06 பிப்ரவரி 2012

இஸ்லாம் கூறும் மரணதண்டனை....


மரணதண்டனை பற்றி இருவேறு கருத்துக்கள் உலகெங்கும் இருந்து வருகிறது....

எந்த ஒரு விஷயம் என்றாலும் இருவேறு கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்....ஒன்று வேண்டும்,மற்றொன்று வேண்டாம் ஒன்று சரி மற்றொன்று தவறு என வேறுபாடு இருக்கத்தான் செய்யும்....

அந்த வகையில் மரணதண்டனை அவசியமா இல்லையா என்பதுபற்றி ஒரு சிறு அலசல்....

மரணதண்டனை என்பது சும்மா ரோட்டில் நடந்து போறவனுக்கோ, கொள்ளை அடிப்பதற்கோ, மற்றவரின் நிலத்தை அபகரித்தற்கோ, மோசடி செய்ததற்கோ கொடுக்கப்படும் தண்டனை அல்ல....ஒரு உயிரை அநியாயமாக பறிக்கும் மிருக தனத்திற்கு கொடுக்கப்படும் உச்ச கட்ட தண்டனை....

ஒரு கொலை செய்தால் அவனுக்கு வழங்கப்படும் உச்ச கட்ட தண்டனை ஆயுள்தண்டனையாக இருந்தால் கொலை செய்தவன் சிறைக்கு செல்வான்....ஆனால் ஆயிளோடு இருப்பான்...அவனால் கொலை செய்யப்பட்டவர் எக்காலத்திலும் திரும்பி வரப்போவதில்லை .....இது பாராபட்சமாக இல்லையா?

சிறை சென்ற கொலையாளி திரும்ப வந்து மற்றொரு கொலை செய்கிறான்..இப்போதும் அவனுக்கு சிறைதண்டைதான் என்றால் யாருக்குதான் பயமிருக்கும்.....கொலை செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என ஒருவன் பயந்தால்தான் அது தண்டனை.....

இதைதான் திருக்குர்ஆன் கூறுகிறது....

எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்17:33.

.கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை...இதனால் கொலை செய்தவனும் தண்டிக்கப்படுவான் ...கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கும் கொலையாளியை தண்டித்த நிம்மதி கிடைக்கும்....மற்றொருவன் அடுத்த கொலை செய்ய அஞ்சுவான்.....ஒரே கல்லில் மூன்று மாங்காய்....எக்காலத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும்....


ஒருவன் ஒரு கொலை செய்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அக்குடும்பத்தில் இருப்பவர்கள்தான் உணர முடியும்......

சாதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தாலே அந்த துக்கத்தை அவர் உறவினர்களாலும் நண்பர்களாலும் தாங்க இயலாது....அப்படி இருக்கையில் ஒருவர் கொலை செய்யப்பட்டால் ?

கொலை செய்தால் மரணதண்டனைதான் என்றால் நிச்சயம் கொலை செய்ய பயம் வரும்..தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும்....

கடுமையான இந்த சட்டத்தை சொல்லும் திருக்குர்ஆன் பாதிக்கப்பட்ட நபர்கள் கொலையாளியை மன்னித்தால் அவனுக்கு தண்டனையை குறைக்கலாம் என மற்றொரு வாய்ப்பையும் வழங்கி உள்ளது....அது சம்பந்தப்பட்ட நபர்களின் மனநிலையை பொருத்தது.....

பாதிக்கபட்டவர்கள் வழியை குறைக்க (நீக்க இல்ல குறைக்க மட்டும்தான் ) மரணதண்டனை எனும் மருந்து தேவை .....அதுவே குற்றங்கள் குறைய வழிவகுக்கும்.....

13 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்வதும் கரெக்ட் மாதிரிதான் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ்..மிக அழகா சொல்லிருக்கீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

   நீக்கு
  2. அதிரடிக்கு ஒரு சபாஸ் அடி
   JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
   “Allâh will reward you [with] goodness.”

   நீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  அருமையான பதிவு சகோ நன்றி

  மரணதண்டனையில் மனித சமூகத்திற்கு வாழ்வு இருக்கிறது பார்க்க:

  وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
  அறிவுடையோரே பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது.(இச்சட்டத்தினால் பிறரை கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்வீர்கள்)2:179

  இது பற்றி விரிவாக எழுத நினைத்தேன் நீங்கள் எழுதி விட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 4. வஸ்ஸலாம் சகோ....
  என்னைவிட நீங்கள் விரிவாக எழுதுவீர்கள்....எழுதுங்கள்...நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 5. ஸலாம் சகோ.ஹாஜா,
  சில மாதம் முன்னர் ஒரு பிரபல பதிவர் மரணதண்டனைக்கு எதிரான பதிவு போட்டார். அவரிடம், "அஜ்மல் கசாப்புக்கு கோர்ட் மரண தண்டனை கொடுத்தால்..?" என்று கேட்டதற்கு "எதிர்ப்பேன்" என்று என்னோடு வாதிட்டார்..! நொந்து போய் விட்டேன்.

  இதுவரை கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் 'மரணதண்டனை வேண்டாம்' என்றுதான் பதிவுகள் வந்து பார்த்து இருக்கிறேன்.

  இது முற்றிலும் வித்தியாசமாக கொலை செய்யப்பட்ட வர்களுக்கு சாதகமாக பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் அலசி அதிரடி பதிவு இட்டு இருக்கிறீர்கள்..! கை கொடுங்க சகோ., சபாஷ்..!

  ///ஒரே கல்லில் மூன்று மாங்காய்....எக்காலத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும்..../// ---நிச்சயமாக..!

  பதிலளிநீக்கு
 6. வஸ்ஸலாம் சகோ.....
  மாஷா அல்லாஹ்
  நன்றி....பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் சகோ....

  பதிலளிநீக்கு
 7. அதிரடிக்கு ஒரு சபாஸ் அடி
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  “Allâh will reward you [with] goodness.”
  உங்களின் முன்னேற்றம்....இறைவனின் கையில். பின்னூட்டம்....என்ற பெயரில் பித்தலாட்டம் இருக்கும் . நீங்கள் நீங்களாகவே இருங்கள் . பின்னூட்டம்..உங்கள் வளர்ச்சியை கட்டுப் படுத்தாது . சேவை செய்வது நம் கடமை .பெற்ற அறிவை மற்றவருக்கு கொடுப்பது சிறந்த செயல்.

  பதிலளிநீக்கு
 8. seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: திருமறை ...

  திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட ...
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் (8) - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டங்களிலேயே அதன் பாகப்பிரிவினைச் சட்டம் தான் மிகவும் முக்கியமானதும், நுணுக்கமானதும் ஆகும்.
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் (6) - seasonsnidur


  வழக்கறிஞர். இஸ்லாமியச் சட்டம் (6) [ உயிலும் மரண சாசனமும் (வஸிய்யத்தும்), உயில் எழுதும் முறை, வக்ஃபு சட்டங்கள் - ஒரு பார்வை ...
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் (7) - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (7). நீடூர்.ஏ.எம்.சயீத். வழக்கறிஞர். [முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் ...
  http://seasonsnidur.blogspot.com/
  இஸ்லாமியச் சட்டம் (5) - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (5). நீடூர்.ஏ.எம்.சயீத் வழக்கறிஞர். அன்பளிப்பு ஓர் அலசல் - 3 சொத்து கைமாறும் முறைகள் ஒரு வியாபாரத்தில் ...
  http://seasonsnidur.blogspot.com/
  இஸ்லாமியச் சட்டம் (11) - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (11). நீடூர் A.M.சயீத் மறுக்கப்படும் மனித உரிமைகள் மனித உரிமைப் பார்வை என்பது சாதியப் பார்வையுமல்ல ...
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் (10) - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (10). நீடூர் A.M.சயீத் இஸ்லாமிய சட்டங்களை நோக்கி... இன்றைய உலகியல் சட்டங்களும், தீர்ப்புகளும் இஸ்லாமிய ...
  http://seasonsnidur.blogspot.com/
  இஸ்லாமியச் சட்டம் (1) - seasonsnidur
  நீடூர்.ஏ.எம்.சயீத் எனது உடன் பிறந்த சகோதரர்

  இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் நடந்த முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இஸ்லாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று.
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (13). நீடூர் A.M.சயீத் [ திருமணத்தின் நோக்கம், முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம், (கருக்)கொலையும் - சட்டமும் ] ...
  http://seasonsnidur.blogspot.com/

  இஸ்லாமியச் சட்டம் - seasonsnidur

  இஸ்லாமியச் சட்டம் (12). நீடூர் A.M.சயீத் தற்கொலை ஒரு இஸ்லாமியப் பார்வை! நான் சட்டக் கல்லூரியில் படிக்கிறபோது ...
  http://seasonsnidur.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா....நான் அந்த அர்த்தத்தில் அதை எழுதவில்லை....படிப்பவர்கள் பின்னூட்டம் இட்டால்தான் அவர்களின் கருத்தறிந்து மேலும் எழுத முடியும்...அந்த அர்த்தத்தில்தான் எழுதினேன் ..மற்றபடி இறைவன் நாடினால்தான் எல்லாம் நடக்கும்..

   நீக்கு
  2. மிக்க மகிழ்வு சகோதரரே .அன்புடன் வாழ்த்துகள்

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....