23 ஜனவரி 2012

நாறிப்போன மோ(கே)டி


குஜராத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் மனித உயிர்களை வேட்டை ஆடிய நரேந்திர மோடி எனும்மதவெறியன் கோத்ராவில் உண்ணா விரதம் இருந்து தன்னை ஒரு மனிதனாக காட்டி கொள்ள முயன்று இருக்கிறார்...என்ன ஒரு நடிப்பு?
கலவரங்களை ஒடுக்கவே காவல்துறை....ஆனால் குஜராத்தில் கலவரம் நடத்த அன்று காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்தது...காரணம் முஸ்லிம்கள் புகார் கொடுத்தாலோ,பாதுகாப்பு கேட்டாலோ அதை காதில் வாங்க வேண்டாம் என இந்த மதவெறியன் கூறியதுதான்
கலவரங்களை கண்டு கொள்ள வேண்டாம் என இவர் காவல் துறைக்கு உத்தரவிட்டார் என அப்போது காவல்துறையில் பணியாற்றிய முக்கிய அதிகாரியே இப்போது இந்தஅரக்கன் மீது குற்றம் சுமத்தியது ஒன்று போதாதா மோடியின் முகத்திரையை கிழிக்க....

குஜராத்தில் துடிக்க துடிக்க கருவில் இருந்த குழந்தையையும் கிழித்து கொன்றார்களே படுபாவிகள்...அந்த பாவத்தை கழுவவா இந்த உண்ணாவிரதம்?
இந்த லட்சணத்தில் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறி வருகிறார்கள் சில மதவாதிகள்...ஏன் இந்தியா முழுக்க ரத்த ஆறு ஓட வேண்டுமா?

கலவரம் நடக்க வேண்டும் அதில் மக்கள் சாக வேண்டும் என நினைத்த மோடியை இந்த சட்டம் இன்னும் தண்டிக்காமல் இருப்பதற்கா இந்த உண்ணாவிரதம்?

அமெரிக்காகூட விசா கொடுக்காமல் அந்த அரக்கனை நிராகரித்ததே ....
குஜராத் மக்கள் எப்போது நிராகரிக்க போகிறார்கள்?
சில பேர் கூறலாம் மோடியால் குஜராத் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று...என்னதான் தங்கமாக இருந்தாலும் அதை சாப்பிடவா முடியும்?மோடியின் மதவாதம் இப்போது தங்கமுலாம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது....அது எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்பதே நிதர்சனம்....


நரேந்திர மோடி எனும் கேடியே இன்னும் எத்தனை உண்ணாவிரதம் இருந்தாலும் நீ ஒரு இரத்தம் குடித்த காட்டேறிதான்..

16 கருத்துகள்:

 1. ஸலாம் சகோ.ஹாஜா,
  அதிரடி பதிவு. //இந்த லட்சணத்தில் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறி வருகிறார்கள் சில மதவாதிகள்...//---'பெரியவாள்' சோ விட மாட்டார் போல..! so, டோன்ட் ஒர்ரி..!

  பதிலளிநீக்கு
 2. //குஜராத் மக்கள் எப்போது நிராகரிக்க போகிறார்கள்?
  //
  கஷ்டம் தான்

  பதிலளிநீக்கு
 3. மச்சான்,

  நல்ல நேர்மையான பதிவு. பிரதம வேட்பாளராக முனைவதால், இப்பொழுது கொஞ்சம் மத நல்லிணக்க முகமூடி தேவைப் படுகிறது. அதான் விஷயம்.

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  முழு விஷ பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறாய்ங்கே

  பதிலளிநீக்கு
 5. நல்ல அலசல் ! உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும் ! பகிர்விற்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 6. #ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
  சூடாண மிகவும் சரியான சாட்டையடி பதிவு.#

  நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 7. ~#முஹம்மத் ஆஷிக்
  ஸலாம் சகோ.ஹாஜா,
  அதிரடி பதிவு. //இந்த லட்சணத்தில் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறி வருகிறார்கள் சில மதவாதிகள்...//---'பெரியவாள்' சோ விட மாட்டார் போல..! so, டோன்ட் ஒர்ரி..!#

  நன்றி சகோ.....சோ ஒருநாள் விட்டுதானே ஆக வேண்டும்.....

  பதிலளிநீக்கு
 8. #"என் ராஜபாட்டை"- ராஜா
  //குஜராத் மக்கள் எப்போது நிராகரிக்க போகிறார்கள்?
  //
  கஷ்டம் தான்#


  நிச்சயம் நடக்கும்

  பதிலளிநீக்கு
 9. #சிராஜ்மச்சான்,

  நல்ல நேர்மையான பதிவு. பிரதம வேட்பாளராக முனைவதால், இப்பொழுது கொஞ்சம் மத நல்லிணக்க முகமூடி தேவைப் படுகிறது. அதான் விஷயம்.#


  நன்றி மச்சான்...முகமூடி கிழியத்தான் போகிறது

  பதிலளிநீக்கு
 10. #ஹைதர் அலி
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  முழு விஷ பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறாய்ங்கே
  #

  நன்றி சகோ...ஒரு நாள் பூசணிக்காய் வெளியாகும்...

  பதிலளிநீக்கு
 11. #திண்டுக்கல் தனபாலன்
  நல்ல அலசல் ! உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெளிவரும் ! பகிர்விற்கு நன்றி !#  நன்றி சகோ...உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

  பதிலளிநீக்கு
 12. #சுவனப்பிரியன்
  சிறந்த பதிவு.
  #


  நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
 13. வழக்கம் போல அக்மார்க் மோடி எதிர்ப்பு பதிவு.
  என்னைப் பொறுத்தவரை பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் மோடி!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....