06 ஜனவரி 2012

மருத்துவர்கள் இனி மரியாதைக்கு உரியவர்களா?

மருத்துவர்கள் என்றால் ஒரு மரியாதை சமுகத்தில் இருந்து வருகிறது.....அதற்கு காரணம் நமது உயிர் ஒருவகையில் அவர்களால் காப்பாற்ற படுகிறது என்ற ஒரு பொதுவான எண்ணமே ஆகும்....


ஆனால் இன்று மருத்துவர்கள் மேல் உள்ள மரியாதை வெளிநாட்டில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணியின் மேல் வைக்கும் மரியாதையை விட கேவலமாகி வருகிறது....தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண் டாக்டரின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ,மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் தமிழகம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...நிச்சயமாக அந்த மருத்துவரின் கொலை கண்டிக்கத்தக்கதே...கொலையாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது...கொலை செய்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் எதற்காக இந்த போராட்டம்?ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு போலிசை காவலுக்கு நிறுத்த வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?


இந்த இரண்டு நாட்களில் போதிய சிகிச்சை இல்லாமல் அவதிப்படும் பல்லாயிரகணக்கான நோயாளிகளுக்கு இவர்கள் கூறும் பதில் என்ன?இவர்களின் இந்த அலட்சிய போக்கை தமிழக அரசு ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது?
அந்த பெண் டாக்டர் தவறான சிகிச்சை அளித்தால் தனது மனைவி இறந்ததாக கொலையாளி கூறியுள்ளார்...சிகிச்சை ஒருவேளை தவறாக இருந்தாலும் கொலை செய்யலாமா என மருத்துவர்கள் கேட்கின்றனர்....
கொலை செய்தது தவறுதான்....ஆனால் தவறான சிகிச்சையால் இறந்ததும் ஒரு மனித உயிரல்லவா?
அதற்காக போராட்டம் நடத்தி இன்னும் எவ்வளவு உயிரை இந்த மதிகெட்ட மருத்துவர்கள் கொலை செய்ய போகிறார்கள்?மருத்துவம் என்பது புனிதமான தொழில் என்றும் மருத்துவர்கள் உயிரை காப்பாற்றும் உன்னதமானவர்கள் என்றும் நினைத்த நோயாளிகளுக்கு இவர்கள் அளிக்கும் நன்கொடையா இது....?

3 கருத்துகள்:

 1. இந்த போராட்டத்தை அவர்கள் வேறு விதமாக நடத்தி இருக்கலாம். நாட்டில் என்ன நடந்தாலும் பாதிக்கபடுவது என்னவோ பொது ஜனம்தான்

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ எல்லா பதிவர்களும் இதுபோன்ற பதிவுகள் எழுதி மருத்துவர்கள் செய்யும் தவறை சுட்டிகாட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தவறு செய்யும் சில மருத்துவர்கள் பயந்து தங்களின் பணியை சிறப்பாக செய்ய முன்வருவார்கள்.மருத்துவர்களை குறை சொல்லியும் பயனில்லை மருத்துவம் படிப்பதற்க்காக நிறைய லட்சங்களை செலவு செய்துதான் மருத்துவ பட்டம் வாங்குகின்றார்கள்.மருத்துவம் படிக்க முயல்பவர்கள் 90% பேர் சேவை செய்யனும்னு நினைத்துதான் படிக்கின்றார்கள்.சூழ்நிலை(பணம் பிடுங்கும் பெருச்சாளிகள்)அவர்களை மாற்றிவிடுகின்றது.செலவழித்த பணத்தை மீண்டும் பிடிக்கனும்கிற பணத்தாசை அவர்களுடைய கண்ணை மறைக்கின்றது.பணத்தாசை மட்டும் இல்லாதிருந்தால் சேவை மனப்பான்மை அதிகரித்திருக்கும் மருத்துவ துறை மட்டுமல்ல எல்லா துறையிலும்.

  பதிலளிநீக்கு
 3. ஸலாம் சகோ.அதிரடி ஹாஜா,
  மிக அருமையான அதிரடி ஆக்கம்.
  சரியான நேரத்தில். நன்றி சகோ.ஹாஜா.

  ///கொலை செய்தது தவறுதான்....ஆனால் தவறான சிகிச்சையால் இறந்ததும் ஒரு மனித உயிரல்லவா?

  அதற்காக போராட்டம் நடத்தி இன்னும் எவ்வளவு உயிரை இந்த மதிகெட்ட மருத்துவர்கள் கொலை செய்ய போகிறார்கள்?///---இதுதான்... எல்லாரும் கேட்பது..!

  ///ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு போலிசை காவலுக்கு நிறுத்த வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?///---நிறுத்தப்படலாம்..! எனில், மெடிக்கல் காலேஜ் ஃபீஸ் & டொனேஷன் மும்மடங்கு ஆகும்..! டாக்டர் ஃபீஸ் ஆறு மடங்கு ஆகும்..!

  அது வரை கொலை மட்டும் செய்தவன்... இனி வேறு என்னவெல்லாம் செய்யலாம் என சிந்திக்க ஆரம்பிப்பான்..!

  கொடுமை..!!!

  இதனை ஒழிக்க வழி..?

  ///பணத்தாசை மட்டும் இல்லாதிருந்தால் சேவை மனப்பான்மை அதிகரித்திருக்கும் மருத்துவ துறை மட்டுமல்ல எல்லா துறையிலும்.///

  ஆனால்...
  பணமா... உயிரா... எது வேண்டும்...?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....