02 மே 2011

பின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..


சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.


இதன் மூலம் அமெரிக்கர்களை பயமுறித்தியஉலகின் காஸ்ட்லியான தீவிரவாதியை அழித்து சரிந்து போன தனது இமேஜை தூக்கி நிறுத்தி உள்ளார் ஒசாமாவை அழித்த ஒபாமா

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒசாமா பாகிஸ்தான்-ஆப்கானி்ஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலையில் தான் இத்தனை நாட்களாக பதுங்கி இருந்ததாக அதிகாரிகள் நம்பினர்.

நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ஒசாமாவை வலை வீசித் தேடி வந்தன.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்..பின்லேடன் வேட்டை குறித்து அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.

பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றி விட்டனர் என்றார்.இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ..

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.


பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி

உலகையே குலுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருப்பதாக பலமுறை அமெரிக்கா சொல்லி வந்தது. இதை பாகிஸ்தான் அரசுத் தரப்பும், ராணுவத் தரப்பும் தொடர்ந்து மறுத்து வந்தன.

ஆனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே இத்தனை காலமாக பின்லேன் இருந்தது அவர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தது நிச்சயம் பாகிஸ்தான் அரசுக்கும், அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் .....

இப்போது பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது அமெரிக்கா...?12 கருத்துகள்:

 1. உலக தீவிரவாதத்திற்கு இனி ஒரு முடிவுக்கு வந்துவிடும்...

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்காக...
  அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

  http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 3. இப்போது பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது அமெரிக்கா...?--//
  sabash sariyaana kelvi...

  பதிலளிநீக்கு
 4. பிபிசியை விடவும் வேகமாக இருக்கீங்க... பின்நவீனத்துவ சிந்தனை இருப்பவர்கள் ஒழிவதில் கவலையே இல்லை. அதிலும் இப்படியான தீவிரவாதிகள் ஒழிவதில் மகிழ்ச்சியே...

  தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை அடக்கப் போவது யாருங்க..

  பதிலளிநீக்கு
 5. ஒசாமாவை அனைத்து உதவிகளும் செய்து வளர்த்துவிட்டவர்களே ஒபாமாக்கள்தான். சோவியத்தை விரட்டும்பொது ஹீரோவாக தெரிந்தவன் தன் பக்கம் திரும்பிய பொது வில்லனாகிவிட்டான். ஒசாமாவை நியாயப்படுத்தவில்லை அமெரிக்காவின் ரெட்டை வேடத்தைதான் சுட்டினேன்...

  பதிலளிநீக்கு
 6. ஒசாமாவை அனைத்து உதவிகளும் செய்து வளர்த்துவிட்டவர்களே ஒபாமாக்கள்தான். சோவியத்தை விரட்டும்பொது ஹீரோவாக தெரிந்தவன் தன் பக்கம் திரும்பிய பொது வில்லனாகிவிட்டான். ஒசாமாவை நியாயப்படுத்தவில்லை அமெரிக்காவின் ரெட்டை வேடத்தைதான் சுட்டினேன்...

  பதிலளிநீக்கு
 7. //பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை.

  அதானே பார்த்தேன். அப்புறம் எப்படி எல்லா பயலையும் கண்ட்ரோல்ல வைக்கிறது?

  பதிலளிநீக்கு
 8. என்னாது பாகிஸ்தான் மீது நடவடிக்கையா, போங்கப்பு அது நடக்குற காரியமா....?

  பதிலளிநீக்கு
 9. மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ...

  பதிலளிநீக்கு
 10. #MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  என்னாது பாகிஸ்தான் மீது நடவடிக்கையா, போங்கப்பு அது நடக்குற காரியமா....?#

  ஹி ஹி நடக்கவே நடக்காது....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....