21 பிப்ரவரி 2012

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும்


கருத்துகணிப்பு என்பது வெறும் ஐம்பது பேருக்கு மட்டுமே பந்தியில் சாப்பாடு போட்டுவிட்டு ஐந்தாயிரம் பேர் பந்தியில் சாப்பிட்டார்கள் என புளுகுவதற்கு சமமானது....


எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் எட்டாயிரம் நபர்களின் கருத்து எப்படி சரியாக இருக்கும்...?அதிலும் குமுதம் போன்ற பத்திரிக்கைகள் கருத்து கணிப்புகள் என்ற பெயரில் எதிர்கட்சிகளுக்கு பாதகமாகவும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவும் சமயத்துக்கு ஏற்ப ஜால்ரா அடித்து வருகின்றன....


குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் அடுத்த தலைவருக்கு யார் பொருத்தமானவர் என சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்துகணிப்பை நடத்தி புகைந்து கொண்டு இருந்த அண்ணன் தம்பி சண்டை ஊதி பெரிதாக்கிவிட்டர்கள்...இதில் என்ன கொடுமை என்றால் தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவையும் திமுக தலைவர் போட்டியில் சேர்த்ததுதான்....!


அதே போல இந்த வார குமுதத்தில் ஒரு கருத்துகணிப்பை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துள்ளார்கள்....


அது என்னடான்னா ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தது விஜயகாந்த் வெளியேறியதால் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா இல்ல சரிந்திருக்கிறதா என உலக மகா முக்கியமான விசயத்தை கையில் எடுத்து புள்ளி விபரத்தில் கரைத்து கொடுத்து இருக்கிறார்கள்...


அதில் விஜயகாந்த் செல்வாக்கு உயர்ந்து உள்ளது என 35 சதவீதமும்,சரிந்து உள்ளது என 37 சதவீதமும், மாற்றம் இல்லை என 28 சதவீதமும் முடிவாக எழுதி உள்ளனர்....விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்ததற்கும் , உயர்ந்ததற்கும் வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான்....ஆனால் கருத்து கேட்கபட்டவர்களில் விஜயகாந்த் கட்சியினரைவிட அதிமுகவினரே அதிகம் ...!


மொத்தம் 23550 நபர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்கள்....எட்டரை கோடிக்கும் இருபதாயிரத்துக்கும் எப்படிய்யா ஓட்டும்?

இதுவே முதல் தப்பு.....

அடுத்து என்னன்னா இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் 12 சதவீதம் மட்டுமே.....ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 27 சதவீதம்....என்ன கொடுமைய்யா இது? இதிலே பதினைந்து சதவீதம் அதிமுகவினர் கூட இருக்கின்றார்கள்....

விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது எனவும் .அதிமுகவை சேர்ந்தவர்கள் சரிந்து உள்ளது எனவும்தானே கூறுவார்கள்?அப்படியானால் இந்த கருத்துகணிப்பில் அதிகபட்சமாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தானே பங்கேற்றுள்ளனர்?அப்ப செல்வாக்கு சரிந்துள்ளது என்றுதான் ரிசல்ட் வரும் என விரல் சூப்பும் குழந்தைகூட சொல்லுமே?

இதற்கு சர்வே என பெயர் வேறு..!போங்கய்யா உங்க கருத்து கணிப்பும் புடலங்காயும் ...


புள்ளிவிபர புலி கேப்டனுக்கே ஒரு டுபாக்கூர் புள்ளி விபரமா?


ஆளும் கட்சியின் நிறை குறைகளை சுட்டி காட்டாமல் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் வேலையை கனகட்சிதமாக செய்து வருகிறது குமுதம்...

வாழ்க பத்திரிக்கை தர்மம்.....

9 கருத்துகள்:

  1. என்ன பாஸ் பண்றது எப்பவும் இது தானே நடக்குது இவனுங்களைதான் நாலாம் தூணுன்னு சொல்லிக்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. குமுதத்திற்கு விகடன் எவ்வளவோ மேல்....கொஞ்சமாச்சும் ஆளும்கட்சியை விமர்ச்தித்து எழுதுகிறார்கள்....

    பதிலளிநீக்கு
  3. ஸலாம் சகோ.ஹாஜா,

    அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆரோக்கியமான விமர்சனம்.

    இதுபோன்ற அல்பத்ததனங்களால் 'தம் விற்பனை கூடியுள்ளதா; குறைந்து உள்ளதா' என்று அந்த பத்திரிக்கைகள் பார்க்கின்றன. விற்பனை கூடினால், இதுபோன்ற அல்பத்தனங்கள் இன்னும் கூடும். இதுபோன்ற பத்திரிக்கைகளை மக்கள்தான் புறக்கணிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வஸ்ஸலாம் சகோ...

    ஆம் ..அவர்களுக்கு தேவை அவர்களின் விற்பனை...

    பதிலளிநீக்கு
  5. பத்திரிகை தர்மம்ன்னா என்னப்பா?......
    இப்போதெல்லாம் பதிவர்கள் செய்யும் வேலையில் பாதியைக்கூட பத்திரிகைகள் செய்வதில்லை. இதை பற்றி கடந்த வருடமே நான் எழுதிய ஒரு பதிவு இது. பார்க்கவும்
    கருத்து கணிப்பா? அது டுபாக்கூருங்க அதை நம்பாதீங்க பாஸ்
    http://www.rahimgazzali.com/2011/04/dont-blieve-election-survey.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட் கொஸ்டின்....உங்க பதிவிலே அடித்து துவைத்து காய போட்டுவிட்டீர்களே....நன்றி....

      நீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    கருத்து கணிப்பு என்று சில பத்திரிக்கைகள் ஜால்ரா அடிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.இது பத்திரிக்கைகள் நடத்தும் கருத்து கணிப்பல்ல கருத்து திணிப்பு.
    ////அடுத்து என்னன்னா இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் 12 சதவீதம் மட்டுமே.....ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 27 சதவீதம்....என்ன கொடுமைய்யா இது? இதிலே பதினைந்து சதவீதம் அதிமுகவினர் கூட இருக்கின்றார்கள்..../////
    புள்ளி விவரத்தை நம்ம கேப்டனைவிட நீங்க அதிகமா தெரிந்து வைத்துள்ளீர்கள்.எல்லாம் கேப்டனிடம் தாங்கள் பெற்ற‌ "யானைப்பால்"தானே.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....