21 டிசம்பர் 2010

சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா........

சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் ஆகும்போது விஜய்யும் சாதாரண நடிகர்தான்.....பின்பு பிரெண்ட்ஸ் படத்தில் சேர்ந்து நடிக்கும்போது விஜய் வளர்ந்துவிட்ட ஒரு ஸ்டார்.....ஆனால் சூர்யா அப்போதும் ஒரு வளரும் நடிகராகவே இருந்தார்.....ஆனால் இப்போது?தொடர்ந்து ஹிட் கொடுக்கும் சூர்யா எங்கே? தொடர்ந்து பிளாப் கொடுக்கும் டாக்டரு எங்கே?

ஓடுகிற குதிரைக்குதானே மதிப்பு......சினிமாவிலும் அதேதான்..........


படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் கோடம்பாக்கத்தில். அத்தனை அரசியல். இதற்கு விஜய் மட்டும் பலியாகாமல் இருப்பாரா!

நேற்று இரவு சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் அணி அறிவிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு.

விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. (கலாயிப்பு எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களிலும் நம்ம டாக்டருதான் முதலிடம்....)

முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா... அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று தெரியவில்லை......

ஆனாலும் நான் என்ன நினைக்கிறேன் என்றால் டாக்டரு விஜய்யின் பெயரையாவது மறக்காமல் சொன்னாரே சரத் ....அது போதாதா?

5 கருத்துகள்:

 1. //ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர்

  இந்த வரிகளுக்கு என் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ஓட்டுப்போடும் வயது இல்லாத ரசிகர்கள்தான் விஜய்க்கு அதிகம்.


  தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நன்றி...
  http://balapakkangal.blogspot.com/2010/12/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 2. ஸ்பெக்ரம் மேட்டரை அடுத்து விஜய் மேட்டர்தான் பப்புலர் போல.

  பதிலளிநீக்கு
 3. கருத்துக்கு நன்றி நண்பர்களே.....
  கண்டிப்பா எழுதுகிறேன் பாலா

  பதிலளிநீக்கு
 4. சூர்யா படம் பார்க்க எனக்கும் பிடிக்கும்
  சினிமா செய்தி வெளியிட்ட உங்களுக்கு
  என் நன்றி

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....