28 பிப்ரவரி 2012

பெண்களை செக்சி என சொன்னால் தவறில்லையாம் ...அழகிரி,ரஜினியின் ஒரு கோடி (நொறுக்கு தீனி)


யாராவது பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது..........இவ்வாறு கூறி இருக்கிறார் மம்தா சர்மா....இவர் யார் தெரியுமா? தேசிய மகளிர் ஆணையத் தலைவி ....அட கொடுமையே ...அட கொடுமையே....


பசங்க சும்மா இருந்தாலும் இந்த பாட்டி சும்மா இருக்காம தூண்டி விடுதே...இதெல்லாம் நமது நாட்டில் நடைமுறை சாத்தியமா?ஒருவேளை மம்தா சர்மாவின் குடும்பத்தில் உள்ளவர்களை அவ்வாறு சொன்னால் அவர் அதை பாசிடிவ்வாக எடுத்துகொள்வார் போல....இல்லை நாலு பேர் குடித்துவிட்டு போய் அவரிடமே நீங்கள் ரொம்ப செக்சியாக இருக்குறீர்கள் என சொன்னாலும் தவறாக எடுதுகொள்ளமாட்டார் என நிச்சயமாக நம்பலாம்...

அவர் வேற யாராக இருந்தது இந்த கருத்தை சொன்னாலும் அதை யாரும் பெரிதுபடுத்த போவதில்லை...அவர் இருப்பது ஒரு பெரிய பொறுப்பில்....என்னத்த சொல்றது....!

................................. ........................................... ...........................................


சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் 20,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மின் தடை காரணமாக வேட்பு மனுவைப் பார்க்கக் கூட தேர்தல் அதிகாரியால் முடியவில்லை. இதையே சொல்லி வாக்கு கேட்போம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.


உங்களை யார் சார் கரண்ட் இல்லாத நேரத்தில போய் மனுதாக்கல் செய்ய சொன்னது? ஹி ஹி...ஆனாலும் ரொம்ப தில்லுதான்...திரும்பவும் இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறி இருக்கிறாரே....பார்ப்போம் அஞ்சா நெஞ்சனின் பார்முலா என்ன ஆக போகிறது என்று..!

........................................ ................................................. .......................

ஒரு தொகுதியில் நடக்கும் இடைதேர்தலுக்காக 32 அமைச்சர்களை நியமித்து இருக்கிறார் ஜெயலலிதா....இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அமைச்சர்களா ?இல்லை சங்கரன்கோவிலுக்கு மட்டும் அமைச்சர்களா?எப்பாடு பட்டாலும் தோற்கக்கூடாது என ஜெ நினைக்கிறார்...இவ்வாறு நினைப்பதே அவருக்கு கிடைத்த தோல்வி....

................................................ ......................................... ...............................

ஒருவழியாக சென்னைக்கும் இப்போது இரண்டு மணி நேரம் பவர் கட்....நாங்கள் பெற்ற இன்பத்தை இப்போது சென்னை மக்களும் அனுபவிக்க போகிறார்கள் ....இதுவே தாமதம் என்கிறேன் நான்....

அது என்ன ஓரவஞ்சனை....எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள் என்றால் எல்லாவற்றையும் சேர்ந்துதானே அனுபவிக்க வேண்டும்? சென்னையில் மட்டுமா தொழிற்சாலைகள் இயங்குகின்றன...?சென்னையில் மட்டுமா பள்ளிகள் இருக்கின்றன?சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் மற்ற இடங்கள் மாதிரி எட்டு மணிநேரம் மின் தடையிலிருந்து விதிவிலக்கு அளித்து இரண்டு மணி நேரம் பவர் கட் செயல்படுத்தி இருப்பது நல்லது..இதன் மூலம் தமிழகம் முழுக்க மின்தடை நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்... !

............................. .................................. ................................................

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரொம்ப நல்ல விஷயம்....நல்லத சீக்கிரம் ஆரம்பிங்கப்பா...

உடனே பிடிங்கப்பா ரஜினியை....நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அவர் வாக்கு கொடுத்து இருக்கிறார்....அவர்தான் வாக்கு கொடுத்தா அதை செய்யாமல் விட மாட்டாரே !


ஒரே நாட்டில் இருந்தது கொண்டு தண்ணீருக்காக அடித்து கொள்வது எவ்வளவு கேவலமான விஷயம்..!இதன் மூலமாவது அதற்கு முற்றுபுள்ளி இப்ப இல்லாட்டியும் விரைவில் கிடைக்கட்டும்...

25 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  //இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது..........//

  சரி அப்புறம் அழகான புள்ளையின் கையை பிடித்து இழுத்து விட்டு அழகாக அதான் கையை பிடித்து இழுத்தேன்

  ஒரு இளைஞன் இளைஞின் கையை பிடித்து இழுப்பது தவறில்லை என்று வடிவேலு மாதிரி சொன்னாலும் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 2. எப்பாடு பட்டாலும் தோற்கக்கூடாது என ஜெ நினைக்கிறார்...இவ்வாறு நினைப்பதே அவருக்கு கிடைத்த தோல்வி....///
  க.க.க.போ

  பதிலளிநீக்கு
 3. //எப்பாடு பட்டாலும்//

  கலைஞர் பேரன் படத்து வசனமெல்லாம் சொல்லிக்கிட்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையெல்லாம் நீங்கள் நினைவில் வைத்துகொண்டு....!

   நீக்கு
 4. //ஒரு கோடி//

  யோவ் அது ஒரு ப்லொவ்வில் சொன்னது அதுக்கெல்லாம் போய்...இப்ப ஞபாக படுத்திகிட்டு.

  பதிலளிநீக்கு
 5. //சென்னைக்கும் இப்போது இரண்டு மணி நேரம் பவர் கட்..//

  பய புள்ளைக்கு என்ன ஒரு கிளுகிளுப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு கிளுகிளுப்பு ..சென்னைவாசிகளுக்கு இப்போதுதான் கிறுகிறுப்பு

   நீக்கு
 6. அரசியல்வாதிகள்! அப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 7. அவர்களுக்கு தோனுது! உங்களுக்கு என்னங்க ! Any problem ?

  பதிலளிநீக்கு
 8. ஸலாம் சகோ.ஹாஜா,
  எல்லாரையும் நல்லா தாளிச்சு இருக்கீங்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மச்சான்,

  /*அது என்ன ஓரவஞ்சனை....எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள் என்றால் எல்லாவற்றையும் சேர்ந்துதானே அனுபவிக்க வேண்டும்? சென்னையில் மட்டுமா தொழிற்சாலைகள் இயங்குகின்றன...?சென்னையில் மட்டுமா பள்ளிகள் இருக்கின்றன? */

  பள்ளிகள் எல்லா ஊரிலும் இருக்கின்றன, தொழிற்ச்சாலைகளும் எல்லா ஊரிலும் இருக்கின்றன. ஆனால்..ஆனால்... நான் சென்னையில் மட்டும் தானே இருக்கின்றேன். அத நாள் தான் மின்வெட்டு இங்கு கம்மி. ஹி.ஹி.ஹி.ஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மச்சான் அப்ப நீங்க ஊருக்கே வரக்கூடாது ஓகே யா

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....