12 டிசம்பர் 2010

உங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்?


ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை ஒருவர் மட்டும் கொள்ளை அடித்து விட முடியுமா? என கடித நிதி கருணாநிதி சொல்லி இருக்கிறார்......

நியாயம்தான்.....
அதைத்தானே மக்களும் சொல்கிறார்கள்......பாவம் ராசா அவர் இவ்வளவு பணத்தை எடுத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்?

அதனால்தான் கருணாநிதி குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாககொள்ளை அடித்து இருக்கிறார்.....

ராசா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்க படும் வரை நாங்கள் அவரை கைவிடமாட்டோம் என கருணாநிதி சொல்லி இருக்கிறாரே.....!!!! எனக்கு தெரிந்து நம் நாட்டில் எந்த ஊழல் குற்றசாட்டாவதுநிரூபிக்க பட்டு இருக்கிறதா?????????


இந்த திருடர்கள் ஒருபக்கம் இருக்க......


என்னமோ தான் மட்டும் ஒழுக்கசீலர் போல ,ஊழலே செய்யாத உத்தமர் போல

ராசாவை கைது செய்ய வேண்டும் என கத்தி கொண்டு இருக்கிறார் மாஜி நடிகை ஜெயலலிதா.......


மாஜி நடிகை ஆட்சியில் நடக்காத ஊழலா?சுடுகாடு கொட்டகையில் கூட ஊழல் நடந்ததே......


கருணாநிதி முகமூடி கொள்ளைக்காரன் என்றால் ஜெயலலிதா வழிப்பறி கொள்ளைக்காரன்....இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.....


கருணாநிதியை பற்றியோ, அவரது அரசை பற்றியோ ஜெயலிதா குறைகூறினால் உங்கள் ஆட்சியில் இதுபோல நடக்கவில்லையா என திருப்பி கேள்வி கேட்கிறார் கருணாநிதி......இவர் அவரை திட்ட, அவர் இவரை திட்ட...வாட் நான்சென்ஸ் மக்களே?

எது எப்படி இருந்தா நமக்கு என்ன...

விடிஞ்சா பேப்பர் படிச்சோமா, ஆபீஸ் போனோமா, வீக் எண்ட்ல சினிமா பார்த்தோமா.....டிவில மானாட மயிலாட பார்த்தோமா....

தேர்தல் வந்தா இரண்டு திருடர்களில் யாரவது ஒரு திருடனை ஜெயிக்க வச்சோமா....அது போதும் நமக்கு.........

9 கருத்துகள்:

 1. //தேர்தல் வந்தா இரண்டு திருடர்களில் யாரவது ஒரு திருடனை ஜெயிக்க வச்சோமா....அது போதும் நமக்கு.......//
  :-)

  பதிலளிநீக்கு
 2. //எது எப்படி இருந்தா நமக்கு என்ன...

  விடிஞ்சா பேப்பர் படிச்சோமா, ஆபீஸ் போனோமா, வீக் எண்ட்ல சினிமா பார்த்தோமா.....டிவில மானாட மயிலாட பார்த்தோமா....//

  பதிலளிநீக்கு
 3. அப்ப புதுசா வருபவர்களுக்கு ஆதரவு தருவோம் - அவர்கள் திருட ஆரம்பிக்கும்வரை....

  பதிலளிநீக்கு
 4. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி சிறந்ததோ அதில், தலையை சொறிந்துக்கொள்ளலாம்..

  பதிலளிநீக்கு
 5. கலைஞர் ஊழலுக்கு அஸ்திவாரம் போட்டார், ஜெயலலிதா அந்த அஸ்திவாரத்தில் கட்டிடம் எழுப்பி கிரகப்பிரவேஷமே பண்ணியவர்.

  பதிலளிநீக்கு
 6. // அப்ப புதுசா வருபவர்களுக்கு ஆதரவு தருவோம் - அவர்கள் திருட ஆரம்பிக்கும்வரை.... //

  வழிமொழிகிறேன்...

  கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே...

  பதிலளிநீக்கு
 7. இந்த இருவரையும் ஒழிக்க புதிய இயக்கம் ஒன்று வேண்டும்.. சத்தியமாக அது விஜயகாந்த்,ரஜனிகாந்த், விஜய் அல்ல... வேறு ஒருவர் வேண்டும் நம்மைப்போல நிஜமான கவலையோடு..பொறுப்பானவராக..எனது தேர்வு..தங்கம் தென்னரசு... IN MY VIEW HE IS ONE OF FINEST GENTLE MEN.. (ரஜனி,விஜய்காந்த் மனைவிமார்கள் இருக்கார்களே 1000000000.. ஜெயலலித்தாக்கள்.. ஆட்சிகிடைத்தால் அவ்வளவுதான்.. நம்மையொல்லோரையும் பாவாடை நாடாவை கோர்க்கவிட்டுவார்கள்)

  பதிலளிநீக்கு
 8. பேசறவங்க கொஞ்சம் கடமைகளை முடிச்சிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை (நான் முடிவு பண்ணியாச்சி)

  பதிலளிநீக்கு
 9. ஒரு மாற்றம் வேண்டும் என்பதே நமது விருப்பம்....ஆனால் அது இப்போது சாத்தியமில்லை என்றே எண்ணுகின்றேன்.....

  உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே......

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....