10 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள் ( ஆறு)


உங்கள் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி தருகிறேன்னு ரோட்டுல போற குடுகுடுப்பைகாரன் சொன்னால் கூட அவரோடும் கூட்டணி வைப்பார் நம்ம ஆளு.....


நேரத்துக்கு நேரம் ,நாளுக்கு நாள் மாறுவதில் இவரோடு பச்சோந்தி போட்டி போட்டாலும் தோற்று விடும்.....


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிற விதியை மாற்றி ரோட்டுக்கு ரோடு மரம் வெட்டி போட்டு கட்சியை வளர்த்தவர்......


வேற யாரு.....நம்ம டாக்டரு அய்யாதான்.....


வன்னியர் சங்கம் என்ற அமைப்பை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றும்போது நானோ, என் குடும்ப உறுப்பினரோ எந்த பதவியிலும் அமர மாட்டோம் என சத்தியம் செய்தவர் நம்ம ராமதாஸ் .....மத்திய மந்திரியாக இருந்த டாக்டர் அன்புமணி யார் குடும்பம் என எனக்கு விளங்கவில்லை.......


தமிழ்நாட்டில் சாதிவெறியை அடிப்படையாக வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர் ராமதாஸ்.....சாதிவெறியை வன்னிய வாலிபர்களிடம் உண்டு பண்ணி அதனாலே வெற்றி பெற்றவர்.....


ஆரம்பத்தில் கூட்டணியில் யாரும் சேர்க்காததால் அனாதையாக இருந்த ராமதாஸ் ..பின்பு திமுக ,அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தனது கட்சிக்கு பதவிகளை பெற்றார்.....மத்திய மந்திரிசபையிலும் தனது மகனை அமைச்சராக்கி அழகு பார்த்தார்......


பாபா படம் வெளிவந்த சமயம் , ரஜினி மீது கொண்ட பகையினால் அந்த படத்தின் பெட்டிகளை தூக்கிக்கொண்டு ஓடி வடமாவட்டங்களில் அந்த படத்தை ஓட விடாமல் செய்தனர் அவர் கட்சியின் தொண்டர்கள்.....அந்த அளவிற்கு வன்னிய சமுதாயத்தில் செல்வாக்குடன் விளங்கினார்......


ஆனால் அணி விட்டு அணி மாறி தனது நம்பகதன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கினார்......கடந்த இரண்டாயிரத்து ஒன்று தேர்தலில் ஜெயலிதாவுடன் இருந்தவர், இரண்டாயிரத்து ஆறு தேர்தலில் கருணாநிதியுடன் சேர்ந்தார்.....இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து ஏழு தொகுதிகளில் போட்டியிட்டார்.....

ஏழு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தார்.....ஜெயலலிதாவும் போயிட்டு வாங்க பச்சோந்தியே என வெளியே அனுப்பி விட்டார் ...தற்போது யாருடன் சேர்வது என தெரியாமல் முடி இல்லாத தனது வழுக்கை மண்டையை தடவி கொண்டு இருக்கிறார்.....

வரும் சட்ட மன்ற தேர்தலில் இரண்டு கழகங்களும் இவரை கழற்றி விட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமாட்டார் இந்த பச்சோந்தி.....


தமிழ்நாட்டின் சாபக்கேடு ராமதாஸ் என்று கூறினால் அது மிகையல்ல....
4 கருத்துகள்:

 1. ராமதாஸ் பத்தி சொன்னதுலாம் அருமை

  சூப்பர்

  பதிலளிநீக்கு
 2. கலாய்ப்பு தொடர்கிறது.
  நடக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 3. காணாமல் போனவங்க லிஸ்டுல ராமதாசுன்னு ஒருத்தரை பத்தி போட்டுறிக்கியே...யாருப்பா அது ராமதாஸ்....

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....