14 டிசம்பர் 2010

இவர்கள் முதல்வர் ஆனால்........

இவர்கள் முதல்வர் ஆனால் ( பயப்படாதிங்க...கற்பனையில்தான்)போடும் முதல் ஆணை என்னவாக இருக்கும்? அவர்களிடமே கேட்போமா?????விஜயகாந்த்: தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் இன்னும் ஒரு வருடத்திற்கு விருத்தகிரி படம்தான் ஓடவேண்டும் என்று ஆணையிடுவேன்.....ராமதாஸ்: டாஸ்மாக்கை ஒழித்துவிட்டு வீட்டுக்கு வீடு கள் ஒரு பானை தினமும் இலவசமாக கொடுக்கப்படும்......தயாநிதிமாறன்: சன் டிவி யை தவிர தமிழ்நாட்டில் வேற எந்த டிவியிலும் என்னைக்காட்டுவதில்லை ...இது மாதிரி நடுநிலை தவறிய டிவி சேனல்களைதடை செய்து உத்தரவிடுவேன்......சரத்குமார்: என்னை மாதிரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வராக இருக்க முடியும் என சட்ட திருத்தும் பண்ணி ஆணையிடுவேன்.....தங்கபாலு: என்னது நான் முதல்வரா? கொஞ்ச நேரம் இருங்க அன்னை சோனியாவிடம் கேட்டு சொல்கிறேன்....வைகோ: தமிழ் நாட்டில் எங்கள் கட்சிக்கு மட்டும்தான் தனியாக சேனல் இல்லை.....எனவே தமிழக மக்கள் எனது பேச்சை தினமும் கேட்கும் வகையில் அரசு சார்பிலே சேனல் ஆரம்பித்து அதற்க்கு வைகோ டிவி என பெயரிடுவேன்.....இளங்கோவன்: விடுதலைபுலிகளை வேரோடு சாய்த்த மாவீரன் ராஜபக்சேயை அழைத்து விருந்து கொடுத்து அரசு சார்பில் விருதும் கொடுப்பேன்.....டி ராஜேந்தர்: என் கட்சியை தவிர எல்லா கட்சியையும் தடை செய்துவிட்டு என் மகன் ஒழுக்கசீலன் சிம்புவை முதல்வராக அறிவித்து விட்டு நான் ஓய்வு பெறுவேன்.....ரஜினியை விடக்கூடாதுல....ரஜினி: தமிழ் நாடு மக்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று பாபா ஜீயை தரிசித்துவிட்டு வருவதற்கு இலவச பயண ஏற்பாடுகள் செய்து ஆணையிடுவேன்......கடைசியாக நானும்( ஹிஹிஹி)......தமிழ் நாட்டில் உள்ள அனைத்துகட்சிகளையும் தடை செய்துவிட்டு பீகாரோடு எங்கள் மாநிலத்தையும் சேர்த்து கவனியுங்கள் என்று நிதீஷ் குமாரிடம் ஆட்சியை கொடுப்பேன்......

6 கருத்துகள்:

 1. //இளங்கோவன்: விடுதலைபுலிகளை வேரோடு சாய்த்த மாவீரன் ராஜபக்சேயை அழைத்து விருந்து கொடுத்து அரசு சார்பில் விருதும் கொடுப்பேன்....//
  Super!! :-)

  பதிலளிநீக்கு
 2. //கடைசியாக நானும்( ஹிஹிஹி)......தமிழ் நாட்டில் உள்ள அனைத்துகட்சிகளையும் தடை செய்துவிட்டு பீகாரோடு எங்கள் மாநிலத்தையும் சேர்த்து கவனியுங்கள் என்று நிதீஷ் குமாரிடம் ஆட்சியை கொடுப்பேன்.....//

  அருமை தொடரட்டும் தங்கள் payanam

  பதிலளிநீக்கு
 3. கற்பனை செம்ம கலக்கல்...

  தொடருங்கள்.......

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....