09 நவம்பர் 2012

ராமன் மோசமான கணவர்!சர்ச்சையை கிளப்பிய பேச்சும் ,அசாருதீனும் (கூட்டுப்பொறியல்)ராமர் கோவில் கட்டுவோம் என்பதை இன்றளவும் கொள்கையாக வைத்துள்ள கட்சி பாஜக....ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர்களுள்  ஒருவரும்,பிரபல வக்கீலுமான ராம் ஜெத் மலானி  கூறுவதை பாருங்கள்

" ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண்.
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என கூறி இருக்கிறார்"

பெயரிலே  ராமரை  வைத்திருக்கும்  இவரின்  பேச்சுக்கு  கட்சிக்குள்ளும்,வெளியிலும் எதிர்ப்பு பலமாக கிளம்பு போகிறது...!இந்த வார ஹாட் டாபிக்காவும் இதுதான் இருக்க போகிறது!
................................................... ...................................................... ..................................................................................

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை சட்ட விரோதம் என கூறி இருக்கிறது ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது....
நீண்ட ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாக கோலோச்சிய  அசாரின் மீது மேட்ச் பிக்ஸிங்  புகார் எழுந்ததை அடுத்து 2000 ம் ஆண்டு அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது ...
இப்போது அது செல்லாது என நீதிமன்றம் கூறி இருக்கிறது...காலம் கடந்து கிடைத்த நீதியாக இருந்தாலும் ஒரு களங்கம் துடைக்கப்பட்டு இருக்கிறது...இவ்வளவு நாட்கள் அசாரின் மீது கூறப்பட்ட பழிச்சொல் இப்போது நீங்கி இருக்கிறது....காங்கிரஸ்  கட்சியின்  mp ஆக இருக்கும் அசாருதீனுக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் இது ஆறுதல் அளிக்க கூடிய செய்தி..
..................................................... .......................................................... .........................................................................................

டெல்லி மாநில அரசு மத்திய மின் தொகுப்பிடம் ஒப்படைக்கும் 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க முடியாது என மத்திய  அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறி இருக்கிறது...
நிச்சயம் மத்திய  அரசு மனது வைத்தால் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு  வழங்க முடியும்...ஆனால் மத்திய  அரசு மாற்றாம்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது...
இந்த விசயத்தில் தமிழக  மக்களுக்காக மாநில அரசுடன் இணைந்து திமுகவும்  மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்...ஒட்டு போட்ட மக்களுக்காக திமுக எம்பிக்கள்  மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியது  அவர்களின் கடமை.... ஆனால் அதெல்லாம் நடக்குமா?அப்படி ஒன்று நடந்தால் அது உலக அதிசயமாக அல்லவா இருக்கும்?!

4 கருத்துகள்:

 1. அசார் ஒருமுறை தவறு செய்துவிட்டேன் என்றும் சொல்லி இருக்கார் ..அப்ப முழுசா களங்கம் போயிடுச்சு சொல்லமுடியாது சகோ ... அட அவர் இப்ப அரசியல்ல அதுவும் காங்கிரஸ்ல இருக்கார் எப்படி களங்கம் இல்லாமல் போகும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி சொன்னதாக எனக்கு நினைவில்லை சகோ....ஒருவேளை அவர் இதில் மாட்ட வைக்க பட்டு இருக்கலாம் அல்லவா !எது எப்படியோ அவரின் பேட்டிங்அருமையாக இருக்கும்!

   நீக்கு
 2. சிறந்த கேப்டன்... மகிழ்ச்சியான செய்தி...

  பொறியல் இந்த தடவை குறைவோ...?
  tm3

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....