நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 நவம்பர் 2012

துப்பாக்கி....விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!

இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என என் மனதுக்கு படுகிறது...ஏன் என்றால் நாட்டில் உள்ள பிரச்சினைகளை  துப்பாக்கியில் இருந்து சீறி வரும் புல்லட்டை போல பாய்ந்து வந்து தீர்க்கப்போகிறார் என்பதை மனதில் வைத்தே படத்துக்கு துப்பாக்கி என பெயர் வைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்....

துப்பாக்கி ........................மாற்றானுக்கு மேல்

துப்பாக்கி...........................சகுனிக்கு மேல்

துப்பாக்கி.........................தாண்டவத்துக்கு மேல்



ராணுவ வீரரான விஜய் நாட்டிற்கு வரும் பேராபத்தை எப்படி புல்லட்டாக  சீறி சிதறடிக்கிறார் என்பதே இந்த துப்பாக்கி ....

விஜய் வழக்கம்போல ஆடுகிறார்,சண்டைகாட்சிகளில் ஒரே அடியில் 25 பேரை கீழே சாய்க்கிறார் ...ஒரு பாட்டும் பாடி இருக்கிறார்....கொஞ்ச நாட்களாக விட்டு இருந்த நல்ல பழக்கமான பஞ்ச் டயலாக்குகளையும் மீண்டும் இந்த படத்தில் வாயில் எடுத்து இருக்கிறார்.....

இப்படி எல்லாம் விமர்சனம் எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன்....ஆனால் அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மலேசியாவில் துப்பாக்கி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படாததால்  நானும் தப்பித்தேன்...நீங்களும் தப்பீத்தீர்கள் ....

ஆனால் விடமாட்டேன்....இன்று பார்த்துவிட்டு நாளையே உண்மையான விமர்சனம் எழுதி ஏதோ விஜய்க்கு நம்மால ஆன உதவியை செய்யாமல் விடமாட்டேன்...

விஜய்க்கு இந்த படம் ஹிட் அடிக்குமா இல்லையா என தெரியவில்லை....ஆனால் இந்த பதிவு ஹிட் அடிக்கும் என தோன்றுகிறது....!ஹி ஹி!

தீபாவளி வாழ்த்துக்கள்  நண்பர்களே...



28 பிப்ரவரி 2012

பெண்களை செக்சி என சொன்னால் தவறில்லையாம் ...அழகிரி,ரஜினியின் ஒரு கோடி (நொறுக்கு தீனி)


யாராவது பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது..........இவ்வாறு கூறி இருக்கிறார் மம்தா சர்மா....இவர் யார் தெரியுமா? தேசிய மகளிர் ஆணையத் தலைவி ....அட கொடுமையே ...அட கொடுமையே....


பசங்க சும்மா இருந்தாலும் இந்த பாட்டி சும்மா இருக்காம தூண்டி விடுதே...இதெல்லாம் நமது நாட்டில் நடைமுறை சாத்தியமா?ஒருவேளை மம்தா சர்மாவின் குடும்பத்தில் உள்ளவர்களை அவ்வாறு சொன்னால் அவர் அதை பாசிடிவ்வாக எடுத்துகொள்வார் போல....இல்லை நாலு பேர் குடித்துவிட்டு போய் அவரிடமே நீங்கள் ரொம்ப செக்சியாக இருக்குறீர்கள் என சொன்னாலும் தவறாக எடுதுகொள்ளமாட்டார் என நிச்சயமாக நம்பலாம்...

அவர் வேற யாராக இருந்தது இந்த கருத்தை சொன்னாலும் அதை யாரும் பெரிதுபடுத்த போவதில்லை...அவர் இருப்பது ஒரு பெரிய பொறுப்பில்....என்னத்த சொல்றது....!

................................. ........................................... ...........................................


சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் 20,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மின் தடை காரணமாக வேட்பு மனுவைப் பார்க்கக் கூட தேர்தல் அதிகாரியால் முடியவில்லை. இதையே சொல்லி வாக்கு கேட்போம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.


உங்களை யார் சார் கரண்ட் இல்லாத நேரத்தில போய் மனுதாக்கல் செய்ய சொன்னது? ஹி ஹி...ஆனாலும் ரொம்ப தில்லுதான்...திரும்பவும் இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறி இருக்கிறாரே....பார்ப்போம் அஞ்சா நெஞ்சனின் பார்முலா என்ன ஆக போகிறது என்று..!

........................................ ................................................. .......................

ஒரு தொகுதியில் நடக்கும் இடைதேர்தலுக்காக 32 அமைச்சர்களை நியமித்து இருக்கிறார் ஜெயலலிதா....இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அமைச்சர்களா ?இல்லை சங்கரன்கோவிலுக்கு மட்டும் அமைச்சர்களா?எப்பாடு பட்டாலும் தோற்கக்கூடாது என ஜெ நினைக்கிறார்...இவ்வாறு நினைப்பதே அவருக்கு கிடைத்த தோல்வி....

................................................ ......................................... ...............................

ஒருவழியாக சென்னைக்கும் இப்போது இரண்டு மணி நேரம் பவர் கட்....நாங்கள் பெற்ற இன்பத்தை இப்போது சென்னை மக்களும் அனுபவிக்க போகிறார்கள் ....இதுவே தாமதம் என்கிறேன் நான்....

அது என்ன ஓரவஞ்சனை....எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள் என்றால் எல்லாவற்றையும் சேர்ந்துதானே அனுபவிக்க வேண்டும்? சென்னையில் மட்டுமா தொழிற்சாலைகள் இயங்குகின்றன...?சென்னையில் மட்டுமா பள்ளிகள் இருக்கின்றன?சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் மற்ற இடங்கள் மாதிரி எட்டு மணிநேரம் மின் தடையிலிருந்து விதிவிலக்கு அளித்து இரண்டு மணி நேரம் பவர் கட் செயல்படுத்தி இருப்பது நல்லது..இதன் மூலம் தமிழகம் முழுக்க மின்தடை நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்... !

............................. .................................. ................................................

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரொம்ப நல்ல விஷயம்....நல்லத சீக்கிரம் ஆரம்பிங்கப்பா...

உடனே பிடிங்கப்பா ரஜினியை....நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அவர் வாக்கு கொடுத்து இருக்கிறார்....அவர்தான் வாக்கு கொடுத்தா அதை செய்யாமல் விட மாட்டாரே !


ஒரே நாட்டில் இருந்தது கொண்டு தண்ணீருக்காக அடித்து கொள்வது எவ்வளவு கேவலமான விஷயம்..!இதன் மூலமாவது அதற்கு முற்றுபுள்ளி இப்ப இல்லாட்டியும் விரைவில் கிடைக்கட்டும்...

22 பிப்ரவரி 2012

பணத்தட்டுப்பாடா ?தமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக்க....!



என்னப்பா இது? நம்ம தமிழ்நாடா இது?சர்வசாதாரணமாக கொள்ளை அடிக்கிறார்கள்....

வாக்கிங் போற மாதிரி வந்து வங்கிகளில் கொள்ளை அடித்து போகிறார்கள்...

எந்த ரிஸ்க்கும் இல்லை....வங்கிக்கு சென்றால் ஈசியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் சம்பாரிக்கலாம் !என ரெக்கை கட்டி அலைகிறது கொள்ளை கும்பல்...இரண்டு துப்பாக்கி இருந்தால் போதும்..அது பொம்மை துப்பாக்கியாக கூட இருக்கலாம்....இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை அடித்துள்ளனர்.....

இதற்கு ஒரு மாதத்திற்கு முன் இதேபோல ஒரு வங்கியில் கொள்ளை அடித்தவர்களை இன்னும் நம் போலீஸ் பிடிக்கவில்லை....


வங்கிகளில் கொள்ளை அடித்தவர்கள் இந்தி கலந்த தமிழில் ! பேசியதால் அவர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகமாம்..யம்மாடி .உலக மகா கண்டுபிடிப்புடா இது.....


வீட்டில் இருந்தால் திருடு போகலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வங்கிகளில் பணத்தை போடுகிறார்கள்....அங்கும் கொள்ளை போனால்..?



நேற்று என்னடான்னா திருப்பூரில் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 38 கிலோ தங்கத்தை அலேக்காக தூக்கி சென்றுள்ளனர்....இப்பவெல்லாம் நகை கடையில் கொள்ளை அடிக்க நடந்தே வருவதுதான் கொள்ளையர்களின் ஸ்டைல் போலும்....

பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே
ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். அப்புறம் என்ன நகை எடு கொண்டாடுதான்...!



ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உள்ளே நுழைந்தவுடன் எதை அள்ளுவது எதை விடுவது என கொள்ளையர்கள் திணறி போயிருப்பார்கள்....!அப்புறம் போனால் போகிறதென்று லாக்கரை உடைக்காமல் வெளியில் இருந்த நகைகளை அள்ளி சென்றுள்ளனர்...


இதில் என்ன கொடுமை என்றால் அந்த நகை கடையில் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இரவு கேமராக்களை நிறுத்தி விடுவார்களாம்....அப்பறம் எதுக்கு கேமரா ?உங்க கடைக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை நம்பாமல் அவர்களை கண்காணிக்க கேமரா ..ஆனால் கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு இலவச சர்விஸ் ....நல்லா இருக்குய்யா நியாயம்...!


இதையெல்லாம் பார்க்கும்போது " தான் பதவி ஏற்றவுடன் செயின் பறிப்பு திருடர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்கள் எல்லாம் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என ஜெயலலிதா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது....

அவர் சொன்னதும் உண்மைதான் போலும்....ஆமாம் செயின் பறிப்பவர்கள்,பிக் பாக்கெட் அடிப்பவர்கள் என சிறு திருடர்களைதானே அஞ்சி ஓடி விட்டதாக சொன்னார்..

வங்கிகளில்,நகை கடைகளில் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் மிக பெரிய கொள்ளையர்கள்தானே ...!

தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.....கொள்ளை அடிப்பவர்களுக்கு அதே காவல்துறையினர் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது....தங்களை பிடிக்க மாட்டார்கள் என்று..!