30 ஏப்ரல் 2011

ஒபாமா தங்கபாலுவுக்கு விருந்து கொடுப்பாரா?


நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகன் ,கதாநாயகி இருந்தார்களோ இல்லையோ காமெடியன்களுக்கு பஞ்சமே இல்லை.....

இல்லாத தொகுதிகளில் போட்டியிட போவதாக சொல்லி முதலில் காமெடி பட்டையை கிளப்பியவர் கார்த்திக்....ஏதோ சூட்டிங் போவதுபோல பிரஸ்மீட்டில் கண்ணாடி அணிந்து கொண்டு தமிழை வேறு ஒரு மொழி போலவே பேசி கிச்சு கிச்சு மூட்டினார்...

இந்த பக்கம் இல்லாத கட்சியை வைத்துகொண்டு தேர்தலை புறக்கணிக்க போவதாக தமிழக மக்களை ஆனந்த அதிர்ச்சியில் திணறடித்தார் நம்ம டி ஆர்...

குஷ்பு தமிழை கடித்து குதறி காய போட்டார்.........நல்ல வேலை நமிதா வரவில்லை....

காணாமல் போனவர்கள் லிஸ்டில் உள்ள செந்தில் ,குமரிமுத்து போன்றோர் சீரியசாக பேசி நம்மை சிரிக்க வைத்தனர்....

இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு கட்சியின் தலைவரான தங்கபாலு தனது மனைவிக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்து, பின்பு மனைவியின் மனு நிராகரிக்கப்பட தானே வேட்பாளர் ஆகி தெலுங்கு பட வில்லன்போல சிரித்துகொண்டே உலக அரசியலில் !முதல் முறையாக சரித்திர சாதனை படைத்தார் .........

அட தேர்தல் தான் முடிந்துபோச்சே என்று விடாமல் தமிழக மக்களுக்கு கோடை கால சிரிப்பு ஸ்பெஷல் ஆக இலங்கை அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினார் தங்கபாலு...இதில் என்ன கொடுமை என்றால் இவர் ஆர்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கும்போதே அவருக்கு எதிரிலே அவரின் உருவப்படத்தை எரித்து காமெடி கும்பமேளா நடத்தினர் காங்கிரஸ் கட்சியினர்....

இப்போது சொல்லுங்கள் நாம் சிரித்து நோயில்லாமல் வாழ நமக்காக இவ்ளோ செய்த கோல்ட்பாலு தானே இந்த தேர்தலின் கதாநாயகன்....!!!!

ஒரு மாற்றம் வேண்டும் என்று சொல்லி ஆட்சியை பிடித்த ஒபாமா ஒரு அரசியல் கட்சியின் தலைவரே மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்து வேட்பாளர் ஆன தங்கபாலுவுக்கு என்ன செய்தால் தகும்?

இவருக்கு வெள்ளைமாளிகையில் ஒபாமா விருந்து கொடுக்க வேண்டும்....கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

29 ஏப்ரல் 2011

பிரச்சார கோமாளி ....


நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில்( தேர்தலே முடிந்த போன விசயம்தான்) தி மு க வின் ஸ்டார் பேச்சாளர் படங்களில் அடிவாங்கியே சிரிக்க வைக்கும் வடிவேலுதான் ....

பிரச்சார கூட்டங்களில்அதிகமாக கூட்டம் கூடியதும் இந்த சிரிப்பு நடிகருக்குத்தான்.....

பெரும்பாலான மக்கள் அவர் பேசியதை ரசித்தனர்...ஆனால் எனக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை.....அந்த சமயங்களில் நான் எழுதாததால் இப்போது காலம் கடந்து வடிவேலுவின் பிரச்சாரத்தை பற்றி எழுதுகிறேன்.....

வடிவேலு தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை பற்றி சொன்னார்?

விஜயகாந்துடன் உள்ள தனது சொந்த பகையை மட்டும் காரணமாக கொண்டு அவர் பிரச்சாரம் செய்தார்....விஜயகாந்தை நாகரிகம் இல்லாமல்அவன் இவன் என்று திட்டி தீர்த்தார்....

விஜயகாந்த் மட்டும்தான் குடிக்கிறாரா?நீங்கள் பச்சத்தண்ணியை தவிர வேற எதையும் குடிக்க மாட்டிர்களா வடிவேலு?

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் யாருமே குடிகாரர்கள் இல்லை என்று உங்களால் கூற முடியுமா?

விஜயகாந்துக்கும் உனக்கும் பிரச்சினைனா கோர்ட்டுக்கு போ....அதை விட்டு விட்டு மக்கள்தான் உங்களுக்கு கிடைத்தார்களா?

வடிவேலு இருபது நிமிடம் பேசினால் அதில் பதினெட்டு நிமிடம் விஜயகாந்தை திட்டித்தான் பேசினார்...ஜெயலலிதாவை பற்றி ஏதாவது பேசினாரா?திமுக ஆட்சிக்கு வந்தால் செய்யபோகும் திட்டங்கள் பற்றி பேசினாரா?

நீயெல்லாம் பிரசாரம் பண்ணி நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை....என்ன கொடுமை இது.....

விஜயகாந்த் குடிக்கிறதுதான் உங்கள் பிரச்சினை என்றால் தமிழ் நாட்டில் யாரையும் குடிக்க விடாமல் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டியதுதானே...?

வடிவேலுவை சொல்லி குற்றமில்லை.....அண்ணா , நாவலர், சம்பத் ,கலைஞர் போன்ற பேச்சாளர்களை வைத்து வளர்ந்த தி மு க இன்று வடிவேலுவின் பேச்சை நம்பி பிரச்சாரம் செய்கிறது.....

வடிவேலுவை திட்டுவதால் நான் விஜயகாந்தின் போக்கை ஏற்று கொள்கிறேன் என்று அர்த்தமில்லை.....

விஜயகாந்தை மட்டுமே குடிகாரன் என்று சொல்வதைத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை....அவருடன் சண்டை என்பதற்காக வடிவேலு எனக்கு பிடிக்காத விஜயகாந்த் யாருக்குமே பிடிக்க கூடாது என்ற சுயநல பிரச்சாரம் செய்ததுதான் எனக்கு பிடிக்கவில்லை....

இதை படிப்பவர்கள் வடிவேலுவின் இந்த சுயநல பிரச்சாரம் சரியா தவறா என தங்கள் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ....

28 ஏப்ரல் 2011

ராசாவுக்கு ஏற்ற ரோசா....


ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு வலைபதிவு நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கு....

நான் எழுதாத ( ஆமாம் இவரு பெரிய சி பி செந்தில்குமார், கசாலி,பிரபாகரன் ,மற்றும் பல முன்னணி பதிவர்கள் அப்பிடின்னு நெனப்போன்னு நீங்க நெனைக்கிறது நியாயம்தான்...)இந்த மூன்று மாத காலத்தில் என்ன என்ன கூத்துக்கள், அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் அல்லது காமெடிகள்.....அப்பாடா...நெறைய நான் மிஸ் பண்ணிட்டேன்...

இன்று ஒருவழியாக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது....ராசாவுக்கு துணையாக.....

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மஞ்சள் துண்டுவின் மகராசி மகள் பெயர் குற்ற பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுவிட்டது....ராசாவுக்கு பக்கத்துக்கு செல் இந்த மகாராணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக இனி சுப்ரமணிய சுவாமி அறிக்கை விடலாம்....

நம்ம மஞ்சள் துண்டு தாத்தாவின் நிலைமையை பார்த்தால் கவலையாக இருக்கிறது.....மகளா ,மனைவியா என்று வீட்டுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி மனைவியை காப்பாற்றி இருக்கிறார்...

இந்த இக்கட்டான நேரத்திலும் சொன்னபடி தேர்தல் முடியும்வரை கனிமொழியை குற்ற பத்திரிக்கையில் சேர்க்காமல் இருந்ததற்காக "உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு "அப்பிடின்னு சொக்க தங்கம் சோனியாவுக்கு ஒரு தந்தி அடித்து இருப்பதாக செய்தி உலவுகிறது.....ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம்....

இதெல்லாம் தேவையா உங்களுக்கு கலைஞரே.....?கனிமொழி எல்லாம் என்ன முடியை (மயிரை) மக்களுக்காக செய்தார் ?

கனிமொழி என்ன செய்தார் கட்சிக்காக.....?எந்த சிறைக்கு சென்றார்?அவருக்காக நேற்று ஒரு உயர் நிலைக்குழு கூட்டம் அவசரம் அவசராமாக கூட்டிகனிமொழி இத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்,சங்கமம் நிகழ்சிகளை நடத்தினார் ,அது செய்தார் ,இது செய்தார் என புகழ்த்து அவரை ஏதோ ஒரு தியாகி அளவுக்கு சித்தரித்து கட்சியை அவர் பின்னால் நிக்க வைத்துள்ளீர்கள்....

இதெல்லாம் செய்தால் கனிமொழி பல கோடிகளை கொள்ளை அடிக்கலாமா?
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் அவர் அடைந்த பல்லாயிரம் கோடிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டுமா?

என்னங்கடா இது????அவர் கொள்ளை அடிப்பாராம்....ஆனால் நிரபராதியாம்....கைது செய்தாலே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்று சொன்ன கருணாநிதிக்கு குற்ற பத்திரிக்கையில் பெயர் சேர்த்தால் அது சும்மா பொழுதுபோக்குக்காக சி பி ஐ பெயர் எழுதி விளையாடுகிறது என்று சொல்லவா தெரியாது?