30 டிசம்பர் 2010

சோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,000 கோடி: சுவாமி


அதிரடியாகவும் ,காமெடியாகவும் பேசுவதில் சுப்ரமணிய சுவாமி கில்லாடி.....அவர் சீரியஸா பேசினாலே அது காமெடியாகத்தான் இருக்கும்.......ஆனால் அது சில சமயம் உண்மையாகவும் இருக்கும்.....ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை பற்றி அதிகம் பேசி அதை வெளி கொண்டு வந்தவர் நம்ம சுவாமிதான்......ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி தினம் தினம் ஒரு குண்டை போடும் அவர் இப்ப பேசியிருப்பதை பாருங்கள்.....


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் நடந்த ஊழலில் கிடைத்த ரூ.60,000 கோடியில் சோனியாவிற்கு ரூ.36,000 கோடியும், கருணாநிதிக்கு ரூ.18,000 கோடியும் சென்றுள்ளது என குற்றம் சாற்றியுள்ளார்.

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமான பாரதிய விச்சார் மன்ச் ஏற்பாடு செய்த ‘ஊழல் நெ.1 பிரச்சனையா?’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுப்ரமணிய சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தற்போது டெல்லியில் நிலவும் ஊழல் விகிதம் 35 விழுக்காடு என்றும், அந்த கணக்கின்படியே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று தான் மதிப்பிடுவதாக சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அந்த ரூ.60,000 கோடியில் 60 விழுக்காடு (ரூ.36,000 கோடி) சோனியாவிற்கும், 30 விழுக்காடு (ரூ.18,000 கோடி) கருணாநிதிக்கும், 10 விழுக்காடான (ரூ.6,000 கோடி) மட்டுமே அமைச்சராக இருந்த ஆ.இராசாவிற்கும் சென்றதாக சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

“2ஜி ஊழல் வழக்கில் இராசாவின் பெயரை மட்டுமே சேர்த்துள்ளேன். அதில் சோனியா, கருணாநிதி பெயர்களையும் சேர்ப்பேன்” என்று பேசியுள்ள சுப்ரமணியம் சுவாமி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஒரு துபாய் நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் உடன் தொடர்புடையது என்றும், மற்றொரு நிறுவனம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பு உள்ளதென்றும் கூறியுள்ள சுவாமி, இதனால் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகள் கூட தொலைத் தொடர்பில் அயல் நாடுகளை அனுமதிக்காத நிலையில், பல அயல் நாட்டு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுவாமி குற்றம் சாற்றியுள்ளார்.



இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ ஸ்பெக்ட்ரம் பூதத்தில்......

5 கருத்துகள்:

  1. சோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,000 கோடி//
    அப்படின்னா மக்களுக்கு 111-கோடியா?
    அதாவது பட்டை போட்டு தெருக்கோடி-யில நிறுத்திடுவார்களோ

    பதிலளிநீக்கு
  2. //2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சோனியாவையும், கருணாநிதியையும் சேர்க்கவில்லையென்றால், அவர்களையும் சேர்க்குமாறு கோரி தான் வழக்குத் தொடர உத்தேசித்திருப்பதாக//

    இது மாதிரி யோசிக்க அவரால தான் முடியும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  3. ஹி ஹி அதைதான் ஏற்கனவே போட்டு விட்டார்களே.....

    பதிலளிநீக்கு
  4. அடப்பாவிகளா??????

    கோடிக்கு எத்தன சைபர்ன்னு எண்ணிட்டு இருக்கோம். நீங்க அதுக்கும் மேல கொள்ளையடிக்கிறீங்களா?????

    அப்ப ஏன் இந்தியா இப்படி இருக்காது???

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கேடியின் பாதுகாப்புக்காக எத்தனைக் கோடிகள் வீண் தெரியுமா?இசுரேல் இன்னும் யார் யாருக்கு இவர் மாமாவோ?

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....