11 பிப்ரவரி 2012

மன்மோகன் சிங்கின் " கொலைவெறி" விருந்து ...!


கொலை வெறின்னு ஒரு பாடலை வைத்துகொண்டு இவர்கள் முதலில் தமிழை கொலை பண்ணினார்கள்...அடுத்து அடுத்து ஏதோ இந்தியாவுக்காக நோபல் பரிசு வாங்கியதை போல இவர்கள் பண்ணும் அலப்பறை இருக்கே....யப்பா...தாங்க முடியல...


இந்த மாதிரி பாடல் எழுதுவது பாடல் ஆசிரியர்களுக்கே அவமானம் ,தமிழை கொச்சை படுத்தி விட்டார்கள் என ஒரு தரப்பு சினிமா துறையிலே பொங்கி கொண்டு இருக்கிறது.....

கொலைவெறி ,அடிடா அவளை போன்ற தரக்குறைவான வரிகள் இளைய சமுதாயம் தடம் மாறுவதற்கு ஒரு காரணம் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....


முதலில் ஒன்று...ஒரு பாடல் ஹிட் ஆவதற்கு முதல் காரணம் இசை அமைப்பாளர் ..பிறகுதான் அதை பாடியவர்களும், எழுதியவர்களும்....ஆனால் இந்த கொலை வெறி பாட்டில் நடந்ததோ அனைத்தும் தலைகீழ்.....இசை அமைப்பாளர் அனிருத்தை ஓரம் கட்டிவிட்டு ஏதோ தன்னால்தான் இந்த பாடல் ஹிட் ஆனதைபோல எல்லா புகழையும் தட்டி கொண்டு சென்று விட்டார் தனுஷ்....


ஒரு பாடல் ஹிட் ஆவது சினிமா சம்பந்தப்பட்ட விஷயம்...ஆனால் இந்தியாவிற்காக ஏதோ அணுகுண்டு தயாரித்ததை போல பிரதமரே தனுசுக்கு விருந்து கொடுத்ததுதான் உச்ச கட்ட கொடுமை.....யார் சொன்னது பிரதமர் சும்மா பொம்மையாக இருக்கிறார் என்று...?அவருக்கு இது மாதிரி எவ்வளவோ வேலைகள் உள்ளன....

ஏன்யா அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? இல்ல சந்திரனுக்கு சந்திராயன் விட்ட மயில்சாமி அண்ணாதுரையா?அவருக்கு கூட பிரதமர் விருந்து கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை....

அடுத்து கொடுமை ஏதோ ஒரு அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த சயின்டிஸ்ட் போல ஒரு புகழ் பெற்ற கல்லூரி தனுசை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொன்னது....என்னங்கடா இது ? ஒரு பாடல்தானே அது?தனுஷ் என்ன தாமஸ் ஆல்வா எடிசனா?மாணவர்களின் தரம் அந்த அளவுக்கு தாழ்ந்து போய் விட்டதா?


அதோட விட்டார்களா ? தனுசுக்கு மட்டும் விருந்து கொடுத்தால் அப்படத்தின் நாயகி சுருதி கோபித்துகொண்டு ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து அதனால் இந்தியாவின் எக்கனாமி இறங்கி விட போவதை போல அவருக்கும் விருந்து கொடுத்துள்ளார் பிரதமர் ..அதுவும்இன்னொரு நாட்டு பிரதமருக்கு விருந்து கொடுக்கும்போது சேர்த்து...!


அட பாவிகளா?மக்களின் வரிபணம்டா அது.....! சுருதிக்கும் அந்த பாட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்? அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் அனிருத்...பாவம்யா அந்த அனிருத்.....அவருக்கும் ஒரு விருந்து கொடுத்து தொலைக்க வேண்டியதுதானே.....!

நாட்டில் ஊழல் ,விலைவாசி பிரச்சினைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கின்றன...இப்போ தனுசுக்கும்,சுருதிக்கும் விருந்துதான் முக்கியமா? தமிழ்நாட்டில் தானே புயல் கோரங்களை பார்வையிட பிரதமர் என்ற முறையில் வர நேரமில்லாதவருக்கு இவர்களுக்கு விருந்து கொடுக்க மட்டும் நேரம் இருக்கிறதாம்....என்ன கொடுமைடா இது?


இன்னும் என்ன கன்றாவியெல்லாம் நடக்க போகிறதோ?......

9 கருத்துகள்:

 1. கொலைவெறி பாடலுக்கு விருந்து கொடுத்த பிரதமருக்கும், விரிவுரை நடத்த சொன்ன அந்த புகழ் பெற்ற (?) கல்லூரிக்கும் கொலைவெறியான என்னுடைய கண்டணங்களை பதிவு செய்கிறேன்.

  அபு நிஹான்

  பதிலளிநீக்கு
 2. நானும் எனது கண்டனங்களை பதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ பாட்ட கேட்டமா...ரசிச்சமா...போனமான்னு இல்லாம,
   விருது கொடுக்கிறேன்...விருந்து கொடுக்கறேன்னு எழவ கொடுக்குறாங்க...

   நீக்கு
 3. 'நச்'ன்னு அடிச்சிருக்க மச்சி..!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....