
பதிலுக்கு ஜெயலலிதாவும் விஜயகாந்தை விளாசி எடுத்துவிட்டார் வார்த்தைகளில்....விஜயகாந்துடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கபடுகிறாராம் ஜெயலலிதா...இப்போது வெட்கப்பட்டு என்ன பண்ண?கூட்டணி வைக்க வேண்டியது..ஜெயிக்க வேண்டியது....அப்புறம் என்னாலதான் நீ ஜெயித்த என மாறி மாறி கூப்பாடு போட வேண்டியது....இதை சொல்லத்தான் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்...
இவர்கள் அமைத்தது பொருந்தா கூட்டணி என்பதை இருவருமே வெட்ட வெளிச்சமாக்கிவிட்டனர்...
எதிர்கட்சியாக விஜயகாந்தின் செயல்பாடு சரி இல்லை என விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று சட்டசபையில் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துவிட்டார் விஜயகாந்த்....
இனி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி அல்லது எதிரிக்கட்சியாக விஜயகாந்த் செயல்படுவார் என நம்பலாம்....அடுத்த அடுத்த அதிரடிகளுக்கும் இனி பஞ்சம்... இருக்காது....இதில் ரொம்ப குஷியாக இருப்பவர் கருணாநிதிதான்....
ஆனால் சட்டசபையில் ஏதோ தனது படத்தில் பேசுவதுபோல அவர் பேசிய காட்சிகள்தான் உச்ச கட்ட காமெடி ....கொஞ்சம் விட்டால் கை நீட்டி பேசிய அந்த அமைச்சரை பாய்ந்து போய் தனது டிரேட்மார்க் உதையால் உதைந்திருப்பார் போலிருக்கிறது...பாருங்கள் அந்த பர பர காட்சிகளை....
நன்றி.....யு டியுப் மற்றும் சன் செய்திகள்....(வீடியோ உதவிக்காக )
Tweet |
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குஎன்னப்பா இது?
சவால் விடுற இடமா அது? சமூக பிரச்னையை பேசுவதை விட்டு விட்டு சவால் விட்டுகிட்டு இருக்காங்க...
பட் விஜயகாந்த் சொன்ன கருத்து சரிதான்..
வஸ்ஸலாம்
வஸ்ஸலாம் சகோ.....
பதிலளிநீக்குஇந்த மாதிரி கூத்துக்கள் சட்டசபையில் இனி அடிக்கடி நடக்க போகுது....
இப்போதெல்லாம் சட்டசபையில் மக்கள் பிரச்சினையை பேசாமல், சொந்த பிரச்சினையை பேசும் சத்தசபையாக்கிவிட்டார்கள் இவர்கள். என்ன செய்வது எல்லாம் நம் தலைவிதி
நீக்குஇன்னும் ஐந்து வருடம் இருக்கே.....
நீக்குசெய்திகள் சொல்லும் தகவல்களை விட நீங்கள் கொடுத்த சன் தொலைக்காட்சி காணொளி பல செய்திகளைத் தருகிறது.
பதிலளிநீக்குமுதலாவதாக விஜய்காந்த,ஜெயலலிதாவின் சட்டசபை சவால்களை நீண்ட ஒளிபரப்புவதின் எதிர்கால நலன்கள் குறித்த சன் தொலைக்காட்சி செய்தியும்,தொடர்ந்த கலைஞரின் கருத்தும்.
விஜயகாந்த மீண்டும் எழுந்து நின்று என்ன சொல்கிறார் என்பது அவை சத்தத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தலை ஆளும்கட்சிகள் தங்கள் நலனுக்கு ஏற்ப எப்படி வளைத்துக்கொள்ளும் என்ற விஜயகாந்தின் குற்றச்சாட்டு.
ஜெயலலிதா பெண்ணாக இருக்கும் ஆளுமைகளை வரவேற்றாலும்,எடுத்தேன்,கவிழ்த்தேன் என்ற பேச்சுத்தோரணை வருந்த தக்கது.
தேவைக்கேற்ப கூட்டணி என்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇவர்கள் அனைவரும் மக்களைத்தான் முட்டாள் ஆக்குகின்றனர்....நன்றி...
நீக்குஅருமையான பதிவு காஜா சார். நன்றி. வீடியோ காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். ஹாலிவுட் ஆக்சன் படம் மாதிரி. ஹி...ஹி...!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்....
நீக்குவெற்றி தோல்வி தேர்தலில் சகஜம்.......இந்த அம்மாவே தேர்தலில் தோற்கவில்லையா..................அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன்பு தன் நிலை என்ன என்றும் யோசிக்க வேண்டும்...........கலைக்டர்/எஸ்பி என அவர்களுக்கே நாளை எங்கு வேலை பார்ப்போம் என்று தெரியாது..............இன்றைய அமைச்சர் ......நாளை தொடர்வாரா என்று அவருக்கே தெரியாது...........தமிழ் நாட்டில் ஒரு துக்ளக் ஆட்சி தான் நடக்கிறது........இந்த அம்மாவுக்கு பதில் சொல்ல இப்பொழுது தான் ஒரு சரியான ஆள் கிடைத்துள்ளார்...........இனி விஜயகாந்தின் புகழ் கூடுமே தவிர இறங்காது.......Thatchai kannan
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்...நன்றி
பதிலளிநீக்கு