07 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)


சிரிப்பதற்கும் அழுவதற்கும் ,சண்டை போடுவதற்கும் ,டூயட் பாடி ஆடுவதற்கும் ஒரே வித முகபாவனைகளை மட்டும்தான் வெளிப்படுத்துவேன் என அடம்பிடித்து நடித்தவர் நம்ம ஆளு.......


எல்லா ஹீரோவும் அடைமொழி வைத்திருக்க இவர் மட்டும் ஒரு டீ தூள் கம்பெனியின் பெயரான டாப் ஸ்டாரை அடைமொழியாய் வைத்திருப்பவர்.....


இல்லாத மீசையை எடுத்து கொண்டு நடித்து, தமிழ் சினிமாவில் மீசை இல்லாமல் நடித்தவன் என்று பெருமை அடித்து அருமை இழந்தவர்.....வேற யாரு???


நம்ம டாப் ஸ்டார் !!!! பிரசாந்த் தான்......


ஒருபடத்தில் பெண் வேடத்தில் நடித்தார்.....உண்மையிலேயே அவர் பெண் வேடத்தில்தான் அழகாக இருந்தார்.....


வைகாசி பிறந்தாச்சு எனும் படத்தில் அறிமுகம்.....முதல் படமே வெற்றி படம்.....

அடுத்த வந்த செம்பருத்தி படமும் பெரும் வெற்றி பெற்றது.....அடுத்து அடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்....


அவ்வளவுதான்....அடுத்த இளம் சூப்பர் ஸ்டார் நான்தான் என கனவில் மிதக்க ஆரம்பித்தார்......


கல்லூரி வாசல் என்னும் படத்தில் சார்தான் ஹீரோ.....அஜித் செகண்ட் ஹீரோவாக நடித்தார்.....அந்த அளவுக்கு முன்னணியில் இருந்தார்.....


வருடத்துக்கு ஐந்து, எட்டு என அதிக படங்களில் நடித்த பெருமையையும் பெற்றார்.......

ஷங்கரின் மோதிரக்கை பட்டு ஜீன்ஸ் படத்திலும் நடித்தார்..அதுவும் மெகா ஹிட்.....


பிறகுதான் சார் மெகா ஊத்தல் படங்களாக குடுக்க ஆரம்பித்தார்.....ஒரே மாதிரியாக நடித்தால் மக்களும் எவ்வளவு நாள்தான் பொறுப்பார்கள்....படங்கள் குறைய ஆரம்பித்தன.....சொந்த வாழ்கையிலும் டாப் ஸ்டார் காமெடி ஸ்டார் ஆகி போனார்....


வந்தால் மகாலட்சுமி என அவர் மனைவியான கிரகலட்சுமையை பற்றி பெருமையாக பேட்டி எல்லாம் குடுத்தார்....ஆனால் அதற்க்கு பிறகுதான் அவருக்கு கிரகமே ஆரம்பித்தது......


ஏற்கனவே கல்யாணம் ஆனவரை மணந்து சின்ன பிள்ளை மிட்டாய்க்கு ஏமாந்த மாதிரி ஏமாந்து போனார்.....அவர் மனைவியின் முதல் கணவரும் ,நம்ம ஆளும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொன்ன கூத்துக்களும் நடந்தன......நீண்ட போராட்டத்துக்கு பின்பு ஒருவழியாக விவாகரத்தும் வாங்கிவிட்டார்.....


இப்போது அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மம்பட்டியான் எனும் படத்தில் நடித்து( நடிப்புக்கும் அவருக்கும் ரொம்ப தூரம்தான்....என்ன பண்றது..)வருகிறார்.....


பாப்போம் இனிமேலாவது டாப் ஸ்டார் !!!! பிரசாந்த் டாப்புக்கு வருகிறாரா என்று!!!!!
அடுத்து நம்ம லிஸ்டில் வருபவர் .....ஹே டண்டணக்கா ....ஹே டனக்குனக்கா......

3 கருத்துகள்:

  1. கோர்ட் கேஸுன்னு அலஞ்சதுக்கு பிறகு தான் இவருக்கு மவுசு போச்சுன்னு நெனைக்கிறேன்....

    நல்ல அறிமுகம் கொடுத்துருக்கீங்க

    பதிலளிநீக்கு
  2. அடுத்து நம்ம லிஸ்டில் வருபவர் .....ஹே டண்டணக்கா ....ஹே டனக்குனக்கா.//

    ஐயோ..பயமாயிருக்கே,,

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....