20 நவம்பர் 2012

இந்தியாவின் நவீன தந்தையா பால் தாக்கரே??!....."தமிழ்நாடு தமிழருக்கே....

வேறு மாநிலத்தவன் எவனும் தமிழ்நாட்டில் தொழில் செய்ய கூடாது

வேறு மாநிலத்தவர்களை தமிழ்நாட்டிலிருந்து  விரட்டி அடிக்க வேண்டும் ..."

இதெல்லாம் நான் சொல்லலப்பா.....!

இவ்வாறு இன்று யார் சொன்னாலும் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்....கைது செய்யப்பட வேண்டும்...

ஆனால் அதே கோஷத்தை  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மராட்டியம் மராத்தியர்களுக்கே என முழங்கியவர் இன்று தேசப்பிதா அளவுக்கு மீடியாக்களால் காட்டப்படுகிறார்....

வேற்றுமையில் ஒற்றுமை  என்பதை   மறுத்து வேற்றுமை மட்டும்தான் ஒற்றுமை இல்லை என  முழங்கியவருக்கு  இன்று அரசு மரியாதையுடன் உடல் தகனம்!தேசிய  கோடியை அவர் உடல் மீது போர்த்தும் அளவுக்கு இந்தியாவின் நவீன தந்தை போல வர்ணிக்கப்பட்டு இருக்கிறார் பால் தாக்கரே ...!


வேறு மாநிலத்தவர்கள் மும்பையை  விட்டு வெளியேற வேண்டும் என இந்தியாவின் ஒற்றுமைக்கு சவால் விடும் வகையில் பேசியவர் இன்று இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் போல சித்தரிக்கப்படுகிறார்....

இது ஒன்று போதாதா அவரின் வாரிசுகள் என காட்டிக்கொள்ள விரும்பும் அவரின் மகனுக்கும் அவரின் அண்ணன் மகனுக்கும்...பால் தாக்கரேவின் கோஷத்தை  இனி அவர்கள் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்..!அந்த கோஷம்தானே பால் தாக்கரேவுக்கு இறந்தும் இவ்வளவு மரியாதையை பெற்று தந்து இருக்கிறது!

மும்பை மீடியாக்கள்  அவரின் இறுதி ஊர்வலத்தை தேசத்தின் தந்தை அளவுக்கு உயர்த்தி காட்டியது ஒன்றும் யாருக்கும் ஆச்சர்யம் அளித்து இருக்காது...ஒருவேளை நாளை அவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய வேண்டும் என்ற பயத்தில் கூட அவ்வாறு செயல்பட்டு இருக்கலாம்.....

ஆனால் தமிழகத்தில் எல்லா செய்தி சேனல்களும் போட்டி போட்டு கொண்டு அவரின் இறுதி ஊர்வலத்தை காட்டியதன் அர்த்தம்தான் புரியவில்லை...

எந்த சானலை திருப்பினாலும் பால் தாக்ரவின் இறுதி ஊர்வலம்தான்...நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா இல்லை மும்பையில் இருக்கிறோமா என நிச்சயம் எல்லாருக்கும் சந்தேகம் வந்து இருக்கும்....

பால் தாக்கரே நல்லவரா கெட்டவரா என நாயகன் பாணி கேள்விக்கே இடமளிக்காமல் அவர் ஒரு நாயகன்தான் என்ற கருத்து  திணிப்பை அன்று முழுவதும் மீடியாக்கள் இடைவிடாமல் நிகழ்த்தி கொண்டே இருந்தன....இதன்மூலம் மறைமுகமாக எல்லா மீடியாக்களும் ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றன என்பது மட்டும் சந்தேகம் இல்லாமல் அனைவருக்கும் புரிந்து இருக்கும்... "இனம்,மொழி,மதம் போன்றவற்றின் மூலம் பிரிவினையை ஏற்படுத்துவது குற்றமே அல்ல...பால் தாக்கரே நல்லது தான் பேசினார் ,நல்லதுதான் செய்தார் "என மறைமுகமாக அவருக்கு ஆதரவு கொடுத்ததுதான் அது!

பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை பிடிக்குமாம்.அது ஒன்றும் ஆச்சர்யமில்லை....ஆனால் நம்மூர் மீடியாக்களுக்கு அவரின் மேல் ஏன் இவ்வளவு பிடிப்பு என்பதுதான் ஆச்சர்யம்..!

பால் தாக்கரேவின் இறப்பு ஒரு செய்திதான் என facebook ல்  எழுதியவரை ஏதோ தேச  விரோத செயலை செய்தவரைப்போல கைது செய்து இருக்கிறது மும்பை போலீஸ்....!அட அதற்கு like  போட்ட அவரது தோழியையும் கைது செய்து இதுதான் இந்தியா என உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்...!இறந்தும் மிரட்டுவார் பால்தாக்கரே என ஒரு புதுமொழியை இவர்கள் உருவாக்கிவிட்டார்கள்!

நல்லவேளை எனக்கு முன்பே நிறைய நண்பர்கள் பால் தாக்கரே  மறைவு பற்றி நிறைய பதிவு எழுதிவிட்டார்கள்....so  நமக்கும் கம்பெனி இருக்கு!
15 கருத்துகள்:

 1. அருமையான பதிவு. கைகளுக்கு காப்பு வந்தால் ஒரே சிறையில் போடச்சொல்லுங்கள் ஹாஜா மைதீன்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு.
  மகாராஷ்டிரர் தவிர பிறர் மும்பைக்கு வருவதற்கு விசா வாங்க வேண்டும் என்று திமிராகச் சொல்லியும் டெல்லியில் பிறந்ததால் பெருமைப்படுகிறேன் எனச் சொன்ன ஷாருக்கான் டெல்லிக்கே போய் விடட்டும் என்று மிரட்டியும் தாம் முதலில் இந்தியன் பின்னரே மும்பைக்காரர் என்று கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் சொன்னதைக் கண்டித்தும் .இந்தியவின் ஒருமைப்பாட்டைக் கேலிக்குள்ளாக்கிய நபருக்கு இந்திய தேசீயக் கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் தகனம்.

  இந்த நாட்டின் சட்டங்களுக்கோ நீதிமன்றங்களுக்கோ கட்டுப்படாமல் ரவுடியிஸம் செய்ததால் போலீஸ் நெருங்கக் கூட அஞ்சும் தாதாவாக இருந்ததால்..... ..கிருஷ்ணா கமிஷன் முடிவைச் செயல்படுத்த முடியாமல் அரசை மிரட்டியதால்........ அரசு மரியாதையுடன் சவ அடக்கம் என்றால் அடுத்த அரச மரியாதை மும்பை தாதா தாவூதுக்குக் கொடுக்கலாம்
  http://nidurseasons.blogspot.in/2012/11/blog-post_9627.html

  பதிலளிநீக்கு
 3. ஒரு ஃபோனை போடுங்க... நானும் வர்றேன்... (A/C ரூம் தானே...!)
  tm4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா...நாம் என்ன ஊழலா செய்துவிட்டோம் AC ரூமெல்லாம் கொடுப்பதற்கு?!

   நீக்கு
 4. இறந்து போனார் என்பதற்காகக்கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.

  அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான்.

  அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே அப்பாற்பட்டது.

  அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால் பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும்.

  இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு.

  ஆரியர்கள் மட்டுமல்ல திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.

  தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை.

  குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே.

  அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது.

  தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல்.
  அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது.

  தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது.

  அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள்.

  பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை.

  மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே.

  ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் ,

  தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?

  தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.

  இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.

  இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது.

  நன்றி: தி ஹிந்து -- 19/11/2012


  நன்றி: http://mydeartamilnadu.blogspot.sg/2012/11/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 5. பால் தாக்கரேவை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது சரியா?

  Published: Tuesday, November 20, 2012, 10:37 [IST]
  Posted by: Mathi

  மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் தீர்மானிக்கக் கூடிய ஒரு சக்தியாக இருந்தாலும் அரசுப் பொறுப்பு எதிலுமே இல்லாத சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது எப்படி சரியானதாக இருக்க முடியும்? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.

  பால் தாக்கரேவாகட்டும் அவரது தந்தையாகட்டும்.. அவர்கள் பேசியது அனைத்துமே ‘மகாராஷ்டிரா' மாநிலம் மராட்டியர்களுக்கே என்பது மட்டுமே! இது ஒரு தேசிய இனத்துக்கான சிந்தனையாக உருவெடுக்கவில்லை..

  ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் போல மராட்டியர்களை சிவசேனா கருதவில்லை...

  இந்துத்துவா என்ற ஒரு அதிதீவிர நம்பிக்கைக் கொள்கையை கையில் வைத்துக் கொண்டு வன்முறை, மத அரசியலை மேற்கொண்டவர் என்ற இமேஜ்தானே பால் தாக்கரே மீது இருக்கிறது? என்கிறது ஒருதரப்பு.

  உலகம் முழுவதும் எந்த ஒரு இனமும் தனித்தே வாழ்ந்தது இல்லை.. ஒரு இனத்தின் மண்ணில்.. நிலப் பரப்பில் பிற இனத்தார் குடியேறுவது இயல்பே. அது ஆதிக்கமாக மாறாதவரை பிரச்சனை இல்லை என்பதுதான் யதார்த்த நியதி.

  இப்படித்தான் மகாராஷ்டிராவில் தமிழர்களும், பீகாரிகளும், குஜராத்திகளும் குடியேறினர். தாக்கரே குடும்பம் கூட பீகாரிலிருந்து மகராஷ்டிராவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்தான்..

  ஆனால் இப்படி புலம்பெயர்ந்தோரை மிரட்டி பணிய வைத்து மராத்தி பேசும் மக்களிடம் செல்வாக்கை வளர்த்தவர் என்பதை செல்வாக்கை வன்முறை மூலம் திணித்து பெற்றுக் கொண்டவர்தானே பால் தாக்கரே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!

  இப்படிப்பட்ட மதம் சார்ந்த சிந்தனையாளராக .. இனத் துவேஷியாக விமர்சிக்கப்படுகிற பால் தாக்கரேவின் இறுதிப் பயணத்தில் 'அரசு மரியாதை' ஏன் தரப்பட்டது?.


  அவரது உடலில் தேசியக் கொடி ஏன் போர்த்தப்பட்டது.

  இவருக்கு இந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டுமானால் சீக்கிய மததுக்காக போராடி உயிர் நீர்த்த பிந்தரன்வாலேவுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? என்ற் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

  பிற மாநிலத்தவருக்கு எதிராக, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசிய பால் தாக்கரேவின் சடலத்தின் மீது இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது என்பது வரலாற்றின் விசித்திரம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

  இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

  SOURCE: http://tamil.oneindia.in/news/2012/11/20/india-state-honours-tricolour-bal-thackeray-what-for-164911.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?//

   திரு ராஜ நடராஜன் ப்ரோபைல் பிக்சரில் ஒரு ஸ்டில் கொடுப்பாரே அதே போல் தான் நாமும் பார்க்கிறோம்...!!!

   நீக்கு
 6. சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்திய தேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது. ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத இந்த போரையே பார்காத அரசருக்கு எதற்கு அரசு மரியாதை?

  நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..

  இவர் என்ன...

  1.ஜனாதிபதியா..

  2.முதலமைச்சரா..

  3.நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..

  4.சமூக வளர்ச்சிகாக போராடியவரா..

  உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

  1.1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்க்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்..

  2.1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.

  3.சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.

  4.2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.

  5.தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.

  6.சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.

  இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர்.இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவிவண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

  நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து,பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?

  தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?

  மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன சகோ. இப்படி சொல்லிடீங்க ...நம்ம தானை தலைவர் ரசினி காந்து என்ன சொன்னார்..

   " ஒரு தந்தையைப் போல் வழி காட்டியவர் பால்தாக்கரே "

   ஒரு வேளை..அவசரத்துக்கு " Sir, i have to answer my nature call " என்று ரசினி ஸ்டைலாக கேட்க " ச்சீ ..அந்தபக்கம் போ..." அப்பிடின்னு பால்தாக்கரே சொல்லிருப்பார் ...அதை தான் வண்டுமுருகன் வடிவேலு ஸ்டைல்ல சொல்லுறாரோ என்னவோ...!!!

   நல்லவேளை நம்ம ரசினி வாழ்க்கைல செய்த ஒரே நல்ல காரியம் ஆர்வகோளார்ல அரசியலுக்கு வராததுதான்....ஏன்னா அவரு பால்தாக்கரே காட்டுற வழில அல்லவா போககூடியவர்..!!!

   நீக்கு
 7. மும்பையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொலைசெய்தது மட்டுமில்லாமல் தன்னுடைய "சாம்னா"என்ற பத்திரிக்கையில் முஸ்லீம் களை பற்றியும் வட இந்தியர்களை பற்றியும் தினம்,தினம் நச்சுக்கருத்துக்களை பரப்பிவந்தவன் கொடுங்கோலன் தாக்கரே.

  எத்தனையோ வழக்குகள் அவன் மீது இருந்தும் அவன் தானாக சாகும் வரை அவனுடைய முடியைக்கூட அசைக்க இவனுங்களுக்கு வக்கில்லை.ஆனால் ஒரு தனிமனிதன் இறந்ததிர்க்கு ஏன் முழு கடையடைப்பு செய்யவேண்டும் என்று எழுதியதற்கு 2 பெண்களுக்கு சிறை.நல்லா இருக்குடா உங்க நியாயம்...

  பதிலளிநீக்கு
 8. \\\பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை பிடிக்குமாம்.அது ஒன்றும் ஆச்சர்யமில்லை....ஆனால் நம்மூர் மீடியாக்களுக்கு அவரின் மேல் ஏன் இவ்வளவு பிடிப்பு என்பதுதான் ஆச்சர்யம்..////ஹாஜா மைதீன் இதில்ஆச்சர்யம் ஒன்ரும் இல்லை எல்லாம் ஒரு குட்டைய்ல் ஊரிய மட்டை இந்து பயங்கரவாதிகல்..

  பதிலளிநீக்கு
 9. //ஆனால் அதே கோஷத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மராட்டியம் மராத்தியர்களுக்கே என முழங்கியவர் இன்று தேசப்பிதா அளவுக்கு மீடியாக்களால் காட்டப்படுகிறார்....//

  தேசப்பிதா அளவுக்கெல்லாம் காட்டப்படவில்லை. மகாராஷ்ட்ராவில் மராட்டியர்களு ஆதரவாக போராடியதால், அவரை அங்கே போற்றுகின்றனர். இங்கே, வீரப்பன் கொள்ளைகாரன் என்றாலும், அவன் வன்னியன் என்பதால் பா.ம.க. உயர்த்திப் பிடிக்கவில்லையா, அதை போல.

  //ஹாஜா மைதீன் இதில்ஆச்சர்யம் ஒன்ரும் இல்லை எல்லாம் ஒரு குட்டைய்ல் ஊரிய மட்டை இந்து பயங்கரவாதிகல்..//

  அதுசரி! நாங்கள் ஒன்றும் 10000 பேர் சேர்ந்து பின்லாடனுக்கு துவா செய்யவில்லை. எவனோ ஒருத்தன் எடுத்த படத்துக்காக, இங்கே சென்னையில் அமெரிக்க தூதரகத்தை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கவில்லை.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....