11 ஜனவரி 2012

காணாமல் போனவர்கள்....(அழகிரியா அலறும்கிரியா )


என்றால் ஆ என எதிரிகளை பயத்தில் வாயை பிளக்க வைத்தவர்..ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியவர்....
சிலமாதங்களுக்கு முன்பு வரை மதுரையை தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத தலைநகரமாக ஆக்கியவர்.....தனக்கு ஆகாதவர்களை கொண்டுவா ( அழைத்து வா ) என்று கூறினால் ! கொன்று வரும் அபிமானிகளை !! பெற்று இருப்பவர்

இந்தியாவுக்கே மந்திரி ஆனாலும் மதுரையை தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடிப்பவர்வேற யாரு? நம்ம அழகிரி அண்ணன்தான்....

சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என கூறினார் நம்ம அண்ணன்... பிறகுதான் தெரிந்தது அவர் " அழகிரி திமுக " வை தான் அப்படி கூறினார் என்று...
அந்தஅளவுக்கு ஆக்டிவ் அரசியலில் இருந்து காணாமல் போயிருக்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்...
பொதுவாக திமுகவில் ஜெயலலிதாவை பற்றி அதிரடியாக பேசக்கூடியவர் அழகிரிதான்....ஆனால் இப்போது ?

ஸ்டாலின்கூட என்னை கைது செய்து பார் என்று சவால் விடும் நிலையில் அழகிரி மதுரை ஆட்சியர் சகாயத்தை எப்படி சமாளிப்பது என்பதிலே காலத்தை ஒட்டி கொண்டு இருக்கிறார்...

இங்கிருந்து டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் பேசு,இந்தியில் பேசு என டெல்லிவாலாக்கள் தொல்லை வேற தாங்க முடியவில்லை....
சமச்சீர் கல்வி, அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு என ஆளும்கட்சிக்கு எதிராக சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ஒரு ரன் கூட அடிக்காமல் கோட்டை விட்டுவிட்டார்...

பொதுவாக திமுகவில் ஸ்டாலினின் அமைதி அரசியலைவிட அழகிரியின் அதிரடி அரசியல் தான் தென்மாவட்ட திமுக தொண்டர்களுக்கும், அழகிரியின் ஆதரவாளர்களுக்கும் பிடித்த ஒன்று....
மீண்டும் எப்போது அவர் அதிரடி அரசியலில் இறங்குவார்? ஜெயலலிதாவுக்கு எதிராக சீறி பாய்வார்?11 கருத்துகள்:

 1. ஹா...ஹா...ஹா.... ஒவ்வொரு வரியும் நச்....
  அடிக்கடி இப்படி எழுதுமாறு அன்பு கட்டளையிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 2. இவங்க ஐந்து வருடத்திற்க்கு தலை காட்ட கூடாது....

  அப்படி காட்டனா அவ்வளவுதான் அதுக்காகத்தான் பதுங்கியிருக்காங்க...

  பதிலளிநீக்கு
 3. பி கேர் புல் ( நா என்ன சொன்னேன்)...

  பதிலளிநீக்கு
 4. #ரஹீம் கஸாலி சொன்னது…
  ஹா...ஹா...ஹா.... ஒவ்வொரு வரியும் நச்....
  அடிக்கடி இப்படி எழுதுமாறு அன்பு கட்டளையிடுகிறேன் #

  அப்படியே ஆகட்டும் அண்ணே..

  பதிலளிநீக்கு
 5. #விக்கியுலகம் சொன்னது…
  ஹிஹி நீ கலக்கு மாப்ள! #


  ஓகே ஓகே ...நன்றி மாம்ஸ்...

  பதிலளிநீக்கு
 6. #கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
  வாங்க... ஹாஜா... #  வந்தாச்சு..நன்றி நண்பா...

  பதிலளிநீக்கு
 7. கலக்குங்க மச்சான்... தொடர்ந்து எழுதுங்க... நச் நச்சுன்னு எழுதுறீங்க...

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....