
அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அண்ணன் தம்பி சண்டையால் பிளவுபட்டு நிற்கிறது.....இதுவரை வெளிப்படையாக மோதாத அழகிரியும்,ஸ்டாலினும் திமுக பொதுகுழுவில் மோதி கத்தரிக்காய் முற்றினால் தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளனர்....
கட்சி தலைவரான கருணாநிதி முன்னிலையிலே அழகிரி ஆதரவாளர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் ரகளையில் ஈடுபட்டு ஜோராக நடத்தி முடித்து இருக்கின்றனர் திமுக பொதுக்குழுவை....
ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவி,கனிமொழிக்கு துணை பொதுசெயலாளர் பதவி என பத்திரிக்கைகள் ஏகத்துக்கும் திமுக தொண்டர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டிவிடபரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுகுழு கூடியது.....காலையில்அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....அதற்கு பிறகுதான் நடந்தது கிளைமாக்ஸ் .....
கருணாநிதி இருக்கும்போதே கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என பேச்சு ஓட துவங்கியது பொதுக்குழுவில்....பாவம் தொண்டர்கள் ..அவர்களும் எத்தனை நாட்கள்தான் ஒரே தலைவரையே பார்த்து கொண்டு இருப்பார்கள்?ஸ்டாலினுக்கு ஆதரவக பலரும் பேசிய நிலையில் பேச ஆரம்பித்தார் அழகிரி ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகம்...
கலைஞர் ஆரோக்கியமாக நம்மை எல்லாம் வழிநடத்தி கொண்டு இருக்கும்போது!! அடுத்த தலைவர் என்ற பேச்சு இப்போது நல்லதல்ல....கலைஞர் குடும்பத்தில் இருந்து யார் தலைவராக வந்தாலும் ஏற்றுகொள்வோம் என வீரபாண்டி ஆறுமுகம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு எதிராகவும்,ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் கிளம்பின....உடனே அழகிரி கோஷ்டியினர் அவருக்கு ஆதரவாக கோஷமிட துவங்கினர்...
மேடையில் இருந்த தலைவர்களாலும், இவர்களை அடக்க முடியவில்லை...இறுதியில் கருணாநிதி பேசித்தான் அடக்க முடிந்தது....
கடைசியில் பேசிய அவர் பொதுகுழு அமைதியாக நடப்பதை விரும்பாத சிலர், வேண்டும் என்றே பிரச்சினைகளை தூண்டி கட்சியை பிளவுபடுத்த சதிசெய்வதாக குற்றம் சாட்டினார்....அண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கும்போது வேறு யாரும் கட்சியை உடைக்க தேவை இல்லை என யாராவது அவருக்கு சொல்லுங்கப்பா.....
இந்த பொதுகுழுவில் ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த அவரின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது....பதவி எதுவும் ஸ்டாலினுக்கு கிடைக்காததில் அழகிரி ஆதரவாளர்களுக்கு சந்தோசம்...
அண்ணா ஆரம்பித்த கட்சியில் ஏதோ தங்கள் குடும்ப சொத்தை பிரிப்பதுபோல அரங்கேறியுள்ளது தலைவர் பதவிக்கான சகோதர யுத்தம்....விடுதலைபுலிகளின் தோல்விக்கு சகோதர யுத்தத்தை காரணமாக சொன்ன கருணாநிதி இப்போது கழகத்தை கலகமாக்கி கொண்டிருக்கும் சகோதர யுத்தத்தை பற்றி என்ன சொல்ல போகிறார்?
Tweet |
அய்யா சாமி தலைவரே..இன்னுமா உங்க பதவி ஆசை உங்களை விடல - மானங்கெட்ட தொண்டன்!
பதிலளிநீக்குபண போதையை விட பதவி போதை மிகவும் ஆபத்தானது மாம்ஸ்...
பதிலளிநீக்குஇவர்களை எல்லாம் திருத்தவே முடியாது !
பதிலளிநீக்குதிருந்தினால்தான் ஆச்சர்யம்..நன்றி நண்பா...
நீக்குஇவங்க குடும்ப ஆட்சி பார்த்தால் மன்னராட்சி தான் ஞாபகத்துக்கு வருது
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்...நன்றி....
நீக்குகருணாநிதியின் மறைவிற்கு பின் கத்திரிக்காய் முத்தி வெடித்து விடும்... அது வரை இந்த பொதுக் குழு விளையாட்டு தொடரும்.
பதிலளிநீக்குஅதுவரை இவர்கள் பொறுக்க மாட்டார்கள்...
நீக்குகடைசி வரிகள் பஞ்ச்.
பதிலளிநீக்குநன்றி சகோ....
நீக்குஸலாம் சகோ.ஹாஜா,
பதிலளிநீக்கு//இறுதியில் கருணாநிதி பேசித்தான் அடக்க முடிந்தது....//---இதிலிருந்து, இப்போதும் திமுகவின் ஒரே தலைவர் யார் என்று நாம் புரியலாம்..!
இவர் செய்த உருப்படியான காரியம்... தன் இரண்டு மகன்களுக்கும் துணை தலைவர் பதவி தராதது.
எதிர்காலத்தில் திமுக உடையாமல் இருக்க வேண்டுமானால்... செய்ய வேண்டிய ஒரே காரியம், ஸ்டாலின் அழகிரி இருவரும் அல்லாத -இருவருக்கும் பொதுவான- வேறொரு எதிர்கால தலைவரை திமுகவுக்கு இப்போதே தேர்ந்தெடுத்தல்..!
வஸ்ஸலாம் சகோ ....
நீக்குஅது நடக்க வாய்ப்பே இல்லை...
நான் சொல்ல விரும்பியதை கடைசி பத்தியில் நீங்களே சொல்லி விட்டீர்கள். இது போல் இன்னும் எத்தனை பொதுக்குழு கூட்டங்கள் நடக்க இருக்கிறதோ?
பதிலளிநீக்குநன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.....
நீக்குவேண்டுமானால் துணைதலைவர் 1 துணைதலைவர் 2 அப்படின்னு பொருப்பை பிச்சு பிச்சு கொடுக்கலாம். என்ன நான் சொல்றது
பதிலளிநீக்குஹா ஹா ..அப்படியும் யாருக்கு முதல் துணைத்தலைவர் என்பதில் போட்டி வரும்....
நீக்குஇன்னும் என்னன்னாவெல்லாம் நடக்குமோ?
பதிலளிநீக்குநன்றி...
நீக்கு