13 ஜனவரி 2012

கலைஞரை மாற்றிய ஜெயலலிதாவும்,ஒருகொலை வழக்கும் (நொறுக்கு தீனி)


புதிய மருத்துவ திட்டத்தை தொடக்கி உள்ளார் ஜெயலலிதா....அதற்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பெயரிட்டுள்ளார்..... நல்ல விஷயம்...

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் என தனது பெயரை வைத்த கருணாநிதிக்கு நல்ல பதிலடி கொடுத்துள்ளார் தனது பெயரை வைக்காமல் ஜெயலலிதா....
நம்ம மருத்துவர் ராமதாஸ் ,அவரது மகன் ஆகியோரை ஒரு கொலை வழக்கில் போலீஸ் விசாரிக்க பட போவதாக ஜூனியர் விகடன் எழுதி உள்ளது....
பாத்துப்பா...அவங்க எல்லாம் போதிதர்மன் பரம்பரையாம்....ஒரு கூட்டத்தில் அன்புமணிதான் போதிதர்மனின் வாரிசு என பாமக காரங்க கூவி இருக்காங்க...அப்புறம் விசாரிக்க போற எல்லாரையும் நோக்கு வர்மத்தால நோக்கிட போறாரு நம்ம மருத்துவர்...ஹி ஹி...

அப்புறம் நம்ம சச்சின் எப்ப நூறாவது சதம் அடிப்பார் என கேட்டே இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் சாவு மணி அடிக்க விட்டு விட்டார்கள்..அவரும் அடித்த பாடில்லை....அணியும் ஜெயித்த பாடில்லை...பேசாமல் சச்சின் இனி எப்ப நூற்றி ஒன்னாவது சதம் எப்ப அடிப்பருன்னு கேட்போம்..அப்பத்தான் அவர் நூறாவது சதமாவது அடிப்பார்.....

கனிமொழி கலைஞர் டிவி வாசலைக்கூட மிதித்து இல்லையாம்....ராசா ஆபிஸ் பக்கம் கனிமொழி போனது கூட இல்லையாம்....ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பற்றி அவருக்கு ஒன்னுமே தெரியாதாம்...இப்படி கூறியுள்ளார் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள்....கொஞ்சம் விட்டால் திமுகன்னா என்னனு கூட தெரியாதுன்னு சொல்லுவாங்க போல இருக்கே...


10 கருத்துகள்:

 1. மாறி இருந்தால் சந்தோஷமே.

  ஜெயலலிதாவின் முந்தைய திட்டங்களும் பெயர் மாற்றங்களும்.

  1 . ஜேஜே டீசி (ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம், தமிழக அரசால் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தை இரண்டாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் ராஜீவ்காந்தி போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றப்பட்டு பின்னர் அரசு விரைவு போக்குவரத்து கழகமாக மீண்டும் பெயர்மாற்றப்பட்டது.)

  2. ஜெயலலிதா பிலிம் சிட்டி, தரமணி (தமிழக அரசால் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கருணாநிதியால் எம்ஜியார் பிலிம் சிட்டி என்று பெயர் மாற்றப்பட்டது.)

  3. ஜே சர்விஸ், ஜேஜே சர்விஸ் மாநகர பேருந்து (சென்னை மாநகர பல்லவன், டாக்டர். அம்பேத்கார் பேருந்துகளின் தடம் எண்கள், அவை விரைவு பேருந்தாக இருந்தால் (Express Service )J Service என்றும், அதிவிரைவு பேருந்தாக இருந்தால் JJ Service என்றும் மாற்றப்பட்டது (உம். 18J , 18JJ , 70J , 70JJ ). LSS Service பேருந்துகள் R Service (அது யாரு?) பேருந்துகளாக மாற்றப்பட்டது. (உம். 18R , 114R ).

  4 . ஜே ஜே நகர் (ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டு, Mugappair East என்று கருணாநிதியின் ஆட்சி காலத்திலும் ஜே ஜே நகர் என்று ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அழைக்கப்படும். அதே போல் KK Nagar கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி நகர் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் KK Nagar என்றும் அழைக்கப்படும்.)

  என் நினைவில் நிற்பவை இவை மட்டுமே. வேறு ஏதேனும் இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க அந்த ஆட்சிகாலத்தில் தன்னுடைய பெயரை எங்குபார்த்தாலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் ஜெ..

   ஆனால் தற்போது திருந்தியது போல் தெரிகிறது...

   மீண்டும் பழைய பல்லவியை பாடாமல் இருந்தால் சரி..

   நீக்கு
  2. கலைஞர் முந்தைய ஆட்சிக்காலத்தில் நல்லவர்போல் ஜெ பெயர்களை மாற்றி பொதுவான பெயர்களை வைத்தார் மாவட்ட பெயர்களையும் பொதுவாக வைத்து சாதித்தார்.

   ஆனால் 2006-ம் ஆட்சியில் அவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை தன்னுடைய பெயரில் எல்லாம் இருக்கும் படிபார்த்து்ககொண்டார்...

   அரசு சின்னம்தான் முக்கியம் ஆட்சியாளர் பெயர் மற்றும் ஆட்சியாளரின் முகம் முக்கியமல்ல இவர்கள் நிறந்தரமற்றவர்கள்.. அரசு என்பது நிலையானது...

   நீக்கு
  3. நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...

   நீக்கு
 2. கலக்கிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பர் சௌந்தர் ....ஜெயலலிதா கொஞ்சம் மாறிவிட்டார் ...நல்லதுதானே

  பதிலளிநீக்கு
 5. #Ibnu Shakir
  கலக்கிவிட்டீர்கள்#

  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி....

  பதிலளிநீக்கு
 6. உண்மையாகவே நீங்கள் அதிரடிதான்.!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....