சன் மியூசிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன் மியூசிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 நவம்பர் 2012

சாவு பயத்தை காட்டி பணமாக்கும் சன் (சனியன்)மியூசிக்கிற்கு சங்கு எப்ப?



சன் மியுசிக்கில் வரும் "வடை போச்சே"என்ற நிகழ்ச்சியின் தரம்  கெட்ட போக்கை பற்றி  ஏற்கனவே நான் எழுதி உள்ளேன்....அந்த நிகழ்ச்சி இன்னும் பலமடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பலவிதமாக பலரை TEES செய்து மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் ரோசமுள்ள தமிழர்கள் அல்லவா நாம்?!

அதே டிவி யில் "நாக் நாக்" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி... சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த ஒருவரை 5,6 பேர் ஆயுதங்களுடன் மிரட்டி காரில் கடத்தி செல்கின்றனர்....அவரை கத்தியால் குத்துவதுபோல,வெட்டுவதுபோல மிரட்டுகின்றனர்..அவர் அழுகிறார் கெஞ்சுகிறார் ஆனால் அவர்கள் விட்ட பாடில்லை ...ஒரு இடத்தில அவரை காரிலிருந்து மிரட்டியே இறக்குகின்றனர் .சில நிமிடங்கள் கழித்து இரண்டு பேர் அவரை நோக்கி ஹாப்பி பர்த்டே என சொல்லி கொண்டே ஓடி வருகின்றனர்....

என்னடா இதுன்னு பார்த்தால் அந்த நபருக்கு அன்று பிறந்த நாளாம் ..அவரின் நண்பர்கள் ஒரு சர்ப்ரைசுக்காக சன் மியுசிக்கிற்கு எழுதி  போட்டு இவ்வாறு செய்தார்களாம்....சாவு பயத்தை கண்ணால் கண்ட அந்த கடத்தப்பட்ட நபரை அந்த டிவி காரர்கள் உங்க நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்கின்றனர் அவர் சொல்கிறார்:இது போல செய்யாதீர்கள் என்று".....

ஏன்யா அந்த டிவி காரனுக்குத்தான் வேற வேலை இல்லை என்றால் இந்த நண்பர்களுக்குமா.....!அப்படி என்னய்யா உயிர் பயத்தை காட்டி ஒரு சர்ப்ரைஸ் ?ஒருவேளை  உயிர் பயத்தாலே அந்த நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பு?அந்த நண்பர்களா?இல்லை எது எப்படி போனாலும் பரவாயில்லை  நிகழ்ச்சி டி ஆர்  பி ரேட்டிங்கில் மேலே வரணும்,விளம்பரமா காசு கொட்டனும் என்பதற்காக அவ்வாறு செய்த அந்த கேடு கேட்ட டிவி காரனுகளுக்கா?!

நீங்கள் கேட்கலாம் சம்பந்தப்பட்ட அந்த நபரே கூல் ஆகிவிட்டார் ..அவரின்  நண்பர்கள் செய்ய சொன்னதால்தான் அவ்வாறு செய்தார்கள் அதிலென்ன தவறு?இது ஒரு fun  தானே ?இதற்கெல்லாமா கோபப்படுவது என்று?

எனக்கு இது தேவை இல்லாத விசயமாக இருக்கலாம்.....ஆனால் அந்த நிகழ்ச்சி தொடர்பான எனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்...

நான் கேட்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் அவரின்  நண்பர்களுக்கு மட்டுமா உரிமையானவர்.?.அவரின் பெற்றோர்களுக்கு அல்லவா முதன்மையானவர்?அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் இவர்கள் அவரின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வார்கள்?நிகழ்ச்சி என்ற பெயரில் அடுத்தவரை பயமுறுத்தி,மிரட்டி கடைசியில்  அது வெறும் FUN  என்றால் அப்படி ஒரு FUN எதற்கு?

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாக எடுக்க வேண்டியது இல்லை என சிலபேர் சொல்லலாம்....இது போன்ற  நிகழ்ச்சிகளினால்   நமக்க எந்த வித லாபமும் இல்லை...லாபம் எல்லாம்  அதை ஒளிபரப்பும் சன் மியூசிக் போன்ற டிவி காரனுகளுக்கு மட்டும்தான்...திரும்ப திரும்ப நான் சொல்வது இதைத்தான் ... அவனுக பணம் சம்பாரிக்க நாம் என்ன முதலீடு?!அவனுக போதைக்கு நாம் என்ன ஊறுகாய்?!