30 டிசம்பர் 2010

2010 இன் டாப் 10 விருதுகள்....


சிறந்த காமெடியன் விருது: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல தனது சொத்துகணக்கை வாலன்டியராகவெளியிட்டு எல்லாருக்கும் சிரிப்பை வரவழைத்த கருணாநிதிக்கு.......சிறந்த மாட்டிகொண்டு முழிக்கும் விருது: ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டு ,மந்திரி பதவியை இழந்து பரிதாபமாக நிற்கும் ராசாவிற்க்கு.....சிறந்த அயோக்கியன் விருது: விக்கிலீக்சினால் தோலுரித்து தனது சுயரூபத்தை உலகத்துக்கு காட்டிய அமெரிக்காவுக்கு.....


சிறந்த தூங்கி எழுந்த விருது: கொடநாட்டில் தூங்கி கொண்டு இருந்துவிட்டு திடீரென தொடர் கூட்டங்கள் நடத்தி முழித்து கொண்ட ஜெயலலிதாவுக்கு.....


சிறந்த தொலைபேசி உரையாடல் விருது: கட்சி விசயங்களையும், தங்களது குடும்ப சண்டைகளையும், பதவி விசயங்களையும் பற்றி எக்குதப்பாக பேசி சிக்கிகொண்ட கனிமொழி, ராசாத்தி அம்மாள் ,பூங்கோதை மற்றும் ராசா ஆகியோருக்கு.....சிறந்த சண்டை மாஸ்டர் விருது: நிறைய படங்களில் காமெடி வேடங்களில் ஒன்றாக நடித்துவிட்டு பிறகு மாறி மாறி புகார் குடுத்து சண்டை போட்ட வடிவேலுவுக்கும், சிங்க முத்துவுக்கும்.....சிறந்த ஓடி ஒளிந்தவர் விருது: ஐபிஎல் முறைகேடுகளில் மாட்டிகொண்டு இப்போது லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடிக்கு.....சிறந்த குப்புற விழுந்தவர்கள் விருது: பீகாரில் தனியாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கும், லாலு பிரசாத் யாதவுக்கும்......சிறந்த கையும் களவுமாக பிடிபட்ட விருது: ஆன்மீகத்தின் பெயரில் காம களியாட்டங்கள் நடத்தி ,கன்றாவியான வீடியோ பதிவில் சிக்கி கைதான நித்யானந்தாவுக்கு..... .......சிறந்த உம்மனாமூஞ்சி விருது : பொது இடங்கள், மற்றும் பொது நிகழ்சிகளில் எப்போதுமே சிரிக்காமல் உம்முன்னு இருக்கும் டாக்டரு விஜய்க்கு.....


10 கருத்துகள்:

 1. >>>சிறந்த உம்மனாமூஞ்சி விருது : பொது இடங்கள், மற்றும் பொது நிகழ்சிகளில் எப்போதுமே சிரிக்காமல் உம்முன்னு இருக்கும் டாக்டரு விஜய்க்கு.....

  ha ha ha

  பதிலளிநீக்கு
 2. வரே வாவ்

  அருமை அற்புதம்

  பதிலளிநீக்கு
 3. அருமையான விருதுகள் ...நண்பா
  விருது பெற்றவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. இதேமாதிரி பதிவர்களுக்கும் விருது கொடுக்கலாம்ல்ல..
  பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
  நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

  Wish You Happy New Year

  http://sakthistudycentre.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. நல்ல விருதுகள்...

  போய் சேர வேண்இய இடத்துக்கு சரியா சேர்ந்துருக்கு

  பதிலளிநீக்கு
 6. 2010-in tap10 copy from my friend post

  பதிலளிநீக்கு
 7. ஹலோ பெயரில்லா பிச்சை அவர்களே.....இது என்னுடைய சொந்த பதிவு.....நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நிருபியிங்கள்...அதை விட்டு விட்டு பெயரை எழுத கூட வக்கில்லாமல் கருத்து சொல்ல வந்துட்டாரு....உனக்கு வெட்கமா இல்ல....அறிவு இல்ல....மானம் கெட்டவனே.....

  பதிலளிநீக்கு
 8. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பர்களே.....( பெயரில்லா பிச்சை தவிர)

  பதிலளிநீக்கு
 9. உங்களுடைய பழைய பதிவுகள் ஒன்றை வேறொரு தளத்தில் பிரசுரித்திருக்கிறார்கள்... அதுபற்றி உங்களுக்கு தெரியுமா...? பார்க்கவும்...

  ajith-vijay.blogspot.com

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....