
இனி இவரை அடுத்து யார் யாரோ?
ஜெயலலிதாவை பார்க்கவே எங்களுக்கும் அருவெறுப்பாக இருக்கிறது என்று கூறிய விஜயகாந்தா கூட இருக்கலாம்....ஏதாவது ஒரு வழக்கில் விஜயகாந்தை கைது செய்ய நிச்சயம் ஜெயலலிதா துடிப்பார்.....பார்ப்போம்........
.............................. ...................................... ............................................
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராசா வழங்கிய 122 லைசென்சுகளையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது....முறைகேடாக உரிமம் வாங்கிய நிறுவனங்களுக்கு சரியான ஆப்பு வைத்துவிட்டார் நீதிபதி கங்கூலி....வரவேற்கபடவேண்டிய தீர்ப்பு....
................................ ................................. ............................
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கங்கூலி நேற்று ஒய்வு பெற்றுவிட்டார் ....இனி இவ்வழக்கு சரியான பாதையில் செல்லுமா என்பதில் சந்தேகமே....எனவே ஒய்வு பெரும் நாளில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்....நீதி இன்னும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.........
எது எதற்கெல்லாம் நாட்களை கணக்கு பண்ணுகிறார்கள் என்று பாருங்கள்....நேற்றுடன் அருமை ராசா சிறைக்கு சென்று ஒரு வருடம் நிறைவு பெறுகிறதாம் ....வையகம் உள்ளவரை வாழ்க தியாகி ராசா புகழ்...
..................... ...................................... ...........................
சட்டசபையில் தரக்குறைவாக நடந்து கொண்டதால் விஜயகாந்த் பத்து நாட்கள் சபையிலிருந்து நீக்கமாம்...சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் சபை நடப்பது சிங்கம் இல்லாமல் சர்க்கஸ் நடப்பது போல....தவறு இரண்டு பக்கமும்தான்....அப்படியானால் அதிமுக உறுப்பினரையும் நீக்கம் செய்திருக்க வேண்டும்....ஆனால் நடப்பது என்ன மனு நீதி சோழன் ஆட்சியா? இதையெல்லாம் நாம் எதிர்பார்க்க.....
இதில் திமுகவும் விஜயகாந்திற்கு அதரவாக வெளிநடப்பு செய்துள்ளது....எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாலிசியை திமுக கையில் எடுத்து இருப்பதுபோல தெரிகிறது......இதனால் இனி விஜயகாந்தும் ,திமுகவுடன் சுமுகமாக இருந்தாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.....அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது....
அப்படியே நேரம் இருந்தால் ஜெயலலிதாவை பற்றிய விஜயகாந்தின் பேட்டியை பார்த்துவிட்டு செல்லுங்கள்....(நன்றி தினகரன்)
Tweet |
பக்கசார்பு இல்லாத நடுநிலை விமர்சனம்
பதிலளிநீக்கு//ஜெயலலிதாவை பார்க்கவே எங்களுக்கும் அருவெறுப்பாக இருக்கிறது என்று கூறிய விஜயகாந்தா கூட இருக்கலாம்....ஏதாவது ஒரு வழக்கில் விஜயகாந்தை கைது செய்ய நிச்சயம் ஜெயலலிதா துடிப்பார்.....பார்ப்போம்........//
இந்த பயத்தை அவ்வப்போது விஜயகாந்த் தன் பேச்சின் ஊடாக வெளிப்படுத்துகிறார் கவனித்து பாருங்கள் எங்களுக்கு பயமில்லை..பயமில்லை என்கிறார் பாவம்
விஜயகாந்த் அவ்வளவு சுலபமாக சிக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்
நீக்குஹைதர் அலி
நீக்குபக்கசார்பு இல்லாத நடுநிலை விமர்சனம்
##
நன்றி சகோ....
ரஹீம் கஸாலி
நீக்குவிஜயகாந்த் அவ்வளவு சுலபமாக சிக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்##
ஒருவேளை சிக்கினாலும் அவரின் இமேஜ் தான் கூடும்...
hehe!
பதிலளிநீக்குhaa haaa.....
நீக்குஆ ட் ட ம் இனிமேல் தான் ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குநமக்குதான் கொண்டாட்டம்....நன்றி..
நீக்கு// ....வையகம் உள்ளவரை வாழ்க தியாகி ராசா புகழ்...//
பதிலளிநீக்கு//ஆனால் நடப்பது என்ன மனு நீதி சோழன் ஆட்சியா? இதையெல்லாம் நாம் எதிர்பார்க்க.....//
நச் பஞ்ச். நடு நிலையான விமர்சனம். விஜயகாந்தை பார்த்து அதிமுக எம்எல்ஏக்கள் கையை உயர்த்தி பேசியதால் தான் விஜயகாந்தும் பேசினார் என்பது கேப்டன் டிவியை பார்த்தால் தெரியும், தவிர தினகரனிலும் வீடியோ போட்டிருக்கிறார்கள்.