18 டிசம்பர் 2010

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே..........


வலைப்பதிவு நண்பர்களை பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை......



யோசித்து எழுதும் பல பதிவுகள் ஹிட் அடிக்காமல் போகின்றன.....ஒருவேளை நான்தான் நம்ம யோசித்து எழுதுகிறோம் இது கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என கற்பனை பண்ணுகிறேனா என்று தெரியவில்லை.....

ஆனால் சில சமயம் போகிற போக்கில எழுதுகிற ( அதாங்க கண்டபடி எழுதுறது) ஹிட் அடித்து விடுகிறது.....அதுவும் தமிழ் மணத்தில் ஹிட் ஆனால் தமிழ் டென்னில் மண்டைய போட்டுவிடுகிறது..... தமிழ் டென்னில் ஹிட் ஆனால் தமிழ்மணத்தில் பியுஸ் போகி விடுகிறது....



தமிழ்மணத்தில் சில வாரங்களாக இருபது முன்னணி பதிவுகளை அறிவித்தாலும் அறிவித்தார்கள் அதிலிருந்து நமக்கு ஏழரை தான்....ஏதோ நொண்டி நொண்டி எப்போதாவது ஹிட் அடிக்கும் என்னுடைய பதிவுகள் தற்போது டெபாசிட் வாங்க கூட முடியவில்லை.....சில பதிவுகள் ஆறு ஓட்டுக்கள் வாங்கி ஒரு ஒட்டு கிடைக்காமல் அல்லது யாரும் ஓட்டளிக்காமல் பார்டர் பெயில் ஆகிவிட்டன.....



சில நண்பர்கள் கருத்துக்கள் எழுதினால் ஒட்டு போடுவதில்லை.....ஓட்டளித்தால் கருத்து சொல்லுவதில்லை ....பல பேரு எதுவுமே பண்ணுவதில்லை.....அவ்வளவு தூரத்துக்கா நம்ம எழுத்து டெர்ரரா இருக்கு.....!!!!!!!!!



ஏதோ ரெகுலர் கஸ்டமர் மாதிரி நம்ம ரெகுலர் விசிட்டர்கலான அண்ணன் ரஹீம் கசாலி , பிரபாகரன், ஜி, பாரத் பாரதி , சகோதரி ஆமினா ,ஐத்ருஸ் மற்றும் சில நண்பர்களினால் நம்ம வண்டி ஓடி கொண்டு இருக்கிறது.....



நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் மற்றும் கருத்துரைகளே என்னை போன்றவர்களுக்கு பூஸ்ட் மாதிரி.....நான் யாருடைய வலைப்பதிவை படித்தாலும் முதலில் ஒட்டளித்து பின்பு கருத்துக்களை கொட்டிவிட்டுதான் வருவேன்....

நான் எழுதுவதில் குப்பைகள்,குறைகள் இருந்தாலும் சுட்டிகாட்டுங்கள் தயங்காமல்....



மறுபடியும் உங்கள் ஓட்டுக்களையும், பின்னூட்டங்களையும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்....

25 கருத்துகள்:

 1. நீங்க எழுதுங்க,,, ரிசல்ட்-ட பத்தி கவலைப்பட வேண்டாம்..

  பதிலளிநீக்கு
 2. //நான் யாருடைய வலைப்பதிவை படித்தாலும் முதலில் ஒட்டளித்து பின்பு கருத்துக்களை கொட்டிவிட்டுதான் வருவேன்....
  //நல்லது, தொடருங்கள்.நாங்களும் அப்படித்தான்.

  ஊரார் பதிவுக்கு வாக்களித்தால், தன் பதிவுக்கு வாக்குகள் தானே விழும்...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று சோர்ந்து விடாதீங்க தொடர்ந்து எழுதுங்கள்... சிகரத்தை தொடுவீர்கள்

  பதிலளிநீக்கு
 4. இவ்வளவு கெஞ்சிக் கேட்கிறதாலே ! ஒரு கருத்து சொல்லிட்டு போறேன் !

  அதிகமா வாக்கு கேட்கிற ஆம்பளையும், அதிகமா மேக்கப் போடற பெம்பளையும் நல்லா வாழ்ந்த சரித்திரம் இல்லை(யீங்கண்ணே !)

  இடையில் மானே ! தேனே போட்டுக்கங்க' !

  பதிவர் ! பதிவர் நு தேவைப் படுற இடத்தில் போட்டுக்கோங்க(ண்ணே)

  சும்மா ஒரு தமாழு(ஷ்)க்கு தாங்க!!!

  வ(ர)ற்(ட்டுமா)றா

  பதிலளிநீக்கு
 5. //நான் யாருடைய வலைப்பதிவை படித்தாலும் முதலில் ஒட்டளித்து//
  நானும்! :-)

  பதிலளிநீக்கு
 6. பாத்திங்களா என்ன மறந்துட்டீங்களே

  குத்துறேன் எசமான் குத்துறேன்!

  இங்கயும் ரெகுலரா ஓட்டு போடுற நான் முட்டாள் தானோ!

  பதிலளிநீக்கு
 7. நீங்க நல்லா எழுதுறீங்க. அதுல எந்த சந்தேகமும் இல்ல. கவலபடாதீங்க சகோ.....

  கண்டிப்பா ஹிட் நிறையா கிடைக்கும்!!!

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ஓட் போடுறேன் .
  பின்நூட்டம் போட்டேன்
  உருப்பிநர் ஆகிடேன்.
  இப்போ ஒக்கே வா ?

  பதிலளிநீக்கு
 9. //யோசித்து எழுதும் பல பதிவுகள் ஹிட் அடிக்காமல் போகின்றன.....//

  //சில சமயம் போகிற போக்கில எழுதுகிற ( அதாங்க கண்டபடி எழுதுறது) ஹிட் அடித்து விடுகிறது.....//

  இரண்டுமே ரொம்ப கரெக்ட்! எப்படியோ வீணான விஷயங்களில் நேரம் கழியாமல், நல்ல விஷயங்கள் சரியான முறையில் மக்களிடம் சேர்ந்தால் போதும். உங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டேன் சகோ. இப்போ கருத்தும் சொல்லியாச்சு :)

  பதிலளிநீக்கு
 10. அப்பாடா............நன்றி நண்பர்களே.....உங்கள் ஓட்டுக்கும், கருத்துக்கும் ,உங்கள் ஆதரவுக்கும் நன்றி....

  பதிலளிநீக்கு
 11. சாரி விக்கி உலகம்.....உங்களை விட்டதுக்கு.....நீங்களும் எனக்கு முக்கியமான தூண்தான்......

  பதிலளிநீக்கு
 12. உங்கள் கருத்துக்கு நன்றி இக்பால் செல்வன் ....நான் கெஞ்சி எல்லாம் கேட்கவில்லை...என்னுடைய ஆதங்கத்தைத்தான் சொன்னேன்

  பதிலளிநீக்கு
 13. உங்கள் ஆதங்கம் புரிகிறது,நிச்சயம் உங்கள் இடுகைகள் ஹிட் ஆகும்.வாழ்த்துக்கள்,முடிந்த அளவு மற்ற வலைப்பூ சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. இந்த பதிவு எப்படி போய்கிட்டு இருக்குங்க...

  பதிலளிநீக்கு
 15. இப்ப நல்லாத்தான் போயிட்டு இருக்கு பாரத் பாரதி....

  பதிலளிநீக்கு
 16. நண்பரே ஒரு கட்டத்தில் எனக்கும் இதே மாதிரிதான் இருந்தது. மூத்த பதிவர் ஒருவர் நீங்கள் ஒட்டுக்காகவோ, கருத்துக்களுக்காகவோ, ஹிட்டுக்காகவோ எழுதாமல் மன நிறைவுக்காக எழுதுங்கள் என்று கூறினார். அதையே தற்போது பின்பற்றுகிறேன். யாராவது ஒருவரேனும் நாம் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவார்கள். அவர்கள் வோட்டு போடாமலோ, கருத்திடாமலோ இருக்கலாம். எனவே நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள் மன நிறைவுக்காக. நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 17. நன்றி நண்பரே....உங்கள் பெயரை குறிப்பிட மறந்துவிட்டேன்.....நீங்களும் எனக்கு முக்கியமானவர்.....

  பதிலளிநீக்கு
 18. உங்களுக்கு தினமும் பூஸ்ட் கொடுக்கும் பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன்... தமிழ்மணம், இன்டலி, தமிழ் பத்து மட்டுமில்லாமல் உலவிலும் வாக்களித்துள்ளேன்... மேலும் சில திரட்டிகளில் கூட எனக்கு கணக்கு இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 19. இதுபற்றி பெரிய ஆராய்ச்சியே செய்யலாம்... குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் தலைப்பு, tags, பிரிவு போன்ற சில factors உள்ளன...

  பதிலளிநீக்கு
 20. தோல்வியை கண்டு துவளாதீர்கள்.வெற்றி அருகிலேயே இருக்கிறது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....