31 டிசம்பர் 2010

பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.....


வலைப்பதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
இது ஆங்கில புத்தாண்டு......ஆனால் உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதை கொண்டாடுகின்றனர்.......சீனாவில் பிப்ரவரி மாதம்தான் அவர்கள் நாட்டு வழக்கப்படி புத்தாண்டு......நம் தமிழ்புத்தாண்டு தையில் வருவது போல...ஆனால் எல்லா நாட்டு யூத்களுக்கும் ஜனவரி ஒன்றுதான் இப்ப புத்தாண்டு.....

போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பவர்தான் இப்போது நடைமுறையில் இருக்கும் காலண்டரை 1582 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.....அவரது பெயரிலே ஆங்கில காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.... அதற்க்கு முன்பு ஜூலியஸ் சீசர் அறிமுகபடுத்திய ஜூலியன் காலண்டர் தான் வழக்கத்தில் இருந்தது......அதில் பதினொன்று நிமிடங்கள் அதிகமாக இருந்ததால் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றபடுகிறது....இன்னும் சில நாடுகள் ஜூலியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகின்றன......ஓகே....நம்மில் எல்லாரும் புது வருடத்தில் நிறைய இலட்சியங்கள், சபதங்கள் எடுத்து இருப்போம்.....அது எல்லாம் எல்லாருக்கும் நிறைவேற வாழ்த்துக்கள்.....
வெகுநாட்களாக இல்லை இல்லை ரொம்ப வருடங்களாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறும் பாடல் உங்களுக்காக.....


டாப் 10 ஊழல்கள் !!!

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாத்துலயும் டாப் டென் பார்த்தாச்சு......இதுலயும் பார்த்துவிடுவோம்.......


இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!
நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா......அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்........

30 டிசம்பர் 2010

சோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,000 கோடி: சுவாமி


அதிரடியாகவும் ,காமெடியாகவும் பேசுவதில் சுப்ரமணிய சுவாமி கில்லாடி.....அவர் சீரியஸா பேசினாலே அது காமெடியாகத்தான் இருக்கும்.......ஆனால் அது சில சமயம் உண்மையாகவும் இருக்கும்.....ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை பற்றி அதிகம் பேசி அதை வெளி கொண்டு வந்தவர் நம்ம சுவாமிதான்......ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி தினம் தினம் ஒரு குண்டை போடும் அவர் இப்ப பேசியிருப்பதை பாருங்கள்.....


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த ஊழலில் கிடைத்த ரூ.60,000 கோடியில் சோனியாவிற்கு ரூ.36,000 கோடியும், கருணாநிதிக்கு ரூ.18,000 கோடியும் சென்றுள்ளது என குற்றம் சாற்றியுள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான பாரதிய விச்சார் மன்ச் ஏற்பாடு செய்த ‘ஊழல் நெ.1 பிரச்சனையா?’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தற்போது டெல்லியில் நிலவும் ஊழல் விகிதம் 35 விழுக்காடு என்றும், அந்த கணக்கின்படியே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று தான் மதிப்பிடுவதாக சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அந்த ரூ.60,000 கோடியில் 60 விழுக்காடு (ரூ.36,000 கோடி) சோனியாவிற்கும், 30 விழுக்காடு (ரூ.18,000 கோடி) கருணாநிதிக்கும், 10 விழுக்காடான (ரூ.6,000 கோடி) மட்டுமே அமைச்சராக இருந்த ஆ.இராசாவிற்கும் சென்றதாக சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

“2ஜி ஊழல் வழக்கில் இராசாவின் பெயரை மட்டுமே சேர்த்துள்ளேன். அதில் சோனியா, கருணாநிதி பெயர்களையும் சேர்ப்பேன்” என்று பேசியுள்ள சுப்ரமணியம் சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஒரு துபாய் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் உடன் தொடர்புடையது என்றும், மற்றொரு நிறுவனம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பு உள்ளதென்றும் கூறியுள்ள சுவாமி, இதனால் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள் கூட தொலைத் தொடர்பில் அயல் நாடுகளை அனுமதிக்காத நிலையில், பல அயல் நாட்டு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுவாமி குற்றம் சாற்றியுள்ளார்.இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ ஸ்பெக்ட்ரம் பூதத்தில்......

2010 இன் டாப் 10 விருதுகள்....


சிறந்த காமெடியன் விருது: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல தனது சொத்துகணக்கை வாலன்டியராகவெளியிட்டு எல்லாருக்கும் சிரிப்பை வரவழைத்த கருணாநிதிக்கு.......சிறந்த மாட்டிகொண்டு முழிக்கும் விருது: ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டு ,மந்திரி பதவியை இழந்து பரிதாபமாக நிற்கும் ராசாவிற்க்கு.....சிறந்த அயோக்கியன் விருது: விக்கிலீக்சினால் தோலுரித்து தனது சுயரூபத்தை உலகத்துக்கு காட்டிய அமெரிக்காவுக்கு.....


சிறந்த தூங்கி எழுந்த விருது: கொடநாட்டில் தூங்கி கொண்டு இருந்துவிட்டு திடீரென தொடர் கூட்டங்கள் நடத்தி முழித்து கொண்ட ஜெயலலிதாவுக்கு.....


சிறந்த தொலைபேசி உரையாடல் விருது: கட்சி விசயங்களையும், தங்களது குடும்ப சண்டைகளையும், பதவி விசயங்களையும் பற்றி எக்குதப்பாக பேசி சிக்கிகொண்ட கனிமொழி, ராசாத்தி அம்மாள் ,பூங்கோதை மற்றும் ராசா ஆகியோருக்கு.....சிறந்த சண்டை மாஸ்டர் விருது: நிறைய படங்களில் காமெடி வேடங்களில் ஒன்றாக நடித்துவிட்டு பிறகு மாறி மாறி புகார் குடுத்து சண்டை போட்ட வடிவேலுவுக்கும், சிங்க முத்துவுக்கும்.....சிறந்த ஓடி ஒளிந்தவர் விருது: ஐபிஎல் முறைகேடுகளில் மாட்டிகொண்டு இப்போது லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடிக்கு.....சிறந்த குப்புற விழுந்தவர்கள் விருது: பீகாரில் தனியாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கும், லாலு பிரசாத் யாதவுக்கும்......சிறந்த கையும் களவுமாக பிடிபட்ட விருது: ஆன்மீகத்தின் பெயரில் காம களியாட்டங்கள் நடத்தி ,கன்றாவியான வீடியோ பதிவில் சிக்கி கைதான நித்யானந்தாவுக்கு..... .......சிறந்த உம்மனாமூஞ்சி விருது : பொது இடங்கள், மற்றும் பொது நிகழ்சிகளில் எப்போதுமே சிரிக்காமல் உம்முன்னு இருக்கும் டாக்டரு விஜய்க்கு.....


29 டிசம்பர் 2010

கமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி மூன்று)


சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மன்மதன் அம்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான அ‌ரிது அ‌ரிது டாப் 5க்குள் இடம்பிடிக்காதது தயா‌ரிப்பாளருக்கு சோகமான செய்தி.

5. விருதகி‌ரி

விஜயகாந்தின் விருதகி‌ரி இதுவரை சென்னையில் 44 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.33 லட்சங்கள். விஜயகாந்தின் மாஸுக்கு இது மிகக் குறைவான வசூல்.

4. நெல்லு

புதுமுகங்களின் நெல்லு சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 5.8 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. சுட்டி சாத்தான்

குழந்தைகளை குறி வைத்து வெளியான சுட்டி சாத்தானுக்கும் அதிக வரவேற்பு இல்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 6.4 லட்சங்களையே வசூலித்துள்ளது.

2. ஈசன்

சசிகுமா‌ரின் படம் என்பதால் ஈசனுக்கு ஓபனிங் அமோகம். முதல் பத்து தினங்களில் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது வசூல். சென்ற வார இறுதி மூன்று தின வசூல், 16.1 லட்சங்கள்.

1. மன்மதன் அம்பு

கமல் படம் எதிர்பார்த்ததைப் போலவே முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நான்கு தினங்களில் 94.36 லட்சங்கள் வசூலித்துள்ளது.

சன் டிவி எங்கள் காவலன்.....

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.


இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.


சரிந்தது சாம்ராஜ்யம்......

24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஷஸ் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அது பெற்று இதை சாதித்தது.

எப்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அனல் பறக்குமோ அதேபோலத்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும். அதிலும் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எப்போதுமே இரு அணிகளுக்கும் கெளரவப் பிரச்சினையாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடர் என்று அழைக்கப்படுகிறது. இதை கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவே வென்று வந்தது. இதனால் இங்கிலாந்து அணி கடும் ஏமாற்றத்தில் இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அணி தனது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று விட்டது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றன.

இதில் இங்கிலாந்து 2 டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட்டை ஆஸ்திரேலியா வென்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது.

மெல்போர்ன் நகரில் 4வது போட்டி நடந்தது. இதில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் இன்று இங்கிலாந்து வென்றது. கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் டிரா செய்தாலே இங்கிலாந்துக்குப் போதும்.

28 டிசம்பர் 2010

கமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....


ரஜினியும் கமலும் நண்பர்கள் என்பது நாம் அறிந்த செய்திதான்.....ஆரம்பத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும்போது ரஜினி வில்லனாக நடித்த காலம் உண்டு....பின்பு தனி தனியாக நடித்து அவரவர் பாணியில் பெரும் புகழ் அடைந்தனர்....அவர்களின் தூய்மையான நட்பின் அடையாளமாக கமல் சினிமாத்துறைக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை தொடர்ந்து சென்ற ஆண்டு நடந்த கமல் ஐம்பது என்ற நிகழ்ச்சியில் ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி இது.....2010 இன் டாப் 10

புது வருடம் பிறக்கபோகிறது.....முடிய போகும் வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்...... அதற்க்கு முன்பு தமிழ்மணம் விருதுகள் முதல் சுற்றில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....மேலும் உங்கள் வாக்குகளை எனக்கு தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்....அரசியல், சமூக விமர்சனங்கள் எனும் பிரிவில் எனது படைப்பு ஸ்பெக்ட்ரம் நடப்பது என்ன என்ற தலைப்பில் உள்ளது......உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்......

1. விக்கிலீக்ஸ் – அமெரிக்காவைப் பற்றி இத்தனை காலமாக உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த தோற்றத்தை ஒரு சில நாட்களில் அப்படியே மாற்றிப் போட்டது விக்கிலீக்ஸின் ரகசிய ஆவண வெளியீடுகள். அமெரிக்க தூதரகங்களுக்கிடையேயும், தூதரகங்களிலிருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸ்,. உலகையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

2. ஸ்பெக்ட்ரம் ஊழல் – இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல். சில லட்சம், பல லட்சம், சில கோடி, பல கோடி என்ற சின்னக் கணக்கிலேயே ஊழல்களைப் பார்த்துப் பழகிப் போன இந்திய மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கு யார் காரணம் என்று அத்தனை பேரும் போட்டு பிராண்டிக் கொண்டிருந்த வேளையில் அதிகாரத் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியது. இந்தியாவின் மிகப் பெரிய பரபரப்புச் சம்பவம் என்ற பெயரையும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தட்டிக் கொண்டு போய் விட்டது.

3. பீகார் சட்டசபைத் தேர்தல் – பீகாரில் தேர்தல் என்றாலே தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் பீதியாகவே இருக்கும். அந்த அளவுக்கு வன்முறைகள் கச்சை கட்டிக் கொண்டு பறக்கும். ஆனால் சற்றும் அசம்பாவிதம் இல்லாமல், வெட்டுக் குத்து இல்லாமல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலை 2010ல் கண்டனர் பீகார் மக்கள். அதை விட அதிசயமாக, நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியும் கிடைத்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும், பீகார் மீதான ஏளனப் பார்வையை துடைத்துப் போட வைத்து விட்டது.

4. ஆந்திர அமளிகள் – தெலுங்கானா பகுதியில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறை, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைத்த ஜெகன் மோகன் ரெட்டி விவகாரம், 2010ம் ஆண்டின் முக்கிய இந்திய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதேபோலஜெகன் மோகன் ரெட்டியால் காங்கிரஸ் படு பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

5. காஷ்மீர் கலவரம் – காஷ்மீரில் நடந்த வரலாறு காணாத வன்முறை, பாதுகாப்புப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல் ஆகியவற்றால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த கொடுமை நடந்த ஆண்டு 2010. இளைஞர்கள் பட்டாளம் வெறும் கற்களை கையில் எடுத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினரையும், காஷ்மீர் பள்ளத்தாக்கையும் உண்டு இல்லை என்று செய்து விட்டனர். மாதக் கணக்கில் நீண்ட இந்த கலவரத்தைத் தடுக்க முடியாமல் கடுமையாக திணறியது மத்திய அரசு. இறுதியில் பல்வேறு உத்தரவாதங்களைக் கொடுத்து, அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேசி, சமரசப் பேச்சுவார்த்தைக் குழு அமைத்து ஒரு வழியாக காஷ்மீரை தற்போதைக்கு அமைதிப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த ஆண்டின் மிக முக்கிய சம்பவங்களில் காஷ்மீர் வன்முறைக்கும் நிச்சயம் இடம் உண்டு.

6. மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வன்முறை – நாட்டை உலுக்கிய மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறைகளுக்கு மிக முக்கிய உண்டு. தாண்டேவாடா காட்டுப் பகுதியில் அவர்கள் நடத்திய வெறித் தாக்குதலில் சிஆர்பிஎப் படையினர் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பயங்கரம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல ரயில் கவிழ்ப்பு சம்பவங்களும் மக்களை அதிர வைத்தன. மேற்கு வங்கத்தையே ரத்தக் காடாக்கி நக்சல்களின் வெறியாட்டம் இந்த ஆண்டின் மிக பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.

7. ஜெயலலிதாவின் தொடர் கூட்டங்கள் - காசு கொடுத்து வந்த்தாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தி பிரமாண்டமான கண்டனக் கூட்டங்கள், தமிழக அரசியலில் இந்த ஆண்டு நடந்த பரபரப்பு சம்பவங்களில் முக்கியமானதாக இடம் பெறுகிறது. இந்தக் கூட்டங்கள் நடக்கும வரை அதிமுக அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த்து. கட்சியிலிருந்து பெரும் பெரும் புள்ளிகள் எல்லாம் கியூ வரிசையில் நின்று வெளியேறி திமுக பக்கம் போய்க் கொண்டிருந்தனர். ஆனால் மூன்றே கூட்டங்களில் ஒட்டுமொத்த அதிமுகவின் அவல நிலையையும் அப்படியே மாற்றிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. இந்தக் கூட்டங்களால் அதிமுகவுக்கு லாபம் கிடைக்குமா என்பது வரும் சட்டசபைத் தேர்தலின்போதுதான் தெரியும்.

8. நாடாளுமன்ற அமளி – 2010ம் ஆண்டில் நாட்டை அதிர வைத்த இன்னொரு முக்கியச் சம்பவம் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற அமளி. இந்திய நாடாளுமன்றத்தில்இப்படி ஒரு அமளியை, தொடர் போராட்டத்தை இந்த தலைமுறை கண்டதில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை ஒரு நாள் கூட நடத்த முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம். இந்த போராட்டத்தின் விளைவு மக்கள் வரிப்பணத்தில் ரூ. 146 கோடி தரிசானதே.

9. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி – தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி உலக மக்களை அப்படியே கட்டிப் போட்டு மெய் சிலிர்க்க வைத்து விட்டது. கால்பந்துப் போட்டி என்றாலே வன்முறை என்ற இலக்கணத்தைத் தகர்த்து, சற்றும் பிரச்சினை இல்லாமல் மிக அழகாக, பிரமாண்டமாக நடத்திக் காட்டி உலக நாடுகளை மூக்கில் விரல் வைக்க வைத்து விட்டது தென் ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்க்க் கண்டத்தில் நடந்த முதலாவது உலக்க் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்ற பெருமையும் இப்போட்டிக்கு உண்டு. இந்த ஆண்டின் சரித்திர நிகழ்வுகளில் இந்தப் போட்டிக்கும் நிச்சயம் இடம் உண்டு.

10. டெல்லி காமன்வெல்த் விளையாட்டு – நடக்குமா, நடக்காதா என்பது ஒரு பக்கம் இருக்க, அரை குறையாக கட்டப்பட்டு வந்த ஸ்டேடியங்கள், குளறுபடிகள், ஊழல் புகார்கள் என பெருத்த சர்ச்சைக்குள்ளானது டெல்லி காமன்வெல்த் போட்டிகள். போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னணி வீரர், வீராங்கனைகள் ஒருபக்கம் அறிவிக்க, கேம்ஸ் வில்லேஜில் வசதிகள் சரியில்லை, பாம்புகள் படையெடுக்கின்றன என்று குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் குவிய, கட்டிய நடைமேம்பாலம் சட்டென்று இடிந்து விழ இந்தியாவுக்கு பெரும் மானப் பிரச்சினையாகி விட்டது டெல்லி காமன்வெல்த் போட்டி. ஆனால் குறை சொன்ன அத்தனை பேரையும் இன்ப அதிர்ச்சிக்கள்ளாக்கும் வகையில் அட்டகாசமான தொடக்க விழா, அபாரமான இறுதி விழாவுடன் கலக்கலான முறையில் நடந்து முடிந்த்து காமன்வெல்த் போட்டி. அத்தோடு இல்லாமல், இந்தியாவுக்கும் 2வது இடத்தைக் கொடுத்து புதிய சாதனையையும் படைக்க வைத்து விட்டது.

27 டிசம்பர் 2010

நடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....


நானும் சதமடித்து விட்டேன்....நான் எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் கசாலி....என்னை ஊக்கப்படுத்தி ,தேவையான டிப்ஸ்களை வழங்கிய அண்ணன் கசாலிக்குஎனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....


நான் ஒன்னும் பெருசாக சாதிக்கவில்லைதான்......ஆனாலும் ஆயிரக்கணக்கான பதிவர்களில் நானும் ஒருவன் என்பதே பெரிய விஷயம்......அந்த வகையில் என்னை ஒரு பதிவராக மதித்து என்னை பின்தொடர்ந்த
நண்பர்களுக்கும், எனக்கு ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் பிலோசபிபிரபாகரன், பாலா, சகோதரி ஆமினா, ஜி , பாரத் பாரதி, ஐத்ருஸ், விக்கி உலகம், ஸ்பீட் மாஸ்டர், மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....


பொதுவாக நூறு என்றாலே அது ஸ்பெஷல் தான்.....அந்த வகையில் நம்ம நடிகர்களின் நூறாவது படம் அவர்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்....ஆனால் அப்படி ஆர்ப்பாட்டமாக வெளிவந்த படங்களின் ரிசல்ட்?


நம்ம ரஜினியின் நூறாவது படம் ராகவேந்திரா.....

இந்த படம் ரஜினியின் மற்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம்....

ஆனால் ரஜினி ரசிகர்களை இந்த படம் கவரவில்லை.....அதிரடியாகவும், ஸ்டைலாகவும் ரஜினியை பார்த்து பழக்கப்பட்ட அவரது ரசிகர்களுக்கு ராகவேந்திரா வேடம் பெரிதாக கவராததே இப்படத்தின் தோல்விக்கு காரணம்.....அடுத்து கமல்.....

இவரின் நூறாவது படம் ராஜ பார்வை.....கண் பார்வை அற்றவராக இதில் நடித்து இருந்தார் கமல்....பாடல்களும் சூப்பர்.....கமலின் நடிப்பும் சூப்பர்.....ஆனாலும் படம் ஓடவில்லை.....


சத்யராஜின் நூறாவது படம் வாத்தியார் வீட்டு பிள்ளை.....இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.....


அடுத்து பிரபு.....இவரின் நூறாவது படம் ராஜகுமாரன்......இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்தது......ஆனால் இந்த படமும் தோல்வி படமே.....


சரத்குமாரின் நூறாவது படம் தலைமகன்.....ஏக விளம்பரம் பண்ணி வெளிவந்த இந்த படமும் தோல்வி படமே.....


இது எல்லாவற்றிற்கும் விதி விளக்கு நம்ம கேப்டன் தான்......


இவரின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன்.....வீரப்பனை வேட்டையாடும் வீரனாக நம்ம கேப்டன் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது.....இந்த படத்தில் உள்ள பாட்டுக்களும் சூப்பர் ஹிட்.....படம் வெள்ளி விழா கண்டது....நடிகர்களின் நூறாவது படத்தில் சதமடித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டும்தான்... ஆனால் அதற்க்கு பிறகு வந்த அவரது படங்கள் தொடர்ச்சியாக அடி வாங்கியது வேறு கதை.....


இப்போது நம்ம டாக்குடரின் ஐம்பதாவது படமான சுறாவே சுண்டெலி ஆனது வேறு விஷயம்.....


இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்" இதுபோல என்னோட நூறாவது பதிவையும் பப்படம் ஆக்கி விடாதீர்கள் என்பதற்காகத்தான்......"


ஓகே பார்த்துவிட்டு இல்லை இல்லை படித்துவிட்டு என்னை பாஸ் ஆக்கிவிடுங்கள்.....நண்பர்களே.....


26 டிசம்பர் 2010

தொலைந்து போ சுனாமியே......

சுனாமி .....இந்த வார்த்தையின் கோரதாண்டவத்தை யாரும் மறக்க முடியாது......ஆறு வருடத்திற்கு முன்பு வரை நமக்கு இந்த வார்த்தை தெரியாதுதான்......சுனாமி ஏற்படுத்திய இழப்புகளை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.....

இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை மாபெரும் சுனாமி அலைகள் தாக்கியதன் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் எழுந்தன. இந்தோனேசியாவில் புறப்பட்ட அந்த அலைகள் இந்தியாவின் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை பெரும் சீரழிவை ஏற்படுத்தி ஓய்ந்தன.

மனித குலம் காணாத இந்தப் பெரும் பேரழவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நாகப்பட்டனம், கடலூர், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன. பல ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. பல ஆயிரம் மீனவர்கள் வீடுகள், உறவுகளை இழந்து தவிப்புக்குள்ளாகினர். பல நூறு பேரைக் காணவில்லை.

ஒரு சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழக கடலோரமும் பிணக்காடாகிப் போனது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இலங்கையின் கடலோரப் பகுதிகளையும் புரட்டிப் போட்டு விட்டது சுனாமி. அதேசமயம், இலங்கையை சுனாமி அலைகள் தாக்கியதன் மூலம் தமிழகத்திற்கு வரவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தமிழகத்தை சுனாமி தாக்கியபோது அலைகளின் வேகம் சற்று மட்டுப்பட்டதால்தான் மிகப் பெரிய அசம்பாவிதம் நேராமல் போனதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் எப்படித் தாக்கியிருந்தால் என்ன, இந்தத் தாக்குதலுக்கே பல ஆயிரம் பேரைப் பறி கொடுத்து பெரும் சேதத்தையும் சந்தித்து விட்டது கடலோரத் தமிழகம்.

அந்த சோக சம்பவத்தின் 6வது நினைவு தினம் இது. ஆழிப் பேரழிவு என்பதை வரலாற்று நூல்களில் மட்டுமே படித்திருந்த இந்த உலக மக்களுக்கு முதல் முறையாக அதை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது இயற்கை.

அந்த ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமியை பாருங்கள்...


இனி இதுபோன்று நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திர்ப்போம்...

25 டிசம்பர் 2010

வெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண வதந்தியும்......


தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது.

இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும்.

ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது.

12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது.....

அசின் ரகசிய திருமணமா?

அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது.

ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இது பற்றி அசினிடம் கேட்ட போது, "எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது. கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்...", என்றார்.

இந்த செய்திகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லைதான்.....இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு நினைக்க தோன்றும்.....இரண்டுமே செய்திதான்.....ஆனால் எது முக்கியமானது?முதலில் உள்ள செய்திதானே.....ஆனால் .......பத்திரிக்கைகளில்
நாளை முதலில் அசினை பற்றிய செய்தியைத்தான் பெரும்பாலோனோர் முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள்......என்னத்த சொல்வது?

சில ஏன் கேள்விகள்? உங்களுக்கு பதில் தெரியுமா?


மியூசிக் சேனல் எல்லாவற்றிலும் பாடலை விரும்பி கேட்கும் நேயர்களும் சரி, நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் சரி, யாரோ எழுதி யாரோ இசை அமைத்து யாரோ பாடிய பாடலை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு அர்பணிக்க சொல்கிறார்களே அது ஏன்?தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக வரும் எல்லாரும் நான் இந்த நிகழ்ச்சியை விடாமல் தொடர்ந்து பார்ப்பேன் என்று அண்டபுளுகு புளுகுகிறார்களே...அது ஏன்?புதுசாக படம் இயக்கம் இயக்குனர்குளும் சரி, பிரபலமான இயக்குனர்களும் சரி தங்களது படத்தை பற்றி சொல்லும்போது இது ஒரு வித்தியாசாமான படம், புதுமையான கதை என்று கதை விடுகிறார்களே அது ஏன்?எல்லா தொலைகாட்சிகளும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என விளம்பரம் பண்ணும்போது ,பகுத்தறிவாதி !!!!கலைஞரின் தொலைக்காட்சி மட்டும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என பீலா விடுவது ஏன்?பெரும்பாலும் சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்று விடும் என்று கூறுகிறார்களே அது ஏன்?எவ்வளவு பாராட்டு விழா நடத்தினாலும் சலிக்காமல் கலந்து கொண்டுவிட்டு, தனக்கு இதெல்லாம் பிடிக்காது எனவும் ,தொடர்ந்து வலியுறுத்தி யதால்தான் தான் கலந்து கொண்டேன் எனவும் கருணாநிதி பிகு பண்ணுவது ஏன்?

தினகரன்பேப்பரில் மட்டும் டெய்லி எங்காவது ரிப்பன் வெட்டிக்கொண்டு தயாநிதிமாறன் போஸ் கொடுக்கிறாரே ...அது ஏன்?இதற்கெல்லாம் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.....


24 டிசம்பர் 2010

பன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்?


உண்ணும் உணவு பொருட்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக் லேட்கள்
போன்றவற்றில் பன்றியின் கொழுப்பு சேர்க்கபடுவதாக எனக்கு எஸ் எம் எஸ் ஒன்று வந்தது.. அனேகமாக உங்களில் பலபேருக்கும் இது மாதிரி வந்து இருக்கலாம்....அந்த குறியீடுகளை பாருங்கள....

E100, E 110, E120, E140, E141, E 153, E2 10,E2 13,E2 14, E2 16,
E 325,E 326, E 327, E 434, E 472 E 635, E 904
இது மாதிரி நிறைய உள்ளது....நான் சிலவற்றைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.....இந்த குறியீட்டின் விளக்கம்
"EMUL SIFIERS " என்பது ஆகும்....இது பன்றியின் கொழுப்பில் இருந்து எடுக்க படும் எண்ணையின் குறீயீடு ஆகும்

ஆகவே உணவு பொருளின் கவரில் இந்த மாதிரி குறீயீடு இருந்தால் அதை சாப்பிட வேண்டாம் என அந்த எஸ் எம் எஸ் இல் உள்ளது ..இது அமெரிக்க தயாரிப்பு உணவு பொருட்களில் அதிக அளவு இருக்கிறதாம்....
இது டைரி மில்க் போன்ற குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் வகைகளில் அதிகமாக உள்ளதாம்.....

இதை எப்படி உறுதிபடுத்திகொள்வது?
இது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை.....இதை பொருட்படுத்தலாமா இல்லை விட்டுவிடலாமா என்றும் புரியவில்லை....

மன்றத்தை கலைத்துவிடுவேன்......அஜித்


ரசிகர்கள் அமளியில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என என் கட்டளைய மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன், என எச்சரித்துள்ளார் நடிகர் அஜீத்.

அஜீத் நடித்துவரும் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கில் அத்துமீறி நுழைந்த சில ரசிகர்கள், தங்களுடன் அஜீத் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். இதனால் டென்ஷனான அஜீத், தொழில் நடக்குமிடத்தில் இப்படி கலாட்டா செய்யக் கூடாது என அறிவுத்தி அனுப்பினாராம்.

இதைத் தொடர்ந்து தனது அனைத்து ரசிகர்களுக்கும் அவர் ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த அறிக்கை:

"சமீபத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்தில் கொண்டு வரப்பட்டது.

எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்திற்காக ஒரு சில கூட்டம் நடத்த விருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப்பிரச்சாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நான் என்றுமே எனது ரசிகர்களை சுயலாபத்திற்காக உபயோகப்படுத்தியதில்லை. உபயோகப்படுத்தவும் மாட்டேன்.

புகைப்படம் எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தல், நேரில் சந்திக்க கோரி படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து முற்றுகை செய்தல் ஆகிய காரியங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

என் மேல் உண்மையான ரசிகர்கள் இத்தகைய காரியங்களை தவிர்த்து அதில் ஈடுபடுவோரையும் நிராகரிக்க வேண்டும்.

என்னுடைய கருத்துக்கு எதிர்ப்பா, ஆதரவா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை பொது மக்களிடையே விட்டு விடுகிறேன்.

எனது ரசிகன் சமூகத்தில் கண்ணிய மிக்க மனிதன் என்று பெயரெடுப்பதையே விரும்புகிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவன். எவ்விதமான நிர்ப்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவர்.

இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளைய மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

23 டிசம்பர் 2010

மறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....

கக்கன்....காங்கிரஸ் கட்சி மறந்த பெயர் இது.....தனக்கு என சல்லிகாசு கூட சேர்க்காமல் வாழ்ந்த உன்னத மனிதர் கக்கன்.....ஆனால் இவரை தமிழக காங்கிரஸ் கட்சிகாரர்கள் எள்அளவுகூட மதிக்கவும் இல்லை......நினைவில் வைக்கவும் இல்லை.....

ஆனால் தமிழகம் வந்து இருக்கும் ராகுல் கக்கனுக்கு உரிய மரியாதையை செலுத்தினார்.....ஒரு வகையில் இதுவும் அரசியல் தான்....


தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி இந்த முறை தனது பயணத்தை தலித் சமுதாயத்தினரைக் குறி வைத்து மேற்கொண்டார்.

தான் கலந்து கொண்ட அனைத்து கூட்டங்களிலும் தலித்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மதுரையில் கலந்துரையாடலை முடித்துவிட்டு இரவு ஒன்பதரை மணியளவில் திடீரென கக்கன் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பினார். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில்தான் கக்கன் வாழ்ந்த வீடு உள்ளது. அங்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள கக்கின் சிலை, புகைப்படங்களைப் பார்வையிட்டார். சிலைக்கும் மாலை அணிவித்தார்.

அவரை ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, கக்கனின் தம்பி மகன் பாஸ்கரபூபதி, கிரா மக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் கக்கன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றார் ராகுல் காந்தி. அங்கு கக்கனின் இன்னொரு தம்பி மகனான வெள்ளைச்சாமி வசித்து வருகிறார். அவரை சந்தித்த ராகுல் காந்தி வீட்டுக்குள் சென்று தரையில் அமர்ந்து பேசினார். பின்னர் வீட்டைப் பார்வையிட்ட ராகுல், அங்கிருந்த நெல் சேமித்து வைக்கும் குதிரைப் பார்வையிட்டார். இது என்ன என்று கேட்டார். வெள்ளைச்சாமி அதுகுறித்து விளக்கியதும் ஆச்சரியமடைந்தார்.

பின்னர் தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கிக் குடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய ராகுல், மந்தைச் சாவடி பகுதியில் உள்ள கக்கனின் உறவினரான பொன்னம்மாள் வீட்டுக்குப் போனார். ராகுல் வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்களிடம் நெருங்கிய ராகுல் அவர்களிடம் கை குலுக்கி இயல்பாகப் பேசினார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி பத்தரை மணியளவில் அழகர் கோவில் சாலையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்குள் நுழைந்தார். ராகுலைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் திரண்டு வந்து அவரிடம் கை குலுக்கி மகிழ்ந்தனர். மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் ராகுல்.

அரசியல்வாதிகள் என்ன பண்ணினாலும் அது செய்திதான்.....ஆனாலும் ராகுல் கக்கன் வீட்டுக்கு சென்றது ஒரு நல்ல விசயம்தான்....இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு கக்கன் வீடு இல்லை இல்லை அவர் ஊர் எது என்று கூட தெரியாது........

கேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி?

கேப்டன் விஜயகாந்த் டாக்டர் விஜயகாந்த் ஆனது பல சர்ச்சைகளை கிளப்பியது........டாக்டர் பட்டம் கொடுத்த அமைப்பை பற்றியும் பலர் கேள்வி எழுப்பினார்கள்...... இங்கு டாக்டரு விஜய்க்கே பட்டம் கொடுக்கும்போது நம்ம கேப்டன் டாக்டர்ஆவதற்கு முழு தகுதி ஆனவர்தான்....
அதற்கு ஆதாராமாக இதை பாருங்கள் ......என்ன இப்ப ஓகே யா.....செல்போன் வெளிச்சத்தில் ஆபரேஷன் பண்ணும் விஜயகாந்த் டாக்டர் பட்டத்துக்கு சரியானவர்தானே........

22 டிசம்பர் 2010

பொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு?


வரும் பொங்கலுக்கு திரையரங்கில் போட்டிப் போடுகிறவர்கள் அனைவருமே இளைஞர்கள்.தற்போதய நிலவரப்படி பொங்கலுக்கு வெளிவரும் படங்களை பற்றி ஒரு பார்வை.....

இன்றைய நிலவரப்படி நான்கு முக்கியமான படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றன.

முதலாவது, முதல் படத்திலேயே சென்சிபிள் இயக்குனர் என்று பெயரெடுத்த வெற்றிமாறனின் ஆடுகளம். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். தனுஷ் இதன் ஹீரோ.
வெற்றிமாறனும் தனுசும் இணைந்த பொல்லாதவன் வெற்றி பெற்றது இப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.......கலாநிதி மாறனின் அடுத்த வெளியீடு ...விளம்பரத்தை பற்றி சொல்ல தேவை இல்லை..........


அடுத்து விஜய்யின் காவலன். பல தடைகளை தாண்டிவரும் படம். ஆனால் விஜய்யின் உண்மையான தடை அவரது முந்தையப் படங்களின் பலவீனமான கலெ‌க்சன். காவலன் அதனை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் காவலனில் நடித்திருப்பதால் படத்தை புறக்கணிக்க உலகமெங்கும் உள்ள ஈழத்தமிழரும், தமிழ் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருப்பது செவிசாய்க்க வேண்டிய ஒன்று. விஜய்க்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இப்படம் வெளிவருகிறது.....

மூன்றாவது கார்த்தியின் சிறுத்தை. பையா, நான் மகான் அல்ல கார்த்தியை கோடம்பாக்கத்தின் புதிய கலெ‌க்சன் பாய் ஆக்கியிருக்கிறது. சிறுத்தையில் அது தொடருமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். தொடர் ஹிட் கொடுத்த கார்த்தியின் அடுத்த படம்....இதில் போலீஸ், பிக் பாக்கெட் என முதல் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார்......

இறுதியாக இளைஞன். நொடிக்கொரு விளம்பரம் போட்டாலும் போட்டது திரும்ப வருமா என்ற பயம் பணம் போட்டவருக்கும் உழைப்பை போட்டவர்களுக்கும் இருக்கிறது. இதனால் பொங்கலுக்கென்று அறிவித்த படம் கொஞ்சம் தாமதமாக வரவும் சாத்தியமுள்ளது.அதுதான் நல்லதும் கூட......
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கலைஞர் இது மாதிரி கதை வசனம் எழுதாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.....


எனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)

நண்பர் பாலா அவர்கள் என்னை தொடர் பதிவு எழுத அழைத்து இருக்கிறார்.....அதற்காக எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.....எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்பது தலைப்பு.....அதுவும் கடந்த பத்து வருடங்களில்....

முதலில் அயன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் ஹைக்கூ சாங்


அடுத்து வருவதும் சூர்யா படம்தான்...... காதலர்களின் தேசிய கீதம் இந்த பாடல்


பீமா படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காது....திரிசாவும் பாடலுக்கு கூடுதல் அழகு....


சுட்டும் விழி சுடரே.....இந்த பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது....சூர்யாவும் அசினும் இந்த பாடலில் கொள்ளை அழகு...


துளி துளி பாடல் ...இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்.... கேட்டுகிட்டே இருக்கலாம்..........


திகில் படமான ஈரத்தில் மனதை வருடும் ஒரு காதல் பாடல் இது.....


பானா காத்தாடியில் இடம் பெற்ற இந்த பாடல் கேட்பவர் மனதை கொள்ளை அடிக்கும்......


கிரீடம் படத்தில் வரும் இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் அருமை.....திரிசாவும் அஜித்தும் சூப்பர்.......


பாஸ் படத்தில் வரும் இந்த பாடல் மனதை மயக்கும் மெலடி....

என் காதல் சொல்ல .....பாடல் ..சோகமும் உற்சாகமும் ஒன்றாக கலந்த இந்த பாடலும் இசையும் வரிகளும் சூப்பர்..........

எனக்கு பிடித்த பாடல்கள் இது........ சமிபத்தில் வெளிவந்த படங்கள்தான் இது.......இதை தொடருமாறு

நண்பர் பிரபாகரன்


நண்பர் ஸ்பீட் மாஸ்டர்........நண்பர் ஜி......மற்றும் சகோதரி ஆமினா.......ஆகியோரை கேட்டுகொள்கிறேன்....... ( உங்களுக்கு நேரம் கிடைத்தால் நண்பர்களே)


21 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....

மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......

தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த தந்தையாக இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு

நம்ம மனோஜ்தான்......

வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....

தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......

படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...

பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....

சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது என்ன பண்ணி கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை....


மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர்...
தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...
மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....
சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....
அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...


இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....
இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....

சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா........

சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் ஆகும்போது விஜய்யும் சாதாரண நடிகர்தான்.....பின்பு பிரெண்ட்ஸ் படத்தில் சேர்ந்து நடிக்கும்போது விஜய் வளர்ந்துவிட்ட ஒரு ஸ்டார்.....ஆனால் சூர்யா அப்போதும் ஒரு வளரும் நடிகராகவே இருந்தார்.....ஆனால் இப்போது?தொடர்ந்து ஹிட் கொடுக்கும் சூர்யா எங்கே? தொடர்ந்து பிளாப் கொடுக்கும் டாக்டரு எங்கே?

ஓடுகிற குதிரைக்குதானே மதிப்பு......சினிமாவிலும் அதேதான்..........


படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் கோடம்பாக்கத்தில். அத்தனை அரசியல். இதற்கு விஜய் மட்டும் பலியாகாமல் இருப்பாரா!

நேற்று இரவு சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் அணி அறிவிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு.

விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. (கலாயிப்பு எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களிலும் நம்ம டாக்டருதான் முதலிடம்....)

முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா... அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று தெரியவில்லை......

ஆனாலும் நான் என்ன நினைக்கிறேன் என்றால் டாக்டரு விஜய்யின் பெயரையாவது மறக்காமல் சொன்னாரே சரத் ....அது போதாதா?

20 டிசம்பர் 2010

தங்கபாலுவிடம் பத்து கேள்விகள்.....


காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் காமெடி பீஸ்தான்......காமெடி பீஸ் கட்சியின் காமெடி மாஸ் நம்ம தங்கபாலு.....மனுசர் சிரிக்கவே மாட்டார் போல....ஆமா பதவி எப்போ போகுமோனு பயத்திலே இருந்தா சிரிப்பு எப்படிவரும்....
அப்படிப்பட்ட காமெடி பீஸ் தங்கபாலுட்ட ஒரு பேட்டி எடுப்போமா....


ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நீங்கள் ஏன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்றீர்கள் ?


பதில்: என்னுடைய எதிர் வேட்பாளர் வெற்றிபெற்றதால் நான் தோற்றேன்...


நீங்கள் எப்போது ஆட்சியை பிடிப்பீர்கள்?பதில்: ஆச்சி மசாலா தூலா (சுதாரித்துக்கொண்டு) நாங்கள் எதிர்க்கட்சிகளே தேர்தலில் போட்டி இடாவிட்டால் ஆட்சியை பிடிப்போம்....


நீங்கள் எம் பி யாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஏன் எந்த கேள்வியையும் கேட்கவில்லை?


பதில்:நான்தான் அங்கு போகவே இல்லையே....


உங்கள் கட்சியில் மட்டும் ஏன் இத்தனை கோஸ்டிகள்?


பதில்: எங்க கட்சிலதான் உறுப்பினர்களே இல்லையே ....அப்புறம் எப்பிடி கோஸ்டி இருக்கும்.....


காங்கிரஸ் கட்சி ஏன் தமிழக மந்திரி சபையில் இடம்பெறவில்லை?


பதில்: எங்கள் கட்சிக்கு எம் எல் ஏ இருக்குறதே எங்களுக்கு நம்ப முடியல இதுல எங்கே போய் நாங்க மந்திரி சபையில் இடம்பெறுவது...


உங்கள் கட்சியில் அடுத்த தலைவர் யார்?


பதில்: காமராஜர்.... சாரி ....அதே சொல்லி சொல்லி பழக்கமா போச்சுல அதான்
கண்டிப்பா எங்க கட்சி உறுப்பினர்தான் அடுத்த தலைவர்....போதுமா...


உங்கள் பதவி இன்னும் எத்துனை வருடம்?


பதில்: என்னது நான்தான் இப்ப கட்சில தலைவரா? மறந்தே போச்சே..


உங்கள் அடுத்த இலக்கு என்ன?


பதில்: எம் பி யாக இல்லாததுனால டெல்லிக்கு இனிமே ஒ சீ டிக்கெட்ல போக முடியாதுல ...அதுனால ஒ சி ல போறதுக்கு ஐடியா பண்ணனும்......


உங்கள் அன்னையின் பெயர் என்ன?


பதில்: எனக்கு சோனியா காந்தி அன்னையை தவிர வேற எந்த அன்னையின் பெயரும் தெரியாது....


காங்கிரஸின் கொள்கை என்ன ?
பதில்: சோனியா காந்தி ,ராகுல் காந்தி ஆகியோரிடம் கேட்டு கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன்....இப்ப என்னைய விட்டுடுங்க...

கரன்சியில் கிறுக்கும் காட்டுவாசிகள்.....


கரன்சி நோட்டில் கிறுக்கும் கிறுக்கர்கள் நம் நாட்டில் தான் உண்டு.....


கரன்சி நோட்டில் காதலை எழுதுவது, நட்பை பற்றி எழுதுவது, கெட்ட வாரத்தைகளை எழுதுவது என அநாகரிகமாக பணத்தை இங்குதான் பயன் படுத்துகின்றனர்.....அட கரன்சி நோட்டில் எழுதும் காட்டுவாசிகலே உங்களுக்கு வேறு பேப்பரா கிடைக்கவில்லை கிறுக்குவதற்கு?


நூறு ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் தயவு செய்து அடுத்த பக்கம் திருப்பி பார்க்காதீர்கள் என எழுதி இருந்தது.....நானும் விட்டு தொலைந்து இருக்கலாம்.....ஆனால் திருப்பி பார்த்தேன்....அச்சில் எழுத முடியாத கெட்ட வார்த்தைகள் அதில் இருந்தது.....ஏண்டா அதை பார்த்தோம் என ஆகிப்போனது.....


நான் மலேசியாவில் நாணயம் மாற்றும் கடையில் வேலை பார்க்கும்போது நம் நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த மலேசிய நாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய நாட்டு கரன்சிகளை மாற்றுவதற்காக கொண்டு வருவார்கள்.....எல்லா கரன்சிகளிலும் ஏதாவது கிறுக்கி இருக்கும்.....அவர்கள் கேட்பார்கள் இப்படி கிறுக்கி இருக்கிறதே இது எப்படி உங்கள் நாட்டில் செல்லுகிறது....என்று....


நான் ஹி ஹி என்று இளித்துக்கொண்டே சமாளிப்பேன்.....எங்கள் நாட்டில் எல்லாமே செல்லும் உண்மையும், நேர்மையும் தவிர என்று மனதிற்குள் எண்ணி கொள்வேன்.....


கரன்சியில் எழுதும் காட்டுவாசிகள் என்று திருந்துவார்கள்?

19 டிசம்பர் 2010

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...


சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.


படித்ததை பகிர்ந்துள்ளேன்.....

18 டிசம்பர் 2010

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே..........


வலைப்பதிவு நண்பர்களை பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை......யோசித்து எழுதும் பல பதிவுகள் ஹிட் அடிக்காமல் போகின்றன.....ஒருவேளை நான்தான் நம்ம யோசித்து எழுதுகிறோம் இது கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என கற்பனை பண்ணுகிறேனா என்று தெரியவில்லை.....

ஆனால் சில சமயம் போகிற போக்கில எழுதுகிற ( அதாங்க கண்டபடி எழுதுறது) ஹிட் அடித்து விடுகிறது.....அதுவும் தமிழ் மணத்தில் ஹிட் ஆனால் தமிழ் டென்னில் மண்டைய போட்டுவிடுகிறது..... தமிழ் டென்னில் ஹிட் ஆனால் தமிழ்மணத்தில் பியுஸ் போகி விடுகிறது....தமிழ்மணத்தில் சில வாரங்களாக இருபது முன்னணி பதிவுகளை அறிவித்தாலும் அறிவித்தார்கள் அதிலிருந்து நமக்கு ஏழரை தான்....ஏதோ நொண்டி நொண்டி எப்போதாவது ஹிட் அடிக்கும் என்னுடைய பதிவுகள் தற்போது டெபாசிட் வாங்க கூட முடியவில்லை.....சில பதிவுகள் ஆறு ஓட்டுக்கள் வாங்கி ஒரு ஒட்டு கிடைக்காமல் அல்லது யாரும் ஓட்டளிக்காமல் பார்டர் பெயில் ஆகிவிட்டன.....சில நண்பர்கள் கருத்துக்கள் எழுதினால் ஒட்டு போடுவதில்லை.....ஓட்டளித்தால் கருத்து சொல்லுவதில்லை ....பல பேரு எதுவுமே பண்ணுவதில்லை.....அவ்வளவு தூரத்துக்கா நம்ம எழுத்து டெர்ரரா இருக்கு.....!!!!!!!!!ஏதோ ரெகுலர் கஸ்டமர் மாதிரி நம்ம ரெகுலர் விசிட்டர்கலான அண்ணன் ரஹீம் கசாலி , பிரபாகரன், ஜி, பாரத் பாரதி , சகோதரி ஆமினா ,ஐத்ருஸ் மற்றும் சில நண்பர்களினால் நம்ம வண்டி ஓடி கொண்டு இருக்கிறது.....நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் மற்றும் கருத்துரைகளே என்னை போன்றவர்களுக்கு பூஸ்ட் மாதிரி.....நான் யாருடைய வலைப்பதிவை படித்தாலும் முதலில் ஒட்டளித்து பின்பு கருத்துக்களை கொட்டிவிட்டுதான் வருவேன்....

நான் எழுதுவதில் குப்பைகள்,குறைகள் இருந்தாலும் சுட்டிகாட்டுங்கள் தயங்காமல்....மறுபடியும் உங்கள் ஓட்டுக்களையும், பின்னூட்டங்களையும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்....

17 டிசம்பர் 2010

சொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....


கருணாநிதி சொத்து கணக்கை வெளியிட்டதை தொடர்ந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதாவும் சொத்துகணக்கை வெளியுட்டுள்ளார்.....


அந்த அறிக்கை விபரம்வருமாறு......


ஜெயலலிதாவாகிய எனக்கு உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களை தமிழக மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எனது தலையாய கடமையாகும்.....


போயஸ் கார்டனில் உள்ள நான் வசிக்கும் இல்லம் எனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமானது ஆகும்......அதில் நான் வாடகை கொடுத்துதான் குடியிருக்கிறேன்....


கோடநாட்டில் உள்ள எஸ்டேட்டை அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து வசூல் பண்ணி ஓய்வு இல்லாமல் உழைக்கும் எனக்கு பரிசாக அளித்தனர் ..ஆனால் அதையும் நான் ஏற்றுகொள்ளாமல் ஏழை மக்களுக்கு எழுதி வைத்துள்ளேன்..... எனக்கு பின் அது ஏழை மக்களுக்கே சேரும்.........


நான் முதல் அமைச்சராக இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதை அனைவரும் அறிவீர்கள்.....அந்த வகையில் எனது வங்கி கணக்கில் ஒன்பது ஆயிரத்து ஒன்பது ரூபாய் உள்ளது.....


எனக்கு என்று சொந்தமாக ஒரு ஸ்கூட்டி பெப் கூட இல்லை.....நான் அணிந்து கொள்ள ஐந்து செட் உடைகள் மட்டுமே உள்ளன.....


சொந்தமாக செருப்புகூட இல்லாமல் சசிகலாவிடமிருந்துதான் வாங்கி போட்டு கொள்வேன்.....

எனக்கு என்று தனியாக செல்போன் இல்லை...

ஜெயா டிவி கூட ஜெயமாலினி என்பவருக்கு சொந்தமானது....அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.....


இப்போது எனது கையில் இருக்கும் பணம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது ரூபாய் மட்டுமே.....


இதுதான் எனது சொத்து கணக்கு.....இது எல்லா வற்றையும் விட தமிழக மக்களின் அன்பே எனக்கு மிகப்பெரிய சொத்தாகும்....


அண்ணா நாமம் வாழ்க.....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....


நன்றி வணக்கம்.....


சத்தியமா இது உண்மைதானுங்கோ.....

மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...


ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக இரட்டை ஆஸ்கர் வென்று சாதனைப் படைத்த நம்ம ஊர் இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர், ஆஸ்கார் வென்ற முதல் தமிழன் ஏ.ஆர்.ரகுமான். தனது அபார இசைத் திறமையால் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து வரும் சுத்தத் தமிழர். கடந்த 2009-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்'' என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

44 வயதான ரஹ்மான் "127 மணி நேரம்'' என்ற ஆங்கில சினிமாவில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காகப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பாடல் ஏற்கெனவே உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை விற்பன்னர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

ரஹ்மானுக்கு இந்த ஆண்டும் ஆஸ்கார் பரிசு கிடைக்குமா? மீண்டும் ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்க வைக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பது ஜனவரி 6-ந்தேதி தெரிந்துவிடும்..

இதே படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ஏற்கெனவே "கோல்டன் குளோப்'' விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் இயக்கிய அதே டேனி பாய்லின் புதிய படம்தான் இந்த 127 ஹவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டிலும் இதேபோல, கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தடுத்து பரிந்துரைக்கப்பட்ட ரஹ்மான், அந்த இரண்டு விருது விழாவிலும் ஹீரோவாக ஜொலித்தார்.

இந்த ஆண்டும் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது இசை ரசிகர்கள் மனக்கிடக்கையாக உள்ளது!

16 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)


நல்லி எலும்பை கடித்து துப்புவதில் இவருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்........


ரம்பாவையே தோற்கடிக்கும் அளவிற்கு தொடை தட்டி நடித்து புகழ் பெற்றவர்.......


சண்டைகாட்சியில் வில்லன்களை எலும்புகளை கடிப்பதுபோலவே அடித்து நொறுக்குவார்......


மீசையை கூட ஆட்டுகிடா மீசைபோல வைத்து நடிப்பார் நம்ம ஆளு......


ராஜ்கிரண் என்று சொன்னால் கருவில் இருக்கும் ஆடு கூட அலறும்.....


என் ராசாவின் மனசிலே என்ற வெள்ளிவிழா படத்தின் மூலம் அறிமுகம்....

ஆனால் அதற்க்கு முன்பே சில படங்களை தயாரித்தும்,கவுரவ வேடத்தில் நடித்தும் உள்ளார்......வடிவேலுவை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.....


அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து உச்சத்திற்கு சென்றார்.....இவரது கால்சீட்டுக்கு வரிசையில் நின்றனர் பல தயாரிப்பாளர்கள்......தக்காளி தொலைச்சு புடுவேன் என்பது இவரது புகழ் பெற்ற வசனம்....இந்த வசனம் இன்று வரை டிவியில் மிமிக்ரி பண்ணுபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.....


குடும்பபாங்கான இவரது படம் மக்களை வெகுவாக கவர்ந்தது......அப்படியே நடித்து இருக்கலாம்..... ஆசை யாரை விட்டது.....

அதுவரை தொடை தெரியும்வரை வேட்டியை மடித்துக்கொண்டு நடித்தவர் பாசமுள்ள பாண்டியரே என்னும் படத்தில் பேன்ட் ஷர்ட் போட்டு நடிக்க ஆரம்பித்தார் ....அன்று பிடித்த சனி இன்று வரை விடவே இல்லை....


எவ்வளவு சீக்கிரம் மேலே போனாரோ அதவிட சீக்கிரமாக கீழே இறங்கினார்....அவரது மணவாழ்க்கையும் சரியாக அமையாமல் முதல் மனைவியை பிரிந்து வேறு திருமணம் செய்துள்ளார்.....அவரது கஷ்டகாலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு அவரை திரும்பிகூட பார்க்கவில்லை ......


தயாரித்து நடித்த படங்கள் தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியதால் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்......

ஹீரோவாக உச்சத்தில் இருந்து சில வருடங்களிலேயே மார்கெட் இழந்து குணசித்திர வேடங்களில் நடித்தவர் எனக்கு தெரிந்து இவராகத்தான் இருக்க முடியும்......

கலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது!! - விஜய்யின் தந்தை


எனக்கு தலைவர்களைத்தான் தெரியும்... அவர்களின் கட்சிகளைத் தெரியாது, என்று நம்ம டாக்டரு விஜய்யின் தந்தை கூறியுள்ளார்......( அப்படின்னா விஜய் கட்சி ஆரம்பித்தால் அவர் கட்சியும் உங்களுக்கு தெரியாதா?)

அடுத்து தான் இயக்கும் 'சட்டப்படி குற்றம்' படத்துக்காக ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களைப் பார்வையிட வந்திருந்தார் எஸ்ஏசி.

பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "1982ல் வெளியாகி வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி சட்டப்படி குற்றம் என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌ற்கான லொகேஷன் பார்க்கத்தான் வந்தேன்.

நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை.

எனக்கு மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது... அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்.( சும்மா கதை விடாதிங்க சார்.....அந்த அம்மா உங்களைலாம் மதிக்குமா?)


அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது", என்றார். (அம்மாடி நீங்க பிரச்சாரம் பண்ணி அதை நாங்க கேட்கணுமா....!)

தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்...", என்றார்.( ஆமா ஆமா நேரடி அரசியலுக்கு வராம குறுக்குவழியில வரப்போறாருன்னு சொல்ல வராரு )

15 டிசம்பர் 2010

காலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்...அரசு தேடுதல் வேட்டை...


சென்னையில் கு‌ப்பைக‌ளி‌ல் இரு‌ந்து பொறு‌க்க‌ப்படு‌ம் காலாவதியான மருந்து ம‌ற்று‌ம் மாத்திரைகளை, பு‌திதுபோ‌ல் மா‌ற்‌றி விற்பனை செய்த போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காலாவ‌தியான மரு‌ந்துகளை ‌வி‌ற்பனை செ‌ய்து, ம‌க்களை அ‌தி‌ர்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்‌கி‌யிரு‌க்கு‌ம் இ‌ந்த தொ‌ழி‌ற்சாலையை ந‌ட‌த்‌தி வ‌ந்த 7 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.


இது பழைய செய்திதான்.....சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது....


இதில் சம்பந்தப்பட்ட மீனாட்சி சுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....


அதன் பிறகு தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது......போலி மருந்துகளை விற்பனை செய்தவர்கள் அதை வீதிகளில் அள்ளி கொட்டினர்.....சில பேர் மாட்டிகொண்டனர்....நாமும் இனிமேல் இதுபோன்று காலாவதியான மருந்துகளை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள் என நினைத்து நிம்மதியாக இருக்கிறோம்....


ஆனால்


இப்போது அம்மாதிரியான காலாவதி மருந்துகள் புழக்கத்தில் இல்லை என அரசு அறுதியிட்டு உறுதியாக கூறமுடியுமா?


முடியாது....சில சம்பவங்கள் நடந்தால்தான் அதற்க்கு தீர்வு கிடைக்கின்றன.....

ஆனால் அதுவும் நிரந்தர தீர்வு இல்லை......

இப்போது அதிகாரிகள் ரெய்டு நடத்தினாலும் பெரும்பாலான மருந்துக்கடைகளில் காலாவதியான மருத்துகளை வண்டி வண்டியாக அள்ளலாம்......


காயம் ஏற்பட்டு மருந்து போடுவதற்கு பதிலாக காயமே ஏற்படமால் இருப்பதுதானே புத்திசாலித்தனம்....


மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற விசயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.....

வாரம்தோறும், அல்லது குறைந்தபட்சம் மாதம் தோறும் ஒருதடவையாவது அதிகாரிகள் மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினால்தான் இதற்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.....


ஒருவேளை காலாவதியான மருந்து சாப்பிட்டு நான்கு பேர் மரணம் என்று சம்பவங்கள் நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமோ?
அரசை விடுங்கள் ...நாமும் இதுபோல சம்பவங்கள் நடந்தால்தானே விழிப்புடன் அதை திரும்பி பாப்போம்....!!!!!! கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல.....

சூர்யாவா.....விக்ரமா?


நடிப்பு என்று வந்துவிட்டால் கோலிவுட்டில் இரண்டு மாஸ் ஹீரோக்களுக்கு இடையே வெளியே தெரியாத கடும்போட்டி எப்போதுமே உண்டு.

அந்த இரண்டுபேர் சியான் விக்ரம்- சூரியாவுதான். பிதாமகன் படத்தில் விக்ரம் வசனங்களே இல்லாமல் கலக்குவார் என்றால், சூரியா வசனங்களை உச்சரித்து நடித்த வகையில் சத்திவேல் பாத்திரமாகவே மாறியிருந்தார். அந்தப்படத்துக்குப் பிறகு யார் கண் பட்டதோ இப்போது அவர்கள் நட்பில் விரிசல்! ஆனால் தங்களுக்குள் இருக்கும் நடிப்பு போட்டியை மட்டும் அவர்கள் விடத்தயாராக இல்லை.


சூரியாவின் இப்போதைய இலக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேசிய விருது வாங்கியே தீருவது என்பதுதான். இதற்காக மிஷ்கின், சுப்ரமணியபுரம் சசி, அமீர் ஆகியோரிடம் அதுபோன்ற ஃபெர்பாமென்ஸ் ஓரியண்டெட் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறாராம் சூரியா.

சூரியாவின் இந்த கேரக்டர் ஹன்டிங் ஒருபக்கம் இருக்க, சூரியா. ஏற்கும் கேரக்டருக்கு கொஞ்சமும் சளைக்காத கேரக்டர்களை தேடி நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் விக்ரம்.


7-ஆம் அறிவில் சூரியா ஒரு ஹேண்டிஹேப்டு மனிதராக இருந்து தனது தொடர் முயற்சிகளால் சக்கஸில் சாதனைகள் செய்ய்யும் ஒரு இளைஞராக நடிக்கிறாராம். சூரியாவின் இந்தக் கேரக்டருக்கு ஃபேர்பாமென்ஸ் ஓரியண்டெட் ஆக கொஞ்சம் குறைவில்லாத ஒரு கேரக்டரை சூரியா தேடிய போதுதான் தெய்வமகன் படத்தின் கேரக்க்டர் கிடைக்க, அதை பட்டென்று பிடித்துக் கொண்டு விட்டார் விக்ரம்.

இப்போது 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க சூரியா சம்மதித்துவிட்டதால் சூரியாவின் இந்தக் கேரக்டருகு பதில் சொல்கிறமாதிரி விக்ரம் ஒரு கேரக்டரை தேடிப்பிடிப்பார் என்று என்பது மட்டும் நிச்சயம்.

14 டிசம்பர் 2010

இவர்கள் முதல்வர் ஆனால்........

இவர்கள் முதல்வர் ஆனால் ( பயப்படாதிங்க...கற்பனையில்தான்)போடும் முதல் ஆணை என்னவாக இருக்கும்? அவர்களிடமே கேட்போமா?????விஜயகாந்த்: தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் இன்னும் ஒரு வருடத்திற்கு விருத்தகிரி படம்தான் ஓடவேண்டும் என்று ஆணையிடுவேன்.....ராமதாஸ்: டாஸ்மாக்கை ஒழித்துவிட்டு வீட்டுக்கு வீடு கள் ஒரு பானை தினமும் இலவசமாக கொடுக்கப்படும்......தயாநிதிமாறன்: சன் டிவி யை தவிர தமிழ்நாட்டில் வேற எந்த டிவியிலும் என்னைக்காட்டுவதில்லை ...இது மாதிரி நடுநிலை தவறிய டிவி சேனல்களைதடை செய்து உத்தரவிடுவேன்......சரத்குமார்: என்னை மாதிரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வராக இருக்க முடியும் என சட்ட திருத்தும் பண்ணி ஆணையிடுவேன்.....தங்கபாலு: என்னது நான் முதல்வரா? கொஞ்ச நேரம் இருங்க அன்னை சோனியாவிடம் கேட்டு சொல்கிறேன்....வைகோ: தமிழ் நாட்டில் எங்கள் கட்சிக்கு மட்டும்தான் தனியாக சேனல் இல்லை.....எனவே தமிழக மக்கள் எனது பேச்சை தினமும் கேட்கும் வகையில் அரசு சார்பிலே சேனல் ஆரம்பித்து அதற்க்கு வைகோ டிவி என பெயரிடுவேன்.....இளங்கோவன்: விடுதலைபுலிகளை வேரோடு சாய்த்த மாவீரன் ராஜபக்சேயை அழைத்து விருந்து கொடுத்து அரசு சார்பில் விருதும் கொடுப்பேன்.....டி ராஜேந்தர்: என் கட்சியை தவிர எல்லா கட்சியையும் தடை செய்துவிட்டு என் மகன் ஒழுக்கசீலன் சிம்புவை முதல்வராக அறிவித்து விட்டு நான் ஓய்வு பெறுவேன்.....ரஜினியை விடக்கூடாதுல....ரஜினி: தமிழ் நாடு மக்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று பாபா ஜீயை தரிசித்துவிட்டு வருவதற்கு இலவச பயண ஏற்பாடுகள் செய்து ஆணையிடுவேன்......கடைசியாக நானும்( ஹிஹிஹி)......தமிழ் நாட்டில் உள்ள அனைத்துகட்சிகளையும் தடை செய்துவிட்டு பீகாரோடு எங்கள் மாநிலத்தையும் சேர்த்து கவனியுங்கள் என்று நிதீஷ் குமாரிடம் ஆட்சியை கொடுப்பேன்......

கலைவாணரை நாமும் தெரிந்துகொள்வோம்......


நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.
காலத்தால் அழியாத கலைஞன் கலைவாணர்........

13 டிசம்பர் 2010

உடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....

தலைப்பை பார்த்தவுடன் தப்பாநினைக்காதிங்க....சொல்ல வருவது நல்லா விசயம்தானுங்கோ..... முத்தம் என்ற சொல்லே ஒரு கிக்குதான் பலபேருக்கு......அதுவும் இதழ் முத்தம் என்றால் சொல்லவே தேவை இல்லை.....
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே ..நீ சொல்ல வந்தத சொல்லுடான்னு நீங்க டென்சன் ஆவதற்கு முன்னாடி நான் முத்த மேட்டருக்கு வரேன்....

இதழோடு இதழ் சேர்ந்து முத்தமிடுவது நமக்கு ஆனந்தத்தை மட்டுமல்ல நன்மைகளையும் தருகிறது.....


இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது ஆண்,பெண் இருவரது உடலிலும் முப்பது வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது......


பதினைந்து நிமிடம் தொடர்ந்து கொடுக்கும் இதழ் முத்தத்தால் முப்பது கலோரிகள் குறைகிறது......இது அரை மணிநேரம் நடைபயிற்சி செய்தால் குறையும் கலோரியின் அளவுக்கு சமமாகும்......


முத்தம் கொடுக்கும் நேரத்தில் வாயில் ஊரும் உமிழ் நீரில் கூட நோய்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் இருக்கிறது....இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுகிறது...

இந்த முத்தம் நமது முகம்,தாடை,கழுத்து,கன்னம் போன்ற இடங்களில் உள்ள தசைகள் திடமாக இருக்க உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது......கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு......


( இந்த முத்த குறிப்புகள் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே....)


அதனால்தான் கமல் எல்லா படத்திலும் முத்தகாட்சி வைக்கிறாரோ?...

12 டிசம்பர் 2010

உங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்?


ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை ஒருவர் மட்டும் கொள்ளை அடித்து விட முடியுமா? என கடித நிதி கருணாநிதி சொல்லி இருக்கிறார்......

நியாயம்தான்.....
அதைத்தானே மக்களும் சொல்கிறார்கள்......பாவம் ராசா அவர் இவ்வளவு பணத்தை எடுத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்?

அதனால்தான் கருணாநிதி குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாககொள்ளை அடித்து இருக்கிறார்.....

ராசா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்க படும் வரை நாங்கள் அவரை கைவிடமாட்டோம் என கருணாநிதி சொல்லி இருக்கிறாரே.....!!!! எனக்கு தெரிந்து நம் நாட்டில் எந்த ஊழல் குற்றசாட்டாவதுநிரூபிக்க பட்டு இருக்கிறதா?????????


இந்த திருடர்கள் ஒருபக்கம் இருக்க......


என்னமோ தான் மட்டும் ஒழுக்கசீலர் போல ,ஊழலே செய்யாத உத்தமர் போல

ராசாவை கைது செய்ய வேண்டும் என கத்தி கொண்டு இருக்கிறார் மாஜி நடிகை ஜெயலலிதா.......


மாஜி நடிகை ஆட்சியில் நடக்காத ஊழலா?சுடுகாடு கொட்டகையில் கூட ஊழல் நடந்ததே......


கருணாநிதி முகமூடி கொள்ளைக்காரன் என்றால் ஜெயலலிதா வழிப்பறி கொள்ளைக்காரன்....இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.....


கருணாநிதியை பற்றியோ, அவரது அரசை பற்றியோ ஜெயலிதா குறைகூறினால் உங்கள் ஆட்சியில் இதுபோல நடக்கவில்லையா என திருப்பி கேள்வி கேட்கிறார் கருணாநிதி......இவர் அவரை திட்ட, அவர் இவரை திட்ட...வாட் நான்சென்ஸ் மக்களே?

எது எப்படி இருந்தா நமக்கு என்ன...

விடிஞ்சா பேப்பர் படிச்சோமா, ஆபீஸ் போனோமா, வீக் எண்ட்ல சினிமா பார்த்தோமா.....டிவில மானாட மயிலாட பார்த்தோமா....

தேர்தல் வந்தா இரண்டு திருடர்களில் யாரவது ஒரு திருடனை ஜெயிக்க வச்சோமா....அது போதும் நமக்கு.........

கண்ணிற்காக 20 – 20 – 20


கணினித் தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும் மென்பொருள் நெறிஞர்கள், இதழியலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பதிவுலக நண்பர்கள் ஆகியோருக்குத் தங்கள் கண்ணைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்காது. அந்தக் கவலைக்கு விடையளிக்க இந்த எளிய பயிற்சியைச் செய்யுங்கள்.


பயிற்சி 1

20 நிமிட நேரம் தொடர்ந்து கணினியைப் பார்த்து பணி செய்தீர்களா? ஒரு சிறிய ஓய்வெளி தாருங்கள். கணினியில் இருந்து உங்கள் பார்வைச் சற்றே திருப்பி, உங்களிடமிருந்து 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பாருங்கள். அவ்வாறு பார்ப்பதன் மூலம் பார்வையின் தூர நிலைப்பு மாறுவதால் கண்ணிற்கு ஒரு மாற்றம் கிடைக்கிறது. களைப்புற்ற கண்களுக்கும் இது நல்ல மாற்றாகும்.

பயிற்சி 2

கண்களை கண்ணிமைகளால் தொடர்ந்து வேகமாக மூடி மூடித் திறவுங்கள். கண்ணில் ஈரம் சுரக்கும். மிக நுன்னிய தூசுகள் கண் பாவைகளில் படிந்திருந்தால் அவைகள் அந்த ஈரத்தில் சிக்கி ஓரத்திற்கு வந்துவிடும்.

பயிற்சி 3

20 நிமிட நேர தொடர்ந்த பணிக்குப் பிறகு உங்கள் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து, ஒரு 20 அடி நடந்துவிட்டு வாருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள் விலகும், இரத்த ஓட்டம் முழுமை பெறும்.

இதையும் தாண்டி...

மிக அதிகமான நேரம் கணினியைப் பார்த்தே பணி செய்வோர், வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் இயற்கையான சூழலை கண்ணால் பார்த்துக் களியுங்கள்.

இந்த வசதி உங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால், உங்கள் இல்லத்தில் ஒரு சில பூச்செடிகளை வைத்து அவைகள் வளரும்போது அவற்றைப் பார்த்து ரசியுங்கள்.

வெட்ட வெளியில் இரவு உணவிற்குப் பின்னரோ அல்லது காலைக் கடன்களை முடித்த பின்னரோ வேகமாக நடந்து பயிற்சி செய்யுங்கள். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று நட்சத்திரங்களை பார்த்து ரசியுங்கள்.

மனதில் இருந்து கண் வரை எல்லாம் ஒற்றை லயிப்பில் ஈடுபட முயற்சியுங்கள்.