17 பிப்ரவரி 2012

ரத்தகாட்டேறி அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போருக்கு தயாராகும் உலக மகா தீவிரவாதி ....


உலக மகா தீவிரவாத நாடான அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போர் என்ற போர்வையில் தனக்கு கீழ்படியாத நாடுகளிடம் கோரமுகத்தை காட்டி மனித ரத்தத்தை குடிக்கும் ரத்த காட்டேரியான அமெரிக்கா இப்போது ஈரானை வேட்டையாட துடிக்கிறது....


தான் என்ன செய்தாலும் தலையாட்டும் அடிமை நாடுகளை சாட்சிக்கு வைத்துகொண்டு, தனக்கு கட்டுபடாத நாடுகளையும் அப்பாவி பொதுமக்களையும் அழிப்பதற்காக காஸ்ட்லியான பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் தீவிரவாத செயல்களுக்கு அமெரிக்கா வைத்திருக்கும் பெயர்தான் போர் .....


அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஏதாவது ஒரு அரபு நாடுகள் மீது போர் தொடுப்பது அமெரிக்க அதிபர்களின் வழக்கம்....மக்களிடம் சரிந்து கிடக்கும்தங்களது செல்வாக்கை மீட்பதற்காகவே இந்த போர் எனும் நாடகம்....தற்போதைய அதிபர் ஒபாமாவும் இதற்கு விதிவிலக்கல்ல...அமெரிக்காவில் சரிந்திருக்கும் தனது செல்வாக்கை சரிகட்ட ஈரானை பகடைகாயாக்கியுள்ளார் ஒபாமா...


அணு ஆயுதங்களை உருவாக்க தேவையானது யுரேனியம் எரிபொருள். இதனை தூய்மைப்படுத்தவும் குறைந்த சேதாரத்தில், மிக விரைவாக உருவாக்கவும் சூப்பர்சோனிக் வேகத்திலான நான்காம் தலைமுறை செ‌ன்‌ட்‌ரி‌‌பிஜ‌ஸ் எனப்படும் பிரிப்பானை உருவாக்கி இருக்கிறது ஈரான்.


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது.

ஈரானில் மேலும் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களையும் அந்நாட்டு அதிபர் வழங்கியுள்ளார்.

ஈரானின் அணுஆயுத நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அண்மையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையில் இத்தகைய அதிரடி அரங்கேற்றியிருக்கிறது.


உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. ஈரானையொட்டி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பெர்சியன் வளைகுடாவையே தாண்ட முடியும்.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமானால் ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடுவோம் என்று ஈரான் அறிவித்திருந்தது. ஹோர்முஸை மூடினால் பதிலடி கொடுப்போம் என்ற அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதங்களைத் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்கியுள்ளது. ஈரானின் 21 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இக்கப்பல் முகாமிட்டிருக்கிறது.

இந்நிலையில் அணுசக்தி வல்லமையை பகிரங்கமாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்த நிலையில் போர் விமானங்களையும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அவங்க நாட்டில் அவங்க என்ன பண்ணினால் உனக்கு என்னய்யா?

உங்க வீட்டுக்குள் இன்னொருவன் வந்து நாட்டாமை பண்ணினால் சும்மா இருப்பீர்களா?நம்மால் முடியாதல்லவா?அப்புறம் எப்படி ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியும்?

அணுஆயுதமே கூடாதென்றால் முதலில் அமெரிக்கா அல்லவா தன்னிடம் உள்ள அணுஆயுதங்களை அழிக்க வேண்டும்?

அமெரிக்காவிடம் அணுஆயுதம் இருந்தால் அது சரியாம்.....ஈரானிடம் இருந்தால் அது தவறாம்....

இப்போது அமெரிக்காவின் பிரச்சினை எந்த நாடுகளிடமும் அணுஆயுதங்கள் இருக்க கூடாது என்பதா? இல்லை ஈரானில் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்பதா?

இப்படியே ஒவ்வொரு நாடாக அழித்து கொண்டு வரும் அமெரிக்காவை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கைதான் பார்த்து கொண்டு இருக்கின்றன...


உலகை மிரட்டி தனது உள்ளங்கையில் வைக்க துடிக்கும் இந்த தீவிரவாத நாட்டிக்கு எப்போது யாரால் முற்றுபுள்ளி?

12 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  //ரத்த காட்டேரியான அமெரிக்கா இப்போது ஈரானை வேட்டையாட துடிக்கிறது....//

  தயவுசெய்து ரத்த காட்டேரிகளை கேவலப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் அதைவிட இவர்கள் கேடுகெட்டவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   நானும் ஏற்றுகொள்கிறேன்...நன்றி

   நீக்கு
 2. ஈரானும் ஓரளவு பலத்துடன் உள்ளது. தவறான நடவடிக்கை என்று எதுவும் முக்கியமாக தென்படவில்லை.. அடுதது ரஷ்யா சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் இருப்பதால் அவ்வளவு ஈஸியாக ஈரானை வீழ்த்த முடியாது என்றே நினைக்கிறேன். பார்ப்போம்...இறைவனின் நாட்டம் எப்படி என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சுவனப்பிரியன்Feb 17, 2012 09:22 AM
   ஈரானும் ஓரளவு பலத்துடன் உள்ளது. தவறான நடவடிக்கை என்று எதுவும் முக்கியமாக தென்படவில்லை.. அடுதது ரஷ்யா சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் இருப்பதால் அவ்வளவு ஈஸியாக ஈரானை வீழ்த்த முடியாது என்றே நினைக்கிறேன். பார்ப்போம்...இறைவனின் நாட்டம் எப்படி என்று.//
   அப்படியானால் ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் இன்று வீழ்ந்ததற்கும் இறைவனின் நாட்டமே காரணம் என்பதை ஏற்றுல்லொள்கிறீர்களா

   நீக்கு
 3. நீங்கள் சொல்வது சரிதான்...ஈராக் மாதிரி ஈரானை அவளவு சுலபமாக வீழ்த்த முடியாது..

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  //உலகை மிரட்டி தனது உள்ளங்கையில் வைக்க துடிக்கும் இந்த தீவிரவாத நாட்டிக்கு எப்போது யாரால் முற்றுபுள்ளி?//

  உலகில் தன்னிச்சையை மட்டும் இலக்காக கொண்ட சர்வாதிகார அமெரிக்காவின் சாயம் இன்ஷா அல்லாஹ் இனி வெளுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ..

   நன்றி சகோ....சாயம் எப்போதோ வெளுத்து விட்டது...

   நீக்கு
 5. அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்..

  //அவங்க நாட்டில் அவங்க என்ன பண்ணினால் உனக்கு என்னய்யா?// சூப்பரா கேட்டிங்க சகோ, இருந்தாலும் அவங்க நாகரிகத்தில அப்படியெல்லாம் இல்ல. அல்லது அப்படியான நாகரிகம் பத்தி அவங்களுக்கு தெரியல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   நன்றி....அநாகரிகத்தின் பிறப்பிடம் அமெரிக்காதான்...

   நீக்கு
 6. nalla karuththuthaan!
  ulakam porin pothu vedikkai
  paarkkum-appuram thaan
  manitha urimai kalai pesum!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி..அதுவும் ஐ நா என்று ஒன்று எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை....

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....