14 நவம்பர் 2012

விஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....துப்பாக்கி படம் பார்த்தேன்..படம் பார்க்காமல் நேற்று நான் கற்பனையில் எழுதிய கதைதான் படத்தின் உண்மையான கதையும் கூட....

படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனால் எனக்கு விஜய் மீதும் இயக்குனர் மீதும்,தமிழ் சினிமா மீதும் படம் பார்க்கும்போது எழுந்த ஆதங்கத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.....இதுவரை விஜயகாந்த்,அர்ஜுன் போன்றோர் தீவிரவாதிகள் என்று  முஸ்லிம்களை தாக்கி நடித்து போதாது என்று இப்போதும் நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா விஜய்?

இன்னும் எத்தனை  படங்களில்  எத்தனை  நாட்களுக்குத்தான் தீவிரவாதிகளை ,குண்டு வைப்பவர்களை முஸ்லிம் பெயர் உள்ளவர்களாகவே காட்டி கொண்டு இருப்பீர்கள்?குண்டு வைப்பவர்கள் எந்த நாயாக இருந்தாலும் அவனை நடு ரோட்டில் தூக்கில் போட வேண்டும் என்பதே என் கருத்து ...ஆனால் படங்களில் தீவிரவாதிகள்,குண்டு வைப்பவர்கள் என நீங்கள் காட்டுவது முஸ்லிம் பெயர்கள் உள்ளவர்களை   மட்டுமே என்பதுதான் இங்கு கண்டனத்துக்கு உரிய விஷயம்....

இந்த படத்தில் இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லாத ஸ்லீப்பர் செல்ஸ் என்ற வார்த்தையை சொல்லி இருக்குறீர்கள்....ஆனால் ஸ்லீப்பர் செல்ஸ்  பற்றி விரிவாக சொல்லவில்லை..சமுகத்தின் மீதும்,அரசாங்கத்தின்  மீதும் வெறுப்பில் உள்ளவர்கள்தான் ஸ்லீப்பர் செல்களாக மாறுகிறார்கள் என இந்த படத்தில்  போகிற போக்கில் சொல்லி இருக்கீறீர்கள் .


விரிவாக சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒருவனை மூளை சலவை செய்து தீவிரவாதிகள் தங்கள்  காரியத்துக்கு பயன்படுத்தி கொள்பவர்களையே ஸ்லீப்பர் செல்ஸ்  என்கிறார்கள்....இந்த ஸ்லீப்பிங் செல்கள் மக்களுடன் மக்களாக கலந்து வாழும் சாமன்ய மக்கள்...இவர்களுக்கு தங்கள்  தலைவன் யார் என்று தெரியாது..ஆனால் எங்கிருந்தோ வரும் கட்டளைகளை நிறைவேற்றும் கருவி மட்டும் இவர்கள்..சுருக்கமாக நம்மூரில் ஊர் பேர் தெரியாதவனை காசு வாங்கி கொண்டு கொலை செய்பவர்களை மரியாதையுடன் கூலிப்படை என்று சொல்கிறோமே அதுபோல்தான்....

நீங்கள் இந்த படத்தில் சுட்டு கொள்வதாக காட்டி இருக்கும் ஸ்லீப்பிங் செல்ஸ் 12 பேரும் முஸ்லிம்களாக  மட்டும்தான் இருக்க வேண்டுமா விஜய்?!

இந்த சமுகத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெறுப்படைந்தவர்கள் உங்கள் பார்வையில் வெறும் முஸ்லிம்கள்  மட்டும்தானா?பிறகேன் நீங்கள் 
 ஸ்லீப்பர் செல்களாக முஸ்லிம்களை மட்டும் காட்டி உள்ளீர்கள்?இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளாக காட்டி கொண்டு இருந்த முஸ்லிம்களை இப்போது இந்தியாவில் உங்கள் ஊரில் உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம் என மறைமுகமாக பொதுமக்களுக்கு பயமுறுத்தும் விதமாக இப்படத்தில் காட்டி இருக்கீறீர்கள்!

குண்டு வைத்தால் அது முஸ்லிம் பெயர் உள்ளவன் மட்டும்தான் வைப்பானா?நம் தமிழகத்தில் தென்காசியில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்து அம்பலமானது நடக்கவில்லையா?

நக்சலைட்டுகள் குண்டு வைத்து  இதுவரை எங்குமே வெடிக்கவில்லையா ?

மாவோயிஸ்டுக்கள் இதுவரை நாட்டில் எங்குமே குண்டுகள்  வைத்தது இல்லையா?

தமிழ்  படங்களில் குண்டு வைப்பவர்களை  பெயரை குறிப்பிடாமல் ஒரு x  என்றோ,கிரிமினல் என்றோ வார்த்தைகள் இதுவரை வராமல் அப்துல்லா ,அலாவுதீன் என முஸ்லிம் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஒரு மதத்தினரை மட்டும் காயப்படுத்தும் நோக்கம் இல்லையா?


எந்த ஒரு விசயத்துக்காகவும் பொதுமக்களையும் சேர்த்து காயப்படுத்தும் எல்லா அமைப்பும் தீவிரவாத அமைப்புகளே..!மாவோயிஸ்டுக்கள்,நக்சலைட்டுகள் போன்றவர்களை அவர்களின் மதத்தின் பெயரோடு சம்பந்தப்படுத்தி குறிப்பிடாததை போல இனி உங்கள் படங்களில் நீங்கள் காட்டும் குண்டு வைக்கும் நாய்களையும் அவர்களின் மதத்தின் பெயரை குறிப்பிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் என ஒட்டுமொத்த  முஸ்லிம் சமுகத்தையும் குறி வைத்து தாக்காதீர்கள்!

தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் நீங்கள் ஏற்றி கொண்டு இருக்கும் SLOW POISON அது!


68 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. எதிர்ப்பது நியாயம்தானே!

   நீக்கு
  2. சொம்பு தூக்கிட்டு நாட்டாம செய்ய வந்திருக்கும் ராஜா அவர்களே.. சொம்ப தூக்கிட்டு ஓட்றிங்களா..

   நீக்கு
 2. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ,விஜய்க்கு என் கண்டனங்கள்.

  பதிலளிநீக்கு
 3. இது ஒரு தொடர்கதை போல...

  சிந்திக்க வேண்டிய உண்மையான கேள்விகள்...
  tm5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி...இந்த கேள்விகளுக்கு எப்போது முற்றுபுள்ளி?

   நீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மிகச் சரியான ஆதங்கம். யார் திருந்தினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள் போல. இன்ஷா அல்லாஹ் இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க போராடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ.....

   ..நன்றி சகோ.....திருந்தாவிடில் திருத்துவோம்....ஒரு முற்றுபுள்ளி வைப்போம்...

   நீக்கு
 5. அருமையான ஒரு ஆதங்க பதிவு. எனது கண்டனங்களையும் இந்த பதிவின் மூலம் பதிவு செய்துகொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. மச்சான்...

  முஸ்லிம்களின் ஆதங்கத்தை மொத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்... நான் படம் பார்க்கவில்லை... 12 பேரும் முஸ்லிங்களா... அடப்பாவிகளா குண்டுவெடிப்பை விட மோசமான மதக் கலவரங்களை நாடெங்கும் தூண்டிவிட்டுக் கொண்டு இருக்கிறார்களே அதை ஏன்பா யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மச்சான்....அதை யாரும் கேட்க மாட்டார்கள்....ஏன் இவர்கள் கோப படுவார்கள் என்ற எதிர் கேள்விகள்தான் நம்மை நோக்கி திரும்ப வரும்!

   நீக்கு
 7. சலாம் சகோ.

  நம்ம டாகுடர் விஜை அந்த வேலையை வேலாயுதம் படத்திலிருந்தே தொடங்கி விட்டதாக நினைக்கிறேன்...இவரும் வர்ற நோன்புக்கு கஞ்சி குடிக்க குல்லா போட்டுடுவார் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ...ஆம் ...அப்புறம் டாக்டர் கட்சி ஆரம்பித்தால் நோன்பு கஞ்சி குடிக்க போய்விடுவார்.....

   நீக்கு
 8. நம் அனைவரின் மீதும் அமைதியும் அன்பும் இறைவனின் அருளும் அபிவிருத்தியும் நிலவட்டுமாக.

  //தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் நீங்கள் ஏற்றி கொண்டு இருக்கும் SLOW POISON அது!//

  ---'எதை கதையாக சொன்னால் காசு இக்காலத்தில் பார்க்கலாம்' என்று நாயாக அலையும் பொறுக்கிகள்தான் சினிமாவில் 90% இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் இப்போது புதிய பொறுக்கியாக முருகதாசும் விஜயும் சேர்ந்து கொண்டார்கள். எனது பார்வையில் இவர்கள்தான் பயங்ககரவாதிகள். உங்களின் இந்த எதிர்ப்பு இடுகை கூட அந்த மானம் ரோஷம் கேட்ட பொறுக்கிகளுக்கு அதீத மகிழ்வை தரும். ஏன்..? இது அவர்களுக்கு காசு தராத விளம்பரமாம்..! படம் ஹிட் ஆகுமாம்..! அடக்கேவலமே..!

  இது போன்று படம் எடுப்பவர்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் வாழ்நாள் தடை அறிவிக்க வேண்டும்..! மேட்ச் பிக்சிங் ஊழல் செய்த அசாருதீன், மொங்கியா, ஜடேஜா, அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போலவே, இவர்களுக்கும் தரப்பட வேண்டும். இவர்கள் புனையும் கதை பொய்யை உண்மையாக்கி மக்கள் மனதில் "கருத்து-பிக்சிங்" செய்கிறார்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. # இவர்கள் புனையும் கதை பொய்யை உண்மையாக்கி மக்கள் மனதில் "கருத்து-பிக்சிங்" செய்கிறார்கள்..!#

   சாட்டையடி சகோ....1000%அக்மார்க் உண்மை.....

   நீக்கு
 9. உங்கள் கருத்து நியாயமானதே, திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை கேவலமாக சித்தரிப்பது நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 10. குண்டு வைப்பவன் அது முஸ்லிம் பெயர் உள்ளவன் மட்டும்தான் அவன் மாற்று மதத்தினராக இருந்தாலும் . ஒரு பிராமணருக்கும் ஒரு கிருத்துவருக்கும் வந்த கலவை அப்படித்தான் செயல்படுவதா!
  தீவிரவாதி என்றால் இஸ்லாமியன் . காஸ்மீரில் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமை கொன்றால் முஸ்லிம் தீவிரவாதி. மற்ற இடத்தில் ஒரு முஸ்லிமை மற்ற இனத்தவர் கொன்றால் அவன் கொலையாளி . இதுதான் நடப்பது .ஜிகாத் என்றால் மனதை கட்டுப்படுத்துவது ஆனால் இவர்கள் கொடுக்கும் பெயர் ஜிகாத் என்றால் தீவிரவாதம் என்னும் முத்திரை. ஒரு இஸ்லாமியன் அழகு தமிழில் பேசத் தெரியாது அவன் தமிழனாக இருந்தாலும் .இதுதான் தொடர்ந்து வரும் செயல். பணத்திற்காக அறிவு போகும்,உண்மை மறையும் நினைத்தபடி எழுதி தருவான் நினைத்தபடி நடிப்பான். இவர்கள் நடிகர்கள் தானே ! சமுதாயத்திற்குள் குழப்பம் உண்டாக்கி தான் உயர வர நினைக்கும் கேடுகெட்ட மனிதர்கள்.
  உங்கள் கட்டுரை சிறப்பாக அதிலும் மென்மையாக மற்றும் மேன்மையாக தவறை சுட்டி காட்டி எழுதப்பட்டுள்ளது சிறப்பு

  பதிலளிநீக்கு
 11. எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் தோழரே..

  பதிலளிநீக்கு
 12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

  படத்தை பற்றிய எதிர் விமர்சனங்கள் வந்த போது கூட நம் சகோதரர்கள் தேவை அற்ற பப்ளிசிட்டியை படத்திற்கு கொடுக்கிறார்களோ என்று நினைத்தேன்...!! உங்களது இந்த பதிவை படிக்கும் வரை......!!

  //நீங்கள் இந்த படத்தில் சுட்டு கொள்வதாக காட்டி இருக்கும் ஸ்லீப்பிங் செல்ஸ் 12 பேரும் முஸ்லிம்களாக மட்டும்தான் இருக்க வேண்டுமா விஜய்?!/// 12 பேருமே முஸ்லிம்களா?? :( :(

  இந்த படத்தை பார்த்துமா ஒரு சில இஸ்லாமிய சகோதரர்கள ஆகா ஓகோ என இந்த படத்தை பாராட்டினார்கள்...! வெட்க கேடு..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம்....
   வெட்க கேடுதான்....!நமது எதிர்ப்பை காட்டினால்தான் இனி அதுபோல் காட்ட அவர்கள் தயங்குவார்கள்....உப்கைல்ன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி....

   நீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ...

   சினிமாவில் பெரும்பாலுமே சமூகத்துக்கு கேடு விளைவிக்கும்
   நச்சுக் கருத்தைதான் பரப்பி வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று.

   சினிமாவினால் வெவ்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அரசாங்கமோ,சினிமாத்துறையோ இதைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட
   போவதில்லை.

   மக்கள்தான் சினிமாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.
   ஆனால் மக்களோ விஷத்தை அமிர்தமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
   நீர்,காற்று, போல சினிமாவும் ஒரு அடிப்படைத் தேவை என்று எண்ணுகிறார்கள்.
   மக்களை இந்த மாயையில் இருந்து மீட்டு எடுக்கும் பொறுப்பு

   நீக்கு

  2. வஸ்ஸலாம் சகோ....

   சரியாக சொல்லி இருக்கீறீர்கள் ......நன்றி

   நீக்கு
 14. இஸ்லாமியர்களை குறிவைக்கும் “துப்பாக்கி”

  ”தீவிரவாதம்” இது நம் மீது என்றோ பதியப்பட்டு விட்ட களங்கம், தமிழில் விஜயகாந்தும் அர்ஜுனும் கைவிட்ட பிறகு விஜய் எடுத்திருக்கிறார்.

  பாவம் விஜய், விஜயகாந்த் கடந்த தேர்தலில் கூடுதல் சீட் பெற்றதுக்கு இதுதான் காரணம் என்று நினைத்து விட்டார் போல.

  அரசியலுக்கு வந்தால் தலையில் தொப்பி போட்டுக்கொண்டு நோன்பு கஞ்சியும் குடிப்பார் என்பது இதன்மூலம் நிரூபனம் ஆகிவிட்டது.

  இது போன்ற விஷமங்களை போராடியோ கண்டனம் செய்தோ மாற்ற முடியாது, மாறாக தமிழ்ச்சமூகத்திற்கு நன்மைபயக்கும் நல்ல விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபடவேண்டும்.

  மும்பை இரயில் தொடர்குண்டு வெடித்தவுடன் எத்தனையோ முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் கொடுக்க வரிசையில் நின்றதையும் அந்த குண்டு வெடிப்பை எதிர்த்து போராடியதையும் என் நண்பன் கூற கேட்டிருக்கிறேன். இது அன்றைய செய்தியாகவும் வந்திருந்தது இது சதிகாரர்களின் சதியை முற்றிலுமாக முறியடித்தது.

  இதுபோன்ற நல்ல விஷயங்களால், மும்பை திரைப்படங்களில் தீவிரவாதியாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டாலும் அது அங்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

  தமிழ்நாட்டில் இந்த கதை நடப்பதாக எடுத்திருந்தால் நிச்சயம் பத்தோடு பதினொன்றாக பெட்டிக்குள் சென்றிருக்கும், எனவேதான் புத்திசாலித்தனமாக மும்பையில் நடப்பதாக காட்டி கதைக்கு வலுவூட்ட எண்ணியிருக்கின்றனர்.

  குண்டு வெடிப்பு நடந்த சில நிமிடங்களில் வெளிவரும் ”இதற்கு (ஏதேனும் ஒரு இஸ்லாமிய பெயரை வைத்து) இயக்கம்தான் காரணம்” என்னும் பத்திரிகை செய்தியுடன் இந்த படமும் சேர்ந்து கொண்டு உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ஆழமான சிந்திக்க வைக்கும் கருத்துரை..ஆம்..நமது செயல்களின் மூலமாகத்தான் இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.....நன்றி

   நீக்கு
 15. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ
  சினிமாவுக்கும் எனக்கும் வெகு தூரம் .....கமலின் விஸ்வருபம் படம் கூட
  முஸ்லிம்களுக்கு எதிரான படமாக இருக்கும் என்று இணையத்தில் பேசிக்குறாங்க.......
  எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டல்லவா அதுனாலே நாம் பொறுமையுடன் இருந்தால் லாபம் நமக்குதான் ....புரிந்துக்கொண்டு
  இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ.....

   என்ன இருந்தாலும் நமது எதிர்ப்பை,கண்டனங்களை பதிவு செய்வதுதான் நல்லது.....

   நீக்கு
 16. அஸ்ஸலாம் அலைக்கும் ...

  சகோ அருமை.... புத்தியில்லாத ஜடங்களுக்கு நல்ல தொரு கண்டனம்.

  இஸ்லாத்தையும் அதன் வளர்ச்சியையும் தாங்கிக்கொள்ள இயலாமல், இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரித்து கொசைப்படுத்துபவர்களோடு தம்முடைய பங்கிற்கு தமிழ்நாட்டு சினிமா கூத்தாடிகளும் கை கோர்த்து கிளம்பி விட்டனர்.

  சினிமா கூத்தாடிகளை பொறுத்தவரை தாங்கள் லாபம் அடையவதற்காக மது, மாது, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு, தற்கொலை, இளம் வயது பெண் வீட்டை விட்டு ஓடுவது, நகைச்சுவை என்ற பெயரிலும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வசனங்கள் மற்றும் காட்சிகள். இன்னும் ஏராளாமான தீமைகள் போன்ற எந்த தீய காரியத்தையும் சர்வ சாதாரணமாக காட்சிபடுத்துவர்.

  சினிமா கூத்தாடிகளால் சமூகத்திற்கு நன்மையை விட தீங்குகள் தான் அதிகம் கிடைத்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ.....

   நன்றி.....நம்மால்தான் சினிமா கூத்தாடிகளுக்கு நன்மை ..அவர்களால் நமக்கு என்றுமே இல்லை .....

   நீக்கு
 17. உண்மையில் சொல்லப்போனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான விஷயம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் தான். பிரதமரே ஒத்துக்கொள்கிறார் மாவோயிஸ்ட்டின் கட்டுப்பாட்டில் சில மாநிலங்களின் பல பகுதிகள் இருப்பதாக..ஆனால் இதைப்பற்றி எந்தப்படத்திலும் ஒரு வரியாக கூட ஒரு வசனமேனும் வந்ததில்லை. காவிபயங்கரவாதம் என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் ஒத்துக்கொண்டார். ஆனால் இந்த தீவிரவாதங்களைப் பற்றி ஒரு படத்திலும் ஒரு வரியேனும் ஒரு வசனமேனும் வந்ததில்லை.

  ஆனால் இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்களே. இதற்கு சினிமாக்காரர்களெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற அர்த்தமல்ல. மீடியாக்கள் ஏற்படுத்திய தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற பொதுப்புத்தி தான் காரணம். இந்த பொதுப்புத்தியை களைய முஸ்லிம்கள் என்ன முயற்சிகள் எடுத்தார்கள் என்று கேட்டால் பதில் பூஜ்யம் தான்.

  எத்தனைப்படங்களை எதிர்க்க முடியும் கண்டிக்க முடியும்?

  டாகுமென்டரி பிலிம்கள் எடுக்க வேண்டும் முஸ்லிம்கள். குஜராத் கலவரத்தை நம் கண் முன் கொண்டு வந்த ஆவனப்படத்தை எடுத்தவர் முஸ்லிம் அல்ல. குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்ற ஒரு செய்தியை ஆராய்தாலே பல ஆவணப்படங்களை தர முடியும்.

  மீடியாக்களோடும் திரைத்துறையினரோடும் முஸ்லிம்கள் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும். அப்படி நடந்தப்படும் பட்சத்தில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. புரிதலில் குறைபாடிருக்கும் போது ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுப்புத்தியின் படி தான் அவர்களின் படைப்புக்கள் சினிமாவாக வெளிவரும்.

  இதையெல்லாம் விளக்கி புரிய வைக்கும் இடத்திலிருக்கும் இயக்குநர் அமீர் "முந்தானைய மோந்து நா.. மோப்பம் புடிச்சி அலஞ்சேன்.." என்று கன்னித்தீவுப் பெண்ணின் பின்னால் குத்தாட்டம் போடுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #டாகுமென்டரி பிலிம்கள் எடுக்க வேண்டும் முஸ்லிம்கள். குஜராத் கலவரத்தை நம் கண் முன் கொண்டு வந்த ஆவனப்படத்தை எடுத்தவர் முஸ்லிம் அல்ல. குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்ற ஒரு செய்தியை ஆராய்தாலே பல ஆவணப்படங்களை தர முடியும்.#

   சரிதான் சகோ..முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் ......

   நீக்கு
  2. #உண்மையில் சொல்லப்போனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான விஷயம் மாவோயிஸ்ட் தீவிரவாதம் தான். பிரதமரே ஒத்துக்கொள்கிறார் மாவோயிஸ்ட்டின் கட்டுப்பாட்டில் சில மாநிலங்களின் பல பகுதிகள் இருப்பதாக..ஆனால் இதைப்பற்றி எந்தப்படத்திலும் ஒரு வரியாக கூட ஒரு வசனமேனும் வந்ததில்லை. காவிபயங்கரவாதம் என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் ஒத்துக்கொண்டார். ஆனால் இந்த தீவிரவாதங்களைப் பற்றி ஒரு படத்திலும் ஒரு வரியேனும் ஒரு வசனமேனும் வந்ததில்லை.#   பொட்டில் உறைய வைக்கும் உண்மை.....அருமை சகோ....

   நீக்கு
  3. #இதையெல்லாம் விளக்கி புரிய வைக்கும் இடத்திலிருக்கும் இயக்குநர் அமீர் "முந்தானைய மோந்து நா.. மோப்பம் புடிச்சி அலஞ்சேன்.." என்று கன்னித்தீவுப் பெண்ணின் பின்னால் குத்தாட்டம் போடுகிறார்.#


   என்னத்த சொல்றது...!

   நீக்கு
 18. This is due to the impact that terrorists especially who from Islamic background have made in the entire world's economy,tradition and human values.
  Maoists were trying to oppose the govt for their basic needs and welfare of the poor, but i dont see any such things from these ethnic group of terrrorists like al-kaitha, al-umma,lashkar e-thoiba and many more.

  First you should give an explanation for why JIGATH has transformed into such an crucial activity. Then you guys should try to realize people that other Muslims doesnt have any connection with those Fuc*ers.

  See i'm not blaming you, but you all are the reason for this has happened and happening.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் செயல்படும் எல்லா அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகளே....

   ஜிகாத் என்ற சொல்லை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை கொள்ளும் செயல்களை உண்மையான எந்த முஸ்லிமும் ஒப்பு கொள்ளமாட்டான்....

   கோடி கணக்கானோர் பின்பற்றும் ஒரு மதத்தில் சிலர் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

   நீக்கு
 19. மதம் ஜாதிகள் இரண்டும் ஒழியவேண்டும்; அவை நமக்கு தேவையும் இல்லை. நம் மனைவி, மக்கள், நண்பர்கள், சொந்தங்கள் - இதற்க்கு மேல் என்ன வாழ்கை ஒருவனுக்கு வேண்டும்? சிந்தியுங்கள்...

  உங்கள் தலைவர்கள் சினிமா ஆட்களிடம் பேசவேண்டும்;.அரசியல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஜால்ரா அடிக்கற வேலையை நிருத்த சொல்லுங்கள். ஆக்க பூர்வமாக செயல் பட நீங்கள் தான் வர்ப்புருத்தனும்.

  மதத்தைக் காட்டாமால் படம் எடுக்க முடியும். சிறுபான்மை இனத்தை என்றுமே இது மாதிரி காட்டக்கூடாது. தவறு. அமெரிக்காவில், இந்துக்கள் ஒரு விழுக்காடு இருந்தால் அதிகம். ஆங்கிலப் படத்தில் இந்துக்களை தீவிர வாதியாகக் காட்டினால் இந்தியாவில் எல்லா கூஜாக்களும் குத்துக்கும், sorry, கொதிக்கும்...எடுத்து சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #மதத்தைக் காட்டாமால் படம் எடுக்க முடியும். சிறுபான்மை இனத்தை என்றுமே இது மாதிரி காட்டக்கூடாது. தவறு. அமெரிக்காவில், இந்துக்கள் ஒரு விழுக்காடு இருந்தால் அதிகம். ஆங்கிலப் படத்தில் இந்துக்களை தீவிர வாதியாகக் காட்டினால் இந்தியாவில் எல்லா கூஜாக்களும் குத்துக்கும், sorry, கொதிக்கும்...எடுத்து சொல்லுங்கள்..#

   .உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி....

   நீக்கு
 20. உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.இந்த மாதிரி படங்கள் இசுலாமியர்களை பற்றி மேலும் தவறான அச்சத்தை உண்டாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
  ஆனால் அதே சமயத்தில் பல நாடுகளில் தீவிரவாதிகள் ஏன் இசுலமுக்காகவும்,அல்லாவுக்காகவும் தான் தாங்கள் சண்டையிடுவதாக கூறுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்,அவர்களின் தவறை சுட்டி காட்ட வேண்டும். இதேபோல சிந்தனைகள் எதிர்காலத்தில் இசுலாமியர்கள் மத்தியில் ஏற்ப்படாமலிருக்க குரானிலும், ஹதீசுகளிலும் புதிய தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும். இவற்றை செய்யாத வரை அல்லாவின் பெயரால் தீவிரவாதம் தொடரும். அது மனித குலத்திற்கு நல்லதல்ல.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #ஆனால் அதே சமயத்தில் பல நாடுகளில் தீவிரவாதிகள் ஏன் இசுலமுக்காகவும்,அல்லாவுக்காகவும் தான் தாங்கள் சண்டையிடுவதாக கூறுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்,அவர்களின் தவறை சுட்டி காட்ட வேண்டும். #

   சுட்டி காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் சகோ.....நன்றி

   நீக்கு
 21. பல பெண்களை கட்டிப்பிடித்து, தடவிக் கொடுத்து அதன் மூலமாக வாங்கிய பணத்தில் வயிற்றை நிறைக்கக் கூடிய மானங்கெட்டவர்களே?
  இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து உள்ளாயே? இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்காவது உனக்கு தகுதியுள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிகனாக இருப்பதால் வரும்காலத்தில் நாடாளலாம் என்று நினைத்து இருப்பார்...அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்..நன்றி

   நீக்கு
 22. //நீங்கள் இந்த படத்தில் சுட்டு கொள்வதாக காட்டி இருக்கும் ஸ்லீப்பிங் செல்ஸ் 12 பேரும் முஸ்லிம்களாக மட்டும்தான் இருக்க வேண்டுமா விஜய்?!//

  விஜய்யின் மூளையில் உள்ள செல்ஸும் தூங்கியே போய்விட்டதால் வந்திருக்கும் இந்த நிலை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றாகிவிட்டது, அரசியல் காற்றை சுவாசித்த உடன். ஒரே குட்டையிலும், அசிங்கத்திலும் நெளியும் புழுக்களுக்கு என்ன தெரியும் வாழ்வைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களைப் பற்றியும். வெட்கக்கேடு.... நம் ஓட்டுக்களில் வாழ்ந்து விட்டு நம்மை இப்படி சித்தரிப்பவர்களை நம்மையே ஆளுவதற்கு சீட்டு கொடுக்கும் அரசாங்கத்தை நினைத்து!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 23. முஸ்லிம்களை அச்சுறுத்தும் போக்கு : சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துவரும் அரச பயங்கரவாதம்!

  Wednesday, 14 November 2012 17:53 Mமீடியா - செய்திகள்

  NOV 14, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்கும் முஸ்லிம்கள், குறித்த நேரத்தில் - குறித்த விமானத்தில், தங்களது பயணங்களை மேற்கொள்வது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

  கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமீர் தாஹா (33). கொச்சியிலிருந்து சென்னை - டெல்லி வழியாக துபாய் செல்வதற்கு நேற்று (13/11) மாலை 6 மணிக்கு சென்னை வந்திறங்கினார்.

  அப்போது, (7 மணி) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

  அவர், உள்நாட்டு முனையத்தில் காரை விட்டு கீழே இறங்கி, விமான நிலைய உள்பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார்.

  போர்டிகோ பகுதியில் நின்றிருந்த அமீர் தாஹா, தனது செல்போனில் சிதம்பரத்தை படம் பிடித்ததாக தெரிகிறது.

  அவர் முஸ்லிம் என்பதை தெரிந்துக்கொண்ட சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

  அமீர் தாஹாவிடம், கொச்சியிலிருந்து சென்னை வந்த பயணச்சீட்டு, இன்று காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் டிக்கட், அங்கிருந்து துபாய் செல்வதற்கான முறையான ஆவணங்கள் அனைத்தும் இருந்தபோதும், சிதம்பரத்தை ‘எதற்காக படம் பிடித்தாய்’? என்று கேள்விமேல் கேள்வி கேட்டு,துளைத்தெடுத்தனர்.

  மேலும், உறுதி செய்யப்பட்ட அவரது பயணத்துக்கு இடையூறு செய்யும் வகையில், அவரை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

  கேட்டரிங் டெக்னாலஜி முடித்துள்ள அமீர் தாஹாவை, கொடுமை படுத்த முடிவு செய்துவிட்ட விமான நிலைய அதிகாரிகள், கியூ பிராஞ் போலீசார், தீவிரவாத கண்காணிப்பு பிரிவு போலீசார், விமான நிலைய போலீசார் என பலருக்கும் தகவல் கொடுத்தனர்.

  இரவு முழுவதும் தனி அறையில் வைத்து விசாரித்துள்ளனர்.

  அது போதாதென்று, இன்று காலை சென்னை நிலைய போலீசில் அவரை ஒப்படைத்தனர்.

  கேரள மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்து, அமீர் தாஹா பற்றிய விவரங்களை கேட்டுள்ளனர்.

  வேடிக்கை என்னவென்றால், இந்த அமீர் தாஹாவை, சரியாக 40 நாட்களுக்கு முன் (03/10/12) விமானத்தை படம் பிடித்ததாக போலீசார் பிடித்து விசாரித்தனர்.

  2 நாள் வைத்து விசாரித்த பிறகும், இவர் மீது குற்றம் இல்லை என்று கூறி, குற்ற நடைமுறை சட்டம் 41-வது பிரிவின் கீழ் சாதாரண வழக்கு, பதிவு செய்து விடுவித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

  SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/612-2012-11-14-17-53-39


  பதிலளிநீக்கு
 24. முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

  வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

  கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

  எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,

  காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

  இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

  இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

  இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

  உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.

  சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

  SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/

  முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.


  பதிலளிநீக்கு
 25. பெயரில்லா9:46 AM, நவம்பர் 15, 2012

  தர்மபுரியில் நடந்த சாதி கலவரத்தில் கிராமங்களை கொளுத்தி போட்டனர். அந்த செயலில் ஈடுபட்ட சாதியினர் பெயரை அப்படியே வைத்து ஒரு படத்தில் விஜய் நடிப்பாரா? முருகதாஸ் இயக்குவாரா?

  தமிழ் சினிமாவிற்கு சேட், மலையாள பெண்மணி, பிராமணர், இஸ்லாமியர்கள் என்றால் அவ்வளவு மட்டமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான கேள்வி.....அதுமாதிரி எல்லாம் இவர்கள் எடுக்க மாட்டார்கள்..ஒருவேளை நீங்கள் கேட்டது போல படம் எடுத்தாலும் சென்சார் திரை இட அனுமதிக்காது....ஆனால் இது மாதிரி படங்களை எல்லாம் அனுமதிக்கும்!நன்றி

   நீக்கு
 26. பெயரில்லா10:20 AM, நவம்பர் 15, 2012

  muslimgal oodagathuraiyil illai.. adai nivarthi seivadu buthisaalithanam..avvaru aarvam ullor, 98406 89676 contact pannavum..

  பதிலளிநீக்கு
 27. பஹ்ரைனில் உயிரிழந்த தமிழரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

  Monday, 12 November 2012

  பஹ்ரைனில் கடந்த வாரம் தமிழகத்தில் தோப்புத்துறையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.

  அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  அங்குள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக) வினரும், சமுதாய ஆர்வலர்களும் அவரது உடலை பெற்று தமிழகத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.

  இன்று காலை அவரது உடல் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கியது.

  உடலை திருச்சி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
  (தமுமுக) ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அய்யம்பேட்டையில் உள்ள அவரது மனைவி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.

  அவரது உறவினர்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக) வினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.

  பதிலளிநீக்கு
 28. விஜய் படத்த பாக்கவே எனக்கு கடுப்பு ஆகும் ..இதுல அவன் இஸ்லாத்தை தாக்கிவேற எடுத்துருக்கான் ....என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 29. நல்ல கேள்வி, பணம் வாங்கி நடித்து இருந்தாலும் அவர்களுக்கும் மனசாட்சி இருக்காது என்றே நினைக்கிறேன், இவர்கள் என்ன நடிக்கிறோம் என்றே தெரியாமால் நடிக்கின்றனர், இயக்குனரின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று நினைக்க தூண்டுகிறது, செய்யவேண்டியது ஒண்ணுதான் எதிர்ப்பை இதற்க்கு அனுமதி வழங்கும் தணிக்கை துறையின் மீது வழக்கு தொடரவேண்டும். படமோ அல்லது தொடரோ எடுக்கும் மற்றும் உரிமை உண்டு ஆனால் அதனுள் இருக்கும் அளவு கடந்த துவேஷம் அதனை சட்டப்படி தடுக்க வேண்டிய துறை இது, ஆனால் காலத்தின் கட்டாயம் அதனுள் இருக்கும் கருப்பு ஆடுகள் சம்மந்த பட்ட மதத்தினரை வேண்டும் என்றே சங்கடபடுத்தும் இது போன்று எடுக்கும் படங்களினால் வரும் விளைவுகளை வேண்டும் என்றே தடுக்காமல் விட்டு விடுகின்றனர். எனவே அனைவரையும் ஒன்று திரட்டி அத்துறையினருக்கு தந்தி கொடுக்க வேண்டும், இதனை தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கும் அனுப்ப வேண்டும், இப்போதுதான் ஒரு இஸ்ரேலியனின் அவதூறு படம் தொடப்பாக சம்மந்தப்பட்ட மதத்தினர் போராட்ட நடத்தி அதற்க்கு ஒரு பெரிய விளம்பரம் கிடைத்து உள்ளது மீண்டும் இது போன்று தரவேண்டியது இல்லை, இது ஒரு மூன்றாம் தர விளம்பரம் தேடிக்கொள்ள செய்யும் செயல்,

  பதிலளிநீக்கு
 30. முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி...

  இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!


  Published: Thursday, November 15, 2012, 13:09 [IST] Posted by: Shankar


  இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.

  தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.

  இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

  இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.

  ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம்.

  தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம்.

  ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!

  SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/thuppakki-press-meet-cancelled-due-164684.html

  பதிலளிநீக்கு
 31. Its the time the censor board needs to be revised and strict protocols needs to be inculcated before a film been releasd. Any oppressions against any religion, or a community needs to be kept under constant watch. The Censor board should bear the full blame.

  பதிலளிநீக்கு
 32. ya i also agree ,but the we cant say vijay is wrong becaz the whole concept was done by the director and also vijay shouldnot took this film...dont feel freinds because they alway do like this but it will decreases later and most of our people are not think like the director..

  பதிலளிநீக்கு
 33. ஹல்லோ சார் இப்டியே விட்ருங்க, இது மொக்க படம்.. தேவை இல்லாம நீங்களே இந்த படத்துக்கு விளம்பரம் பண்ணாதீங்க... கண்டிப்பா கண்டுக்காம விட்டா அது ஒரு வாரத்துலஅடங்கிடும் .. இல்லேனா அதையே விளம்பரம் பண்ணிடுவனுக ...

  பதிலளிநீக்கு
 34. PART 1. யார் தீவிரவாதி.............???

  பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு தயாரா..........???

  இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் அவர்களே...

  இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?

  உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும் கிழித்தெறியப்படும்,

  ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

  யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

  1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

  2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

  5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

  6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

  7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

  8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

  9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

  10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

  11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

  12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

  13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

  14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

  16) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

  16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

  17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

  2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

  2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

  2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

  2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

  2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

  2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

  2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

  2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

  2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

  2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

  2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

  2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

  2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.

  1983 பிப்ரவரி 18: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

  CONTINUED ........

  பதிலளிநீக்கு
 35. PART 2. யார் தீவிரவாதி.............???


  1989 பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

  இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

  இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

  இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

  மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

  இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை (2002 பிப்ரவரி 28).

  அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

  தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய்,அர்ஜுன், விஜயகாந்த், மணிரத்னம், முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?

  பல பெண்களை கட்டிப்பிடித்து, தடவிக் கொடுத்து அதன் மூலமாக வாங்கிய பணத்தில் வயிற்றை நிறைக்கக் கூடிய மானங்கெட்டவர்களே?

  இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து உள்ளாயே?

  இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்காவது உனக்கு தகுதியுள்ளதா?

  மூளை மழுங்கியவர்களையும், ஒன்றும் அறியாத ஏழை ரசிகர்களின் தயவில் வாழக் கூடிய நீ இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்தது என்ன?

  உனது திரைப்படத்தில் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், ஊருகாயாகவும் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதுதான் நீ நாட்டுக்கு செய்யும் தேசப்பற்றா?

  பல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய இடங்களில் இது போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து உனது காவி சிந்தனையை காட்டுகின்றாயா?

  பல திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இதனை ஈடுகட்ட ஹீரோவின் நண்பனாக ஒரு குல்லாவும், தாடியும் வைத்து ஒருவனை நடிக்க வைப்பது. உங்களது நடுநிலை புல்லறிக்க வைக்கின்றது.

  நாய்ப் புகழ் நடிகரைப் போல ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்று திரைப்படங்களில் நடித்து அரசியலில் களம் இறங்க அடித்தளமிட்டால் இது உனது அறியாமையையும், அடி முட்டாள்தனத்தைத் தான் காட்டுகின்றது. என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்காது.

  நன்றி : Tntj Ottery

  Posted by கீழை ஜமீல் முஹம்மது

  பதிலளிநீக்கு
 36. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஏ.ஆர்.முருகதாஸ் - தயாரிப்பாளர் தாணு

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, ஹீரோ விஜய் ஆகியோருக்கு கண்டனங்களும், அவர்களுக்கு எதிராக போராட்டங்களும் அறிவித்தனர்.

  இதுபோன்ற பின்விளைவுகளை எதிர்பார்க்காத இயக்குனரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் அதிர்ச்சி அடைந்தனர்.

  இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்புக்கு இணங்கி ஏ.ஆர்.முருகதாஸ், தாணு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  சில மணிநேரங்கள் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

  பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “ துப்பாக்கி படத்தை முழு கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தோம்.

  யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை.

  துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மதத்தினரின் மனது புண்படும் நோக்கில் இருக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

  இஸ்லாமிய மக்களின் மனது புண்படும் வகையில் சில காட்சிகள் அமைந்ததை நினைத்து வருந்துகிறோம்.

  இந்த தவறு தெரியாமல் நடந்ததே தவிர திட்டமிட்டு நடக்கவில்லை.

  தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

  துப்பாக்கி பட தயாரிப்பாளர் தாணு பேசிய போது “ இந்த தவறு தெரியாமல் நடந்த ஒன்று. ஒரு இராணுவவீரன் தன்னை ஒரு நாட்டுக்காக எந்த அளவிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதை உணர்த்தும் நோக்கில் தான் படத்தை எடுத்தோம்.

  இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும் இராணுவத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

  துப்பாக்கி படம் துவங்கிய போது தயாரிப்பாளராக இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் “ தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாமல் தாய்மார்களின் நெஞ்சத்திலும் இடம்பிடிக்க நினைத்து நடிப்பவர் விஜய். துப்பாக்கி படத்திற்கு இது போன்ற எதிர்ப்பு வந்தது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், ஜாதியினரையும் விஜய் மதிக்கிறார். அவர்களது ரசிகர்களிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.

  அவர்கள் மனதை புண்படுத்தி விஜய் சந்தோஷப்படமாட்டார்.

  இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார். இஸ்லாமிய மதத்தினரின் விருப்பத்திற்கேற்ப தவறான காட்சிகள் மாற்றப்படும்” என்று கூறினார்.

  துப்பாக்கி படத்திலிருந்து எந்த எந்த காட்சிகள் நீக்கப்படும் என்பது பற்றி ஒரு சில தினங்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

  -இணைய செய்தி

  எல்லாம் சரி. இதற்கு பிராயச்சித்தமா விஜய் அடுத்த படத்துல முஸ்லிமா நடிக்கிறாராமா! இது அதை விட பெரிய கொடுமை.

  தயவு செய்து இந்த கூத்தாடி கும்பல்கள் இஸ்லாத்தை விட்டுருங்கலேம்பா! புண்ணியமாகப் போகும்.

  THANKS TO SUVANAPPIRIYAN BLOGSPOT.

  பதிலளிநீக்கு
 37. இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார்.....பெரிய கொடுமை .....

  பதிலளிநீக்கு
 38. ##தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் நீங்கள் ஏற்றி கொண்டு இருக்கும் SLOW POISON அது!## சரியான வரிகள் சகோ. இது குறித்தும் சென்சார் போர்டு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். இனத்தாலும், மதத்தாலும் வேறுபட்டோர் ஒன்றுபட்டு வாழும் நாட்டில் இந்த மாதிரி செயல்களை தடுக்க ஆவண செய்து சட்டமாக்க வேண்டும் அதிலும் திரைத்துறையிலும், அரசியலிலும்... முக்கியமாக

  பதிலளிநீக்கு
 39. விஜய்க்கும் முருகதாசிர்க்கும் கண்டனம் என்று கூறிவிட்டு முருதாஸ் பெயரை எங்காவது பயன் படுத்தி இருக்கீர்களா? குற்றம் சொல்லவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு, தலைப்பை முடிவு செய்து இருக்கிறீர்கள். நேர்மையாக சொல்லும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்வோம் .

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....