13 பிப்ரவரி 2012

சோனியாவுக்கும் விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு....என் வாயை கிளறவேண்டாம் ..விஜயகாந்த் (நொறுக்கு தீனி)

ராஜ பக்சேவுக்கு பாரத ரத்னா ,சோனியாவுக்கும் விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு! இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுபவர் யாரென நமக்கு தெரியாமல் இருந்தால்தான் ஆச்சர்யம் !

ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வருவதற்கு சுப்ரமணிய சுவாமியும் ஒரு முக்கிய காரணம்....அவர் வாயை திறந்தாலே பூகம்பம்தான்....பல நேரம் காமெடியாகவும்,சில நேரம் சீரியசான காமெடியாகவும் இருக்கும்....

அதுமாதிரிதான் இப்போது ஒன்றை கொளுத்தி போட்டு இருக்கிறார்....

விடுதலைபுலிகளுக்கும் சோனியா மற்றும் இத்தாலியில் உள்ள சோனியா குடும்பத்தினருக்கும் தொடர்பு இருந்ததாம்....!!...ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவுக்கு எதிரான இயக்கம்...அதை ஒழித்து கட்டியவர் ராஜபக்சே ....அதனால அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது கொடுக்கணுமாம்....என்னய்யா இது கொலைவெறி காமெடியா இருக்கு?தமிழ்நாட்டுக்குள் வரும்போது இவரை சாணியால் அடித்துதான் வரவேற்பு கொடுக்க வேண்டும்....


இந்த ஆளு எப்போதுமே லூசு மாதிரிதான் பேசுவாரா? இல்லை அவர் பேச்சே லூசு மாதிரியா?

....................................... ................................................. ..............................

ஆட்சியில் இருக்கும்போது நல்லது செய்வதற்கு கூட பயந்தோம்...இப்போது கெட்டதை கூட துணிச்சலாக செய்வோம் என ஸ்டாலின் பேசி இருக்கிறார்....அட நல்லது செய்ய எதற்கு பயந்தார்கள் என புரியவில்லை.....!இப்ப என்ன கெட்டதை செய்ய போறார் என்று அவருக்கே வெளிச்சம்....பொது குழுவில் எதிர்பார்த்த பதவிகிடைக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாமா பேசுவது?


பொதுவா கெட்டது பண்ணத்தான் பயந்தேன் என பலரும் கூறுவார்கள்...இவர் என்னடான்னா அப்படியே உல்டாவா பேசி இருக்காரே...வாழ்க பேச்சுபுலி! கலைஞரின் வாரிசு....

..................................... .................................................. .........................................
சட்டமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பின்னர் விஜயகாந்தின் சூடு மேலும் அதிகரித்துள்ளது.... ஏதாவது ஒரு மேடை கிடைத்தால் ஜெயலலிதாவை பற்றி பொளந்து கட்டி விடுகிறார்....

என்னை வம்புக்கு இழுத்தால் என் வாயை கிளறினால் உண்மைகளை வெளியிட வேண்டி வரும்..அப்புறம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான் என கேப்டன் விஜயகாந்த் சூறாவளியாக சுழன்று அடித்து கொண்டு இருக்கிறார் தினமும்....என்ன உண்மை, எந்த பூதம் என சீக்கிரம் அவர் சொல்லனும்னா யாராவது அவர் வாயை கிளற வேண்டும்....ஜெயலலிதா கிளருவாரா?

.................................. ........................................... .............................................


சங்கரன்கோவில் இடைதேர்தலில் பாமக போட்டி இடாது என ராமதாஸ் கூறி இருக்கிறார்.....போட்டி இடுவதற்கு அங்கு பாமக ஆட்களே இல்லை என இப்போதுதான் அவர் தெரிந்து கொண்டு இருக்கிறார் போலும்....சும்மா காமெடி பண்ணாதிங்க பாஸ்....


அடுத்த கூட்டணி தயார்....!விஜயகாந்தும் ஸ்டாலினும் நேற்று சந்திந்து பேசி இருக்கின்றனர்..ஒருவேளை இது அடுத்த கூட்டணிக்கு அஸ்திவாரமாக கூட இருக்கலாம்....நேற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர்...அப்போதுதான் சந்தித்து பேசியுள்ளனர்..ம்ம்ம்ம் ....அரசியலில் வேடிக்கை பார்ப்பது என்ன ஒரு சுவாரஸ்யம் நமக்கு...!13 கருத்துகள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அரசியலைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு வாருங்கள்
  ஹா ஹா கலக்குங்க சகோ

  பதிலளிநீக்கு
 2. ஹ...ல்....லோ.... நமக்கு வேலையே ஓட்டை போடணும் அப்புறமா வேடிக்கை மட்டும் பார்கோணும் - திருப்பி மாத்தி ஓட்டை போடணும் மீண்டும் வேடிக்கை பார்கோணும் என்ன புரியுதா??..........

  பதிலளிநீக்கு
 3. கெட்டதை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் எதை சொல்றார்???????

  பதிலளிநீக்கு
 4. அரசியல் செய்திகளை சுடச் சுட தருகிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்....

  இன்னும் என்னனன் கூத்துகள் நடக்க போகுதோ...


  அரசியல் அவலங்கள் நையாண்டியுடன்...
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த அரசியல்வாதிங்க இருக்கும் வரை நையாண்டிகளுக்கு என்றுமே பஞ்சமில்லை...நன்றி...

   நீக்கு
  2. இந்த ஆளு எப்போதுமே லூசு மாதிரிதான் பேசுவாரா? இல்லை அவர் பேச்சே லூசு மாதிரியா?///

   சில நேரங்களில் லூசு மாதிரி....பல நேரங்களில் லூசாகவே...என்னத்தை சொல்றது?

   நீக்கு
 6. எனக்கு ஒரு டவுட்டு. இந்த ஆளு தமிழ்நாட்டுக் காரனா??? இல்லை வேற ஸ்டேட்டா???
  ஏன் அந்தா ஆளு தமிழ் கர்ண கொடூரமா இருக்கு???? லூசு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ....தமிழை மென்று கடித்து கொதறிவிடுவார் பேச்சில்....நன்றி

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....