20 டிசம்பர் 2010

தங்கபாலுவிடம் பத்து கேள்விகள்.....


காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் காமெடி பீஸ்தான்......காமெடி பீஸ் கட்சியின் காமெடி மாஸ் நம்ம தங்கபாலு.....மனுசர் சிரிக்கவே மாட்டார் போல....ஆமா பதவி எப்போ போகுமோனு பயத்திலே இருந்தா சிரிப்பு எப்படிவரும்....
அப்படிப்பட்ட காமெடி பீஸ் தங்கபாலுட்ட ஒரு பேட்டி எடுப்போமா....


ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நீங்கள் ஏன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்றீர்கள் ?


பதில்: என்னுடைய எதிர் வேட்பாளர் வெற்றிபெற்றதால் நான் தோற்றேன்...


நீங்கள் எப்போது ஆட்சியை பிடிப்பீர்கள்?பதில்: ஆச்சி மசாலா தூலா (சுதாரித்துக்கொண்டு) நாங்கள் எதிர்க்கட்சிகளே தேர்தலில் போட்டி இடாவிட்டால் ஆட்சியை பிடிப்போம்....


நீங்கள் எம் பி யாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஏன் எந்த கேள்வியையும் கேட்கவில்லை?


பதில்:நான்தான் அங்கு போகவே இல்லையே....


உங்கள் கட்சியில் மட்டும் ஏன் இத்தனை கோஸ்டிகள்?


பதில்: எங்க கட்சிலதான் உறுப்பினர்களே இல்லையே ....அப்புறம் எப்பிடி கோஸ்டி இருக்கும்.....


காங்கிரஸ் கட்சி ஏன் தமிழக மந்திரி சபையில் இடம்பெறவில்லை?


பதில்: எங்கள் கட்சிக்கு எம் எல் ஏ இருக்குறதே எங்களுக்கு நம்ப முடியல இதுல எங்கே போய் நாங்க மந்திரி சபையில் இடம்பெறுவது...


உங்கள் கட்சியில் அடுத்த தலைவர் யார்?


பதில்: காமராஜர்.... சாரி ....அதே சொல்லி சொல்லி பழக்கமா போச்சுல அதான்
கண்டிப்பா எங்க கட்சி உறுப்பினர்தான் அடுத்த தலைவர்....போதுமா...


உங்கள் பதவி இன்னும் எத்துனை வருடம்?


பதில்: என்னது நான்தான் இப்ப கட்சில தலைவரா? மறந்தே போச்சே..


உங்கள் அடுத்த இலக்கு என்ன?


பதில்: எம் பி யாக இல்லாததுனால டெல்லிக்கு இனிமே ஒ சீ டிக்கெட்ல போக முடியாதுல ...அதுனால ஒ சி ல போறதுக்கு ஐடியா பண்ணனும்......


உங்கள் அன்னையின் பெயர் என்ன?


பதில்: எனக்கு சோனியா காந்தி அன்னையை தவிர வேற எந்த அன்னையின் பெயரும் தெரியாது....


காங்கிரஸின் கொள்கை என்ன ?
பதில்: சோனியா காந்தி ,ராகுல் காந்தி ஆகியோரிடம் கேட்டு கண்டிப்பா உங்க கிட்ட சொல்றேன்....இப்ப என்னைய விட்டுடுங்க...

4 கருத்துகள்:

 1. செம காமெடி அதுவும் காமெடி பீஸ வச்சு :))

  பதிலளிநீக்கு
 2. அடிக்கடி காங்கிரசையே கலாய்க்கிறீர்களே... என்ன காரணம்.... ஏதாவது பாதிப்பா...

  பதிலளிநீக்கு
 3. நன்றி நண்பர்களே....
  பாதிப்பு எல்லாம் இல்லை..
  காங்கிரஸ் தான் கலாயிக்க கரெக்டான கட்சி.....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....