14 ஜனவரி 2012

பண மோசடி புகாரில் கருணாநிதி மகள்...அடிக்கிறார்கள் கொள்ளை (நொறுக்கு தீனி)


கருணாநிதி குடும்பத்தில் அடுத்த வழக்கை சந்திக்க இன்னொரு பெண் ரெடி ஆகி விட்டார்.....கருணாநிதியின் மகள் செல்விதான் அவர்.... வாங்க வாங்க நீங்க ஒருவர்தான் பாக்கி....


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார் நல்லதம்பி என்பவர்...இவர் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்....இந்த வழக்கு என்ன ஆகபோகிறது என சில நாட்களில் தெரிந்து விடும்...

திரும்பவும் தமிழ் புத்தாண்டு சர்ச்சையை கருணாநிதி கிளப்பி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம் என திமுக தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார்...


தமிழ் புத்தாண்டு ஏப்ரல் பதினான்கு என்பதை கருணாநிதி மாற்றி தை முதல் நாளை அறிவித்தார்...அப்போதே இதற்கு எதிர்ப்புக்குரல் பலமாக கிளம்பியது...ஜெயலலிதா ஆட்சி ஏற்ற பின் பழையபடி தமிழ் புத்தாண்டை ஏப்ரல் பதினாங்குக்கே மாற்றினார்....ஆனால் கலைஞர் வறட்டு கவுரவம் பார்த்து பழைய பல்லவியை பாடி வருகிறார்...அட போங்கப்பா உங்க அரசியலுக்கு தமிழ் புத்தாண்டு தானா கிடைத்தது...?

பொங்கலுக்கு ஊருக்கு திரும்பும் பயணிகளிடம் கொள்ளை லாபம் அடித்து வருகின்றன ஆம்னி பஸ்கள்.... சாதாரணமாக சென்னையிலிருந்து புதுகைக்கு நானூராக இருந்த பஸ் கட்டணம் தற்போது ஐநூறு .,அறநூறு என எகிறி மக்கள் வயிற்றில் ஆசிட்டை வார்த்து வருகின்றனர் .... அதுபோல தமிழகம் முழுக்க இந்த கட்டண கொள்ளை நடந்து வருகிறது...

இதுகுறித்து பாதிக்கப்படும் பொது மக்கள் புகார் செய்ய ஒரே ஒரு தொலைபேசி !எண் அளித்துள்ளது அரசு..என்ன ஒரு சேவை மனப்பான்மை....பரவாயில்லை ..நண்பர்கள் யாரும் இந்த பஸ் கட்டண கொள்ளையில் பாதிக்கப்பட்டால் இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம் ...அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளது....நம்புவோமாக....

அந்த எண் :
044 - 24794709


3 கருத்துகள்:

 1. /* தமிழ் புத்தாண்டு ஏப்ரல் பதினான்கு என்பதை கருணாநிதி மாற்றி தை முதல் நாளை அறிவித்தார்...அப்போதே இதற்கு எதிர்ப்புக்குரல் பலமாக கிளம்பியது...ஜெயலலிதா ஆட்சி ஏற்ற பின் பழையபடி தமிழ் புத்தாண்டை ஏப்ரல் பதினாங்குக்கே மாற்றினார்....ஆனால் கலைஞர் வறட்டு கவுரவம் பார்த்து பழைய பல்லவியை பாடி வருகிறார்...அட போங்கப்பா உங்க அரசியலுக்கு தமிழ் புத்தாண்டு தானா கிடைத்தது...? */

  தமிழனுக்கு தைப் பிறந்தால் வழிப் பிறக்கும், கருணாநிதிக்காகவும் செயலலிதாக்காகவும் எங்கள் புத்தாண்டை மாற்றமுடியாது. தை முதலாம் நாளே தமிழனின் புத்தாண்டு.

  பார்ப்பனின் புத்தாண்டு ஏப்ரல் பதினான்கு, நீங்கள் தமிழரா, பார்ப்பானா என்பதை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. தை திருநாள் செய்திகளா சார்.ரொம்ப நல்லாயிருக்கு/

  பதிலளிநீக்கு
 3. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

  ---- >
  புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
  < ----

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....