01 பிப்ரவரி 2012

ரஜினி ,கமல்,விஜய் அஜித் என்ன கிழித்தார்கள் இவர்களெல்லாம் ?


தமிழ் நாட்டில் உள்ளது போல உலகில் வேறு எங்கும் நடிகர்களுக்கு ரசிகர்மன்றங்கள் ஆயிரகணக்கில் இருந்து இல்லை....

தனது ஆஸ்தான நடிகனின் பட ரிலீசின்போது தமிழ்நாட்டு ரசிகர்கள் செய்யும் பாலபிசேகம்,பீர் அபிசேகம், அலகு குத்துதல்,போன்ற முட்டாள்தனமான காரியங்களை உலகில் வேறு எந்த ரசிகனும் செய்வதில்லை.....

நடிகர்கள் மட்டுமல்ல நடிகைக்கும் கோயில் கட்டிய பெருமை தமிழக ரசிகர்களுக்கே உண்டு....

தமிழக ரசிகர்களுக்கு அவர்களின் ஆஸ்தான நடிகன்தான் ரோல் மாடல் ....


ஆனால் நடிகர்களுக்கு?

அவர்களுக்கு என்றுமே ரசிகர்கள் விசிலடிக்கவும் ,கைதட்டவும் மட்டுமே தேவைப்படும் கருவேப்பிலைகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளனர் நடிகர்கள்.....


தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்மன்றங்கள் இருக்கும்....ஆனால் எந்த நடிகராவது நேரில் போய் ஆறுதல் சொன்னார்களா?

ரஜினிக்காக உயிரை வருத்தி விரதம் இருந்த ரசிகர்களுக்காக அவர் கொடுத்த நிவாரண தொகை பத்து இலட்சம்..! எம்மா பெரிய தொகை.....?ஏன் கொஞ்சம் கூட கொடுத்தா குறைந்தா போய்விடுவார் ரஜினி?இது அவர் ஒரு படத்துக்கு வாங்குவதில் இரண்டு சதவீதம் கூட இருக்காது......

சூர்யாவும் பத்து இலட்சத்தை கொடுத்து தனது கடனை கழித்துள்ளார்! எவ்வளவு பெரிய மனசு இவர்களுக்கு?

விஜய்யும் பெயருக்கு நிவாரண உதவிகள் அளித்துள்ளார்....


இவர்களாவது பரவாயில்லை...கமல்,அஜித், விக்ரம் ,சிம்பு,விசால் ,தனுஷ் போன்ற நடிகர்கள்
என்ன செய்தார்கள் தங்களின் ரசிகர்களுக்கு?ரசிகர்களின் காசினால் சம்பாரித்து கோடிகளில் புரளும் இவர்கள் அந்த ரசிகர்களுக்காக கிள்ளி கூட சல்லி காசை கொடுக்கவில்லையே ?இவர்களா உங்கள் ரோல் மாடல் ரசிகர்களே?

திரையில் மட்டுமே இவர்கள் சாகசம் புரியும் நல்லவர்கள்....கிராமத்தை தத்து எடுப்பவராக ,மக்களுக்கு உதவி செய்பவராக ,ஏழைகளை காப்பவர்களாக நடிக்கும் இவர்கள் இப்போது மக்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் ஏதாவது ஒரு படபிடிப்பில் குத்தாட்டம் ஆடி கொண்டு இருப்பார்கள்....இவர்களா உங்களின் தல,தளபதி, இன்ன பிற இழவுகள் எல்லாம்?

இவர்கள் அனைவரும் நினைத்தால் ஒன்றுசேர்ந்து சில கிராமங்களை புனரமைக்கலாம்... சில வீடுகளை கட்டி கொடுக்கலாம்...நிச்சயம் செய்யலாம்...இதைவிட்டு விட்டு ஆளுக்கு ஐந்து இலட்சம்,பத்து இலட்சம் என எண்ணி கொடுக்கிறார்கள்....


தமிழ்நாட்டு மக்களின் பணத்தினால் கொழித்து கொண்டிருக்கும் நடிகர்களுக்கு அம்மக்களுக்கு உதவி செய்ய மனம் வரவில்லை....இதை எப்போது தமிழக ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்?


தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாத நடிகர்களை ஒட்டுமொத தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும்..


நடிகர்களை வெறும் நடிகனாகவே மட்டும் பாருங்கள் ரசிகர்களே....அவர்கள் வேறு எந்த சிறப்பையும் பெற்றவர்கள் அல்ல.....

இதை படிக்கும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் தங்களை தானே புயலால் பாதிக்கப்பட்ட ஒருவனாக எண்ணி படியுங்கள்...உண்மை விளங்கும்.....

22 கருத்துகள்:

  1. //நடிகர்களை வெறும் நடிகனாகவே மட்டும் பாருங்கள் ரசிகர்களே//

    சரியாக சொன்னிர்கள் - நான் அடிகடி சொல்லும் விசயம் ஒண்ணுதான் தமிழன் சினிமா என்ற மாயை விட்டு வெளி வந்தாலே போதும்.சினிமா என்பது ஒரு கேளிக்கை, பொழுதுபோக்கு மட்டுமே அதுவே வாழ்க்கை அல்ல.

    பதிலளிநீக்கு
  2. உலகில், நமது ஊரில் நிறைய பணக்காரர்கள் உண்டு. இதே ரஜினி, விஜய், கமல் சூர்யா எல்லாம் ஓட்டாண்டியாகி விட்டால் எவர் இவர்களுக்கு பணம் தருவார்களாம்?

    திரையுலகில் பணம் அதிகம் சம்பாதித்து சின்னபின்னாமாகி போன பலரின் கதை தெரிந்து கொள்ள சினிமா உலகத்துக்கு சென்று வாருங்கள்.

    உலகில் நிறைய பைத்தியங்கள் உண்டு என ஒரு சகோதரி சொன்னார். அது முழுக்க முழுக்க உண்மை. இதில் சினிமா பைத்தியங்கள் மட்டும் விதிவிலக்கா?

    பதிலளிநீக்கு
  3. நீங்க என்ன சொல்ல வரிங்க சார்..?

    பதிலளிநீக்கு
  4. குறிப்பிட்ட நடிகர்கள் மட்டும் தமிழ்நாட்டில் நடிகர்களா? மற்றவர்கள் இல்லையா? தமிழ்நாட்டில் எத்தனையோ பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பண முதலைகள் என்று இருக்கிறார்கள். நடிகர்களுக்கும் குடும்பம், குழந்தைகள், கஷ்டம் , இப்படி ஆயிரம் இருக்கிறது. இவர்களும் மனிதர்கள் தான். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு துயரத்தில் பங்கெடுக்கவும், பொருளாதார சீரமைவுக்கு உதவும் கடைகோடி குடிமகன் முதல் உயர்மட்டத்தில் இருப்பர்களுடன் மேற்குறிப்பிட்டவர்களும் உதவலாம். அதற்கு மனிதத் தன்மை வேண்டும். அது ஒன்றே மகத்தானது. பணத்தைவிட முதலில் பாதிக்கப்பட்டவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிப்பதுதான் முதன்மையானது. பிறகுதான் அனைத்தும். நடிகர்கள் மட்டும் பணக்காரர்கள் அல்ல என்பதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்பினேன்.. மற்றபடி தங்களின் கேள்வியும், உள்ளுணர்வும் சரியானதே.. தொடர்ந்து எழுதுங்கள்.. ! மேலும் சிறக்க வாழ்த்துகள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்....நன்றி....

      நீக்கு
  5. நச்சுன்னு சொன்னீங்க மச்சான்.

    பதிலளிநீக்கு
  6. boss vijay nivarana uthavi valangunathu ulagathuke theriyum. entha actorum pannathatha vijay than first start pannunaar. varalaru mukkiyam. theriyama postum podareenga.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆதங்கம் புரிகிறது ! மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் முதலில் வர வேண்டும் .... அது யாராக இருந்தாலும் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  8. //நடிகர்களை வெறும் நடிகனாகவே மட்டும் பாருங்கள் //
    பின்பு எதற்காக அவர்களை நிவாரணபணிக்காக நாடும் அரசு ஆக பார்க்கிறீர்கள்? அவர்கள் இந்த அளவு சம்பளம் வாங்குகின்றனர் என்றால் அது அவர்களின் உழைப்பு. முதல் படத்திலேயே வாங்கவில்லையே? அவர்களை விடவும் வருமானம் கூடிய தொழிலதிபர்கள் இல்லையா? ஏன் அவர்களை குறிப்பிடவில்லை? மற்றபடி நடிகர்களை role model ஆக கொள்வது கண்டிக்கப்படவேண்டிய விடயமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிவாரண பணிக்கு அரசு மட்டும் உதவி செய்தால் பத்தாது என்பதால்தான் அரசே நிவாரணத்துக்காக நிதி வாங்குகிறது சகோதரி....உழைப்புக்கு சம்பளம் வாங்குகிறார்கள் சரிதான்...ஒரு படத்துக்கு வரும் மக்களின் கூட்டத்தை வைத்துதான் அப்படத்தின் வசூல் தீர்மானிக்க படுகிறது...வசூலை வைத்துதான் நடிகர்களின் சம்பளம் தீர்மானிக்க படுகிறது....எனவே அந்த சம்பளம் ஒருவகையில் மக்களால்தான் முடிவு செய்ய படுகிறது...அப்புறம் நீங்கள் சொல்லும் எந்த தொழில் அதிபருக்கும் ரசிகர் மன்றங்கள் வைத்து மக்கள் யாரும் நேரத்தை செலவு செய்வதில்லை...நடிகர்களுக்குத்தான் ரசிகர்மன்றங்கள் உண்டு...அவர்களுக்கு உதவினால் தப்பா?

      நீக்கு
    2. இரண்டாவது நீங்கள் சொன்னதுபடி தொழிலதிபர் ராமசாமி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளார் சகோதரி.....

      நீக்கு
    3. பெயரை வைத்து பெண் என்று முடிவு கட்டி விட்டீர்களா?அது சும்மா வைச்சது. எந்த விடயம் என்றாலும் மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து தான் சம்பளம் அல்லது வருமானம் தீர்மானிக்கப்படும். அந்த வரவேற்பை பெற அவர்கள் அடைந்திருக்க கூடிய கஷ்டங்களையும் பார்க்க வேண்டும்.
      //அப்புறம் நீங்கள் சொல்லும் எந்த தொழில் அதிபருக்கும் ரசிகர் மன்றங்கள் வைத்து மக்கள் யாரும் நேரத்தை செலவு செய்வதில்லை...நடிகர்களுக்குத்தான் ரசிகர்மன்றங்கள் உண்டு...அவர்களுக்கு உதவினால் தப்பா?//
      உதவினால் தப்பு இல்லை தான். உதவ வேண்டும் என எதிர் பார்க்கலாமே தவிர உதவவில்லை என்பதற்காக திட்டுவதற்கு நமக்கு உரிமை எல்லை நண்பா..
      அப்புறம் ஒரே ஒரு தொழிலதிபர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறாரா?

      நீக்கு
  9. நீங்கள் சொல்வது உண்மைதான்....அதேநேரத்தில் ஏற்றிவிட்ட ரசிகர்கள் ,மக்கள் ஒரு மீளாத துன்பத்தில் இருக்கும்போது அதை மீட்க வேண்டாமா?மூச்சுக்கு மூச்சு ரசிகர்கள்தான் என் உயிர் என்று கூறிய நடிகர்கள் அம்மக்களுக்கு செய்யும் உதவிகள் பெரிதாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து...அப்புறம் நீங்கள் சொன்னதுபோல ஒரே ஒரு தொழில் அதிபர் கொடுத்தாலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.... எந்த நடிகரும் ஐம்பது லட்சம் கூட கொடுக்கவில்லை....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....