22 பிப்ரவரி 2012

பணத்தட்டுப்பாடா ?தமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக்க....!என்னப்பா இது? நம்ம தமிழ்நாடா இது?சர்வசாதாரணமாக கொள்ளை அடிக்கிறார்கள்....

வாக்கிங் போற மாதிரி வந்து வங்கிகளில் கொள்ளை அடித்து போகிறார்கள்...

எந்த ரிஸ்க்கும் இல்லை....வங்கிக்கு சென்றால் ஈசியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் சம்பாரிக்கலாம் !என ரெக்கை கட்டி அலைகிறது கொள்ளை கும்பல்...இரண்டு துப்பாக்கி இருந்தால் போதும்..அது பொம்மை துப்பாக்கியாக கூட இருக்கலாம்....இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை அடித்துள்ளனர்.....

இதற்கு ஒரு மாதத்திற்கு முன் இதேபோல ஒரு வங்கியில் கொள்ளை அடித்தவர்களை இன்னும் நம் போலீஸ் பிடிக்கவில்லை....


வங்கிகளில் கொள்ளை அடித்தவர்கள் இந்தி கலந்த தமிழில் ! பேசியதால் அவர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகமாம்..யம்மாடி .உலக மகா கண்டுபிடிப்புடா இது.....


வீட்டில் இருந்தால் திருடு போகலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வங்கிகளில் பணத்தை போடுகிறார்கள்....அங்கும் கொள்ளை போனால்..?நேற்று என்னடான்னா திருப்பூரில் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 38 கிலோ தங்கத்தை அலேக்காக தூக்கி சென்றுள்ளனர்....இப்பவெல்லாம் நகை கடையில் கொள்ளை அடிக்க நடந்தே வருவதுதான் கொள்ளையர்களின் ஸ்டைல் போலும்....

பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே
ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். அப்புறம் என்ன நகை எடு கொண்டாடுதான்...!ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உள்ளே நுழைந்தவுடன் எதை அள்ளுவது எதை விடுவது என கொள்ளையர்கள் திணறி போயிருப்பார்கள்....!அப்புறம் போனால் போகிறதென்று லாக்கரை உடைக்காமல் வெளியில் இருந்த நகைகளை அள்ளி சென்றுள்ளனர்...


இதில் என்ன கொடுமை என்றால் அந்த நகை கடையில் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இரவு கேமராக்களை நிறுத்தி விடுவார்களாம்....அப்பறம் எதுக்கு கேமரா ?உங்க கடைக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை நம்பாமல் அவர்களை கண்காணிக்க கேமரா ..ஆனால் கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு இலவச சர்விஸ் ....நல்லா இருக்குய்யா நியாயம்...!


இதையெல்லாம் பார்க்கும்போது " தான் பதவி ஏற்றவுடன் செயின் பறிப்பு திருடர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்கள் எல்லாம் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என ஜெயலலிதா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது....

அவர் சொன்னதும் உண்மைதான் போலும்....ஆமாம் செயின் பறிப்பவர்கள்,பிக் பாக்கெட் அடிப்பவர்கள் என சிறு திருடர்களைதானே அஞ்சி ஓடி விட்டதாக சொன்னார்..

வங்கிகளில்,நகை கடைகளில் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் மிக பெரிய கொள்ளையர்கள்தானே ...!

தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.....கொள்ளை அடிப்பவர்களுக்கு அதே காவல்துறையினர் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது....தங்களை பிடிக்க மாட்டார்கள் என்று..!

25 கருத்துகள்:

 1. சும்மா இருங்கவோய்...எந்த நேரத்தில்..எந்த இடத்துக்கு..ட்ரான்ஸ்பர் அவோன்னு தெரியாம..கொலப்பதில்..இருக்காயங்க அதிகாரிகள் பாவம்யா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி...அதிகாரிகளின் மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறீர்களே...

   நீக்கு
 2. பதிவில் சூடு பறக்கிறது !

  பதிலளிநீக்கு
 3. /* தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.....கொள்ளை அடிப்பவர்களுக்கு அதே காவல்துறையினர் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது....தங்களை பிடிக்க மாட்டார்கள் என்று..! */

  பஞ்ச டயலாக் நச்.... அது எப்படி மச்சான் இரண்டு பேருக்கும் ஒரே விஷயம் பற்றி பதிவிட தோணிச்சு??? நானும் இதைப்பற்றி தான் பதிவிட்டுள்ளேன் இன்று. ஆனாலும், என் பதிவை விட உங்கள் பதிவு சூப்பர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மச்சான்....இதுதான் டெலிபதி என்பதோ....

   நீக்கு
  2. இந்த டெலிபதி எனக்கும்தான்.என் பதிவும் இதை பற்றித்தான்.

   நீக்கு
  3. ஆமாம்...ஒரே டிஸ்...மூன்று பேர் சமையல்...

   நீக்கு
 4. ஆலுக்காஸ் கடை உரிமையாளர்கள் மீதும் தவறு உள்ளது. பொதுவாக நகைக்கடை காரர்கள் ஷோகேசில் இருக்கும் அனைத்து நகைகளையும் பத்திரமாக ஓரிடத்தில் பூட்டி விட்டுதான் செல்வார்கள். ஆனால் இவர்களோ அப்படியே வைத்து விட்டு சென்றதால் திருடர்களுக்கு சிரமம் இல்லாமல் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
 5. எப்பவாது ஒரு சம்பவம்ன்னா பரவாயில்லிங்க...

  அது சரி மாசம் ஒண்ணு அப்படின்னாலும் ரைட்டு...

  இது தினமும்ல்ல நடக்குது...

  நகைக்கடையில் 40 கிலோ தங்கம் கொள்ளை .. எப்படி இருக்குது பாருங்க தமிழகம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்...கொள்ளையர்களுக்கு எந்த பயமும் இல்லை....நன்றி...

   நீக்கு
 6. திரட்டிகளில் தாங்கள் இணைப்பதில்லையா...

  எனக்கு ஓட்டுகள் போடமுடியவில்லை.

  இண்டிலி மற்றும் தமிழ் 10 போன்ற வற்றில் தாங்கள் .in லிலே இணையுங்கள்... அப்போதுதான் எல்லோரும் ஓட்டு போடமுடியும்

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. மக்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் நிகழ்ச்சிகள்தான்

  பதிலளிநீக்கு
 9. Aashiq Ahamed

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  என்னப்பா ஒரே ஊரு காரங்க மூணு பேரும் ஒரே கருத்தை கொண்டு இன்னைக்கு பதிவு... :) பரவா இல்ல. விதவிதமா விமர்சனம் நல்லா தான் இருக்கு.

  //இதில் என்ன கொடுமை என்றால் அந்த நகை கடையில் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இரவு கேமராக்களை நிறுத்தி விடுவார்களாம்....அப்பறம் எதுக்கு கேமரா ?உங்க கடைக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை நம்பாமல் அவர்களை கண்காணிக்க கேமரா ..ஆனால் கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு இலவச சர்விஸ் ....நல்லா இருக்குய்யா நியாயம்...!//

  நச். மிகவும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை...நான் என்னுடைய மெயிலில் பார்த்து அதை எடுத்து இங்கு போட்டேன்....என்ன பிரச்சினை..?

   நீக்கு
 10. முஹம்மத் ஆஷிக் citizen of world~ mohaashik@gmail.com via blogger.bounces.google.com

  14:17 (22 hours ago)

  to me

  ஸலாம் சகோ.ஹாஜா,

  பயங்கரமான பதிவு சகோ. படிக்கும்போதே பீதியூடுகிறது.

  நல்லவேளை,
  கொள்ளைக்காரர்கள் இடையில் இங்கிலீஷ் பேச வில்லை. இல்லையேல் அந்நிய நாட்டு சதியாகி இருக்கும். நல்லா கண்டு பிடிகிக்கிராங்கப்பா.

  எனினும்,
  (கொள்ளை அடிக்க)வந்தாரை(யும்) வாழவைக்கும் தமிழகம்... என்றாகிவிட்டதே..!

  கொடுமை சகோ. ###

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை...நான் என்னுடைய மெயிலில் பார்த்து அதை எடுத்து இங்கு போட்டேன்....என்ன பிரச்சினை..?

   நீக்கு
 11. போட்டு தள்ளியாச்சு .....இதற்கு இனி அவசியம் இல்லை.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....