01 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள் ( ஒன்று)


அட வேற யாரும் இல்ல....நம்ம வைகோதான்.....

இவரை பற்றி மேலும் சொல்லனும்னா.......

இவர் மேடையில் அழுதுகொண்டும் பேசுவார்,பேசிக்கொண்டும் அழுவார்......


தன்னை தூக்கி பொடாவில் உள்ளே போட்ட மாஜி நடிகை ஜெயலலிதாவை சர்வாதிகாரி என்றும் சொல்லுவார்.....

பின்பு தமிழகத்தை காக்க வந்த ஜான்சி ராணி என்றும் சொல்லுவார்......


வளர்த்துவிட்ட கருணாநிதியை பாசமிகு அண்ணன் என்றும் சொல்லுவார்....

பின்பு தமிழின துரோகி என்றும் சொல்லுவார்.....


விடுதலைபுலிகளின் ஆதரவாளன் என்று கூறி கொள்ளும் இவர் ,விடுதலை புலிகளை வேரோடு சாய்க்க துடித்த மாஜி நடிகையோடு கூட்டணி வைப்பார்.....


போதுமா முன்னுரை.....


இனி விசயத்துக்கு வருவோம்.....

ஒரு காலத்தில் தி மு க வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் வைகோ.....

தனது பேச்சாற்றலால் தி மு க வில் கருணாநிதிக்கு பிறகு வைகோதான் என்ற நிலையை உருவாக்கியவர்....

தனது மகனுக்காக வைகோவை கட்சியை விட்டு தூக்கினார் கருணாநிதி....


தனது ஆதரவாளர்களுடன் ம தி மு க எனும் கட்சியை உருவாக்கினார் வைகோ....

பொது மக்களின் ஆதரவும் ஆரம்பத்தில் வைகோவிற்கு அபாரமாகவே இருந்தது.....

இதனால் தமிழகத்தில் வைகோ பெரிதாக சாதிக்கும் சக்தியாக உருவெடுப்பார் எனவே பலரும் நினைத்தனர்....

ஆனால் தொடர்ந்து வந்த பொது தேர்தல்களிலும் ,நாடாளுமன்ற தேர்தல்களிலும் எதிர்பார்த்த வெற்றியை அவர் பெறவில்லை....
இதற்கு கருணாநிதி , ஜெயலலிதா என இவர் கூட்டணி மாறி மாறி புகழ்ந்ததே காரணம்...


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவரே ஒரு புதுமுக வேட்பாளரிடம் தோற்கும் அளவிற்கு இமேஜ் சரிந்தது.....


இப்போது இவர் கட்சி இருக்கிறதா, இல்லையா என சி பி ஐ வைத்து தேடும் அளவுக்கு உள்ளது....


வைகோவும் மாஜி நடிகை ஜெயலிதாவின் கொள்கை பரப்பு செயலாளராக ( கொள்கைனா என்னங்க ) மாறி சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.....


அடுத்த காணாமல் போனவர்கள் லிஸ்ட் பற்றி பிறகு பாப்போம்.....

2 கருத்துகள்:

  1. பயங்கரமா இருக்கு..

    ஒரு நல்ல பேச்சாளராகவும்.உணர்வாளராகவும் மட்டும் வை.கோ வை எனக்கு ரொம்ப பிடிக்கும்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஹரிஸ்......
    அப்படிப்பட்ட வைகோ இப்படி போயிட்டாரே என ஒரு ஆதங்கம்தான்.....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....