இந்த காலத்தில் எனக்கு இத்தனை ஆண் நண்பர்கள் என பெண்கள் சொல்வதும் எனக்கு இத்தனை பெண் தோழிகள் என ஆண்கள் சொல்வதும்தான் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியாக ,பேஷனாக இன்னும் பல எலவுகளாக எண்ணப்படுகிறது ...
இதற்கு முக்கிய கரணம் சினிமா.....சினிமாவில்தான் ஆண் பெண் நட்பை ஊர் சுற்றுவதில் தொடங்கி,ஒன்றாக படுத்து உறங்குவது வரை காட்டி சீரழித்து வருகின்றனர்...ஒன்றாக படுத்து உறங்குவதும்,பப்புக்கும் செல்வதும், பார்ட்டியில் குடித்து ஆடுவதுமா நட்பு?சினிமாவில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆசைபட்டுதான் இன்று ஆண் பெண் நட்புகள் உருவாகி வருகின்றன...
சில தூய எண்ணம் உள்ள உதவும் எண்ணம் படைத்த ஆண் பெண் நட்பு இருக்கத்தான் செய்கிறது....அவர்களை நான் குறை சொல்லவில்லை
எல்லாம் ஒரு அளவுக்குள் இருந்தால் அது நல்லது.....அளவுக்கு மீறினால் ?
ஆணும் பெண்ணும் காமம் இல்லாத வெறும் நட்புடன் எந்த எல்லையும் இல்லாமல் பழக முடியுமா?
ஆம்..முடியும்...நாங்கள் நட்புக்குள் எந்த எல்லையும் வைத்து கொள்ள மாட்டோம் என்பவர்களும்,இல்லை அதுபோல பழக முடியாது என்பவர்களும் இந்த செய்தியை படியுங்கள்....
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.
தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.
கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து வலுகட்டாயமாக ஐந்து நாய்களும் மாறி மாறி கற்பழித்துள்ளனர்...இப்போது அப்பெண் குடுத்த புகாரின் பேரில் அவர்களை கைது செய்துள்ளது போலீஸ்...
இப்போது என்ன சொல்கிறீர்கள்?அந்த பெண்ணும் அந்த கயவர்களை நம்பித்தான் பழகினார் .ஒன்றாக சுற்றி திரிந்தார்..இப்ப என்ன ஆயிற்று...?
பழக முடியும் என சொல்பவர்கள் இது மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் எல்லாரையும் அது போல எண்ண முடியாது என வாதிடுவார்கள்.....
ஆம் ..ஏற்று கொள்ளலாம்....ஆனால் பழகும் பெண்கள் தீய எண்ணத்தோடு பழகும் ஆண்களை எப்படி கண்டுபிடிப்பார்கள்....இது மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்த பின் கண்டுபிடித்து என்ன பயன்? போன மானம் திரும்பியா வர போகிறது...?எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என யாருக்கு தெரியும்?இரண்டாவது இது மாதிரி ஒன்று இரண்டல்ல பல சம்பவங்கள் நடத்துள்ளன....
ஆண்களும் ,பெண்களும் கூட படிக்கும் சக நண்பர்கள் என்ற முறையில் பேசலாம் பழகலாம் ...ஆனால் அவர்கள் அவர்களின் எல்லையை தாண்ட கூடாது....... ஒன்றாக தங்குவது வெளியே செல்வது, பைக்கில் ஊர் சுற்றுவது,சினிமா செல்வது போன்றவை அந்த எல்லையில் அடக்கம்.....
அதற்காக நான் எல்லா ஆண்களையும் குறை சொல்ல வில்லை....கடலில் குண்டூசியை தேடுவதுபோல கடினமானது நல்ல எண்ணத்தோடு எந்த எல்லையும் வைத்து கொள்ளாமல் பழகும் ஆண் பெண் நட்பு....அதே கடலில் மீன் பிடிப்பது போன்ற எளிதானது தீய எண்ணங்களோடு பழகும் ஆண் பெண் நட்பு.....
கடலில் மீன்களை வலை போட்டு எளிதாக பிடிக்கலாம்....குண்டூசியை எடுக்க முடியுமா?
Tweet |
அன்போ அடியோ எல்லைத்தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
பதிலளிநீக்குஎல்லைதாண்டியபிறகு அதைப்பற்றி கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்...
சிந்தித்து செயல்படாவிட்டால் இழப்பு நிச்சயம்...
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா....
நீக்குநண்பர் சவுந்தரின் கருத்தை வழிமொழிகிறேன்
நீக்குஆண் பெண் இருவரும் நட்பாக பழகலாம் என்று வாதிடுபவர்கள் எல்லாம் சும்மா சார். உண்மையில் மனதளவில் பக்குவப்பட்டவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் நாங்கள் மாடர்ன் கல்சர் என்று சொல்லிக்கொண்டே, இப்படி படுகுழியில் போய் விழுகிறார்கள். என்ன சொல்வது?
பதிலளிநீக்குமிகவும் சரியாக சொன்னீர்கள் சார்...நன்றி
நீக்குThappu onnum nadakkadha varai ellaarume bhuddhi saaligaldhaan.
பதிலளிநீக்குEndha puththil endha paambu irukkumo????
பெரும்பாலும் விசபாம்புகள்தான் இருக்கும்....நன்றி...
நீக்குஅந்நிய ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும் பொழுது மூன்றவதாக சைத்தான் (சாத்தான்) இருக்கிறான் என இறை தூதர் முகமத்(ஸல்)அன்றே கூறியுள்ளார்
பதிலளிநீக்குஅது இன்று அப்படியே பொருந்துகிறது என்றால் மிகை இல்லை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குரசூலுல்லாஹ் (அலை) சொன்னால் அது எவளவு அர்த்தம் வாய்ந்தது..! நன்றி...
நீக்குஎனக்கென்னவோ , "மேற்படிவிசயத்தில் " நட்புகளை விட சொந்தகாரர்களிடம்தான் இந்த விசயத்தில் உசாராக ( நபி ஸல் ) இருக்க சொன்னதாக ஞாபகம் !
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்த ஆண்கள் நிறைய பேர்களுக்கு ஒழுக்கமான / உண்மையான?! பெண் நண்பர்கள் ( மனைவிக்கு தெரியாமல் ) இருக்கிறார்கள், ஆனால் அந்த ஆண் நண்பர்களின் ஒரு நண்பரின் மனைவிக்கு கூட ஆண் ( உண்மையான ) நண்பர்கள் இருபதாக ( மறைமுகமாக கூட ) தெரியவில்லை/அறிந்ததில்லை. ஆதாரம் வேணுமா?
( அடியேன் இஸ்லாமியன்?! என்பதால், இஸ்லாமிய நண்பர்களின் லிஸ்ட் வேண்டுமென்றால் தருகிறேன் !)
நன்றி..சகோ..இதில் ஆண் பெண் என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன்..அதில் முஸ்லிம்களும் அடக்கம்தான்....
நீக்குநல்லதொரு விழிப்புணர்வு பதிவு! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஐயா!
பதிலளிநீக்குநீங்கள் கூற வருவது என்ன என்று நன்கு விளங்குகிறது. ஆனால் அது சாத்தியமா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? இது போன்ற சம்பவங்களுக்காக பயந்து நமது பெண் குழந்தைகளை ஆண்களுடன் பழக விடாமலே வளார்ப்பது இந்த காலத்தில் சாத்தியமா? அவ்வாறு வளர்த்தால் அதனால் வரும் தீமைகள் நன்மைகளை காட்டிலும் அதிகம் இல்லையா? வீட்டை விட்டு வெளியில் வந்தால் சமூக வெளியில் ஆண்களும் பெண்களும் கலந்து தானே இருக்க வேண்டி இருக்கிறது. சமூக வெளியில் உள்ள ஒரு ஐம்பது சதவிகித மக்களை பற்றி மற்றொரு ஐம்பது சதவிகித மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கிற நிலை பரிதாபமானது மட்டும் அல்ல ஆபத்தானது கூட இல்லையா?
சமீபத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு மனைவி தனது கணவன் தனக்கு பிரசவ வலி வந்த பொழுது தன்னை இரு சக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சிறிது வண்டியை நிறுத்தி விட்டு கிரிக்கெட் ஸ்கோர் பார்த்தார் என்று சிரித்துக் கொண்டே கூறினார். இது சிரிக்க வேண்டிய செயலா? அந்த கணவனை செருப்பால் அல்லவா அடிக்க வேண்டும். இது போன்ற செயல்கள் எதனால் நடக்கிறது? மாதவிடாய் என்றால் என்ன? பிரசவம் என்றால் என்ன? என்கிற புரிதல் இல்லாமல் வளர்க்கப்படும் ஆண்களால் தானே. பெண் நட்புகள் அவர்களுக்கு இத்தகைய அறிவினை சிறிதளவிலாவது தருமே?
வயதிற்கு வராத ஒரு சிறு பெண்ணிற்கு கூட ஒரு ஆண் தவறான இடத்தில் தன்னை தொட்டால் அது தவறு என்று தெரிந்து விடும். இயற்கையே அவர்களுக்கு அளித்த மாபெரும் சக்தி அது. அவ்வாறு இருக்கையில் வயதிற்கு வந்த ஒரு பெண் ஒரு ஆணின் பார்வையை, பேச்சை, நடத்தையை வைத்தே அவனது எண்ணம் நல்லதா இல்லை தீயதா என்று தெரிந்து கொள்வாள். அவ்வாறு தெரிந்து கொள்ளவில்லை என்றால் வேறு ஏதோ குறைபாடு இருக்கிறது என்று தான் பொருள். அது உளவியல் குறைபாடாகவும் இருக்கலாம்.
மன்னிக்கவும். பின்னூட்டம் பெரிதாகி விட்டது. தங்கள் கருத்தை முற்றிலும் மறுத்து சொல்வதற்காக இதை நான் தெரிவிக்கவில்லை. மாறும் சமூகத்தில் ஒரு சில பழைய பழக்க வழக்கங்களை நாமும் மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
உங்களை இந்த பின்னூட்டத்தின் கருத்து ஏதாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
இவன்,
சத்யப்ரியன்
நன்றி அய்யா உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் ...நான் ஆண் பெண் நட்பு முழுக்க தவறு என்று சொல்லவில்லை....ஒரு கட்டுபாட்டுடன் எல்லை வகுத்துக்கொண்டு பழக வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறேன்....
நீக்குசிந்தித்து செயல்படாவிட்டால் இழப்பு நிச்சயம்...
பதிலளிநீக்குநல்லதொரு விழிப்புணர்வு பதிவு
நன்றி சகோ....
நீக்குஇது போன்ற சம்பவங்களில் அவமானத்திற்கு அஞ்சி வெளியில் தெரியாமல் மூடி மறைக்கபடுகிறது மிக சில சம்பவங்களே வெளியில் வருகிறது .நண்பர் சர்புதீன் அவர்கள் இடுகையை மேலோட்டமாகவே படிக்கிறார் என்று எண்ணுகிறேன் .அதுதான் அவலை நினைத்து வுரலை இடிக்கிறார்
பதிலளிநீக்குபராரி சொல்வது முற்றிலும் சரி, மேலோட்டமாக படித்து விட்டு என்னை போன்று பின்நூட்டமிடுபவர்களிடம் பதிவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நலம்!
பதிலளிநீக்குஉலகின் தலை சிறந்த மார்க்கம் / மதம் இஸ்லாம்
உலகின் தலை சிறந்த மனிதர் முஹம்மது (ஸல் )
உலகின் எல்லா பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு, குர் ஆனும், ஹதீஷும்,( மனிதர்கள் பலகீனமானவர்கள் என்பதால்தான் இஸ்லாமியர்களிடையே பிரச்சனை இருக்கிறதே தவிர, இஸ்லாமியத்தில் இல்லை )
மேலே உள்ளவற்றை நிரூபிக்க இஸ்லாமியர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவரை ( அதனை எதிர்பவர்களிடம் ) தோற்றவர்கள் யாரும் இல்லை ( அல்லாஹு அக்பர்). கிண்டலாகவோ, விக்கலாகவோ, எப்படி சொன்னாலும் மேலே உள்ளவைதான் உண்மை, அவைதான் சத்தியம்!
இன்று தான் இந்த பதிவை கண்டேன்.ஷர்புதீன், சத்யபிரியன் கருத்து பிடித்திருந்தது.
நீக்குMuruganandam. 12.3.12
பதிலளிநீக்குIt is very sad to note that Kavitha of Ankaputhur fall as a victim to her boy friends and also a prey to modern culture. The question whether a girl can have boy friend? No. Definitely not. Because Boy friends are always dangerous and they will definitely expect immoral sex if situation permits. Of course, in modern days Women has to work with men. They have to speak with them while they are in office. It is not advisable to avoid talking with Men in office, but Women should draw line beyond that they should not entertain Men in any way. Women should not share personal things with Men. They have to be very careful with Men and should have the courage to follow our traditional cultural values which are always safe for health and mind.
ya its correct....
நீக்குநீங்கள் சொல்லும் கருத்தை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன் ஆண் பெண் நட்பு என்பது பெண்கள் கையில் தான் இருக்கிறது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது
பதிலளிநீக்குஎன்னை பொறுத்தவரையில், ஆண் பெண் இனக்கவர்ச்சி இயற்கையில் அமையப்பட்டுள்ளது. நமது கலாசாரத்தில், நண்பன் என்பது இரு ஆண்களுக்கு இடையே உள்ள உறவு, தோழி, தோழா, ஒரே பாலின உறவு, தமிழ் மரபில் ஆண் பெண் உறவிற்கு வேறு ஏதேனும் பெயர் இருந்தால் கூறுங்கள். இந்த கலாத்தில் ஒரு பெண் பல ஆண், பல பெண் ஒரு ஆண், உறவு, என்பதெல்லாம் போலி,
பதிலளிநீக்குஅது, சமுதாய சீர்ழிவிற்கான புதிய உருவாகும் உறவு,
கு ரா முருகன்