27 டிசம்பர் 2010

நடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....


நானும் சதமடித்து விட்டேன்....நான் எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் கசாலி....என்னை ஊக்கப்படுத்தி ,தேவையான டிப்ஸ்களை வழங்கிய அண்ணன் கசாலிக்குஎனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....


நான் ஒன்னும் பெருசாக சாதிக்கவில்லைதான்......ஆனாலும் ஆயிரக்கணக்கான பதிவர்களில் நானும் ஒருவன் என்பதே பெரிய விஷயம்......அந்த வகையில் என்னை ஒரு பதிவராக மதித்து என்னை பின்தொடர்ந்த
நண்பர்களுக்கும், எனக்கு ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் பிலோசபிபிரபாகரன், பாலா, சகோதரி ஆமினா, ஜி , பாரத் பாரதி, ஐத்ருஸ், விக்கி உலகம், ஸ்பீட் மாஸ்டர், மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....


பொதுவாக நூறு என்றாலே அது ஸ்பெஷல் தான்.....அந்த வகையில் நம்ம நடிகர்களின் நூறாவது படம் அவர்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்....ஆனால் அப்படி ஆர்ப்பாட்டமாக வெளிவந்த படங்களின் ரிசல்ட்?


நம்ம ரஜினியின் நூறாவது படம் ராகவேந்திரா.....

இந்த படம் ரஜினியின் மற்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம்....

ஆனால் ரஜினி ரசிகர்களை இந்த படம் கவரவில்லை.....அதிரடியாகவும், ஸ்டைலாகவும் ரஜினியை பார்த்து பழக்கப்பட்ட அவரது ரசிகர்களுக்கு ராகவேந்திரா வேடம் பெரிதாக கவராததே இப்படத்தின் தோல்விக்கு காரணம்.....அடுத்து கமல்.....

இவரின் நூறாவது படம் ராஜ பார்வை.....கண் பார்வை அற்றவராக இதில் நடித்து இருந்தார் கமல்....பாடல்களும் சூப்பர்.....கமலின் நடிப்பும் சூப்பர்.....ஆனாலும் படம் ஓடவில்லை.....


சத்யராஜின் நூறாவது படம் வாத்தியார் வீட்டு பிள்ளை.....இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.....


அடுத்து பிரபு.....இவரின் நூறாவது படம் ராஜகுமாரன்......இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்தது......ஆனால் இந்த படமும் தோல்வி படமே.....


சரத்குமாரின் நூறாவது படம் தலைமகன்.....ஏக விளம்பரம் பண்ணி வெளிவந்த இந்த படமும் தோல்வி படமே.....


இது எல்லாவற்றிற்கும் விதி விளக்கு நம்ம கேப்டன் தான்......


இவரின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன்.....வீரப்பனை வேட்டையாடும் வீரனாக நம்ம கேப்டன் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது.....இந்த படத்தில் உள்ள பாட்டுக்களும் சூப்பர் ஹிட்.....படம் வெள்ளி விழா கண்டது....நடிகர்களின் நூறாவது படத்தில் சதமடித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டும்தான்... ஆனால் அதற்க்கு பிறகு வந்த அவரது படங்கள் தொடர்ச்சியாக அடி வாங்கியது வேறு கதை.....


இப்போது நம்ம டாக்குடரின் ஐம்பதாவது படமான சுறாவே சுண்டெலி ஆனது வேறு விஷயம்.....


இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்" இதுபோல என்னோட நூறாவது பதிவையும் பப்படம் ஆக்கி விடாதீர்கள் என்பதற்காகத்தான்......"


ஓகே பார்த்துவிட்டு இல்லை இல்லை படித்துவிட்டு என்னை பாஸ் ஆக்கிவிடுங்கள்.....நண்பர்களே.....


12 கருத்துகள்:

 1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 2. நானும் சதமடித்து விட்டேன்....நான் எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் அண்ணன் கசாலி....என்னை ஊக்கப்படுத்தி ,தேவையான டிப்ஸ்களை வழங்கிய அண்ணன் கசாலிக்குஎனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..... ////
  அட....எனக்கு எதுக்கு நன்றியெல்லாம்...ஏதோ எனக்கு தெரிந்த சில விஷயங்களை ஒரு சக பதிவரா உனக்கு சொன்னேன். அவ்வளவுதான். மற்றபடி உன் திறமையால்தான் நீ இந்தளவுக்கு வளர்ந்திருக்கே...

  பதிலளிநீக்கு
 3. பதிவு சூப்பர். நூறுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. நன்றி நண்பர்களே......நன்றி அண்ணா...இருந்தாலும் உங்களின் ஆதரவு எனக்கு பெரிதும் உதவியது......

  பதிலளிநீக்கு
 6. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா !

  சினிமாவை பற்றித்தான் உங்களது பதிவு பிரதி பலிக்கிறது கொஞ்சம் சமூக ரீதியாகவும் உங்கள் படகு துடுப்பானை திருப்பினிர்கள் என்றால் நாட்டிற்கும் இளைய சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்.

  இந்த நாசமா போன சினிமாக் காரர்களினால்தான் நாடு குட்டிச்சுவரா போயிக் கொண்டு இருக்கிறது இப்படி பட்ட பதிவை ஓரம் கட்டிவிட்டு வருங்கால சந்ததியனருக்கு உபயோகமான பதிவை தருவிர்கள் என எதிர் பார்க்கிறேன்.

  உங்களை சொல்லி குற்றமில்லை காரணம் சினிமாவைப் பத்தி எழுதினால்தான் கருத்தும் ஓட்டும் விழுகிறது அதை நானும் இன்ட்லியில்லும்,உலவு போன்ற தளங்களிலும் பார்க்க நேரிடுகிறது.

  அசினுக்கு கல்யாணம் நடந்தால் என்ன ? இல்லை கருமாதி நடந்தால் என்ன ?

  மற்றபடி உங்கள் தளம் சிறப்பாக இருக்கின்றது நல்ல பயனுள்ள பதிவும் இருக்கின்றது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி அந்நியன்......உங்களது கருத்தை ஏற்றுகொள்கிறேன்......உண்மையான கருத்தும் கூட.....

  பதிலளிநீக்கு
 8. நண்பா நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
  இதுவரைக்கும் பார்த்தது டிரைலர் தான் இனி சரவெடி கலக்கல் எதிர் பார்க்கின்றேன்

  பதிலளிநீக்கு
 9. நண்பா நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
  இதுவரைக்கும் பார்த்தது டிரைலர் தான் இனி சரவெடி கலக்கல் எதிர் பார்க்கின்றேன்

  பதிலளிநீக்கு
 10. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா !

  மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

  பதிலளிநீக்கு
 11. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. நன்றி நண்பர்களே....உங்களின் ஆதரவுதான் எனக்கு முக்கியம்....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....