாலு மோதல் போன்ற விவகாரங்களால் கடுப்பில் இருக்கும் கருணாநிதியை மேலும்  கடுப்பேற்றும் விதமாக அமைந்தது நக்கீரனின் கட்டுரை ஒன்று...

TR பாலு,பழனிமாணிக்கம் மோதலின்  பின்னணியில் கனிமொழி இருந்ததாக  நக்கீரன்  எழுதி இருந்தது....

மகளை பற்றி எழுதியவுடன் பொங்கி எழுந்து விட்டார் கருணாநிதி...நக்கீரனை கடுமையாக சாடி கருணாநிதி எழுதிய கேள்வி பதில் வடிவிலான அறிக்கை

" தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய "உடன்பிறப்பு" கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது. ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் நக்கீரன் போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே! என்று கருணாநிதி கூறியுள்ளார்."
தனக்கு பிரச்சினை  ஏற்படும் போதெல்லாம் ஜாதி ரீதியாக எழுதி அனுதாபம் தேடுவதில் வல்லவர் கருணாநிதி....அந்த ஆயுதத்தயே  நக்கீரன் மீதும்பாய்ச்சி உள்ளார்....ஜெயலலிதாவை பற்றி எழுதும்போதெல்லாம் சந்தோசம் அடைந்து இருக்கும்  கருணாநிதிக்கு தன்னை பற்றியும் தனது மகளை பற்றியும் எழுதியவுடன் கோபம் வருவது "மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்"என்ற பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது....
இனி நக்கீரன் திமுக ஆதரவுபத்திரிக்கையாக தொடருமா என்பது  சந்தேகமே என்றாலும் நக்கீரனால் ஜெயலலிதாவை ஆதரித்து எழுத முடியாதும் என்பதும் உண்மை....!இரண்டும்  கெட்டான்  நிலமைதான் இனி நக்கீரனுக்கு!

05 நவம்பர் 2012

பீட்சா ........பார்க்காதிங்க( .................!) பாஸ்!!

முதலில் இந்த படத்துக்கு  நல்ல விதமாக விமர்சனம் எழுதிய  பதிவர்களுக்கு  என்னுடைய சிறு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்....

நான் இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும்போது  இதுதான் கதையாக இருக்கும் என இரண்டு விதமாக யோசித்தேன்...என்னைப்போலவே படம் பார்த்த அனைவரும் யோசித்து இருப்பார்கள்....


 ஆனால் இதுதான் கதையாக  இருக்குமோ என யோசித்த எல்லாருக்கும் இப்ப உள்ள மின்சார தட்டுபாடையும் பொருட்படுத்தாது  ஒரு பெரிய பல்ப்பை கொடுத்து அதை விட பெரிய  பொக்கையை பெற்றுள்ளார் இயக்குனர்...

எல்லா பதிவர்களை போலவே நானும் கதையை  சொல்ல மாட்டேன் என்று சொல்லாமல் கதை சொல்ல போகிறேன்...நான் சொல்லுவதை விட படத்தின் ட்ரைலர்களிலயே கதாநாயகி கதையை  சொல்லி விடுகிறார்...

அதாவது "எல்லாருக்கும் ஒரு மூமெண்ட்  வரும்..அவ நம்பிக்கையை  நம்பிக்கையாக  மாற்றுகிற மூமெண்ட் "என ரம்யா  நம்பீசன் சொல்லும் வசனம்தான் படத்தின் கதையே...

எல்லாரையும் கதையை  சொல்லவிடாமல் செய்து விட்டு படத்தின் இயக்குனரே எவ்வளவு தைரியமாக கதையை  பட விளம்பரங்களிலே சொல்லிவிட்டார்...!ஆனால் யாரும் கண்டுபிடிக்கத வண்ணம்...!


கிட்டத்தட்ட  படத்தின் நிறைகளை எல்லாரும் பிரித்து  மேய்ந்து விட்டார்கள்...

அதனால் நான் சிம்பிளாக சொல்லிகொள்கிறேன்....இந்த வருடத்தில் வந்த எல்லா பெரிய நடிகர்களின் படங்களை விட இது பெரிய படம்....நிச்சயம் 2 மணி நேரம்  தியேட்டரை விட்டு படம் பார்ப்பவர்களை  வெளியே யோசிக்க வைக்காத  படம்..அவ்வளவுதான்....

அப்புறம் முதலில் பதிவுலக நண்பர்களுக்கு  நான் சிறு கண்டனம் தெரிவித்தது "இந்த படத்தை திருட்டு VCD யிலோ DVD யிலோ பார்க்காதீர்கள் என நம் பதிவர்கள் சொல்லாத காரணத்திற்காக "ஹி ஹி.....(பெரும் தலைகள் எல்லாம் கோபப்பட வேண்டாம்..ஒரு வேலை இதை படித்தால்!)

அப்புறம் இந்த படத்தை பார்க்காதீர்கள் என தலைப்பு வைத்ததும்  சேம் ரீசன்தான் ....பீட்சா .....பார்க்காதிங்க (DVD ,VCD  களில் !)என்பதுதான் தலைப்பு.....!அதாவது எல்லாரும் இந்த படத்தை வீட்டில் திருட்டு VCD  யில் பார்க்காதீர்கள் தியேட்டரில் போய்  பாருங்கள் என சொல்லுவதற்காக ...(கண்டபடி திட்டாதிங்க பாஸ்)ஏனென்றால் நான் தியேட்டரில் பார்க்கவில்லை..மலேசியாவில் இது மாதிரி நல்ல படத்தை எல்லாம் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்...பீலா விட்ட  பில்லா மண்குதிரை  மாற்றான் போன்ற படங்களைத்தான் ரிலீஸ் செய்கிறார்கள்....நீங்களாச்சும் தியட்டரில் பாருங்கள்...!
03 நவம்பர் 2012

திருமணத்தை மறைத்த நரேந்திர மோடியும், 1600 கோடி ஊழலும்....(கூட்டுப்பொறியல் )நரேந்திர மோடிக்கு  மனைவி  இருப்பதாக  கூறி அடுத்த பரபரப்பை  கிளப்பி உள்ளார் திக் விஜய் சிங்..

மனைவி இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என கேட்குறீர்களா? இல்லைதான்..ஆனால் தான் பிரம்மசாரி என கூறி கொள்ளும் ஒருவர் ,பொது வாழ்வில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் மனைவி இல்லை என்று கூறினால் தவறு இல்லையா?

மோடியுடன் 1968ல்  தனக்கு திருமணம் நடந்ததாக யசோதா என்பவர் கூறி உள்ளதாகவும் அதற்கு மோடி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும்  திக் விஜய் சிங் கூறி இருக்கிறார்....

மேலும் தேர்தல் ஆணையத்திடம்  மோடி அளித்துள்ள  உறுதிமொழி பத்திரத்தில் திருமணம் ஆனவரா? என்ற கேள்விக்கு எதுவும் குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டது ஏன் எனவும் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்....

பதில் இருக்கா அந்த கேடியிடம்?

........................ ............................................ .........................................................................

தீபாவளி நேரத்தில் இலட்ச வாலா  பட்டாசை  கொளுத்தி போட்டுள்ளார் சுப்ரமணிய சுவாமி ....

சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் பெயர் யங் இந்தியா. இந்த தனியார் நிறுவனமானது அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இப்பொது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ1,600 கோடி என்றும் சோனியா- ராகுல் காந்தி உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியே கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுவாமி கொளுத்தி  உள்ள பட்டாசு....

வழக்கம்போல ராகுல் இதை மறுத்து இருக்கிறார்..தனது மீது அவதூறு கூறி உள்ள சு.சுவாமி மீது வழக்கும் தொடர  போகிறாராம்  ராகுல்...

கருணாநிதிக்கே கடிதமா?!ஜெயலலிதாவுக்கே அறிக்கையா?சுப்ரமணிய சுவாமிக்கே வழக்கா?!


.................................................... ..................................... .......................................................................................

தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமை ரத்து  செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்....

வருடா வருடம் இதுபோல அமைச்சர்கள் சொன்னாலும் ஆம்னி பஸ்கொள்ளைகள் தீபாவளி  சமயங்களில்நடந்து கொண்டுதான் இருக்கிறது...

ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் தங்களுக்குஅன்றைய வயிற்று வலி தீர்ந்தால்  போதும் என்கிற மனப்பாங்கில் பண்டிகை காலங்களில் கேட்கிற கட்டணத்தை கொடுத்து விடுவதால்தான் இந்த ஆம்னி பஸ் கொள்ளைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை....

இதை படிக்கும் நண்பர்கள் இது போன்ற தொந்தரவுகளுக்கு ஆளானால் "9444855428 9444015958"என்ற எண்ணுக்கு  புகார் அளியுங்கள்....கட்டண கொள்ளையை  தடுப்போம்....
02 நவம்பர் 2012

கருணாநிதியும் vs ஜெயலலிதா :பரபரப்பான நேரடி விவாதம்...

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்  நேரடி விவாதம்...ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான செய்திதான்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்..அந்த பாணியை நம்மூர்  அரசியல்வாதிகள் பின்பற்றினால்?!

கருணாநிதி:  வணக்கம் அம்மையாரே!


ஜெயலலிதா:  என்னை அம்மையார் என்று கூப்பிடும் கருணாநிதிக்கு என்ன  வயது இருபதா?


கருணாநிதி:  மனதால்  நான் என்றுமே 20 வயது வாலிபன்தான்...


ஜெயலலிதா:  என்னோட விவாதம் பண்ணும் அளவுக்கு கருணாநிதிக்கு மொழி புலமை இல்லை..எனக்கு 8 மொழிகள் தெரியும்...


கருணாநிதி:  செம்மொழியாம் தமிழ் மொழி 100 மொழிக்கு சமம் என இந்த அம்மையாருக்கு யார் புரிய வைப்பது?!


ஜெயலலிதா:  நான்  எல்லாம் தெரிந்தவள்...ஆனால் உங்களுக்கு தெரிந்தது  எல்லாம் ஊழலை தவிர வேறு இல்லை...


கருணாநிதி:  அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கை இந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன்...


ஜெயலலிதா:  சர்க்காரியா  கமிசனை  மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என நினைவில் வைத்துகொள்ளுங்கள் மிஸ்டர்  கருணாநிதி...கருணாநிதி:  அது புனையப்பட்ட விவகாரம்....வளர்ப்பு மகன் திருமணத்தை  மக்கள் மறக்க இன்னும் பல யுகமாகும் என சொல்லி கொள்ளவிரும்புகிறேன்..


 அப்போது கரண்ட்  கட்  ஆகிறது....


ஜெயலலிதா:  இப்ப கரண்ட்  கட்  ஆனதற்கும் சென்ற கருணாநிதி அரசுதான் காரணம்...


கருணாநிதி:  ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல..எனது ஆட்சி காலத்தில்  மூன்று மணி நேரம்தான் மின்சாரம் தடை பட்டது...ஆனால் இப்போது மின்சாரமே இல்லை..அப்புறம் எங்கே அது தடை படுவது?


ஜெயலலிதா: கோபமாகி ஒரு பத்து பக்க அறிக்கையை எடுத்து படிக்கஆரம்பிக்கிறார்...


பொதுமக்கள் :நாட்டை முன்னேற்ற  பாதையில் அழைத்து போவதை பற்றி விவாதிக்க சொன்னால் இவர்கள் தங்களை  பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறார்களே என  தலை குப்பற  அடித்து  ஓட ஆரம்பிக்கின்றனர்...

.......................................... ....................................... ......................................................அடுத்து  மன்மோகன் சிங் = அத்வானி 

அத்வானி:  வணக்கம் ...நான் பிரதமர் ஆனால் ராமர் கோவில் கட்டுவேன்...மன்மோகன் சிங்:  .......... ................. ...........................அத்வானி:    இந்தியா முழுவதும்  உள்ள  மசூதிகளை  அவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தால் இடிக்க உத்தரவு இடுவேன்...மன்மோகன் சிங்:  ......................... ......................... ...........................அத்வானி:  என்ன எதுவுமே பேசாம  மவுனமா இருக்குறீர்கள் சிங்?மன்மோகன் சிங்:  ....................... .......................... ................................
அத்வானி:  இவரோட விவாதம் பண்ணுவதற்கு ஒரு ஊமையை  கூப்பிடுங்கள்.என சொல்லிவிட்டு  நடையை  கட்டுகிறார்.....மன்மோகன் சிங்: ................. ................................ ............................

ஏன் உருவானது திமுக?! தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான்....ஆனால் இந்த இரண்டுமே தானாக தோன்றிய கட்சிகள் அல்ல...இன்னொரு கட்சியிலிருந்து  உருவானவை ..அதிமுக தோன்றியது பற்றி ஏற்கனவே நான் பதிவிட்டு இருந்தேன்..இப்ப திமுக எப்படி உருவானது  என கொஞ்சம் பிளாஷ்பேக்...எல்லாருக்கும் தெரிந்து இருந்தாலும் வரலாற்றை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றுதானே....!

அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு அடுத்த நிலையில் இருந்து  வந்தார்.... இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க ஆங்கிலய அரசு முடிவு எடுத்து இருந்த நேரம் அது....அந்த சமயத்தில் பெரியார் "1947 ஆகஸ்ட் 15 துக்க நாள்" என்று அறிக்கை விட்டார்....


கட்சியின் மற்ற தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் வெளியிட்ட அறிக்கை, கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா பெரிதும் வேதனை அடைந்தார். பெரியாரின் அறிக்கை பற்றி, மற்ற தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் அண்ணா கலந்து ஆலோசித்தார்.


முடிவில் "சுதந்திர தினம் துக்க நாள் அல்ல. இன்ப நாள்" என்று அறிக்கை விடுத்தார்.  இந்த அறிக்கை, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது பகிரங்கமாகியது. அண்ணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.


"என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை அஞ்சாமல் கூறுவேன்" என்றார் அண்ணா."பெரியாரும், அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள். இனி ஒன்று சேர வழியே இல்லை" என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு அதிசயம் நடந்தது.


ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாநாட்டுத் தலைவரான அண்ணாவை அலங்கார வண்டியில் அமரச்செய்துவிட்டு, நடந்தே வந்தார் பெரியார். மாநாட்டில் பெரியார் பேசும்போது "பெட்டிச்சாவியை நானே வைத்துக்கொண்டு எத்தனைக்காலம் அலைந்து திரிவது? அதனால் சாவியை அண்ணாதுரையிடம் கொடுத்துவிட முடிவு செய்துவிட்டேன்" என்று அறிவித்தார்.


மாநாட்டில் எழுந்த கைதட்டல் அடங்க, வெகுநேரம் பிடித்தது. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தீர்ந்துவிட்டதாக அனைவரும் எண்ணினார்கள். 1949 ம் ஆண்டு மே மாதம் 14 ந்தேதி, அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
அவரைப் பெரியார் சந்தித்தார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் கொள்கையில் இரு துருவங்களாக இருந்த போதிலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசியது, திராவிடக் கழகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த சமயத்தில், கோவையில் "முத்தமிழ் மாநாடு" நடந்தது. அதில் பெரியாரும், அண்ணாவும் கலந்து கொண்டனர். அண்ணா பேசும்போது, "திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் பெரியார் பேசியது என்ன என்பதை அறிய நாடு ஆவலாக இருக்கிறது. அதனை இந்த மாநாட்டில் பெரியார் விளக்கிட வேண்டும்" என்று கூறினார்.


"அது முற்றிலும் என் சொந்த விஷயம். மாநாட்டில் வெளியிட முடியாது" என்று பெரியார் கனல் கக்க பதிலளித்தார். பின்னர் பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், தனக்கொரு வாரிசு ஏற்படுத்திக்கொள்வது பற்றி ராஜாஜியுடன் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இன்னொரு அறிக்கையை வெளியிட்டார்.


"எனக்கும், என் பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால் நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்கத்தின் நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறவருமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமை ஆக்கிக் கொண்டு, ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்பதே அந்த அறிக்கை.
பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தவர், இப்போது திடீரென்று வாரிசு நியமிக்கப் போவதாக அறிவித்தது, திராவிட கழகத்தினருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கிடையே, மணியம்மையை பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்காகத் திருமணப் பதிவாளரிடம் அவர் மனு செய்திருப்பதாகவும், சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
அதைப் படித்த அண்ணாவும், மற்ற தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பெரியாரின் வயது 70, மணியம்மைக்கு வயது 30. மணியம்மை பெரியாருடனேயே இருந்து பணி விடைகள் செய்து வந்தார். "வேண்டாம் இந்த பொருந்தாத் திருமணம்" என்று பெரியாருக்கு தந்திகளும், கடிதங்களும் குவிந்தன.

ஆனால் திட்டமிட்டபடி 9.7.1949 ல் திராவிடக் கழக பிரமுகர் சி.பி.நாயகத்தின் இல்லத்தில், திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறியது...

இதனை தொடர்ந்து திராவிடர் கலக்கம் உடைந்தது..அண்ணா அவர்களால் திமுக செப்டம்பர் 18 அன்று உருவாக்கப்பட்டது.....செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பார்கில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி. மு. க. வின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.

செய்தி சேகரிப்புக்கு நன்றி :காலச்சுவடுகள் 


ஆனால் இதெல்லாம் அண்ணாவுக்கு திராவிடர் கழகத்தில்  இருந்து விலக  தேவைப்பட்ட காரணங்கள்..உண்மையில் அண்ணாவுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபட ஆசை இருந்தது...அதற்கு திராவிடர் கழகம்  சரியாக வராது,பெரியார் ஒப்பு கொள்ள மாட்டார்  என்பதால் தக்க தருணம் பார்த்துகொண்டு இருந்த அண்ணாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது பெரியாரின் திருமணம்...!