28 ஏப்ரல் 2011

ராசாவுக்கு ஏற்ற ரோசா....


ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு வலைபதிவு நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கு....

நான் எழுதாத ( ஆமாம் இவரு பெரிய சி பி செந்தில்குமார், கசாலி,பிரபாகரன் ,மற்றும் பல முன்னணி பதிவர்கள் அப்பிடின்னு நெனப்போன்னு நீங்க நெனைக்கிறது நியாயம்தான்...)இந்த மூன்று மாத காலத்தில் என்ன என்ன கூத்துக்கள், அரசியல்வாதிகளின் அட்டகாசங்கள் அல்லது காமெடிகள்.....அப்பாடா...நெறைய நான் மிஸ் பண்ணிட்டேன்...

இன்று ஒருவழியாக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது....ராசாவுக்கு துணையாக.....

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மஞ்சள் துண்டுவின் மகராசி மகள் பெயர் குற்ற பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுவிட்டது....ராசாவுக்கு பக்கத்துக்கு செல் இந்த மகாராணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக இனி சுப்ரமணிய சுவாமி அறிக்கை விடலாம்....

நம்ம மஞ்சள் துண்டு தாத்தாவின் நிலைமையை பார்த்தால் கவலையாக இருக்கிறது.....மகளா ,மனைவியா என்று வீட்டுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி மனைவியை காப்பாற்றி இருக்கிறார்...

இந்த இக்கட்டான நேரத்திலும் சொன்னபடி தேர்தல் முடியும்வரை கனிமொழியை குற்ற பத்திரிக்கையில் சேர்க்காமல் இருந்ததற்காக "உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு "அப்பிடின்னு சொக்க தங்கம் சோனியாவுக்கு ஒரு தந்தி அடித்து இருப்பதாக செய்தி உலவுகிறது.....ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம்....

இதெல்லாம் தேவையா உங்களுக்கு கலைஞரே.....?கனிமொழி எல்லாம் என்ன முடியை (மயிரை) மக்களுக்காக செய்தார் ?

கனிமொழி என்ன செய்தார் கட்சிக்காக.....?எந்த சிறைக்கு சென்றார்?அவருக்காக நேற்று ஒரு உயர் நிலைக்குழு கூட்டம் அவசரம் அவசராமாக கூட்டிகனிமொழி இத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்,சங்கமம் நிகழ்சிகளை நடத்தினார் ,அது செய்தார் ,இது செய்தார் என புகழ்த்து அவரை ஏதோ ஒரு தியாகி அளவுக்கு சித்தரித்து கட்சியை அவர் பின்னால் நிக்க வைத்துள்ளீர்கள்....

இதெல்லாம் செய்தால் கனிமொழி பல கோடிகளை கொள்ளை அடிக்கலாமா?
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் அவர் அடைந்த பல்லாயிரம் கோடிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டுமா?

என்னங்கடா இது????அவர் கொள்ளை அடிப்பாராம்....ஆனால் நிரபராதியாம்....கைது செய்தாலே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்று சொன்ன கருணாநிதிக்கு குற்ற பத்திரிக்கையில் பெயர் சேர்த்தால் அது சும்மா பொழுதுபோக்குக்காக சி பி ஐ பெயர் எழுதி விளையாடுகிறது என்று சொல்லவா தெரியாது?

17 கருத்துகள்:

 1. வருக...வருக...அதிரடி செய்திகளை மீண்டும் தருக

  பதிலளிநீக்கு
 2. வாங்க அண்ணே ..எப்படி இருக்கீங்க..நலமா? சொந்த வேலைகள் எல்லாம் முடிந்ததா?

  பதிலளிநீக்கு
 3. வந்தாச்சு அண்ணா.....உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 4. நான் நலம்...நீங்கள் நலமா நண்பரே.....உங்கள் வருகைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. வாங்க வாங்க. வரும்போதே கோபத்தோட வந்திருக்கீங்க போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 6. வாவ் வாங்க வாங்க நேத்து தாங்க நிணைத்தேன் எங்கடா நம்ம அதிரடிய இன்னும் காணமே

  நலமா
  வேலைகள் எல்லாம் சிறப்பாக முடிந்ததா

  பதிலளிநீக்கு
 7. இரண்டாது சுற்றுக்கு வந்திருக்கும் தங்களை கவிதை வீதி அன்போடு அழைக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. வாங்க மக்கா வாங்க தங்கள் வரவு நல்வரவு ஆகுக....

  பதிலளிநீக்கு
 9. என்னய்யா வரும்போதே அருவாளோட வர்றீங்க கூல்....

  பதிலளிநீக்கு
 10. நான் நலம் நண்பர்களே.....நீங்களும் நலம் என்றே நம்புகிறேன்....

  பதிலளிநீக்கு
 11. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
  இரண்டாது சுற்றுக்கு வந்திருக்கும் தங்களை கவிதை வீதி அன்போடு அழைக்கிறது...#

  உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே.....

  பதிலளிநீக்கு
 12. #பாலா சொன்னது…
  வாங்க வாங்க. வரும்போதே கோபத்தோட வந்திருக்கீங்க போலிருக்கே?#

  உங்கள் வருகைக்கு நன்றி தலைவரே.....

  பதிலளிநீக்கு
 13. #Speed Master சொன்னது…
  வாவ் வாங்க வாங்க நேத்து தாங்க நிணைத்தேன் எங்கடா நம்ம அதிரடிய இன்னும் காணமே

  நலமா
  வேலைகள் எல்லாம் சிறப்பாக முடிந்ததா#


  நன்றி நண்பரே....எல்லாம் நல்லபடியாக முடிந்தது....மீண்டும் பழையபடி உங்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
 14. உங்களுடைய நீண்ட வருகைக்கு பின்னாலான மீள்வருகையை அன்புடன் வரவேற்கிறோம்..
  வருக காஜா... பதிவுகளை அள்ளித் தருக..

  பதிலளிநீக்கு
 15. //மகளா ,மனைவியா என்று வீட்டுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி மனைவியை காப்பாற்றி இருக்கிறார்...//

  அப்படினா நாடு நடுத்தெருவிலா?

  பதிலளிநீக்கு
 16. அதிரடி தொடரட்டும்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....