29 நவம்பர் 2012

இவர்தான் ஜெயலலிதா !(சும்மாச்சுக்கும் எழுதியது)......

இவர் யாரென்று தெரிகிறதா?தொடர்ந்து படியுங்கள் ...


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் இன்னும் குறையவில்லை.... யாரேனும் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் இறந்தார் என்ற செய்தி வராத நாளில்லை....ஆனால் அதெல்லாம் கவலை இல்லை இவருக்கு.....

தமிழகம் முழுக்க மின்தடையால் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்....
மின்சாரம் என்றால் அது ஏதோ வேற்று கிரக பொருள் போல நினைக்கும் அளவுக்கு நிலைமை "ஷாக் "அடித்து கொண்டு இருக்கிறது....ஆனால் அதற்கு இவர் என்ன பண்ண முடியும்.பாவம்?!அவருக்கு இதை கவனிப்பதுதான் வேலையா?

 தர்மபுரி ஜாதி கலவரம், தினமும் நடக்கும் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கு" டெங்கு காய்ச்சல் "நோயாளிகளின் நிலைமை போல படு மோசமாகி கொண்டு இருக்கிறது...அதை எல்லாம் இப்போது சீராக்குவதுதான் வேலையா அவருக்கு?


அவருக்கு இதைவிட முக்கிய வேலைகள் இருக்கிறது.....தன்னைப்பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது....யாரும் தன்னை விமர்சித்து எழுதக்கூடாது ...எதிர்க்கட்சி என்று எதுவுமே இருக்க கூடாது....நானே ராஜா நானே மந்திரி என்பதுதான் இவர் பாலிசி...கீழே உள்ளே படத்தை யாரென்று  நான் கேட்டால் என்னை லூசு என்பீர்கள்...இப்படி யார் என்றே தெரியாத ஒருவரை அதிமுக மந்திரிகள் கூறுவதைப்போல உலகமறிந்த ஒருவர்(!) தூக்கி உள்ளே வைத்து இருக்கிறார்....

(நடுகுறிப்பு :நானும் பிரபலமாக ஆசைப்படுகிறேன்...ஆனால் அதற்காக என்னை எல்லாமா உள்ளே தூக்கி வைப்பார்கள்...இது சும்மாச்சுக்கும் எழுதுவது அம்மா!)

 மேட்டர் என்னன்னா  மேட்டூர்  தொகுதி தேமுதிக MLA பார்த்திபன்  ஜெயலலிதாவை  பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்...மேலும் அம்மாவட்ட தேமுதிக செயலாளரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .....

பத்திரிக்கைகள்,விஜயகாந்த்,கருணாநிதி,ஸ்டாலின் சகட்டுமேனிக்கு தன்னை விமர்சிப்பவர்கள் மீது கேஸ் போட்ட ஜெயலலிதா இப்போது பிரபலமில்லாத  MLA ஒருவரை கைது  செய்து தமிழகம் முழுக்க பிரபலமாக்கி இருக்கிறார்...

போகிற போக்கை பார்த்தால்  தேமுதிக  MLA க்கள்  ஒன்னு அதிமுகவில் அடைக்கலமாகி இருப்பார்கள அல்லது ஏதாவது ஒரு வழக்கில் உள்ளே கம்பி எண்ணி கொண்டு இருப்பார்கள் போல போய்க்கொண்டு இருக்கிறது நிலைமை...

யானை போன்ற பலமுள்ள ஒரு மாநில முதல்வரான உங்களுக்கு  இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?!

இதை எல்லாம் மாற்றுங்கள் (மாறுங்கள்)அம்மா....!உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் மக்கள்..... ஆனால் இதுபோன்று அல்ல...!8 கருத்துகள்:

 1. இனி அம்மாவோட ஆட்சி வந்தா மக்களை விட எதிர்க்கட்சி காரங்கதான் அலறுவாங்க..!!! அதுக்காகவாது மக்களை திருப்தி அடைய செய்யும் ஆட்சியை எதிர்காலத்தில் எதிர்கட்சிகள் செய்யலாம் அல்லவா..???

  " என்ன இது !!! அடிவயிற்றிலே ஒரு மாற்றம் (இது எதிர்கட்சிகாரங்களுக்கு) .....ம்ம்ம் வரட்டும் வரட்டும் துன்பத்திலும் ஒரு இன்பம்.(இது மக்களுக்கு) "

  - கவுண்டமணி

  நன்றி !!!

  பதிலளிநீக்கு
 2. நம்மையும் தூக்கி கொண்டு வைக்கட்டும் - கொசுக்கள் இல்லா மின்சார அறையில்...
  tm4

  பதிலளிநீக்கு
 3. காவல்துறை இதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காவல் துறை ஏவல் துறையாகத்தானே செயல்பட்டு கொண்டு இருக்கிறது !

   நீக்கு
 4. இந்த கன்மாயி மேட்டர் வந்ததுக்கப்புறம் எதை எழுவதற்கும் பயமாய் இருக்கு, இப்போ பேசவும் முடியாது. மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பயம்கிற மாதிரி கொண்டுபோய் விட்டாங்க............

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....