18 பிப்ரவரி 2012

அமெரிக்காதான் ராஜீவ் காந்தியை கொன்றது...பிரபாகரன் அல்ல...இலங்கை பகிரங்க குற்றச்சாட்டு....


பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ஒருவர்....உடனே சுப்ரமணிய சுவாமிதான் கூறி இருப்பார் என யாரும் தப்புகணக்கு போடவேண்டாம்...

நம்ம நாட்டிற்கு ஒரு சுப்ரமணியசுவாமி போல இலங்கைக்கு ஒருவர் இருக்கிறார்..அந்நாட்டின் அமைச்சர் விமல் வீரவன்ச தான் அவர்....


இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்..

ஆக்சுவலி ராஜீவ் காந்தி காந்தி குடும்பத்தினர் அல்ல என அவருக்கு யார் சொல்லி புரிய வைப்பது?பெயருக்கு பின்னால் காந்தி என பெயர் இருந்தால் அவர் காந்தி குடும்பத்தினரா?அப்ப நடிகை காந்திமதி?


சுப்ரமணிய சுவாமி லூசு மாதிரி பேசினாலும் சில சமயம் அது உண்மையாகவும் இருக்கும்...இந்த அமைச்சர் கூறுவதை எந்த வகையில் சேர்ப்பது?

15 கருத்துகள்:

 1. நீங்க சொல்றது சுவாரசியமாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. பயங்கரவாதி பிரபாகரன் ஒரு பேட்டியில் ராஜிவ்காந்தி கொலை ஒரு துன்பியல் நிகழ்வு என்று ஒப்புக்கொண்டது, இந்த முட்டாள் சுப்பிரமணியன் சாமி..ச்சே ச்சே.. விமல் வீரவன்ச வுக்கு தெரிந்திருக்குமா? இல்லை இவனும் வைகோ சீமான் போல விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுக்கிறானா?

  பதிலளிநீக்கு
 3. காமெடியாக பேசுவதே இந்த அரசியல்வாதிகளுக்கு பொழப்பா போச்சு. :-)

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  செம தமாஷ்...ஊருக்கு ஒரு ஆள் இருப்பாரு போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   அப்புறம் ஒவ்வொரு நாட்ல உள்ளவங்களுக்கும் பொழுது போகணும்ல....

   நீக்கு
 5. //அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்//
  When Rajiv Gandhi was murdered there were sequence of articles from India Today and other magazines, which stated detail about the involvment of C.I.A to Mossad to LTTE. Even the PLO leader Yassir Arafat stated about this involvment(according to media). Later this news faded and become LTTE only. I do not have any deatil(links) right now, I do remember that I have read this news.

  பதிலளிநீக்கு
 6. புதுசு புதுசா ஏதைாயவது கிளப்பி விட்டுகிட்டு இருக்காங்க...


  அரசியல் குழப்பவாதிகள் நாட்டுக்கு ஒருத்தர் இருக்காங்க போல


  உண்மையா பொய்யா பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
 7. சகோ ராஜிவ்வை வைத்து கமெடி கீமெடி பன்னலையே

  பதிலளிநீக்கு
 8. ராஜீவ் காந்தியை கொன்றது பிரபாகரன் அல்ல

  காமெடியாக பேசுவது என்பது வைகோ சீமான்போன்ற தமிழ் மொழி பேசும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல மற்ற அரசியல்வாதிகளுக்கும் பொருந்துகிறது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....