23 டிசம்பர் 2010

மறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....

கக்கன்....காங்கிரஸ் கட்சி மறந்த பெயர் இது.....தனக்கு என சல்லிகாசு கூட சேர்க்காமல் வாழ்ந்த உன்னத மனிதர் கக்கன்.....ஆனால் இவரை தமிழக காங்கிரஸ் கட்சிகாரர்கள் எள்அளவுகூட மதிக்கவும் இல்லை......நினைவில் வைக்கவும் இல்லை.....

ஆனால் தமிழகம் வந்து இருக்கும் ராகுல் கக்கனுக்கு உரிய மரியாதையை செலுத்தினார்.....ஒரு வகையில் இதுவும் அரசியல் தான்....


தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி இந்த முறை தனது பயணத்தை தலித் சமுதாயத்தினரைக் குறி வைத்து மேற்கொண்டார்.

தான் கலந்து கொண்ட அனைத்து கூட்டங்களிலும் தலித்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மதுரையில் கலந்துரையாடலை முடித்துவிட்டு இரவு ஒன்பதரை மணியளவில் திடீரென கக்கன் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பினார். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில்தான் கக்கன் வாழ்ந்த வீடு உள்ளது. அங்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள கக்கின் சிலை, புகைப்படங்களைப் பார்வையிட்டார். சிலைக்கும் மாலை அணிவித்தார்.

அவரை ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, கக்கனின் தம்பி மகன் பாஸ்கரபூபதி, கிரா மக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் கக்கன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றார் ராகுல் காந்தி. அங்கு கக்கனின் இன்னொரு தம்பி மகனான வெள்ளைச்சாமி வசித்து வருகிறார். அவரை சந்தித்த ராகுல் காந்தி வீட்டுக்குள் சென்று தரையில் அமர்ந்து பேசினார். பின்னர் வீட்டைப் பார்வையிட்ட ராகுல், அங்கிருந்த நெல் சேமித்து வைக்கும் குதிரைப் பார்வையிட்டார். இது என்ன என்று கேட்டார். வெள்ளைச்சாமி அதுகுறித்து விளக்கியதும் ஆச்சரியமடைந்தார்.

பின்னர் தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கிக் குடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய ராகுல், மந்தைச் சாவடி பகுதியில் உள்ள கக்கனின் உறவினரான பொன்னம்மாள் வீட்டுக்குப் போனார். ராகுல் வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்களிடம் நெருங்கிய ராகுல் அவர்களிடம் கை குலுக்கி இயல்பாகப் பேசினார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி பத்தரை மணியளவில் அழகர் கோவில் சாலையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்குள் நுழைந்தார். ராகுலைப் பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் திரண்டு வந்து அவரிடம் கை குலுக்கி மகிழ்ந்தனர். மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் ராகுல்.

அரசியல்வாதிகள் என்ன பண்ணினாலும் அது செய்திதான்.....ஆனாலும் ராகுல் கக்கன் வீட்டுக்கு சென்றது ஒரு நல்ல விசயம்தான்....இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு கக்கன் வீடு இல்லை இல்லை அவர் ஊர் எது என்று கூட தெரியாது........

4 கருத்துகள்:

  1. அரசியலில் ஆதாயம் கருதி ----கூட கழுவி விடுவார்கள் இவர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிசையிலும் ராகுல் போயி படுத்து எழுந்தாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனியாக கரையேற முடியாது. அதற்க்கு பாடை கட்டி 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  2. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா . அடுத்த முறை வரும்போது கூப்பிட்டு பாருங்க. கக்கனா அப்படின்னா என்னன்னு கேட்பாரு?( நோட்.. யாருன்னு கூட இல்லை என்னன்னு )

    பதிலளிநீக்கு
  3. அரசியல் நாடகாமாகவும் இருக்காலாம்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....