08 டிசம்பர் 2010

லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?

லஞ்சம் இல்லாத நாடுகளில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.....
சிங்கப்பூர் இரண்டாவது இடம்.....போன வருட கணக்குப்படி நம் நாடு முப்பத்தி நான்காவது இடம்!
நம் நாட்டில் அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).

1.போலீஸ் 215,
2.வீட்டுவசதி வாரியம் 157,
3.பத்திரப்பதிவு 124,
4.மின்சாரம் 105,
5.மருத்துவம் 87,
6.வங்கி 83,
7.ரேஷன் 45,
8.வனத்துறை 24,
9.குடிநீர் 24,
10.பள்ளிக்கூட கல்வி 12,
11.கிராம வேலை வாய்ப்பு ௭

இப்போது சொல்லுங்கள் ...நம் நாட்டில் லஞ்சம் குடுக்காமல் ஏதாவது செய்ய முடியுமா?

லஞ்சம் இல்லாத நாடு இல்லைதான்.....பொதுவாக எல்லா நாடுகளிலும் சட்டத்தை மீறினால்தான் லஞ்சம் குடுப்பார்கள்.....ஆனால் நம் நாட்டிலோ சட்டத்தை செய்வதற்கே லஞ்சம் குடுக்க வேண்டியுள்ளது....அரசுத்துறையில் நமக்கான உரிமைகளை பெறுவதற்கும், நமக்கான கடைமைகளை அரசு செய்வதற்குமே லஞ்சம் குடுக்க வேண்டி உள்ளது...எவ்வளது வெட்க கேடான விஷயம்......!!!1


லஞ்சம் வாங்குவதுதான் தப்பு என்று இல்லை.....குடுப்பதும் தப்புதான்....நாம் எல்லாரும் ஒரு வகையில் யாருக்காவது ஒரு சின்ன தொகையை கூட லஞ்சமாக குடுத்தது இல்லை என சொல்ல முடியுமா?


இப்படி அனைவரது ரத்தத்திலும் ஊறிவிட்ட லஞ்சத்தை ஒழிக்க முடியுமா...?
முடியாது என்றே நான் நினைக்கிறேன்.....
முடியும் என்று நீங்கள் கூறினால் எதற்காகவும் யாருக்கும் லஞ்சம் குடுக்காமல் இருந்து பாருங்கள்......
லஞ்சம் இல்லாத நம் தேசத்தை கனவில் பார்த்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியதுதான்......

7 கருத்துகள்:

 1. //இப்படி அனைவரது ரத்தத்திலும் ஊறிவிட்ட லஞ்சத்தை ஒழிக்க முடியுமா...?
  முடியாது என்றே நான் நினைக்கிறேன்.....//கசப்பான உண்மை.

  பதிலளிநீக்கு
 2. உண்மை உண்மை! லஞ்சத்தை ஒழிக்க முடியாது! அதுவும் வளர்முக நாடுகளில்!

  பதிலளிநீக்கு
 3. நம் நாட்டின் ஆட்சி முறையில் (ஆட்சியில் அல்ல) அல்லது அரசியலில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்...

  பதிலளிநீக்கு
 4. //லஞ்சம் இல்லாத நம் தேசத்தை கனவில் பார்த்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியதுதான்......//

  வேற வழி?

  அரசு அதிகாரி லஞ்சம் வாங்குனா அவருக்கு மேல உள்ள அரசியல்வாதிகிட்ட சொல்லலாம். ஆனா அவரே தனக்கு கீழ உல்ளவங்க கொடுக்குற காசுல தான் பொழப்பு ஓட்டுறார்ன்னா என்ன பண்ண முடியும்?

  பதிலளிநீக்கு
 5. முடியாது என்றே நான் நினைக்கிறேன்.....//கசப்பான உண்மை.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பர்களே.....

  பதிலளிநீக்கு
 7. It is next to impossible. We can't abolish it. I think, we can make it official. For each activity in a Govt. office, a fee should be fixed and displayed prominently. Common man gets the job done by paying the "fee". There should be no salary paid from the Govt.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....