03 டிசம்பர் 2010

காணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)


கதாநாயகி மட்டும்தான் உதட்டு சாயம் பூச வேண்டுமா என வெகுண்டு எழுந்து உதட்டு சாயம் பூசி நடித்தவர் நம்ம ஆளு......


தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆளாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் முன்னுக்கு வந்து அவரது நடிப்பால் ரசிகர்களின் தலையை பிய்க்க வைத்தவர்.....


பென்சிலால் மீசையும் வரைந்து நடிக்க முடியும் என நடிப்புக்கு புது இலக்கணம் வகுத்தவர்.....


கதாநாயகன் என்றால் பந்தயத்தில் மாட்டை அடக்க வேண்டும் என்ற விதிமுறையை உடைத்து பாட்டு பாடியே மாட்டை அடக்கியவர்......யாருன்னு தெரியுதா?


வேற யாரு நம்ம ட்ரவுசர் பாண்டி ராமராஜன் தான்.....


இவரின் கரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.....ஒரு காலத்தில் ராமராஜன் நடித்து இளையராஜா இசைஅமைத்து எதாவது ஒரு ராசான்னு படத்துக்கு பேரு வச்சால் படம் நூறு நாள்தான்.....


சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியலிலும் கால் பதித்து நாடாளுமன்றம் வரை சென்று வந்தவர் நம்ம ஆளு ...அங்கே அவரு வேற ஒண்ணுமே செய்யல....அது வேற விஷயம்....


ஒரே மாதிரியான படங்களில் தொடர்ந்து நடித்ததால் சாரின் படங்கள் வரிசையாக ஊத்தி கொண்டன,அவரது மனைவியும் விவாகரத்து பெற்றார்.....கட்சியிலும் செல்வாக்கு இல்லை....அதிமுக வில் வெறும் ஊறுகாயாக மட்டுமே இவர் பயன்படுத்தபட்டார்....இனி அவருக்கு அரசியலில் எதிர்காலம் இருண்ட காலம்தான்.....
நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வைராக்கியமாக இருக்கிறார் நம்ம ஆளு....வேறு குணசித்திர வேடங்கள் குடுத்தால் இவருக்கு நடிக்கவே வராது என்பது வேறு விஷயம்....


இப்போது மேதை என்னும் படத்தில் நடித்துள்ளார்......அது எப்போது வெளியாகும் என அவருக்கே தெரியாது....ஒருவேளை ஜெயா டிவியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது....

8 கருத்துகள்:

 1. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வைராக்கியமாக இருக்கிறார் நம்ம ஆளு....வேறு குணசித்திர வேடங்கள் குடுத்தால் இவருக்கு நடிக்கவே வராது என்பது வேறு விஷயம்....


  இப்போது மேதை என்னும் படத்தில் நடித்துள்ளார்......அது எப்போது வெளியாகும் என அவருக்கே தெரியாது....ஒருவேளை ஜெயா டிவியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது....////
  இந்த நக்கல் நையாண்டிஎல்லாம் சூப்பர். ராமராஜன் பற்றி.....
  ராம.நாராயணிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் தனியாக, மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி,மறக்கமாட்டேன் என்று சில படங்கள் இயக்கினார். இதில் விஷேசம் என்னவென்றால் ஹலோ யார் பேசறது என்ற திரில்லர் படம் கூட சுரேஷ், ஜீவிதாவை வைத்து தந்துள்ளார். இயக்குனர் அழகப்பனால் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் நடிகரானார் இந்த கிராமராஜன்.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் கூடுதல் தகவல்களுக்கும் நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 3. அவருக்கு கொடுத்த விளக்க அறிமுகம் அருமை !!!

  பதிலளிநீக்கு
 4. முந்தாநாள் போட்ட பின்னூட்டம் இன்னைக்கும் பொருந்தும்..சோ காப்பி பேஸ்ட்...:).

  ஒரு பதிவு படிக்கலாம்னு வந்தா இரண்டு இருக்கு...பின்னூட்டத்துல ஒரு பதிவு இருக்கு..நன்றி ஹாஜா..நன்றி ரஹீம்,,

  பதிலளிநீக்கு
 5. halo yar pesurathu padathu link kudukka mudiyuma nalla comedy+thrillar movie pattulam nalla irukkum

  பதிலளிநீக்கு
 6. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே....

  பதிலளிநீக்கு
 7. //கதாநாயகி மட்டும்தான் உதட்டு சாயம் பூச வேண்டுமா என வெகுண்டு எழுந்து உதட்டு சாயம் பூசி நடித்தவர் நம்ம ஆளு......//

  //பென்சிலால் மீசையும் வரைந்து நடிக்க முடியும் என நடிப்புக்கு புது இலக்கணம் வகுத்தவர்....//
  Super! :-)

  பதிலளிநீக்கு
 8. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வைராக்கியமாக இருக்கிறார் நம்ம ஆளு....வேறு குணசித்திர வேடங்கள் குடுத்தால் இவருக்கு நடிக்கவே வராது என்பது வேறு விஷயம்....


  நல்ல சுவாரஸ்யமான பதிவு

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....