31 ஜனவரி 2012

நீங்க தம் அடிக்காட்டியும் கேன்சர்,இதய நோய் வரும்.....அதிர்ச்சி தகவல்கள்....


பேசிவ் ஸ்மோக்கிங்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.

பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,000, கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,000, ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,900, நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் குண்டைத் தூக்கி போட்டுள்ளது.

51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் பல்வேறு தரப்பிலும் மேற்கொள்ளப் பாட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.

ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.

பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.

பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.

பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: பத்திரிக்கைகள்...
ஆகவே நண்பர்களே நீங்க தம் அடிக்காவிட்டாலும் தம் அடிக்கிறவங்க பக்கத்தில் அறவே நிக்காதிங்க.....

30 ஜனவரி 2012

கற்பழிப்பது,கலவி,ஏழ்மை எல்லாம் காமெடியாம்...மக்களை முட்டாள்களாக எண்ணிய ஷங்கர்...


கற்பிப்பது. கற்பழிப்பது இதுக்கு என்ன வித்தியாசம்?

நண்பன் படத்தில் இந்த வார்த்தையை வைத்து காமெடி என்ற பெயரில் கண்றாவி செய்து இருக்கிறார்கள்.....

என்ன ஏது என்று புரியாமல் வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்து படித்தால் என்னவாகும் என சொல்வதற்காக ஒரு காட்சி...சொல்ல வந்த கருத்துநல்ல கருத்தே...அனால் சொன்ன விதமும் வார்த்தைகளும் கொஞ்சமும் நாகரிகம் அற்றவை... கற்பது,கற்பிப்பது என்று எழுதிய வார்த்தைகளை ஹீரோ கற்பழிப்பதுஎன மாற்றி எழுதி வைப்பார்....அதை அந்த மடையனும் அப்படியே மேடையில் படிப்பானாம்....ஏன் வேறு வார்த்தைகளே இல்லையா...மாற்றி எழுதுவதற்கு...

உதாரணத்துக்கு நீங்கள் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது அக்காட்சியில் சிரிக்கிறீர்கள்...அப்போது உங்கள் குழந்தை கற்பழிப்பு என்றால் என்ன அர்த்தம்?எதற்கு சிரிக்கிறீர்கள் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

இந்த வார்த்தையை வைத்து கிண்டலடிப்பது கல்லூரியின் முதல்வரை.....சகிக்கல...

அதேபோல கல்வி என்ற வார்த்தையை கலவி என மாற்றுவாராம் ஹீரோ...அதை அப்படியே படிப்பாராம் அந்த முட்டாள் மாணவன்....என்னங்கடா இது..?இந்த வார்த்தைகளுக்கு கூட வித்தியாசம் தெரியாத மடையன் எப்படி கல்லூரியில் படிப்பான்?அந்த அளவுக்கு தமிழ் தெரியாதா அவனுக்கு?இது ஒரு காமெடியா?காமெடி என்ற பெயரில் காமத்தை பிழிந்து இருக்குறார்கள்....

இந்த வார்த்தையை வைத்து கிண்டலடிப்பது கல்வி அமைச்சரயாம்...


அதே போல எதற்கெடுத்தாலும் போட்டு இருக்கும் பேன்ட்டை கழற்றி விட்டு ஜட்டியோடு கீழே விழுகிறார்கள்.....இதுவும் காமெடியாம்....என்னதான் இந்தியில் இருந்து ரீமேக் பண்ணினாலும் அப்படியேவா எடுப்பது ?


அடுத்து ஏழ்மையில் வாடும் குடும்பத்தை கேலி செய்வதுபோல காட்சிகள்....அதுவும் சக நண்பனின் தங்கையை ,அவனது குடும்பத்தை மற்ற இரு நண்பர்களும் கேலி செய்வது போல பல காட்சிகள்.......எந்த நண்பனாவது அப்படி செய்வானா? சங்கருக்கு ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?இந்த காட்சிகள் எல்லாம் வெறும் காமெடிக்காக மட்டுமே என்று ஷங்கர் சொல்லலாம்...ஆனால் இதில் எந்த மாதிரி கிறுக்குத்தனமாக எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள்,சிரிப்பார்கள் என்று மக்களை அடிமுட்டாள்களாக என்னும் அவரது கீழ்த்தரமான எண்ணமே வெளிப்படுகிறது...

இந்த படத்துக்கு இந்த குறைகளை சுட்டி காட்டாமல் நல்ல விதமாக அனைத்து பத்திரிக்கைகளும் விமர்சனம் எழுதியுள்ளன...

அதை சுட்டிகாட்டவே இந்த பதிவு......

29 ஜனவரி 2012

அலுவலகத்தில் குட்டி தூக்கம் போடுவது நல்லதாம்..ஆனால்??


அலுவலகத்தில் சிலர் மதியம் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும்;பூஸ்ட் குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள்.(நானெல்லாம் அது மாதிரி இல்லைங்க...ஹி ஹி...) இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம் நல்லது;இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.(அப்படின்னா இதைபின்பற்றலாமோ....)

எனவே இத்தகைய கோழி தூக்கம் போடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை.(அது என்ன கோழி தூக்கம்...?)ஆனால் இன்றைய அவசர யுக வாழ்க்கையில் பலருக்கு அலுவலகத்தில் மதிய உணவு உண்டதுமே தூக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலே காற்று போன டியூப் கணக்காக புஸ்...ஸென்று சக்தி இழந்து சோர்வடைந்து போய்விடும்.அப்படியே மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என தெரியுமா?(எனக்கும் தெரியாதுங்க...படித்துதான் தெரிந்துகொண்டேன்...)

இரவில் ஆழ்ந்த தூக்கமின்மை:

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.(இதுதான் செய்யும் வேலையை நேசிப்பதோ?!)அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார்கள்.இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும்.(பரவாயில்லை....அதான் ஆபிஸ் இருக்கிறதே....ஹி ஹி...)

அதாவது முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்,உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது.ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், நமது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.அதனால்தான் மதியம் உடல் சோர்வு ஏற்படுகிறது. (இதுதான் காரணமா? )எனவே ஒருவருக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது.

விளையாட நேரமில்லாமை அல்லது உடற்பயிற்சியின்மை:

ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு எதுவும் இல்லாமலோ இருந்தால் அவரது உடலில் சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் எரியூட்டப்படாது.காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும்,மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

நான் படித்ததை பகிர்ந்துள்ளேன்.....முடிந்தால் பின்பற்றலாமே....

28 ஜனவரி 2012

அண்ணா அறிவாலயத்துக்கும் ஆப்பு...அண்ணா பெயரை வெறுக்கும் ஜெ ??


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பெயரில் எது இருந்தாலும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே.....ஆனால் இப்போது அறிஞர் அண்ணா பெயரில் எது இருந்தாலும் ஆகாது போலிருக்கிறது ...

முதலில் அண்ணா பெயரில் இருந்த நூலகத்தை கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக அந்த நூலகத்தை இடம் மாற்ற உத்தரவிட்டார்....இப்போது திமுக கட்சி தலைமையிடமான அண்ணா அறிவாலயத்துக்கும் ஆப்பு வைக்க தயாராகிவிட்டார்....

ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாக கூறித்தான் திமுக சிறப்பு அனுமதி பெற்று அண்ணா அறிவாலயத்தை கட்டியதாம்....விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால் அந்த திறந்தவெளி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சொல்லி சென்னை மேயர் கூறியுள்ளார்....பின்னே ஜெயலலிதா சொல்வதை தானே அவர் செய்வார்....

இப்ப அண்ணா அறிவாலயம் முறையாக கட்டப்பட்டதா இல்லையா என்ற விசயம் அடுத்தபட்சம்....ஆனால் இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என விரல் சூப்பும் குழந்தைக்குகூட தெரியும்...இப்படிப்பட்ட நடவடிக்கையினால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை....மாறாக அக்கட்சிக்கு அனுதாபம்தான் பெருகும்..இது கூட தெரியாதா ஜெயலலிதாவுக்கு?

நாட்டில் இதுதான் இப்ப முக்கிய பிரச்சினையா?பொதுவாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்பது பரவலான நம்பிக்கை...ஆனால் இப்போது? தினமும் கொத்து கொத்தாக கொலைகள் விழுகின்றன....பொழுதுபோக்கு போல தினமும் கொள்ளைகளை நடத்தி வருகின்றனர் கொள்ளையர்கள்.....என்ன செய்கிறது காவல்துறை?சட்டம் ஒழுங்கை சீராக்குவதைவிட ஜெயலலிதாவுக்கு அண்ணா அறிவாலயத்துக்கு சிக்கல் கொடுப்பதுதான் முக்கிய வேலையா?


தானே புயலால் சீரழிந்த கடலூர் மாவட்ட மக்கள் இன்னும் இருக்க வீடில்லாமல், உண்ண உணவில்லாமல்,மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்..முழுமையான சீரமைப்பு பணிகள் இன்னும் நடைபெறவில்லை...இதைவிட முக்கியமா அண்ணா அறிவாலயத்துக்கு ஆப்பு வைக்க நினைப்பது..?

ஜெயலலிதா மாறிவிட்டார் என்கிறார்கள் ...ஆனால் மாறியது ஆட்சி மட்டுமே...நான் மாறவில்லை என செய்கையால் உணர்த்தி வருகிறார் அவர்...முதலில் ஆக்கபூர்வமான விசயங்களில் ஆர்வம் காட்டுங்கள்....பின்பு அழிப்பதை பற்றி யோசிக்கலாம் ஜெ.......

27 ஜனவரி 2012

செல்போனில் அதிகம் பேசுபவரா நீங்கள்?உடனே படியுங்கள் அதிர்ச்சி தகவல்களை...


அறிவியல் தந்த அரிய கண்டுபிடிப்பு செல்போன்.........மொபைல் போன் இல்லாத ஆள் இன்று உலகில் யாருமே இல்லை என்ற அளவுக்கு இதன் வளர்ச்சி உள்ளது... ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தானே....இதற்க்கு செல்போனும் விதிவிலக்கல்ல....செல்போனின் தீங்குகள் பற்றி படித்தேன்......படிக்கவே பயமாக இருந்தது......

செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.

செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைவு ஏற்படுகிறதாம்.....


மேலும் செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.

காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.

யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான்.

செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்....சார்ஜ் குறைவாக இருக்கும்போதும் பேசுவதை தவிர்க்க வேண்டும்..அந்த நேரத்தில் கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்கும்...

என்னங்க படிக்க படிக்க உங்களுக்கும் பயமா இருக்கிறதா? நாம்தான் இனி செல்போன் பயன்படுத்துவதை குறைத்து இந்த மாதிரியான ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும்.........

நம் வாழ்க்கை நம் ( செல்போனில்) கையில் தான்.............

26 ஜனவரி 2012

பாரத ரத்னா விருதும்,....சச்சின் சர்ச்சைகளும்


பாரத ரத்னா விருது இந்த வருடமும் யாருக்கும் வழங்கப்படவில்லை.....

இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா என்பது அனைவருக்கும் தெரியும்....பாரத ரத்னா என்பதற்கு இந்தியாவின் ரத்தினம் என அர்த்தம்...இவ்விருது பொதுசேவை,அறிவியல், இலக்கியம் ,கலை ஆகிய துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கபடுகிறது....இவ்வருடம் புதிதாக விளையாட்டு துறையும் இதில் சேர்த்து கொள்ளப்பட்டது...

இதுவரை நாற்பத்தி இரண்டு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்... ராஜாஜி,காமராஜர்,எம் ஜி ஆர் போன்றவர்களும் இதில் அடக்கம்....

இப்போது விசயம் என்னன்னா...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்காகவே விளையாட்டுத்துறை சேர்த்து கொள்ளப்பட்டதாகவே சர்ச்சை கிளம்பியது....ஆனால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை...அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினின் பெயரை இவ்விருதுக்கு பரிந்துரைக்கவில்லையாம் ....இனி சச்சினுக்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை என ஒரு சர்ச்சை கிளம்பும் ....

சச்சினுக்கு இந்த விருது பொருத்தமானதா என்பதில் என்னைபோல பலருக்கும் குழப்பம் இருக்கலாம்....

என்னதான் சச்சின் சாதனை படைத்தது இருந்தாலும் அதற்கான பலனை பணத்திலும், புகழிலும் சம்பாரித்து விட்டார் ....அவரால் இந்தியாவுக்கு பெருமை...அதேபோல் இந்தியாவின் பெயரில் அவர் விளையாட ஆரம்பித்த பிறகுதான் அவர் உலகிற்கே தெரிய ஆரம்பித்தார்... ஏற்கனவே விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதையும் அவர் பெற்று விட்டார்...

இன்னும் பல சலுகைகளை அவருக்கு மாநில அரசும்,மத்திய அரசும் வழங்கியுள்ளன...இதையும் தாண்டி அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கினால் அது தவறாக இல்லை என்றாலும் மிகவும் சரியாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...

சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனகூறியவர்கள்அவரைப்போல இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா போன்ற பலரும் ,இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் உலக கோப்பையை வென்ற வீரர்களும்,ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் புகழை ஓங்கி ஒலித்த பி டி உஷா ,சதுரங்கத்தில் சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களை கண்டு கொள்ளாதது ஏன் என புரியவில்லை...

இதை படிக்கும் நண்பர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்....நண்பர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்....

25 ஜனவரி 2012

எரிக்கப்பட்ட கலாமின் கொடும்பாவியும்,துரத்தப்பட்ட சல்மான் ருஸ்டியும் (நொறுக்கு தீனி)....


இந்தியாவிலே முதல் முறையாக ! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவ பொம்மையை எரித்து சாதனை ! ! புரிந்துள்ளனர் கோவை சட்ட கல்லூரி மாணவர்கள்....கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் பயப்பட தேவை இல்லை என கூறியதால் கலாமுக்கு இந்த எதிர்ப்பு....ஜனாதிபதியாக இருக்கும்போதே எதற்கும் வாயை திறக்காதவர் இப்போது வாயை திறந்ததினால் வந்த வினை இது....

அது இருக்கட்டும் கொடும்பாவியை எரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

அடுத்து ஒரு சந்தேகம் உருவ பொம்மையை ஏன் கொடும்பாவி என்கிறார்கள்?

சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் வீடியோ உரை நேற்று ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் திரையிடப்படவில்லை....இது அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு கிடைத்த வெற்றி...இவ்விழாவுக்கு முதலில் ராஜஸ்தான் அரசால் அழைக்கப்பட்ட ருஷ்டி பின்பு மக்களின் எதிர்ப்பால் அதே அரசால் வரவேண்டாம் என துரத்தப்பட்டார்.....ஒரு மதத்தை பற்றி தவறாக எழுதினால் நடக்கும் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்...இவர் எழுதிய சாத்தானின் கவிதைகள் எனும் நூலுக்காக ஈரான் அரசால் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது....நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் நடைபாதையில் மக்கள் தூங்குவது கவலை அளிக்கிறதாம் உச்ச நீதி மன்றத்துக்கு....சபாஷ்....இப்போதாவது கண் தெரிந்து உள்ளதே நீதிபதிகளுக்கு...
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையே உன்ன உணவு ,உடுத்த உடை, உறங்க ஒரு வீடு! இதுவே இல்லை என்றால் நம் நாடு சுதந்திரம் அடைந்து என்ன பயன்?

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை மத்திய அரசு நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என கருணாநிதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை !! விடுத்துள்ளார்....வேற ஒன்றும் இல்லை ...சோனியாவும்,பிரதமரும் கருணாநிதி என்று ஒருவர் இருக்கிறார் என அறிந்துகொள்ளவே இந்த அறிக்கை...கலைஞர் இன்னும் அரசியலில் இருக்கிறார்,தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறார் என நாமும் உணர்ந்து கொள்வோமாக...


நம்ம ஊருக்கு கவர்னராக வந்த ராசியோ என்னவோ ஆளுநர் ரோசய்யா மீது நில மோசடி புகார் எழுந்துள்ளது.....இங்கு அல்ல ..ஆந்திராவில்தான்....அம்மா ஆட்சியில் கவர்னராகவே இருந்தாலும் ஆப்புதான்....அம்மாவுக்கும்,ஆந்திராவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க கூடாது...பன்ச் டயலாக் நல்லா இருந்தா கேட்டுக்கணும்....

23 ஜனவரி 2012

நாறிப்போன மோ(கே)டி


குஜராத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் மனித உயிர்களை வேட்டை ஆடிய நரேந்திர மோடி எனும்மதவெறியன் கோத்ராவில் உண்ணா விரதம் இருந்து தன்னை ஒரு மனிதனாக காட்டி கொள்ள முயன்று இருக்கிறார்...என்ன ஒரு நடிப்பு?
கலவரங்களை ஒடுக்கவே காவல்துறை....ஆனால் குஜராத்தில் கலவரம் நடத்த அன்று காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்தது...காரணம் முஸ்லிம்கள் புகார் கொடுத்தாலோ,பாதுகாப்பு கேட்டாலோ அதை காதில் வாங்க வேண்டாம் என இந்த மதவெறியன் கூறியதுதான்
கலவரங்களை கண்டு கொள்ள வேண்டாம் என இவர் காவல் துறைக்கு உத்தரவிட்டார் என அப்போது காவல்துறையில் பணியாற்றிய முக்கிய அதிகாரியே இப்போது இந்தஅரக்கன் மீது குற்றம் சுமத்தியது ஒன்று போதாதா மோடியின் முகத்திரையை கிழிக்க....

குஜராத்தில் துடிக்க துடிக்க கருவில் இருந்த குழந்தையையும் கிழித்து கொன்றார்களே படுபாவிகள்...அந்த பாவத்தை கழுவவா இந்த உண்ணாவிரதம்?
இந்த லட்சணத்தில் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறி வருகிறார்கள் சில மதவாதிகள்...ஏன் இந்தியா முழுக்க ரத்த ஆறு ஓட வேண்டுமா?

கலவரம் நடக்க வேண்டும் அதில் மக்கள் சாக வேண்டும் என நினைத்த மோடியை இந்த சட்டம் இன்னும் தண்டிக்காமல் இருப்பதற்கா இந்த உண்ணாவிரதம்?

அமெரிக்காகூட விசா கொடுக்காமல் அந்த அரக்கனை நிராகரித்ததே ....
குஜராத் மக்கள் எப்போது நிராகரிக்க போகிறார்கள்?
சில பேர் கூறலாம் மோடியால் குஜராத் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று...என்னதான் தங்கமாக இருந்தாலும் அதை சாப்பிடவா முடியும்?மோடியின் மதவாதம் இப்போது தங்கமுலாம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது....அது எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்பதே நிதர்சனம்....


நரேந்திர மோடி எனும் கேடியே இன்னும் எத்தனை உண்ணாவிரதம் இருந்தாலும் நீ ஒரு இரத்தம் குடித்த காட்டேறிதான்..

14 ஜனவரி 2012

பண மோசடி புகாரில் கருணாநிதி மகள்...அடிக்கிறார்கள் கொள்ளை (நொறுக்கு தீனி)


கருணாநிதி குடும்பத்தில் அடுத்த வழக்கை சந்திக்க இன்னொரு பெண் ரெடி ஆகி விட்டார்.....கருணாநிதியின் மகள் செல்விதான் அவர்.... வாங்க வாங்க நீங்க ஒருவர்தான் பாக்கி....


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார் நல்லதம்பி என்பவர்...இவர் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்....இந்த வழக்கு என்ன ஆகபோகிறது என சில நாட்களில் தெரிந்து விடும்...

திரும்பவும் தமிழ் புத்தாண்டு சர்ச்சையை கருணாநிதி கிளப்பி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் என திமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார்...


தமிழ் புத்தாண்டு ஏப்ரல் பதினான்கு என்பதை கருணாநிதி மாற்றி தை முதல் நாளை அறிவித்தார்...அப்போதே இதற்கு எதிர்ப்புக்குரல் பலமாக கிளம்பியது...ஜெயலலிதா ஆட்சி ஏற்ற பின் பழையபடி தமிழ் புத்தாண்டை ஏப்ரல் பதினாங்குக்கே மாற்றினார்....ஆனால் கலைஞர் வறட்டு கவுரவம் பார்த்து பழைய பல்லவியை பாடி வருகிறார்...அட போங்கப்பா உங்க அரசியலுக்கு தமிழ் புத்தாண்டு தானா கிடைத்தது...?

பொங்கலுக்கு ஊருக்கு திரும்பும் பயணிகளிடம் கொள்ளை லாபம் அடித்து வருகின்றன ஆம்னி பஸ்கள்.... சாதாரணமாக சென்னையிலிருந்து புதுகைக்கு நானூராக இருந்த பஸ் கட்டணம் தற்போது ஐநூறு .,அறநூறு என எகிறி மக்கள் வயிற்றில் ஆசிட்டை வார்த்து வருகின்றனர் .... அதுபோல தமிழகம் முழுக்க இந்த கட்டண கொள்ளை நடந்து வருகிறது...

இதுகுறித்து பாதிக்கப்படும் பொது மக்கள் புகார் செய்ய ஒரே ஒரு தொலைபேசி !எண் அளித்துள்ளது அரசு..என்ன ஒரு சேவை மனப்பான்மை....பரவாயில்லை ..நண்பர்கள் யாரும் இந்த பஸ் கட்டண கொள்ளையில் பாதிக்கப்பட்டால் இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம் ...அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது....நம்புவோமாக....

அந்த எண் :
044 - 24794709


13 ஜனவரி 2012

கலைஞரை மாற்றிய ஜெயலலிதாவும்,ஒருகொலை வழக்கும் (நொறுக்கு தீனி)


புதிய மருத்துவ திட்டத்தை தொடக்கி உள்ளார் ஜெயலலிதா....அதற்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பெயரிட்டுள்ளார்..... நல்ல விஷயம்...

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் என தனது பெயரை வைத்த கருணாநிதிக்கு நல்ல பதிலடி கொடுத்துள்ளார் தனது பெயரை வைக்காமல் ஜெயலலிதா....
நம்ம மருத்துவர் ராமதாஸ் ,அவரது மகன் ஆகியோரை ஒரு கொலை வழக்கில் போலீஸ் விசாரிக்க பட போவதாக ஜூனியர் விகடன் எழுதி உள்ளது....
பாத்துப்பா...அவங்க எல்லாம் போதிதர்மன் பரம்பரையாம்....ஒரு கூட்டத்தில் அன்புமணிதான் போதிதர்மனின் வாரிசு என பாமக காரங்க கூவி இருக்காங்க...அப்புறம் விசாரிக்க போற எல்லாரையும் நோக்கு வர்மத்தால நோக்கிட போறாரு நம்ம மருத்துவர்...ஹி ஹி...

அப்புறம் நம்ம சச்சின் எப்ப நூறாவது சதம் அடிப்பார் என கேட்டே இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் சாவு மணி அடிக்க விட்டு விட்டார்கள்..அவரும் அடித்த பாடில்லை....அணியும் ஜெயித்த பாடில்லை...பேசாமல் சச்சின் இனி எப்ப நூற்றி ஒன்னாவது சதம் எப்ப அடிப்பருன்னு கேட்போம்..அப்பத்தான் அவர் நூறாவது சதமாவது அடிப்பார்.....

கனிமொழி கலைஞர் டிவி வாசலைக்கூட மிதித்து இல்லையாம்....ராசா ஆபிஸ் பக்கம் கனிமொழி போனது கூட இல்லையாம்....ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பற்றி அவருக்கு ஒன்னுமே தெரியாதாம்...இப்படி கூறியுள்ளார் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள்....கொஞ்சம் விட்டால் திமுகன்னா என்னனு கூட தெரியாதுன்னு சொல்லுவாங்க போல இருக்கே...


12 ஜனவரி 2012

பயோ டேட்டா : தமிழன் ( தமிழனடா )வீரம் : இரத்தத்தில் கலந்தது

நாகரிகம் : உலகிற்கு கற்று கொடுத்தது

பேசும் மொழி : செம்மொழியாம் தமிழ்மொழி

பிடித்த பாடல் : ஒய் திஸ் கொலைவெறி டி

பிடித்த பொழுதுபோக்கு : சினிமா, அரசியல்

அடையாளம் : எளிதில் உணர்ச்சி வசப்படுவது

இருப்பது : இந்தியாவில் ,உலகெங்கும்

இழந்தது : அண்டை மாநிலத்திடம் தமது உரிமைகளை

இரக்கம்: அண்டை மாநில சகோதர்களிடமும் காட்டுவது

துரோகம் : பதிலுக்கு அவர்கள் நமக்கு செய்வது

காவிரி: கர்நாடகா தந்த பிரச்சினை

முல்லை பெரியாறு : கேரளா தரும் தொல்லை தகராறு

கருணாநிதி : நீண்ட நாட்களாய் ஏமாற்றியவர்

ஜெயலலிதா : தற்போது ஏமாற்றி கொண்டு இருப்பவர்

தேர்தல்கள் : பொது திருவிழா

பலம் : பொது பிரச்சினைகளில் ஜாதி மத வேறுபாடில்லாமல் ஒன்று சேர்வது

பலவீனம் : அதே பிரச்சினைகளை உடனே மறந்து விடுவது ..

11 ஜனவரி 2012

காணாமல் போனவர்கள்....(அழகிரியா அலறும்கிரியா )


என்றால் ஆ என எதிரிகளை பயத்தில் வாயை பிளக்க வைத்தவர்..ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியவர்....
சிலமாதங்களுக்கு முன்பு வரை மதுரையை தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத தலைநகரமாக ஆக்கியவர்.....தனக்கு ஆகாதவர்களை கொண்டுவா ( அழைத்து வா ) என்று கூறினால் ! கொன்று வரும் அபிமானிகளை !! பெற்று இருப்பவர்

இந்தியாவுக்கே மந்திரி ஆனாலும் மதுரையை தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடிப்பவர்வேற யாரு? நம்ம அழகிரி அண்ணன்தான்....

சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என கூறினார் நம்ம அண்ணன்... பிறகுதான் தெரிந்தது அவர் " அழகிரி திமுக " வை தான் அப்படி கூறினார் என்று...
அந்தஅளவுக்கு ஆக்டிவ் அரசியலில் இருந்து காணாமல் போயிருக்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்...
பொதுவாக திமுகவில் ஜெயலலிதாவை பற்றி அதிரடியாக பேசக்கூடியவர் அழகிரிதான்....ஆனால் இப்போது ?

ஸ்டாலின்கூட என்னை கைது செய்து பார் என்று சவால் விடும் நிலையில் அழகிரி மதுரை ஆட்சியர் சகாயத்தை எப்படி சமாளிப்பது என்பதிலே காலத்தை ஒட்டி கொண்டு இருக்கிறார்...

இங்கிருந்து டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் பேசு,இந்தியில் பேசு என டெல்லிவாலாக்கள் தொல்லை வேற தாங்க முடியவில்லை....
சமச்சீர் கல்வி, அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு என ஆளும்கட்சிக்கு எதிராக சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ஒரு ரன் கூட அடிக்காமல் கோட்டை விட்டுவிட்டார்...

பொதுவாக திமுகவில் ஸ்டாலினின் அமைதி அரசியலைவிட அழகிரியின் அதிரடி அரசியல் தான் தென்மாவட்ட திமுக தொண்டர்களுக்கும், அழகிரியின் ஆதரவாளர்களுக்கும் பிடித்த ஒன்று....
மீண்டும் எப்போது அவர் அதிரடி அரசியலில் இறங்குவார்? ஜெயலலிதாவுக்கு எதிராக சீறி பாய்வார்?10 ஜனவரி 2012

ஜெ சசியை நீக்கியதன் உண்மை காரணம்...


ஜெயலலிதா சசிகலா கூட்டத்தை விரட்டியதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா?இவ்வளவு நாட்களாக தூங்கி தூங்கி விழித்த ஜெயலலிதா இப்போது ஒரேயடியாக முழித்து கொண்டதுதான்....! அப்பாடா ஒருவழியாக தலைப்புக்கு அர்த்தம் கொடுத்தாச்சு....


பின்னே என்னங்க...


ஒரு மாநிலத்தின் அமைச்சர்களை இந்த மன்னார்குடி கும்பல்தான் முடிவு செய்யுமாம்...மேலும் எந்த இடத்துக்கு யார் போலீஸ் அதிகாரிகள் ,யார் யாருக்கு மணல் குவாரிகள் உரிமை,கல்குவாரிகள் ,கான்ட்ராக்ட்கள் என்பதையும் இவர்கள்தான் முடிவு செய்வார்களாம்.... அப்படின்னா ஜெ தூங்கி கொண்டு இருந்தார் என்றுதானே அர்த்தம்..கலைஞர் குடும்பமே இவர்களிடம் தோற்று போவார்கள் குடும்ப அரசியலில்....
சசிகலா, அவரது தம்பி, சசிகலாவின் அக்கா மகன்கள், சசியின் அண்ணி, அண்ணியின் சம்பந்தி, சசியின் சித்தப்பா மருமகன், சசியின் கணவர் நடராஜன், அவரது தம்பிகள் ..!யப்பா ! என்னங்கடா இது?

இவ்வாறு ஒரு அரசாங்கத்தை இந்த மன்னார்குடி கும்பல் ஆட்டி படைத்தது கொண்டு இருந்தார்கள் என்றால் அது முதல்வரின் தயவு இல்லாமலா?அல்லது முதல்வருக்கு தெரியாமலா?

முதல்வருக்கு தெரியாமல்தான் இது எல்லாம் நடந்தது என்றால் ஜெ அப்போதெல்லாம் தனது பழைய பட டி வி டி போட்டு பார்த்து கொண்டு இருந்தாரா?
சர்வ வல்லமை கொண்ட ஒரு சக்தியாக சசிகலா குடும்பம் மாறியதற்கு ஜெயலலிதாவின் கண்டு கொள்ளாத குணமே காரணம்....இப்போதும் மக்களின் நலனுக்காகவோ, கட்சி தொண்டர்களின் நலனுக்காகவோ அவர்களை ஜெயலலிதா ஒதுக்கவில்லை ...இவர்களால் தனக்கு ஏதோ ஆபத்து வரபோகிறது ,தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்று உண்மை நிலையை ஜெ சற்று தாமதமாக உணர்ந்ததால் வந்த வினையே இந்த எதிர்வினை....
இப்போது எம் ஜி ஆரின் உண்மை தொண்டர்கள், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ,ஜெ யின் விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றனர் இந்த நடவடிக்கையை...ஆனால் சசியின் நீக்கம் நிரந்தரமானதா இல்லையா என்பதில்தான் அதிமுக தொண்டர்களின் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது....அது ஜெவுக்கே வெளிச்சம்....!!

06 ஜனவரி 2012

மருத்துவர்கள் இனி மரியாதைக்கு உரியவர்களா?

மருத்துவர்கள் என்றால் ஒரு மரியாதை சமுகத்தில் இருந்து வருகிறது.....அதற்கு காரணம் நமது உயிர் ஒருவகையில் அவர்களால் காப்பாற்ற படுகிறது என்ற ஒரு பொதுவான எண்ணமே ஆகும்....


ஆனால் இன்று மருத்துவர்கள் மேல் உள்ள மரியாதை வெளிநாட்டில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணியின் மேல் வைக்கும் மரியாதையை விட கேவலமாகி வருகிறது....தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண் டாக்டரின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ,மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் தமிழகம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...நிச்சயமாக அந்த மருத்துவரின் கொலை கண்டிக்கத்தக்கதே...கொலையாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது...கொலை செய்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் எதற்காக இந்த போராட்டம்?ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு போலிசை காவலுக்கு நிறுத்த வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?


இந்த இரண்டு நாட்களில் போதிய சிகிச்சை இல்லாமல் அவதிப்படும் பல்லாயிரகணக்கான நோயாளிகளுக்கு இவர்கள் கூறும் பதில் என்ன?இவர்களின் இந்த அலட்சிய போக்கை தமிழக அரசு ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது?
அந்த பெண் டாக்டர் தவறான சிகிச்சை அளித்தால் தனது மனைவி இறந்ததாக கொலையாளி கூறியுள்ளார்...சிகிச்சை ஒருவேளை தவறாக இருந்தாலும் கொலை செய்யலாமா என மருத்துவர்கள் கேட்கின்றனர்....
கொலை செய்தது தவறுதான்....ஆனால் தவறான சிகிச்சையால் இறந்ததும் ஒரு மனித உயிரல்லவா?
அதற்காக போராட்டம் நடத்தி இன்னும் எவ்வளவு உயிரை இந்த மதிகெட்ட மருத்துவர்கள் கொலை செய்ய போகிறார்கள்?மருத்துவம் என்பது புனிதமான தொழில் என்றும் மருத்துவர்கள் உயிரை காப்பாற்றும் உன்னதமானவர்கள் என்றும் நினைத்த நோயாளிகளுக்கு இவர்கள் அளிக்கும் நன்கொடையா இது....?

04 ஜனவரி 2012

பதிவுலக பயங்கரவாதி பவுடர்....
சில நாட்களாக பதிவுலகில் தேவை இல்லாத பிரிவினைவாதங்கள் மதத்தின் பெயரால் எழுதப்பட்டு அல்லது நடத்தப்பட்டு வருகிறது....


அதற்க்கு பதில் கூறினால் முஸ்லிம் பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி விடுகிறார்கள் என்ற குற்றசாட்டு வேறு....எந்த ஒரு மதத்தை பற்றியும் தவறாக கூறினால் சம்பந்தப்பட்ட மதத்தினர் தங்கள் கருத்துக்களை பதில்களை கூறத்தான் செய்வார்கள்...நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்..பவுடர் மணிக்கு இஸ்லாம் மீது வெறுப்பா அல்லது இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் தீவிரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மீது வெறுப்பா?இஸ்லாம் பெயரில் பரப்பப்படும் அல்லது நடத்தப்படும் தீவிரவாத செயல்களை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஏற்று கொள்ளமாட்டார்கள்..


இஸ்லாம் கூறும் நல்ல விஷயங்கள் பவுடருக்கு தெரியுமா? மது,விபசாரம் ,வட்டி, போன்றவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது தெரியுமா பவுடருக்கு?இன்று உலகில் மது ,மாது இவற்றால் நடக்கும் குற்றமே அதிகம்....முஸ்லிம் நபர்கள் யாரும் இதை செய்யவில்லையா என பவுடர் கேட்பார்....இதை செய்தால் அவன் உண்மையான முஸ்லிம் அல்ல...

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்து அவர்களுக்கு சம உரிமை கொடுத்து உள்ளது இஸ்லாம்....அது தெரியுமா பவுடருக்கு?

இஸ்லாமை பற்றி ஏதாவது எழுதினால் முஸ்லிம் பதிவர்கள் எல்லாரும் ஒன்று கூடி செயல் படுகிறார்கள், என்று சொல்கிறார் பவுடர்.....நான் கேட்கிறேன் சினிமா நடிகரான அஜித்தை பற்றியோ விஜயை பற்றியோ யாராவது விமர்சித்து எழுதினால் அவர்களின் பதிவுலக ரசிகர்கள் அந்த பதிவுகளை பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்....அப்படி இருக்கையில் உலகில் கோடிகணக்கான நபர்கள் பின்பற்றும் ஒரு மதத்தை பற்றி விமர்சித்து எழுதியவர்களுக்கு முஸ்லிம் பதிவர்கள் ஒன்று கூடி பதில் சொல்வது எந்த விதத்தில் தப்பாகும்?முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை பற்றியும் சர்ச்சை எழுப்பி அவர்களின் அங்கங்களை ரசிக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பவுடர் ....இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? பெண்களின் முகங்கள் தவிர மற்ற அங்கங்கள் மறையும்படி உடை உடுத்த வேண்டும் என்பதுதான் சட்டம் ...முகத்தையும் மறைக்க வேண்டும் என்பது சட்டமல்ல....மற்ற அங்கங்கள் மறைக்க படாமல் இருந்தால் சில ஆண்களின் காம பார்வையில் இருந்து விலக முடியுமா? பெண்களை கவர்ச்சி பொம்மையாக தானே இவ்வுலகம் பார்க்கிறது?


ஆண்களை போலவே பெண்களும் உடை அணிந்தால்தான் பெண்களுக்கு உரிமைகள் சரியாக கிடைக்கின்றது என்று அர்த்தமா?அடுத்து ஒரு ஆண் நான்கு திருமணம் செய்வதை பற்றி ஒரு சர்ச்சை...அதை பற்றி மிகவும் கேவலமாக எழுதி இருக்கிறார்...அவர் அப்படிதான் செய்வார் போல் இருக்கிறது.......நான்கு திருமணம் செய்துள்ள எத்தனை முஸ்லிம் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்குறீர்கள் ?நான்கு திருமணம் என்பது கட்டாய சட்டமல்ல....... அப்படியே ஒன்றுக்கு இரண்டு திருமணம் ஒரு ஆண் செய்தாலும் அவன் சமுகத்துக்கு,சட்டத்துக்கு உட்பட்டு அவன் சகல உரிமைகளையும் அப்பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்டம்...முதல் மனைவிக்கு தெரியாமல் சின்ன வீடு வைத்து கொள்வதைவிட இது தவறா?


முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்து கொள்வதை பற்றி ஒரு கமெண்ட் எழுதி இருக்கிறார் மிகவும் கொச்சையாக .....அவர் அப்படிதான் செய்வார் என்று நான் நினைக்கின்றேன்.......


இறுதியாக ஒன்று....சில நபர்கள் செய்யும் தீவிரவாத செயல்களிலோ, ஒழுக்கம் இல்லாத செயல்களிலோ இஸ்லாம் மதத்தை இணைத்து பேசவேண்டாம்..
மதம் என்பது வேறு...சில நபர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் என்பது வேறு ....


தேவை இல்லாமல் ஒரு மதத்தை பற்றி எழுதி,அதை சர்ச்சை ஆக்கி பதிவுலகில் மதவெறியை தூண்டி விட்டு குளிர் காய்வதில் அப்படி என்னதான் சுகமோ பவுடருக்கு?