06 நவம்பர் 2012

நக்கீரனும் ஜாதி வெறி பிடித்த பத்திரிக்கைதான்...பொங்கிய கருணாநிதியும் ,மங்கிய உறவும்....தமிழ் பத்திரிக்கைகளில்  அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கைகள்தான் அதிகம்....குமுதம் எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதற்கு ஜால்ரா அடிக்கும்....விகடன் அதிமுக தலைமையை விட திமுக  தலைமையைத்தான் அதிகமாக விமர்சிக்கும்....

அந்த வகையில் நக்கீரன்  திமுக வின்  பத்திரிக்கை போலவே செய்திகளை வெளியிட்டு  வந்தது...திமுக ஆட்சியில் இருந்தால் அதன் குறைகளை எழுதுவதற்கு பதிலாக தட்டி கொடுத்தே எழுதும்...நக்கீரன் கோபாலை ஜெயலலிதா உள்ளே வைத்ததில்  இருந்து நக்கீரனின் கருணாநிதி பாசம்  மேலும் மேலும் அதிகரித்து திமுகவின்  பிரச்சார  பீரங்கியாகவே தேர்தல் காலங்களில் செயல்பட்டு வந்தது...

ஆனால் இவற்றிற்கு  எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார் கருணாநிதி...வழக்கமாக ஜெயலலிதாதான் தன்னை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் மீது கோபம் காட்டுவார்,வழக்கு போடுவார்...அதை இந்த தடவை கருணாநிதி செய்து இருக்கிறார்....அதுவும் திமுக ஆதரவு பத்திரிக்கை என அறியப்படும் நக்கீரன் மீதே!

அழகிரிஸ்டாலின் மோதல்,பழனிமாணிக்கம் பாலு மோதல் போன்ற விவகாரங்களால் கடுப்பில் இருக்கும் கருணாநிதியை மேலும்  கடுப்பேற்றும் விதமாக அமைந்தது நக்கீரனின் கட்டுரை ஒன்று...

TR பாலு,பழனிமாணிக்கம் மோதலின்  பின்னணியில் கனிமொழி இருந்ததாக  நக்கீரன்  எழுதி இருந்தது....

மகளை பற்றி எழுதியவுடன் பொங்கி எழுந்து விட்டார் கருணாநிதி...நக்கீரனை கடுமையாக சாடி கருணாநிதி எழுதிய கேள்வி பதில் வடிவிலான அறிக்கை

" தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய "உடன்பிறப்பு" கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது. ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் நக்கீரன் போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே! என்று கருணாநிதி கூறியுள்ளார்."
தனக்கு பிரச்சினை  ஏற்படும் போதெல்லாம் ஜாதி ரீதியாக எழுதி அனுதாபம் தேடுவதில் வல்லவர் கருணாநிதி....அந்த ஆயுதத்தயே  நக்கீரன் மீதும்பாய்ச்சி உள்ளார்....ஜெயலலிதாவை பற்றி எழுதும்போதெல்லாம் சந்தோசம் அடைந்து இருக்கும்  கருணாநிதிக்கு தன்னை பற்றியும் தனது மகளை பற்றியும் எழுதியவுடன் கோபம் வருவது "மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்"என்ற பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது....
இனி நக்கீரன் திமுக ஆதரவுபத்திரிக்கையாக தொடருமா என்பது  சந்தேகமே என்றாலும் நக்கீரனால் ஜெயலலிதாவை ஆதரித்து எழுத முடியாதும் என்பதும் உண்மை....!இரண்டும்  கெட்டான்  நிலமைதான் இனி நக்கீரனுக்கு!

7 கருத்துகள்:

 1. விற்பனையை அதிகரித்துக் காசு பண்ணுவதுதான் நம் பத்திரிகைகளின் கொள்கையே.

  தலைவரைப் புகழ்ந்து கட்டுரைகளை வெளியிட்டு,சமரசம்செய்து கொள்வார் நக்கீரன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா..அதுவும் கூட நடக்கும்...புகழ்ச்சியை விரும்புகிறவர்தானே கருணாநிதி!

   நீக்கு
 2. முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் :

  "சென்னை" முதல் "டெல்லி" வரை ஒலிக்கும் குரல்கள்


  NOV5, குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூககத்துக்கு நீதி கேட்டு, சென்னையிலும் மதுரையிலும் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" மாநாடுகளை நடத்திய அதேவேளையில்,

  நேற்று டெல்லியில் "POLITICS OF TERROR : TARGETING MUSLIM YOUTH" என்ற தலைப்பில் கன்வென்ஷன் நடத்தப்பட்டது.

  சென்னையில் "பாப்புலர் ஃப்ரண்ட்" நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில் பங்கேற்று திருமாவளவன் எம்.பி., மற்றும் பல தலைவர்களும், முஸ்லிம்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தை கண்டித்தனர்.

  அதேபோல, டெல்லியில் "PEOPLE CAMPAIGN AGANST POLITICS OF TERROR" (PCPT) அமைப்பின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர், முஹம்மத் அதீப் தலைமையில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்,

  லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் என, பல தலைவர்களும்,

  முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் நிகழ்த்தப்படும் அநியாயங்களை - அரச பயங்கரவாதங்களை தோலுரித்துக்காட்டினர்.

  லாலு பிரசாத் யாதவ் பேசும்போது:முஸ்லிமாக பிறப்பது தவறா? முஸ்லிமாக வாழ்வது பாவகாரியமா? ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

  முஸ்லிம் இளைஞர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால் கேட்க நாதியில்லை என நினைக்கிறார்களா?

  என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்த லாலு, முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் எவராலும் ஆட்சிக்கு வரமுடியாது என்றார்.

  மேலும், முஸ்லிம்களின் நலன் சார்ந்த எத்தகைய போராட்டத்துக்கும் தனது ஆதரவு உண்டு என்றார்.

  ராம்விலாஸ் பாஸ்வான்:"சிமி" அமைப்பின் மீது தடை விதிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புக்கள் மீது கருணைப்பார்வை செலுத்துவது ஏன்? எனக்கேள்வி எழுப்பினார்.

  மேலும், சர்வதேச அளவில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சூழ்ச்சி நடப்பதாக சொன்ன அவர், இந்தியாவை பொறுத்தவரை, மத சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்த பிரச்சாரத்தை எதிர்க்கவேண்டும் என்றார்.

  பிரகாஷ் காரத்: பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என சொல்லிக்கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்வது "பாரபட்சமான செயல்" என போலீஸ் மீது குற்றம் சாட்டிய காரத் "UNLAWFUL ACTIVITIES PREVENTION ACT" (UAPA) சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக கூறினார்.

  நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப்: ஒரு தேசத்தில் ஆண்டுக்கணக்கில் நீதிமன்றங்கள் நியாயமான தீர்ப்புக்கள் வழங்காமலும், காவல்துறை செய்யும் அநியாயங்களை கண்டுக்கொள்ளாமல், அரசுகள், குருடாகவும் -செவிடாகவும் செயல்பட்டால், அந்த நாட்டின் இறுதி முடிவு எங்கே போய் முடியும்?

  முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு யார் நீதி வழங்குவது? எனக்கேட்ட அவர், நாட்டிலுள்ள நியாயவான்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

  ஏ.பி.பரதன்: அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் எளிதானதல்ல, சிறைபட்டுள்ள அப்பாவிகளின் விடுதலைக்காக சி.பி.ஐ. கட்சி, தனது "வழக்கறிஞர் பிரிவு" மூலம் சட்ட ரீதியான உதவி செய்யும் என்றார்.

  காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர்: குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறில்லை; ஆனால் அப்பாவிகளை சிறையிலடைப்பதை ஏற்க முடியாது எனக்கூறிய அவர், முஸ்லிம்கள் குறிவைக்கப்படுது தொடர்பாக, உள்துறை அமைச்சரை விரைவில் சந்தித்து பேசவிருப்பதாக சொன்னார்.

  இந்த தேசம் "காந்திய வழியில் செல்வதாக இருந்தால் அரசியல் சாசன சட்டத்தை மதித்து அனைத்து குடிமக்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்"

  நீதி வழங்க முடியாதவர்களுக்கு, ஆட்சிக்கட்டிலில் அமரும் தார்மீக உரிமை இல்லை என்றார்,அவர்.

  சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ்:
  போலீஸ் துறையை சீரமைக்க வேண்டும், அப்பாவிகளை வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

  மேலும், இந்திய தேசத்தில் ஒரு சமுதாயம் குறிவைத்து தாக்கப்படுவது "தேசிய அவமானம்" என்றார்.


  கூட்டத்தில் நீதியரசர், ஏ.எம்.அஹ்மதி, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.

  >>>
  படம் காண்க‌
  <<<


  SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/596--qq-qq-

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  பதிலளிநீக்கு
 4. தலைவரைப் புகழ்ந்து கட்டுரைகளை வெளியிட்டு,சமரசம்செய்து கொள்வார் நக்கீரன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா..அதுவும் நடக்கும்...புகழ்ச்சியை விரும்புகிறவர்தானே கருணாநிதி!

   நீக்கு
 5. நல்ல அலசல்... இக்கட்டான நிலைமை தான்... உண்மை...

  நன்றி...
  tm4

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....