30 ஏப்ரல் 2011

ஒபாமா தங்கபாலுவுக்கு விருந்து கொடுப்பாரா?


நடந்து முடிந்த தேர்தலில் கதாநாயகன் ,கதாநாயகி இருந்தார்களோ இல்லையோ காமெடியன்களுக்கு பஞ்சமே இல்லை.....

இல்லாத தொகுதிகளில் போட்டியிட போவதாக சொல்லி முதலில் காமெடி பட்டையை கிளப்பியவர் கார்த்திக்....ஏதோ சூட்டிங் போவதுபோல பிரஸ்மீட்டில் கண்ணாடி அணிந்து கொண்டு தமிழை வேறு ஒரு மொழி போலவே பேசி கிச்சு கிச்சு மூட்டினார்...

இந்த பக்கம் இல்லாத கட்சியை வைத்துகொண்டு தேர்தலை புறக்கணிக்க போவதாக தமிழக மக்களை ஆனந்த அதிர்ச்சியில் திணறடித்தார் நம்ம டி ஆர்...

குஷ்பு தமிழை கடித்து குதறி காய போட்டார்.........நல்ல வேலை நமிதா வரவில்லை....

காணாமல் போனவர்கள் லிஸ்டில் உள்ள செந்தில் ,குமரிமுத்து போன்றோர் சீரியசாக பேசி நம்மை சிரிக்க வைத்தனர்....

இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு கட்சியின் தலைவரான தங்கபாலு தனது மனைவிக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்து, பின்பு மனைவியின் மனு நிராகரிக்கப்பட தானே வேட்பாளர் ஆகி தெலுங்கு பட வில்லன்போல சிரித்துகொண்டே உலக அரசியலில் !முதல் முறையாக சரித்திர சாதனை படைத்தார் .........

அட தேர்தல் தான் முடிந்துபோச்சே என்று விடாமல் தமிழக மக்களுக்கு கோடை கால சிரிப்பு ஸ்பெஷல் ஆக இலங்கை அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தினார் தங்கபாலு...இதில் என்ன கொடுமை என்றால் இவர் ஆர்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கும்போதே அவருக்கு எதிரிலே அவரின் உருவப்படத்தை எரித்து காமெடி கும்பமேளா நடத்தினர் காங்கிரஸ் கட்சியினர்....

இப்போது சொல்லுங்கள் நாம் சிரித்து நோயில்லாமல் வாழ நமக்காக இவ்ளோ செய்த கோல்ட்பாலு தானே இந்த தேர்தலின் கதாநாயகன்....!!!!

ஒரு மாற்றம் வேண்டும் என்று சொல்லி ஆட்சியை பிடித்த ஒபாமா ஒரு அரசியல் கட்சியின் தலைவரே மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்து வேட்பாளர் ஆன தங்கபாலுவுக்கு என்ன செய்தால் தகும்?

இவருக்கு வெள்ளைமாளிகையில் ஒபாமா விருந்து கொடுக்க வேண்டும்....கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

6 கருத்துகள்:

 1. தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கபாலு அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்....

  இந்த அரசியலில் தலைவர்கள் மற்றும் பிரச்சாரம் செய்தவர்கள் செய்தது பிரச்சாரமா அல்லது ஒரு காமெடி நிகழ்ச்சியா என்ற அளவுக்கு இருந்தது....

  பகிர்வுக்கு நன்றி..
  மீண்டும் சந்திப்போம்...

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா


  தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 3. தங்கபாலு தனது மனைவிக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்து, பின்பு மனைவியின் மனு நிராகரிக்கப்பட தானே வேட்பாளர் ஆகி தெலுங்கு பட வில்லன்போல சிரித்துகொண்டே உலக அரசியலில் !முதல் முறையாக சரித்திர சாதனை படைத்தார் ------/// இது ஏற்கெனவே பிளான் பண்ணி பண்ணது,,,

  பதிலளிநீக்கு
 4. ரிசல்ட் வந்ததும் பெரிய தடபுடலான விருந்தே கொடுப்பாங்க...ஆனா கொடுக்கபோறது ஒபாமா இல்லை...சோனியா-ராகுல்

  பதிலளிநீக்கு
 5. என்னமோ சொல்லுறீங்க ம்ம்

  அதுசரி அரசியல்னா என்னா. எஸ்கேப்ப்ப்ப்ப்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....