28 ஜனவரி 2012

அண்ணா அறிவாலயத்துக்கும் ஆப்பு...அண்ணா பெயரை வெறுக்கும் ஜெ ??


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பெயரில் எது இருந்தாலும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே.....ஆனால் இப்போது அறிஞர் அண்ணா பெயரில் எது இருந்தாலும் ஆகாது போலிருக்கிறது ...

முதலில் அண்ணா பெயரில் இருந்த நூலகத்தை கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்துக்காக அந்த நூலகத்தை இடம் மாற்ற உத்தரவிட்டார்....இப்போது திமுக கட்சி தலைமையிடமான அண்ணா அறிவாலயத்துக்கும் ஆப்பு வைக்க தயாராகிவிட்டார்....

ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாக கூறித்தான் திமுக சிறப்பு அனுமதி பெற்று அண்ணா அறிவாலயத்தை கட்டியதாம்....விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால் அந்த திறந்தவெளி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சொல்லி சென்னை மேயர் கூறியுள்ளார்....பின்னே ஜெயலலிதா சொல்வதை தானே அவர் செய்வார்....

இப்ப அண்ணா அறிவாலயம் முறையாக கட்டப்பட்டதா இல்லையா என்ற விசயம் அடுத்தபட்சம்....ஆனால் இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என விரல் சூப்பும் குழந்தைக்குகூட தெரியும்...இப்படிப்பட்ட நடவடிக்கையினால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை....மாறாக அக்கட்சிக்கு அனுதாபம்தான் பெருகும்..இது கூட தெரியாதா ஜெயலலிதாவுக்கு?

நாட்டில் இதுதான் இப்ப முக்கிய பிரச்சினையா?பொதுவாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்பது பரவலான நம்பிக்கை...ஆனால் இப்போது? தினமும் கொத்து கொத்தாக கொலைகள் விழுகின்றன....பொழுதுபோக்கு போல தினமும் கொள்ளைகளை நடத்தி வருகின்றனர் கொள்ளையர்கள்.....என்ன செய்கிறது காவல்துறை?சட்டம் ஒழுங்கை சீராக்குவதைவிட ஜெயலலிதாவுக்கு அண்ணா அறிவாலயத்துக்கு சிக்கல் கொடுப்பதுதான் முக்கிய வேலையா?


தானே புயலால் சீரழிந்த கடலூர் மாவட்ட மக்கள் இன்னும் இருக்க வீடில்லாமல், உண்ண உணவில்லாமல்,மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்..முழுமையான சீரமைப்பு பணிகள் இன்னும் நடைபெறவில்லை...இதைவிட முக்கியமா அண்ணா அறிவாலயத்துக்கு ஆப்பு வைக்க நினைப்பது..?

ஜெயலலிதா மாறிவிட்டார் என்கிறார்கள் ...ஆனால் மாறியது ஆட்சி மட்டுமே...நான் மாறவில்லை என செய்கையால் உணர்த்தி வருகிறார் அவர்...முதலில் ஆக்கபூர்வமான விசயங்களில் ஆர்வம் காட்டுங்கள்....பின்பு அழிப்பதை பற்றி யோசிக்கலாம் ஜெ.......

4 கருத்துகள்:

 1. மேடம் என்ன வேண்டுமானாலும் செய்வாங்க ! என்ன செய்வது ! ஆக்க வேலைகள் எவ்வளவோ உள்ளன ! .....ம்..... பகிர்வுக்கு நன்றி சார் !

  பதிலளிநீக்கு
 2. திண்டுக்கல் தனபாலன்
  மேடம் என்ன வேண்டுமானாலும் செய்வாங்க ! என்ன செய்வது ! ஆக்க வேலைகள் எவ்வளவோ உள்ளன ! .....ம்..... பகிர்வுக்கு நன்றி சார் !
  ##


  அவர் நல்லது செய்யத்தானே மக்கள் அவரை தேர்ந்து எடுத்தார்கள்...வருகைக்கு நன்றி சகோ....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....