19 நவம்பர் 2012

சாவு பயத்தை காட்டி பணமாக்கும் சன் (சனியன்)மியூசிக்கிற்கு சங்கு எப்ப?சன் மியுசிக்கில் வரும் "வடை போச்சே"என்ற நிகழ்ச்சியின் தரம்  கெட்ட போக்கை பற்றி  ஏற்கனவே நான் எழுதி உள்ளேன்....அந்த நிகழ்ச்சி இன்னும் பலமடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பலவிதமாக பலரை TEES செய்து மிக நன்றாக சென்று கொண்டு இருக்கிறது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் ரோசமுள்ள தமிழர்கள் அல்லவா நாம்?!

அதே டிவி யில் "நாக் நாக்" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி... சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த ஒருவரை 5,6 பேர் ஆயுதங்களுடன் மிரட்டி காரில் கடத்தி செல்கின்றனர்....அவரை கத்தியால் குத்துவதுபோல,வெட்டுவதுபோல மிரட்டுகின்றனர்..அவர் அழுகிறார் கெஞ்சுகிறார் ஆனால் அவர்கள் விட்ட பாடில்லை ...ஒரு இடத்தில அவரை காரிலிருந்து மிரட்டியே இறக்குகின்றனர் .சில நிமிடங்கள் கழித்து இரண்டு பேர் அவரை நோக்கி ஹாப்பி பர்த்டே என சொல்லி கொண்டே ஓடி வருகின்றனர்....

என்னடா இதுன்னு பார்த்தால் அந்த நபருக்கு அன்று பிறந்த நாளாம் ..அவரின் நண்பர்கள் ஒரு சர்ப்ரைசுக்காக சன் மியுசிக்கிற்கு எழுதி  போட்டு இவ்வாறு செய்தார்களாம்....சாவு பயத்தை கண்ணால் கண்ட அந்த கடத்தப்பட்ட நபரை அந்த டிவி காரர்கள் உங்க நண்பர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்கின்றனர் அவர் சொல்கிறார்:இது போல செய்யாதீர்கள் என்று".....

ஏன்யா அந்த டிவி காரனுக்குத்தான் வேற வேலை இல்லை என்றால் இந்த நண்பர்களுக்குமா.....!அப்படி என்னய்யா உயிர் பயத்தை காட்டி ஒரு சர்ப்ரைஸ் ?ஒருவேளை  உயிர் பயத்தாலே அந்த நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பு?அந்த நண்பர்களா?இல்லை எது எப்படி போனாலும் பரவாயில்லை  நிகழ்ச்சி டி ஆர்  பி ரேட்டிங்கில் மேலே வரணும்,விளம்பரமா காசு கொட்டனும் என்பதற்காக அவ்வாறு செய்த அந்த கேடு கேட்ட டிவி காரனுகளுக்கா?!

நீங்கள் கேட்கலாம் சம்பந்தப்பட்ட அந்த நபரே கூல் ஆகிவிட்டார் ..அவரின்  நண்பர்கள் செய்ய சொன்னதால்தான் அவ்வாறு செய்தார்கள் அதிலென்ன தவறு?இது ஒரு fun  தானே ?இதற்கெல்லாமா கோபப்படுவது என்று?

எனக்கு இது தேவை இல்லாத விசயமாக இருக்கலாம்.....ஆனால் அந்த நிகழ்ச்சி தொடர்பான எனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்...

நான் கேட்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் அவரின்  நண்பர்களுக்கு மட்டுமா உரிமையானவர்.?.அவரின் பெற்றோர்களுக்கு அல்லவா முதன்மையானவர்?அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் இவர்கள் அவரின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வார்கள்?நிகழ்ச்சி என்ற பெயரில் அடுத்தவரை பயமுறுத்தி,மிரட்டி கடைசியில்  அது வெறும் FUN  என்றால் அப்படி ஒரு FUN எதற்கு?

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாக எடுக்க வேண்டியது இல்லை என சிலபேர் சொல்லலாம்....இது போன்ற  நிகழ்ச்சிகளினால்   நமக்க எந்த வித லாபமும் இல்லை...லாபம் எல்லாம்  அதை ஒளிபரப்பும் சன் மியூசிக் போன்ற டிவி காரனுகளுக்கு மட்டும்தான்...திரும்ப திரும்ப நான் சொல்வது இதைத்தான் ... அவனுக பணம் சம்பாரிக்க நாம் என்ன முதலீடு?!அவனுக போதைக்கு நாம் என்ன ஊறுகாய்?!


18 கருத்துகள்:

 1. விளையாட்டு வினையாகும்போது எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்...

  உண்மையில் கண்டிக்கத்தக்கதே...

  பதிலளிநீக்கு
 2. நம்மை முட்டாளாக்கி அதை நம்மையே ரசிக்க வைத்து பணம் பண்ணுகிறார்கள்.

  :( :( :(

  பதிலளிநீக்கு
 3. விளையாட்டு வினையாகி பூதாகரமாக வெடித்தால் தான் திருந்துவார்களோ...?
  tm7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் திருந்தமாட்டார்கள்..நாம்தான் திருத்த வேண்டும்...நன்றி

   நீக்கு
 4. சம்மந்தப்பட்ட நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு இருந்தால் இதையே //நடந்தது என்ன / /என்று தலைப்பாக்கி காசு பார்த்து விடுவார்கள்.மற்றவர்களின் துயரத்தை விற்று காசு பார்க்கும் கலையை அறிந்த வித்தகர்கள் இந்த கே.டி கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #சம்மந்தப்பட்ட நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு இருந்தால் இதையே //நடந்தது என்ன / /என்று தலைப்பாக்கி காசு பார்த்து விடுவார்கள்.#

   ஹா ஹா ஹா...100%உண்மை....நன்றி

   நீக்கு
 5. நல்லதொரு விடயம் தான்.. கிட்டத்தட்ட இப்படியான ரியாலிட்டி ஷோ.களை மக்கள் தவிர்க்கும் வரை தொடரவே செய்வார்கள்.. ஹிந்தி சேனல்களில் இப்படியான கொலைவெறி ஆட்டங்கள் அதிகம்.. முடிந்த வரை தவிர்க்க வேண்டியவை இவை..

  பதிலளிநீக்கு
 6. செருப்பால அடிக்கனும் சாரே...யூ டியூப்பில் ஒரு வீடியோ போட்டார்கள்...சில புரோக்கிராம்கள் செய்வார்கள் பப்பிளிக்கை டிஸ்ரப் செய்து...தபால் பெட்டிக்குள் ஒருவர் ஒளிந்துகொண்டார்...பலர் வந்து தபால்களை உள்ளே போட தபால் வெளியே தெறித்து விழும் உள்ளே இருந்து அவர் தள்ளிவிடுவார்..ஒரு முதியவர் வந்தார் அவரும் உள்ளே தபாலைப்போட உள்ளே இருந்தவர் வெளியே தபாலை தள்ளிவிட்டார்...உள்ளே யார் என்பதை பார்த்துவிட்டு முதியவர் தனது துப்பாக்கியை எடுத்து டுமீல் டுமீல் என்று சடுதியாக சுட்டுவிட்டார்....

  http://www.youtube.com/watch?v=x0UncnKohV8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா......வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .....

   நீக்கு
 7. துப்பாக்கியை எடுத்து டுமீல் டுமீல் ..... எல்லை மீறினால் தொல்லைதான்! ....வெடித்தால் தான் திருந்துவார்களோ...?


  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா10:29 AM, நவம்பர் 24, 2012

  இந்த நிகழ்ச்சி குறித்து எழுத வேண்டும் என்று தோன்றிய போது ஏற்கனவே இது குறித்து சரியான கருத்தை எழுதி பதிவு செய்து இருந்த உங்கள் பதிவினை பார்த்தவுடன் இதன் அவசியம் கருதி மறு பிரசுரம் செய்து உள்ளேன்
  http://adhansite.wordpress.com/2012/11/24/sun-music-knock-knock/

  பதிலளிநீக்கு
 10. இதை பணமாக்கும் ஒரு சிலரைக் காட்டிலும்
  இதைப் பார்த்து ரசிக்கும் லட்சக்கணக்காணவர்களை என்னவென்று சொல்வது..?

  (மனித கொடுமைகள் ரசிக்கப்படுகின்றன)

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....