29 டிசம்பர் 2010

கமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி மூன்று)


சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மன்மதன் அம்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான அ‌ரிது அ‌ரிது டாப் 5க்குள் இடம்பிடிக்காதது தயா‌ரிப்பாளருக்கு சோகமான செய்தி.

5. விருதகி‌ரி

விஜயகாந்தின் விருதகி‌ரி இதுவரை சென்னையில் 44 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.33 லட்சங்கள். விஜயகாந்தின் மாஸுக்கு இது மிகக் குறைவான வசூல்.

4. நெல்லு

புதுமுகங்களின் நெல்லு சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 5.8 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. சுட்டி சாத்தான்

குழந்தைகளை குறி வைத்து வெளியான சுட்டி சாத்தானுக்கும் அதிக வரவேற்பு இல்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 6.4 லட்சங்களையே வசூலித்துள்ளது.

2. ஈசன்

சசிகுமா‌ரின் படம் என்பதால் ஈசனுக்கு ஓபனிங் அமோகம். முதல் பத்து தினங்களில் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது வசூல். சென்ற வார இறுதி மூன்று தின வசூல், 16.1 லட்சங்கள்.

1. மன்மதன் அம்பு

கமல் படம் எதிர்பார்த்ததைப் போலவே முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நான்கு தினங்களில் 94.36 லட்சங்கள் வசூலித்துள்ளது.

சன் டிவி எங்கள் காவலன்.....

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.


இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.


சரிந்தது சாம்ராஜ்யம்......

24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஷஸ் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை அது பெற்று இதை சாதித்தது.

எப்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அனல் பறக்குமோ அதேபோலத்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும். அதிலும் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எப்போதுமே இரு அணிகளுக்கும் கெளரவப் பிரச்சினையாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடர் என்று அழைக்கப்படுகிறது. இதை கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவே வென்று வந்தது. இதனால் இங்கிலாந்து அணி கடும் ஏமாற்றத்தில் இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அணி தனது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று விட்டது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றன.

இதில் இங்கிலாந்து 2 டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட்டை ஆஸ்திரேலியா வென்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது.

மெல்போர்ன் நகரில் 4வது போட்டி நடந்தது. இதில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் இன்று இங்கிலாந்து வென்றது. கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் டிரா செய்தாலே இங்கிலாந்துக்குப் போதும்.

6 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....