07 பிப்ரவரி 2012

வறுமையில் வாடும் பாரதியார் குடும்பமும், கண்டு கொள்ளாத தமிழக அரசும்...


காணி நிலம் வேண்டும் என அன்று பாடினார் பாரதியார்.....இன்றோ அவரின் நெருங்கிய உறவினர் தனது வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசிடம் கோரிக்கை மனு போட்டு காத்திருக்கிறார்....

இவர் அரசுக்கு மனு போட்டு காத்திருப்பது இது முதல் முறையோ,இரண்டாவது முறையோ அல்ல....கிட்டத்தட்ட முப்பத்தியேழு வருடங்களாக காத்திருக்கிறார்....ஆனால் அரசுதான் கண் திறக்கவில்லை....அவர் பெயர் சங்கரராமன் ..வயது 88 ...இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட....

பாரதியார் எட்டயபுரத்தில் உள்ள தனது தாய்மாமன் தான் வசித்தார்..பாரதியாரின் தாய்மாமன் மகன்தான் இந்த சங்கரராமன்...
.கடந்த 1975ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பாரதி வாழ்ந்த இந்த வீடு, நினைவிடத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

முறையான அறிவிப்பின்றி இந்த வீட்டைக் கையகப்படுத்தியதை எதிர்த்து, சாம்பவசிவத்தின் மகன் சங்கரராமன், கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்கு இழப்பீடாக அரசு சார்பில், 5,000 ரூபாய் மட்டும் அப்போது கோர்ட்டில் செலுத்தப்பட்டது. இத்தொகை போதாது என, அவர் அரசிடம் முறையிட்டார். ஆனால், எந்தப் பயனுமில்லை. (நன்றி ..பத்திரிக்கைகள்...)

அட வீட்டை எடுத்த அரசு அதற்க்கு ஈடான தொகையை வழங்கி இருக்க வேண்டாமா?சுதந்திரத்துக்காக ,தமிழுக்காக பாடுபட்ட ஒரு மகாகவியின் குடும்பம் என்று கூட நினைக்கவில்லையா அரசு?

தன்னுடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி, சுதந்திரப் போராட்ட வீரரின் வழித்தோன்றல் என்ற அடிப்படையில் மாதாமாதம் தனக்கு அரசு ஏதாவது உதவித்தொகை வழங்கவேண்டுமென, கடந்த 37 ஆண்டுகளாக, தமிழக அரசுக்கு அவர் மனு அனுப்பி வருகிறார். தி.மு.க., - அ.தி.மு.க., என மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும், இவரது கோரிக்கை நிறைவேறியபாடில்லை.


வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என கூறும் கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை....அவருக்கு அவர் குடும்பத்திற்கு நிதி சேர்க்கவே நேரம் இல்லை....அவர் எப்படி இவருக்கு நிதி கொடுப்பார்?

ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம் சேர்த்த சொத்துக்களை பிடுங்கவும், அவர்களை சிறையில் அடைக்கவுமே நேரம் போதவில்லை....பாரதியாரின் உறவினருக்கா உதவ நேரம் இருக்க போகிறது.....?


வாழ்க பாரதியார்.....வளர்க அவரது புகழ்....வேற என்னத்த சொல்ல....!

14 கருத்துகள்:

  1. பாராதியார் மட்டுமல்ல நாட்டுக்கு உழைத்த சுதந்திரத்திற்கு பாடுபட்ட நிறையபேர் இப்படித்தான் வறுமையில் வாடுகிறார்கள்...

    அவர்கள் சுதந்திர தினத்தன்று அழைத்து ஒரு சால்லை போடுவதோடு சரி...

    அரசு ஏதாவது செய்ய வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. பார்ப்போம் என்னத்த செய்யபோகிறார்கள் என்று....நன்றி

    பதிலளிநீக்கு
  3. சலாம் சகோ!

    இவரைப்போல் இன்னும் பலரும் வெளி உலகக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமல் உள்ளனர். சிறந்த பகிர்வு சகோ.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சகோ வருகைக்கு...இவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் முக்கிய கடமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியாரையெல்லாம் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மறந்து ரொம்ப நாளாச்சு...ஏதோ நம்மைப்போல ஆட்கள் தான் அவரை நினைவில் வைத்துள்ளோம்.

      நீக்கு
    2. சில நேரங்களில் இங்கு கமெண்ட் போட முடியவில்லை. கவனிக்கவும்

      நீக்கு
    3. ம்ம்ம்ம்...யாரை குற்றம் சொல்வது?நன்றி....

      பின்னூட்டத்தில் சிக்கலா?பார்த்துவிடுகிறேன்...

      நீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி சகோதரரே

    பதிலளிநீக்கு
  6. கொடுமைதான், நீங்கள் சொல்வதுபோல் குடும்பத்தை கவனிப்பதிலேயே அரசாள்பவர்களின் கவனம் இருக்கிறது, என்னத்த சொல்ல?

    பதிலளிநீக்கு
  7. /கடந்த 37 ஆண்டுகளாக, தமிழக அரசுக்கு அவர் மனு அனுப்பி வருகிறார்./ அடப்பாவிகளா .... கொடுக்கப்போறது மக்கள் காசு.. அதைக் கொடுப்பதற்குமா இவர்களுக்கு வலிக்கிறது?!

    பதிலளிநீக்கு
  8. அவர்களுக்கு எடுத்துகொள்ள மட்டும் இனிக்கும்.....

    பதிலளிநீக்கு
  9. இவரை போல் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....